என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பங்குனி மாதத்தில் தெய்வங்களின் திருமணங்களோடு மனிதர்களின் திருமணமும் நடைபெறுவதால் இது திருமண மாதம் என்ற சிறப்பினைப் பெறுகிறது.
பங்குனி மாத சிறப்புகள் விழாக்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை உள்ளடக்கியது. பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி போன்ற விழாக்களும், காரடையான் நோன்பு, விஜயா ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி, போன்ற வழிபாட்டு முறைகளும், காரைக்கால் அம்மையார் குருபூஜையும் இம்மாதத்தில் நடைபெறுகின்றன.
இம்மாதத்தில் தெய்வங்களின் திருமணங்களோடு மனிதர்களின் திருமணமும் நடைபெறுவதால் இது திருமண மாதம் என்ற சிறப்பினைப் பெறுகிறது. இம்மாதத்தில்தான் தாவரங்களில் உதிர்ந்த இலைகள் தளிர்க்க ஆரம்பிப்பதால் இம்மாதம் வசந்த காலத்தின் தொடக்கமாக உள்ளது. இனி பங்குனி மாத சிறப்புகள் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திர நட்சத்திரத்தில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இந்நாளிலே சிவன் – பார்வதி, முருகன் – தெய்வயானை, ராமர் – சீதை, ஆண்டாள் – ரங்கமன்னார் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
மேலும் சாஸ்தா, மகாலட்சுமி, அர்ஜூனன் போன்றோர்களின் அவதார தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. பெரும்பாலோனோர் தங்களின் குலதெய்வ வழிபாட்டினையும் இந்நாளில் மேற்கொள்கின்றனர். தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற நாளாதலால் இந்நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் கல்யாண விரதம் என்றழைக்கப்படுகிறது.
நல்ல திருமண வாழ்க்கை வேண்டி மணமாகாதோரும், திருமண வாழ்வானது வளமாகத் தொடர மணமானோரும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர். முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் தேர்திருவிழா பிரசித்தி பெற்றது.
வசந்த நவராத்திரி
உலக அன்னையாம் பராசக்தியை விரதமுறைகளை மேற்கொண்டு வழிபாடு செய்யக்கூடிய நாட்களே நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. சாரதா நவராத்திரி, ஆசாட நவராத்திரி, சியமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி என ஆண்டில் நான்கு நவராத்திரி விழாக்கள் அன்னை வழிபட மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நவராத்திரிகளில் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் முக்கியமானவை.
வசந்த நவராத்திரி பங்குனி மாத அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை பிரதமை முதல் வளர்பிறை நவமி வரை ஒன்பது நாட்களாகவும், பங்குனி வளர்பிறை பிரதமை முதல் அடுத்த பௌர்ணமி வரை பதினைந்து நாட்களாகவும், பங்குனி வளர்பிறை பிரதமை முதல் சித்ரா பௌர்ணமி வரை நாற்பத்தைந்து நாட்களாவும் கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகை வடஇந்தியாவிலும், தென்னிந்தியாவில் சில கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. இவ்வழிபாட்டினை மேற்கொள்ள யோகத்தை அன்னை நமக்கு அருளுவாள்.
காரடையான் நோன்பு
காரடையான் நோன்புகாரடையான் நோன்பு
கார் காலத்தில் விளைந்த நெல்லைக் கொண்டு அடை செய்து கவுரி ஆகிய காமாட்சி அம்மனை சாவித்திரி வழிபட்டதால் இது காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது. சாவித்திரி என்ற பெண் இவ்வழிபாட்டினை மேற்கொண்டு யமனிடமிருந்து தன்னுடைய கணவனின் உயிரினை மீட்டதால் இவ்விரதம் சாவித்திரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்விரத முறையானது மாசி மாதக் கடைசி நாள் தொடங்கப்பட்டு பங்குனி முதல் நாள் நிறைவு பெறுகிறது. இவ்வழிபாட்டில் இடம் பெறும் நோன்புக் கயிறானது வழிபாடு முடிந்ததும் பெண்களால் அணியப்படுவது குறிப்பிடத் தக்கது. இவ்விரத முறையினை திருமணமான பெண்கள் மேற்கொள்வதால் தங்கள் கணவனின் ஆயுள் நீடிப்பதோடு, அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வினை அம்மன் வழங்குவதாகவும் கருதுகின்றனர்.
ஆலமகீ ஏகாதசி
பங்குனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஆலமகீ ஏகாதசி என்று பெயர். ஆலமகீ ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து திருமாலை வழிபட கோ (பசு) தானம் செய்த பலன் கிடைக்கும். இவ்விரதத்தை மேற்கொண்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.
விஜயா ஏகாதசி
பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். விஜயா என்றால் வெற்றி என்பது பொருளாகும். தங்களுடைய முயற்சிகளில் வெற்றி பெற விரும்புவோர் இவ்விரதமுறையை பின்பற்ற நல்ல பலன் கிடைக்கும். ராமச்சந்திர மூர்த்தி இவ்விரத்தை மேற்கொண்டே இராவணனை வெற்றி கொண்டு, சீதா தேவியை மீட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையாரின் குருபூஜை பங்குனி சுவாதியில் மேற்கொள்ளப்படுகிறது. பங்குனி மாத சிறப்புகள் பற்றி அறிந்து கொண்டீர்களா? பங்குனியில் அவதரித்ததால்தான் வில்வித்தை வீரனான அர்ஜூனன் பால்குணன் என்ற பெயரினைப் பெற்றான். வசந்த காலமான பங்குனி எல்லோர் வாழ்விலும் வசந்தத்தை வீசட்டும்.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பட்டாச்சாரியார்கள் எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
இதனையொட்டி கோவிலுக்குள் ஆறுகால் மண்டபம் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது.இந்த நிலையில் பச்சை குதிரை வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் நகரில் உலா வந்து ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு அக்கினி வளர்க்கப்பட்டு பூஜை நடைபெற்றது. மேலும் கீரிடத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்தநிலையில் மேளதாளங்கள் முழங்க, சர்வ மந்திரங்களுடன் முருகப்பெருமானின் சிரசில் தங்கக் கிரீடமும், சேவல் கொடியும் சாத்தப்பட்டது. மேலும் முருகப்பெருமானின் திருக்கரத்தில் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் சூடி பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.அவை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலுக்குள் திரளாக கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் 12-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) பகல் 12.45 மணி முதல் 1.15 மங்கள வாத்தியங்கள் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க முருகப்பெருமான், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்காக கோவிலுக்குள் உள்ள 6 கால் மண்டபம், திருவாட்சி மண்டபம் வாசனை கமழும் மலர்களாலும், மின்னொளிகளாலும் அலங்கரிக்கப்பட்டு தயாராக உள்ளது.
இந்த நிலையில அதிகாலை 5 மணி அளவில் முருகப்பெருமான் தெய்வானைக்கு மணக்கோல அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது. இதனையடுத்து காலை 6 மணியளவில மேளதாளங்களுடன் கோவிலிலிருந்து சன்னதி தெரு வழியாக பசுமலை மூலக்கரை அருகே உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு செல்கிறார்.
இதேசமயம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் புறப்பட்டு திருப்பரங்குன்றம் சந்திப்பு மண்டபத்திற்கு வருகின்றனர்.அங்கு முருகப்பெருமான் தனது திருமணத்திற்கு வருகை தரும் தன் பெற்றோர்களான சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனை வரவேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
கோவிலுக்குள் ஒடுக்க மண்டபத்தில் கண்ணூஞ்சல் நடக்கிறது.பின்பு திருமணம் கோலாகலமாக நடக்கிறது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (22-ந் தேதி) தேரோட்டம் நடக்கிறது.

நமது தமிழகத்தை பொறுத்த வரையில் கூட வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுடைய எண்ணிக்கை அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது.
இந்த ஏழை கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்கு சொல்கிறேன்.(லூக்21:3)
உலக நாகரிகம் தோன்றிய காலகட்டத்தில் இருந்தே வறுமை அல்லது ஏழ்மை ஒரு விவாதப்பொருளாகவே உள்ளது. கி.பி. 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளேட்டோ கூறும் போது அதிகமான ஏழ்மையும், அதிகமான பணபலமும் காணப்பட்டால் அது தீங்கு விளைவிக்கும் என்று குறிப்பிட்டார். ஏற்கனவே வசதி படைத்தவர்கள் மேலும் வசதி அடைவதை முன்னேற்றம் என கூற முடியாது. வசதி இல்லாதவர்களுக்கு வசதியை ஏற்படுத்துவதில் தான் முன்னேற்றம் உள்ளது என்கிறார் அமெரிக்க முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட், ஏழைகளின் வாழ்க்கை தரம் பற்றி பேசாத தலைவர்கள் இல்லை என்ற போதிலும் ஏழ்மை இந்த சமூகத்தில் அழிப்பட்டு இருக்கிறதா? என்றால் மாபெரும் கடினமான ஒன்றாகதான் இருக்கிறது.
தினசரி உழைத்தால் மட்டும் தான் உணவு என்ற சூழல் இன்று மிக அதிகமாக சமூகங்களில் தென்படுகிறது. நமது தமிழகத்தை பொறுத்த வரையில் கூட வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுடைய எண்ணிக்கை அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. அவர்களை பராமரிப்பதற்கு யாரும் முன்வருவதில்லை.
மலைவாழ் மக்கள், கிராமங்களில் வாழ்கின்ற மக்கள், வீதியோரங்களில் வாழ்கின்ற மக்கள், தெருவோரங்களில் வாழ்கின்ற மக்கள் என்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கிராமங்களில் இருந்து நகர் புறத்துக்கு செல்கின்ற மக்களில் 10 பேரில் 3 பேர் வசதி பெறுகிறார்கள். எனவே ஏழ்மையை போக்குவதற்கு முன்னெடுப்புகளை முன்னெடுக்க வேண்டிய ஒரு சூழல் இந்த சமூகத்தில் மிக அதிகம் உள்ளது. அரசும் அதை சார்ந்த நிர்வாகமும் இதற்கான பல தொடர் திட்டங்களை தீட்டி முன்னெடுப்புகளை முன்னெடுக்கின்ற போது மட்டும் தான் இந்த சூழல் சமூகத்தை விட்டு அகலும் என்பதை உணர்ந்திடுவோம்.
-அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.

இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3.15 மணி அளவில் ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
உலகை காக்கும் பரம்பொருளான நவக்கிரகங்களின் செயல்பாட்டின் அடிப்படையில் தான் ஒவ்வொரு நாளும் இயங்குகின்றன. இதில் ராகு-கேது, குரு, சனி ஆகிய கிரகங்கள் மட்டுமே அடிக்கடி இடப்பெயரும் தன்மை கொண்டவை ஆகும். ராகு-கேது நீங்கலாக மற்ற கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கி செல்லும் தன்மை உடையவை.
இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3.15 மணி அளவில் ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
இதனை முன்னிட்டு புதுவையில் உள்ள வேதபுரீஸ்வரர், சித்தானந்தர், வில்லியனூர் திருக்காமீசுவரர், பாகூர் மூலநாதர், திருவண்டார் கோவில் பஞ்சநாதீஸ்வரர், மொரட்டாண்டி உள்பட அனைத்து கோவில்களிலும் நவகிரகங்களுக்கு மகா யாகமும், தொடர்ந்து விசேஷ அபிஷேக, அலங்கார, ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகார பூஜை நடைபெறுகிறது.
புதுவை இடையார்பாளையம் நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள ஆதி சொர்ணபைரவர் கோவிலில் ஒரே கல்லில் உருவான அபயராகு-அனுக்கிரக கேது சன்னதியில் பரிகார சாந்தி, துர்கா கணபதி ஹோம வழிபாடு காலை 10 மனிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து விசேஷ அபிஷேக, அலங்காரத்துடன் வழிபாடு நடக்கிறது.
கோவில்களில் பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடை பிடித்தும் வழிபாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் நாகநாதசாமி கோவில் உள்ளது. இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் 3.13 மணிக்கு ராகுபகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் நாகநாதசாமி கோவில் உள்ளது. பல்வேறு புராண சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் 1½ வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி இடம்பெயரும் ராகு பெயர்ச்சி விழா இன்று(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முதற்கட்ட லட்சார்ச்சனை விழா 3 நாட்கள் நடைபெற்றது. ராகுபகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக இந்த தலத்தில் அருள்பாலிக்கிறார். இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் 3.13 மணிக்கு ராகுபகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனையொட்டி கடந்த 19-ந்தேதி கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது.
நேற்று இருகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை 10.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2.30 மணிக்கு கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், சிறப்பு பாலபிஷேகமும், 3.13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் தீபாராதனையும் நடைபெற உள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்கு ஏதுவாக சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக வருகிற 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. 26-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் ராகு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனைகள், தயிர் பள்ளயம் தீபாராதனை நடக்கிறது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சி.நித்யா, தக்கார் ஆர். இளையராஜா, கோவில் மேலாளர் ஜெயக்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்....கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாதசாமி கோவிலில் 21-ந்தேதி கேது பெயர்ச்சி விழா

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் சாமி பிரம்மோற்சவ விழா நாட்களில் சேஷ வாகனம், சிம்ம வாகனம், அம்ச வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, தங்க சப்பரம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் சாமி புறப்பாடு நடக்கிறது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் சாமி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர், இரவு புன்னைமர வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணிக்கு கருடசேவை, கோபுர வாசல் தரிசனம், 24-ந் தேதி காலை 5.30 மணிக்கு பல்லக்கு-நாச்சியார் திருக்கோலம், யோகநரசிம்மர் திருக்கோலம் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 5.45 மணிக்கு சாமி திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். பின்னர் 7.30 மணிக்கு தேரை பொதுமக்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு 9 மணிக்கு தோட்ட திருமஞ்சனம் நடக்கிறது. 28-ந் தேதி காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரியும், 29-ந் தேதி கொடியிறக்கமும் நடக்கிறது.
விழா நாட்களில் சேஷ வாகனம், சிம்ம வாகனம், அம்ச வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, தங்க சப்பரம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் சாமி புறப்பாடு நடக்கிறது. வருகிற 30-ந் தேதி விடையாற்றியும், அன்று இரவு 8 மணிக்கு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை உதவி கமிஷனர் கவெனிதா உள்பட கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

வடபழனி முருகன் கோவிலில் 3-வது நாள் தெப்பத்திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளுகிறார்.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி 3 நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. வடபழனி முருகன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார்.
2-வது நாளான நேற்று உற்சவர் சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் மின்னொளியில் ஜொலித்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வேதபாராயணம், நாதஸ்வர கச்சேரியுடன் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3-வது நாள் தெப்பத்திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளுகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணை கமிஷனர் கி.ரேணுகாதேவி ஆகியோர் செய்து உள்ளனர்.

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று(திங்கட்கிழமை) காலை கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவிலின் உபகோவிலாகும். இக்கோவிலின் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 4.45 மணிக்கு பெருமாள், தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஆனந்தராயர் மண்டபத்தை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து கருடன் படம் வரையப்பட்ட கொடி வீதி உலாவாக எடுத்து வரப்பட்டது.
பின்னர், பெருமாள்-தாயார் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பட்டயதாரர்கள், திருவெள்ளறை ஊராட்சி தலைவர் லதா கதிர்வேல் ஆகியோர் முன்னிலையில் காலை 5.30 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
விழாவையொட்டி இன்று(திங்கட்கிழமை) காலை கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இரவு ஹனுமந்த வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிக்கு பெருமாள்-தாயார் ஆனந்தராயர் மண்டபத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி ஸ்ரீரங்கம் வட காவிரி ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார்.
அதனைத்தொடர்ந்து 23-ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கு வழிநடை உபயங்கள் கண்டருளி கண்ணாடி அறை சென்றடைகிறார். அன்று இரவு கருட வாகனத்திலும், அடுத்தடுத்த நாட்களில் காலையில் ஹம்சவாகனம், இரவில் சேஷ வாகனம், சிம்மம், யானை ஆகிய வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். 26-ந் தேதி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27-ந் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 28-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் நடைபெறுகிறது.

பழனியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் செல்லும் பாதைகள், கிரிவீதிகள் ஆகிய இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில்காவடி எடுத்து பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கையும் செலுத்துகின்றனர். பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தினமும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் மாலையில் தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா, பிடாரி மயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி கிரிவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் பழனிக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. திருஆவினன்குடி, பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில் மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பழனியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் செல்லும் பாதைகள், கிரிவீதிகள் ஆகிய இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பக்தர்கள் ஆனந்தமாக கிரிவீதியை சுற்றி வந்தனர். திருவிழாவையொட்டி பக்தர்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம், பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் போலீசார் சாதாரண உடைகளில் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வானகரத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள் எழுந்தருள செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வருகிற 10-ந் தேதி வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.
சென்னை, கோயம்பேட்டை அடுத்து உள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி கல்யாண மகாலில் 25 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 108 திவ்ய தேச பெருமாள்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. பக்தா்கள் பார்வையிடுவதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது.
ஏ.ஜி.சி.மீடியா நிர்வாக இயக்குனர் ஜி.மோகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலாளர் சி.ரமேஷ் மற்றும் வெங்கட்ரமணன், ராஜ் கல்யாண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது:-
பெருமாளின் மீது பக்தி கொண்ட ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் 108 திவ்ய தேச பெருமாள்களை தரிசித்து மகிழ வேண்டும் என்பது அவர்களின் கனவாகும். அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது என்பதால், அவர்களுடைய கனவை நனவாக்கும் வகையில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருள செய்யப்பட்டு உள்ளனர்.தொடர்ந்து வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். ஒவ்வொரு பெருமாளுக்கும் தினசரி அந்தந்த கோவில்களில் எவ்வாறு பூஜைகள் நடைபெறுமோ? அதுபோன்று பூஜைகள் செய்யப்படுகிறது. பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டு பெருமாளுக்கு படைக்கப்பட்ட பின்னர் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு அர்ச்சனை செய்த பிரசாதத்தை வீடுகளுக்கு எடுத்து செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் திருப்பதி பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு தயிர்சாதம், புளியோதரை, பொங்கல் போன்ற பிரசாதங்களும் வழங்கப்படுகிறது.
இதுதவிர பக்தர்களின் வசதிக்காக உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது. 300 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கான இடவசதி மற்றும் கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. பெருமாளை தரிசிக்க நபர் ஒருவருக்கு ரூ.100 கட்டணமும், சிறப்பு கட்டணமாக ரூ.300-ம் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நல்ல மனம் கொண்டவர்கள் பாதிக்கப்பபட்டு அவர்கள் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் சாபமாக களமிறங்கும்.
தோஷம் தீரும் காலம்:- தோஷம் வேறு சாபம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தோஷத்திற்கு பரிகாரம் செய்தால் தீர்வு உண்டு. சாபத்திற்கு தீர்வு காண்பது கடினம்.
சாபத்தின் தன்மையே வேறு. ஒருவர் பாவ காரியத்தை செய்யும் போது பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவர்களை வேதனையுடனோ கண்ணீருடனோ சபிப்பது தான் சாபம். சாபத்தை போக்கிக்கொள்வது அத்தனை சுலபமல்ல. காரணம் பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மட்டுமே பாவம் செய்தவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
பாதிப்பிற்கு ஏற்ப சாபம் ஒரு கட்டத்தில் வேலை செய்யும். தவறு செய்தவர், தான் செய்த தவறுக்கு வருந்தி, திருந்தி, மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால் சாபத்தின் கடுமை ஓரளவு நீங்க வாய்ப்புண்டு. இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பாதிப்பை செய்தவரும் பாதிக்கப்பட்டவரும் இன்னார் தான் என்று தெரிந்து அவர்கள் மறுபடியும் சந்திக்கும் போது மட்டுமே இது சாத்தியப்படும். சாப நிவர்த்திக்கு வழி உண்டு. ஆனால், ஜென்ம ஜென்மமாக சில சாபங்கள் தொடர்ந்து வரும். அதற்கு எங்கே போய் யாரிடம் மன்னிப்பு கேட்பது?
என்ன வாசகர்களே காஞ்சனா படம் பார்த்தது போல் இருக்கிறதா? பெண் சாபத்தை மட்டும் பிரதானமாக ஜோதிட உலகம் விமர்சிக்கிறதே? ஆண் சாபத்தை ஏன் கண்டு கொள்வது இல்லை என கேட்பதும் புரிகிறது. பெண்கள் மன வலிமை இல்லாதவர்கள். சிறிய தோல்வியை கூட தாங்கும் சக்தி அற்றவர்கள். அவர்களின் ஆயுதமே கண்ணீரும் சாபமும் தான்.
பெண்கள் கண்ணீர் விட்டாலே ஸ்திரீ சாபம் ஒட்டிக் கொள்ளும். ஆண்கள் மனம், உடல் வலிமை பெற்றவர்கள். எளிதில் தவறை, துரோகத்தை மறந்து மன்னித்து விடும் மனப்பக்குவம் உள்ளவர்கள். கடுமையான பாதிப்பு இருந்தால் ஆண் சாபமும் பாதிப்பை தரும். பெண்களால் ஆண்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் நிச்சயமாக ஆண் சாபமும் தண்டனையை பெற்றுத்தரும். நல்ல மனம் கொண்டவர்கள் பாதிக்கப்பபட்டு அவர்கள் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் சாபமாக களமிறங்கும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406

பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தரநாயகி சமேத நாகநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
சாயாகிரகம் என்று அழைக்கப்படும் இவர், 1½ ஆண்டுக்கு ஒருமுறை பின்னோக்கி பெயர்ச்சியாகிறார். இவரை வணங்கினால் நீதிமன்ற வழக்குகளில் தீர்வு, திருமண தடை, செல்வ செழிப்பு, ஆன்மீக பயணங்கள், குடும்ப ஒற்றுமை உள்ளிட்டவைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பல்வேறு சிறப்புகளை கொண்ட கேது பகவான் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 3.14 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு இரண்டு கால யாக பூஜைகள் நடக்கின்றன.
இதனைத்தொடர்ந்து மகா பூர்ணாகுதி, பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. பின்னர் 3.14 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. இந்த பெயர்ச்சி விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், தக்கார் நித்யா மற்றும் தலைமை அர்ச்சகர் பட்டு சிவாச்சாரியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.