
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
நேற்று இருகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை 10.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2.30 மணிக்கு கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், சிறப்பு பாலபிஷேகமும், 3.13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் தீபாராதனையும் நடைபெற உள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்கு ஏதுவாக சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக வருகிற 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. 26-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் ராகு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனைகள், தயிர் பள்ளயம் தீபாராதனை நடக்கிறது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சி.நித்யா, தக்கார் ஆர். இளையராஜா, கோவில் மேலாளர் ஜெயக்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்....கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாதசாமி கோவிலில் 21-ந்தேதி கேது பெயர்ச்சி விழா