search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirunageswaram Temple"

    • கஜ பூஜை, அஸ்வ பூஜை, கோ பூஜை என சிறப்பு பூஜைகள் நடந்தன.
    • துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

    கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய தலமாக இக்கோவில் திகழ்கிறது. இங்கு குன்றுமுலைக்குமரி எனப்படும் கிரிகுஜாம்பிகை மலைமகள், அலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியாக அருள்பாலிக்கிறார்.

    கடந்த தை மாதம் 1-ந் தேதி புணுகு தைலம் சாற்றப்பட்டதை தொடர்ந்து திரை மறைவில் உள்ள அம்பாளின் முகத்தை மட்டுமே பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கோவிலில் சண்டி மகாயாகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மகாசண்டி யாக விக்னேஸ்வர பூஜை, சண்டியாக சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று காலை 7 மணி முதல் கஜ பூஜை, அஸ்வ பூஜை, கோ பூஜை என சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மங்கல வாத்தியங்களுடன் கடங்கள் புறப்பட்டு அம்பாள் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து தயிர் பள்ளயம் உள்ளிட்ட சிறப்பு ஆராதனைகள் நடந்தன.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சண்டி மகா யாக ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) உமாதேவி மற்றும் சங்கர் குருக்கள், இ.பி. உப்பிலி சீனிவாசன் மற்றும் நவசண்டி மகா யாக சேவா சங்கம், கிரிகுஜாம்பிகை பவுர்ணமி வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

    • அஸ்திரதேவருக்கு சூரிய புஷ்கரணியில் அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு தலம் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. நேற்றுமுன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. கார்த்திகை கடைஞாயிறு விழாவையொட்டி தினந்தோறும் நான்கு வீதிகளிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    நேற்று காலை 9 மணிக்கு கோவி்ல் வளாகத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக 50 நாதஸ்வர வித்வான்கள், 50 தவில் வித்வான்கள் இணைந்து மல்லாரி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 10 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலா நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணி முன்பு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளினர். அஸ்திரதேவருக்கு சூரிய புஷ்கரணியில் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து ஹோமம் செய்யப்பட்ட கடஅபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து கொட்டும் மழையில் சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது குளத்தின் நான்கு புறமும் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சூரிய புஷ்கரணியில் இறங்கி நீராடி வழிபட்டனர். பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், பேரூராட்சி நிர்வாக அதிகாரி வி. சிவலிங்கம், துணைத்தலைவர் உதயாஉப்பிலி, ஆர். பாலா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் மகேஸ்வரிதுரைராஜ், திருநாகேஸ்வரம் மின்சார வாரிய இளநிலை பொறியாளர் பழனிசாமி உள்ளிட்ட கோவில் உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) தா. உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • 10-ந்தேதி தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 11-ந்தேதி பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் நாகநாதர் கோவில் உள்ளது. ராகு சுசீல முனிவர் அளித்த சாபத்தால் மானுட பாம்பாக திரிந்து மகா சிவராத்திரி அன்று நாகநாதரை வழிபட்டு சாபம் நீங்க பெற்ற சிறப்பு பெற்ற தலம் இந்த கோவில் ஆகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்ச மூர்த்திகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடி மரத்துக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    பின்னர் விசேஷ ஆராதனைகளைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினசரி காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி ஐந்துதலை நாக வாகனம், பூத வாகனம், சிம்மம், கிளி , வெள்ளி ரிஷபம், யானை, அன்னம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது.

    10-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7:30 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலா நடக்கிறது. காலை 9 மணிக்கு கோவில் வளாகத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக 50 நாதஸ்வர வித்வான்கள் 50 தமிழ் வித்வான்கள் இணைந்து மல்லாரி இசை வாசிக்கப்படுகிறது. வீதி உலா முடிந்து பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணி முன்பு எழுந்தருளி தீர்த்துவாரி நடக்கிறது. தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி நடைபெறும் இரண்டு தினங்களிலும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் சுமார் 2ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு தா. உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 10-ந்தேதி தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணி முன்பு எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கிறது.

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவகிரக தலங்களில் ஒன்றான ராகு தலமான நாகநாத சாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இ்ந்த கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா 2-ந்தேதி(வௌ்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் தினசரி காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி 5 தலை நாக வாகனம், பூத வாகனம், சிம்ம வாகனம், கிளி, வெள்ளி ரிஷபம், யானை, அன்னம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது.

    10-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7:30 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10-ம் நாள் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலா நடக்கிறது. பின்னர் பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணி முன்பு எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் தா. உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • டிசம்பர் 2-ந்தேதி கார்த்திகை கடைஞாயிறு விழா தொடங்குகிறது.
    • பந்தக்காலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் கோபுர வாசலில் நடப்பட்டது.

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

    விழாவை முன்னிட்டு நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. அப்போது பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோவில் கோபுர வாசலில் பந்தக்கால் நடப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு உமாதேவி, மேலாளர் நடராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக திருநாகேஸ்வரம் வந்தான்
    • நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம்.

    பாதாள லோகத்திலிருந்து நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக சண்பகவனம் எனும் திருநாகேஸ்வரம் வந்தான். இங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, அதன் கரையில் அமர்ந்து கடும் தவம் செய்தான்.

    ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். எனவே நாகராஜனுக்கு அருளிய மூலவர் நாகநாதசுவாமி என அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாகதீர்த்தம் ஆனது.

    நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். 1986-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக ராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது.

    ×