என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஒரத்தநாடு - புதூர் யானை மேல் அழகர் அய்யனார் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு- புதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற யானைமேல் அழகர் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் ரூ.3 கோடி செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு, யானை மேல் அழகர் அய்யனார் கோவில் கருங்கல் திருப்பணி சேவிக்கப்பட்டும், இதன் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், முன்னடியான், கருப்பண்ணசாமி, பாண்டிமுனி, சடைமுனி, இடும்பன், துவாரபாலகர், குதிரை, யானை போன்றவைகளும் சிறப்பாக அமைக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து இக்கோவிலின் குடமுழுக்கு விழா நேற்று காலை நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், கடம் புறப்பட்டு, தாரை தப்பட்டங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு விழா கோலாகலத்துடன் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த குடமுழுக்கு விழாவின் போது கோவில் கோபுரத்தின் மேல் வானில் பறந்த ஹெலிகாப்ரில் இருந்து பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்டது. இதனால் பக்தர்கள் ஆனந்த பரவசம் அடைந்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. மேலும் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தும் பக்தர்கள் வழிபட்டனர். நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்களும், புதூர் கிராம மக்களும் செய்திருந்தனர்.

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகுபெயர்ச்சி விழாவும், கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழாவும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலமான நாகநாதசாமி கோவில் அமைந்து உள்ளது. பல்வேறு புராண சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் 1½ வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி இடம் பெயரும் ராகு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.
ராகுபகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக இந்த தலத்தில் அருள்பாலிக்கிறார். நேற்று பிற்பகல் 3.13 மணிக்கு ராகுபகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இதையொட்டி நேற்று முன்தினம் இருகால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2.30 மணிக்கு கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், சிறப்பு பாலபிஷேகமும், 3.13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் தீபாராதனையும் நடந்தது.
இதேபோல மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாதசாமி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கேது பகவான் 1½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சி அடைவது வழக்கம்.
அதன்படி நேற்று கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதைத்தொடர்ந்து கேது பரிகார ஹோமம் நடந்தது.
பின்னர் கேது பகவானுக்கு வாசனை திரவியங்கள், மஞ்சள் பொடி, இளநீர், பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து பிற்பகல் 3.14 மணிக்கு கேது பகவான் பெயர்ச்சி அடைந்தவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த ராகு, கேது பெயர்ச்சி விழாக்களில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மார்ச் மாதம் 22-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 28-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
22-ம் தேதி செவ்வாய் கிழமை :
* தேய்பிறை சதுர்த்தி
* சித்தயோகம்
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் ரதோற்சவம்
* சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி
23-ம் தேதி புதன் கிழமை :
* .சுபமுகூர்த்தம்
* சித்தயோகம்
* மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் விடாயற்று உற்சவம்
* சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி
24-ம் தேதி வியாழக்கிழமை:
* தேய்பிறை சப்தமி
* சித்தயோகம்
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
* சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை
25-ம் தேதி வெள்ளிக்கிழமை:
* தேய்பிறை அஷ்டமி
* மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பஞ்சமுக ஹனுமார் மரஉறி ராமர் திருக்கோலமாய் காட்சி.
* சந்திராஷ்டமம்: விசாகம் - கார்த்திகை, ரோகிணி
26-ம் தேதி சனிக்கிழமை:
* தேய்பிறை நவமி
* சித்தயோகம்
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி
* குச்சனூர் சனி பகவான் சிறப்பு ஆராதனை
* சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்
27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை:
* சுபமுகூர்த்தம்
* திருவோண விரதம்
* கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை
28-ம் தேதி திங்கட்கிழமை:
* தேய்பிறை ஏகாதசி
* சுபமுகூர்த்தம்
* சர்வ ஏகாதசி
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் ரதோற்சவம்
* சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்

பங்குனி கல்யாண மாதம் என்பதால் தொடர்ச்சியாக சுப முகூர்த்த நாட்கள் வருகிறது. பங்குனி மாதத்தில் (மார்ச் - ஏப்ரல்) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பங்குனி 7 (21.3.2022) திங்கள் திருதியை சுவாதி அமிர்த காலை 6-7.30
பங்குனி 9 (23.3.2022)புதன் சஷ்டி அனுஷம் சித்த காலை 9-10
பங்குனி 13 (27.3.2022)ஞாயிறு தசமி உத்ராடம் அமிர்த காலை 7.30-9
பங்குனி 14 (28.3.2022)திங்கள் ஏகாதசி திருவோணம் அமிர்த காலை 6-7.30
பங்குனி 16 (30.3.2022)புதன் திரயோதசி சதயம் சித்த காலை 9-10
பங்குனி 20 (3.4.2022) ஞாயிறு துவிதியை அசுவினி சித்த காலை 7.30-9
பங்குனி 23 (6.4.2022) புதன் பஞ்சமி ரோகிணி சித்த காலை 6-7.30
பங்குனி 30 (13.4.2022) புதன் துவாதசி மகம் சித்த காலை 6-7

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் விழா இந்தாண்டு நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 8-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் விழா இந்தாண்டு நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விழாவையொட்டி தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
பக்தர்கள் வரிசையில் வந்து குண்டம் இறங்கு வதற்காக கோவில் வளாகத்தில் தகர சீட்டுகள் மூலம் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கர்நாடகா மாநில பக்தர்கள் என பலர் மாட்டு வண்டிகளில் தங்களது குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் தங்கள் விவசாய நிலங்களில் விளைவித்த மஞ்சள் மற்றும் விவசாய பொருட்களை கொண்டு வந்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர். அவர்கள் கோவில் அருகே கால் நடைகளுடன் தங்கி உள்ளனர்.
விழாவையொட்டி இன்று அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
குண்டம் இறங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே பக்தர்கள் கோவிலுக்கு வந்து அங்கேயே தங்கி காத்து கொண்டு இருப்பார்கள். ஆனால் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி வழங்காததால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சேலை மற்றும் துண்டுகள் மூலம் இடம் பிடித்தனர். இதைதொடர்ந்து இன்று காலை முதல் குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையில் நிற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி இன்று அதிகாலை முதலே பக்தர்கள் சாரை சாரையாக வந்து கோவிலில் குவிந்தனர். அவர்கள் குண்டம் இறங்கும் இடத்தில் உப்பு, மிளகு போட்டு வணங்கினர். அவர்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டு குண்டம் இறங்க தகர கொட்டகையில் வரிசையில் காத்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
தினமும் ஏராளமான பக்தர்கள் வேண்டுதல் களை நிறைவேற்றும் வகையில் கோவிலுக்கு வந்து எரி கரும்புகளை (விறகுகள்) காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.
விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு வேம்பு மற்றும் வேங்கை மரங்கள் போடப்பட்டு சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி எரி கரும்புகளுக்கு (விறகு) தீ பற்ற வைத்து குண்டம் வளர்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நாளை அதிகாலை தாரை தப்பட்டை மற்றும் பீனாட்சி வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து நாளை அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
முதலிலில் கோவில் பூசாரிகள் குண்டம் இறங்குகிறார்கள். பின்னர் பண்ணாரியம்மன் சப்பரமும் தொடர்ந்து பக்தர்களும் குண்டம் இறங்குகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதைதொடர்ந்து மாலை 3 மணிக்கு மேல் கால்நடைகளை கொண்டு வந்து குண்டம் இறங்க செய்வார்கள்.
பக்தர்கள் வசதிக்காக குடிநீர் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பண்ணாரி கோவில் வளாகத்தில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது.
பண்ணாரியம்மன் கோவில் வழியாக திம்பம் மலைப்பாதையில் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வருவார்கள். இதனால் கூட்டம் அதிகளவில் கூடும்.
எனவே விழாவையொட்டி பண்ணாரி வழியாக செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணி முதல் முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி வரை 24 மணி நேரம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழாவையொட்டி ஈரோடு, சத்தியமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பண்ணாரிக்கு 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
குண்டம் விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 15 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 40 இன்ஸ்பெக்டர்கள், 100 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருநாகேஸ்வரம் தலத்தில் ராகுபகவானுக்கு செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தை பார்க்கலாம்.
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம். இந்த தலம் ராகு பகவான் சிவபெருமானை பூஜித்த திருத்தலமாகும். நாக அரசராகிய ராகு பூஜித்தமையால்தான் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது. திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் ராகு பகவான் தனது இருதேவியருடன் எழுந்தருளியுள்ளார். புராண வரலாற்றின்படி இத்தலத்தில் ராகு பகவான் நாகநாத சுவாமியை வழிபட்டதோடு, இத்தலத்தில் தன்னையும் வழிபடுவோருக்கு பல நலன்களையும் அருளும் வரமும் பெற்று திகழ்கின்றார்.
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலின் பெரிய பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் ராகு சன்னதி உள்ளது. ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுல பெண்ணொருத்திக்கும் மகனாக பிறந்தவர் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தை பெற்று உண்டு விட்டார். உண்மை அறிந்த மகாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவரது தலையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தார். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவருடைய தலைப்பகுதியில் உயிர் இருந்தது.
ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார். நவக்கிரக தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ தலம் என்ற பெருமை திருநாகேஸ்வரம் கோவிலுக்கு உண்டு. சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோவிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாககன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் ‘மங்கள ராகுவாக’ தனிக்கோவிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார்.
கோபுரம், சிற்பங்களில் தனித்துவம்
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலானது ஊரின் தென் வடவாக 630 அடியும், கீழ் மேலடி 200 அடியும் கொண்ட பரப்பளவில் அமைந்துள்ளது. கோவிலை ஒட்டி மட விளாகமும், அடுத்து நான்கு வீதிகளும் உள்ளன. நான்கு திசைகளிலும் நான்கு கோபுர வாசல்கள் அழகிய சிற்பங்களுடன் உள்ளன. கோவில் மதில் சுவர்களை அடுத்து பெரிய பிரகாரம் உள்ளது. வட புறம் பூந்தோட்டம் உள்ளது. கிழக்கு கோபுர வாசலை அடுத்து விநாயகர் கோவில், பலிபீடம், நந்தி மண்டபம், கொடி மரம் ஆகியவை உள்ளன.
தெற்கில் குளம் நான்கு புறமும் பழமையான வவ்வால் இரட்டை மண்டப வடிவில் உள்ளது. வடக்கு புறத்தில் தேர் வடிவில் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. கோவில் நடு கோபுர வாசல் அமைப்புடன் தொடங்குகிறது. கோபுர வாசலையொட்டி பெரிய பிரகாரமும் அதன் பக்கச்சுவர்களை ஒட்டி திருச்சுற்று மண்டபம் உள்ளது. இறைவனுக்கு அருகில் உள்ளது பிரையணிநுதலாள் சந்நிதி. கிரிகுஜாம்பிகை சந்நிதி, தனிக்கோவிலாக விளங்குகிறது. சுதை உருவம். எனவே அபிஷேகம் கிடையாது. தை மாதத்தில் மட்டும் புனுகு சாத்தப்படுகிறது.
நீலநிறமாக மாறும் பால்
ராகுவுக்கு உகந்த நிறம் நீலம். இவருக்கு நீல நிற ஆடை அணிவிக்கப்படுகிறது. திருநாகேஸ்வரம் தலத்தில் ராகுபகவானுக்கு செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தை பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரையாகும்.
ஆதிசேஷன் வழிபட்ட தலம்
பாதாள லோகத்திலிருந்து நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக சண்பகவனம் எனும் திருநாகேஸ்வரம் வந்தான். இங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, அதன் கரையில் அமர்ந்து கடும் தவம் செய்தான். ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். எனவே நாகராஜனுக்கு அருளிய மூலவர் நாகநாதசுவாமி என அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாகதீர்த்தம் ஆனது. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். 1986-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக ராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது.

ஒரு காலத்தில் நாடாளும் மன்னர்களின் பரம்பரைகளுக்கு மட்டும் பலன் பார்க்க பயன்படுத்தப்பட்ட ஜோதிட கலை தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பப்படுகிறது.
12.4.2022 முதல் 30.10.2023 வரை
நிழல் கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் எனப்படும் ராகு-கேதுப் பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான பிலவ வருடம் பங்குனி மாதம் 29ம் நாள் 12.4.2022 செவ்வாய்கிழமை பகல் 1.48 மணிக்கு கிருத்திகை நட்சத்திரம் 2ம் பாதம் ரிஷப ராசியிலிருந்து கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார்.
அதே நேரத்தில் கேது பகவான் விசாக நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசியிலிருந்து விசாக நட்சத்திரம் 3ம் பாதம் துலா ராசிக்குள் பிரவேசிக்கிறார். அன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் மேஷ ராசியில் ராகு பகவானும் கேது பகவான் துலாம் ராசியிலும் சஞ்சரித்து பல்வேறு பலன்களை வழங்குவார்கள்.
ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர். இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது. இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.
ராகு இப்போது மேஷ ராசியில் செவ்வாய் வீட்டில் அமர்ந்து செவ்வாயைப் போல செயல்படப்போகிறார். கேது இனி துலாம் ராசியில் அமர்ந்து சுக்கிரனைப் போல செயல்படப்போகிறார்.
கிரக சஞ்சாரம்:ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.
12.4.2022 முதல்14.6.2022 வரை கிருத்திகை நட்சத்திரம்.
15.6.2022 முதல் 20.2.2023 வரை பரணி நட்சத்திரம்.
21.2.2023 முதல் 30.10.2023 வரை அசுவினி நட்சத்திரம்.
கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.
12.4.2022 முதல் 17.10.2022 வரை விசாகம் நட்சத்திரம்
18.10.2022 முதல் 26.6.2023 வரை சுவாதி நட்சத்திரம்
27.6.2023 முதல் 30.10.2023 வரை சித்திரை நட்சத்திரம்
அதிர்ஷ்டமான பலன் பெறும் ராசிகள்:
ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம்
சுமாரான பலன் பெறும் ராசிகள்:
கடகம், மகரம்
பரிகார ராசிகள்:
மேஷம், கன்னி, துலாம், மீனம்
ஒரு காலத்தில் நாடாளும் மன்னர்களின் பரம்பரைகளுக்கு மட்டும் பலன் பார்க்க பயன்படுத்தப்பட்ட ஜோதிட கலை தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பப்படுகிறது.
உலகில் மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் எதிர்காலம் பற்றி அறியும் ஆவல் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். ஒருவரின் வாழ்நாள் பலனை நிர்ணயிப்பதில் வருட கிரகங்களான குரு, ராகு/கேது மற்றும் சனியின் கோட்சாரம் மிக முக்கியமானதாகும். அதே போல் ராகு/ கேதுக்கள் அசுப கிரகம், வினை ஊக்கிகள் என்பதால் இதன் பெயர்ச்சிகளைக் கண்டு பலரும் அஞ்சுகிறார்கள்.
மனிதன் தன் வாழ்நாளை மூன்று வகையான கர்ம வினைகளாக பெற்று அனுபவிக்கிறான். இதை பிறவிக் கடன் என்றும் கூறலாம். அதாவது அவை சஞ்சித கர்மம்,பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம்.
இதில் சஞ்சித கர்மம்என்பது தாய், தந்தையிடம் இருந்தும் நமது முன்னோர்களிடமிருந்தும் நமது ஆத்மா பல்வேறு பிறப்புகளில் செய்த பாவ புண்ணியங்களின் சேர்க்கை . கரு உருவாகும் போதே உடன் உருவாகுவது .பிராப்த கர்மா என்பது சென்ற பிறவியின் வினைக்கு ஏற்ப ஆன்மா இந்த பிறவியில் அனுபவிக்கும் பிராப்த பலன்கள்.
பிராப்த பலன்களை அனுபவிக்கும்போது உருவாகும் புதிய கர்மாவால் வரும் பலனையும் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும். ஆகாமிய கர்மா என்பது மேற்கூறிய இரண்டு கர்மாக்களை கழிக்க செய்யும் செயல்கள் மூலம் இந்த பிறவியில் சேர்க்கும் புதிய வினை.
இந்த மூன்று வகையான கர்மவினைகளில் இருந்து யாரும் தப்ப முடியாது. மனிதன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் மேலே கூறிய கர்ம வினை தாக்தால் வருபவை.
இந்த மூன்று விதமான கர்ம வினைகளை அதிக ரிக்கச் செய்பவர் ராகு. இதிலிருந்து விடுபடும் மார்கத்தை காட்டுபவர் கேது. ராகுவின் செயல் களான ஆசை, பேராசை, கோபத்தை குறைத்து இயன்ற தானம் தர்மம் செய்து கேதுவின் வழி நடந்தால் பிறவிக்கடனில் இருந்து மீள முடியும்.
ராகுவைப் போல் கொடுப்பவரும் இல்லை கேதுவைப் போல் கெடுப்பவரும் இல்லை என்பது ஜோதிட பழமொழி. லௌகீக ஆர்வத்தை அதிகரித்து மாயையான வாழ்க்கையை கொடுப்பவர் ராகு. லௌகீக வாழ்க்கை நிரந்தரமற்றது. முக்தியே நிலையானது என்ற உண்மையை உணர வைப்பவர் கேது. ஆக ராகு கொடுக்கும் மாயையை கெடுத்து முக்திக்கு வழிகாட்டுபவர் கேது என்பது பொருள்.
இதை வேறு விதமாகச் சொன்னால் நேர்மை, நியாயம், தர்மத்திற்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது. எனவே மனசாட்சிக்கு பயந்து வாழப் பழக வேண்டும் என்பவர் கேது.
உலக இயக்கத்தையே கட்டிப்போடும் சக்தி கோட்சார ராகு/கேதுக்களுக்கு உண்டு. தசா புத்தியோடு தொடர்பு பெறாத கோட்சார கிரகத்தால் ஏற்படுத்தப்படும் தாக்கம் குறைவு.
ஜனன ஜாதக ரீதியான தசா புத்தி நடப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. உண்மையில் ராகு/கேதுவால் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் திருக்கோளாறு பதிகம் படிக்கவும்.
இந்த ராகு/கேதுப் பெயர்ச்சி நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் அனைத்து விதமான சுபமான பலன்களை வழங்க பிரபஞ்சித்திடம் சிரம் தாழ்த்தி மண்டியிட்டு பிரார்த்திக்கிறேன்.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பட்டாச்சாரியார்கள் எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. இருப்பினும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு பூஜை நடைபெறும். அந்த வகையில் நேற்று பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.
இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் நாமக்கல் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முன்னதாக அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பெருவிழா நாட்களில் தினமும் காலை வெள்ளி பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும் பெருமாள் தாயார் வீதி உலா நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பல பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பொன்னப்பன் பூமிதேவி புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அப்போது கொடிமரத்திற்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் காலை வெள்ளி பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும் பெருமாள் தாயார் வீதி உலா நடக்கிறது. வருகிற 28-ந்தேதி காலை 7 மணிக்கு தேசிக ரோடு பெருமாள் தாயார் தேரில் எழுந்தருளுகிறார். 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி
மனதிற் சலனமில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலை வந் திடநீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறு வயது
இவையும் தரநீ கடவாய்…
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி
மனதிற் சலனமில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலை வந் திடநீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறு வயது
இவையும் தரநீ கடவாய்…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சிறப்பு நிகழ்ச்சியாக கடந்த 13-ந் தேதி தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.
இதைத்தொடர்ந்து 17-ந்தேதி நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, பங்குனி தேர் அருகில் வையாளி கண்டருளினார். 18-ந்தேதி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 19-ந் தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப்பட்டது.
திருவிழாவின் 11-ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் வீதி உலா வந்தார். இதையொட்டி மாலை 3 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 3.15 மணிக்கு கருட மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து மாலை 6.30 மணியளவில் புறப்பட்டு வாகன மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு வந்தார். அங்கிருந்து இரவு 7.30 மணிக்கு ஆளும்பல்லக்கில் சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணியளவில் வாகன மண்டபம் வந்தடைந்தார்.
பின்னர் 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். ஆளும்பல்லக்குடன் பங்குனி தேர் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

திருப்பதியில் இன்று மொத்தம் 8,40,000 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியிடப்பட்டது. டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 1 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
திங்கள் முதல் புதன்கிழமை வரை தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. வார இறுதி நாட்களான வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 5 ஆயிரம் டிக்கெட்டுகள் என 30 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
மொத்தம் 8,40,000 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியிடப்பட்டது. டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 1 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.
மே, ஜூன் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் நாளையும், நாளை மறுதினமும் வெளியிடப்படுகிறது.
தற்போது ரூ.300 ஆன்லைன் டிக்கெட், இலவச தரிசனம் மற்றும் விஐபி பிரேக் தரிசனம் உள்ளிட்டவைகளில் தினமும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதேபோல் கல்யாண உற்சவம் தோமாளை சுப்ரபாதம் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நேற்று காலை ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
திருப்பதியில் நேற்று 72,265 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 34,517 பேர் முடிகாணிக்கை செலுத்தினர்.ரூ 4.59 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர்.