என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
நாம் சாலை விபத்துகளில் இருந்து பல உயிர்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் சாலை விதிகளை முறையாக நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
கடவுளது அன்பில் நிலைத்திருங்கள், என்றுமுள்ள நிலை வாழ்வை பெற நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திருங்கள்(யூதா1:21)
ஒரு நாட்டின் சாலை போக்குவரத்து எந்த அளவுக்கு மேம்பட்டு இருக்கிறதோ அந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரமும் முன்னேறி இருக்கிறது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. வளர்ச்சியடைந்த நாடுகளில் மட்டுமே சாலைப்போக்குவரத்து பிரமாதமாக இருக்கும். நமது நாட்டில் இப்போது சாலை போக்குவரத்து வசதிகள் விரிவடைந்து வருகிறது. சாலை போக்குவரத்து சரியாக இல்லாத நாடுகளில் அதிக அளவில் விபத்துகள் நடக்கும். நமது நாட்டிலும் விபத்துகள் தற்போது அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி பேருக்கு மேல் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைகிறார்கள். 13 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இறந்து விடுகிறார்கள். இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது சாலைகளே. நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் 1 முதல் 2 சதவீத இறப்பை சாலை விபத்துகள் ஏற்படுகிறது. நமது நாட்டில் சாலை விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 75 ஆயிரம். ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் படுகாயமடைந்து வருகிறார்கள். ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் 1.5 சதவீத விபத்துகள் நடக்கிறது. இவற்றுக்கு 2 விதமான காரணங்கள் முன் வைக்கப்படுகிறது. ஒன்று சாலைகள் சரியில்லை என்பது, 2 சாலை விதிகளை மதிக்கின்ற தன்மை குறைந்து கொண்டிருப்பது.
மேற்கத்திய நாடுகளில் குழந்தை பருவத்திலேயே கற்றுக்கொண்டுப்படும் முக்கிய பண்புகளில் சாலை விதிகளை மதிப்பதும் ஒன்று. ஆனால் நமது பகுதியில் இந்த அறிவு குறைந்து கொண்டிருக்கிறது என்பதை ஏற்று தான் ஆகவேண்டும். எனவே நாம் சாலை விபத்துகளில் இருந்து பல உயிர்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் சாலை விதிகளை முறையாக நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த விபத்தில் இருந்து விடுதலை பெற முடியும்.
- அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.

கடந்த மார்ச் 3-ந்தேதி முதல் கண்ணாடி குவளையில் உப்பு, நீர், நாணயங்கள், சிவலிங்கம் ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது, சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில். நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் உள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். இவ்வாறு உத்தரவான பொருள் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப்பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் திருப்பூர் நாச்சிபாளையத்தை சேர்ந்த பானுமதி (வயது 40) என்ற பக்தரின் கனவில் உத்தரவான இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோழி ஆகிய பொருட்கள் நேற்று முதல் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 3-ந்தேதி முதல் கண்ணாடி குவளையில் உப்பு, நீர், நாணயங்கள், சிவலிங்கம் ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை. கடந்த ஆண்டு எளிமையாக விழா நடத்தப்பட்டு பூசாரி மட்டுமே குண்டம் இறங்கினார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த விழாவில் ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து குண்டம் இறங்குவார்கள்.
இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை. கடந்த ஆண்டு எளிமையாக விழா நடத்தப்பட்டு பூசாரி மட்டுமே குண்டம் இறங்கினார். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த ஆண்டு கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால் குண்டம் திருவிழா விமரி சையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 7-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்று முதல் பண்ணாரியம்மன் சப்பரத்தில் வைக்கப்பட்டு வீதி உலா நடந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி இரவு கம்பம் சாட்டு விழா நடந்தது. அதைத் தொடர்ந்து 20-ந் தேதி வரை ஒவ்வொரு நாள் இரவும் மலைவாழ் மக்கள் பீனாட்சி வாத்தியத்திற்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
மேலும் குண்டம் பற்றவைக்க பக்தர்கள் காணிக்கையாக வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்களை கொண்டு வந்து கோவில் முன்பு குவியலாக போட் டார்கள். பொதுவாக குண்டம் இறங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பக்தர்கள் கோவில் முன்பு வந்து இடம்பிடித்து காத்திருப் பார்கள்.
ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக முதலில் இடம் பிடிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த சேலை, வேட்டி, துண்டுகள் வைத்து இடம் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்திற்கு வந்து குண்டம் இறங்குவதற்கு இடம் பிடித்தனர். இதற்காக பக்கத்து மாவட்டத்திலிருந்து மாட்டு வண்டிகளில் சாரை, சாரையாக வந்தனர்.
நேற்று இரவு 9 மணி அளவில் குண்டம் பகுதியில் வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கற்பூரம் பற்றவைத்து குண்டத்தில் தீ மூட்டப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணி அளவில் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கு அனைவரும் புனித நீராடி வேப்பிலையை கையில் ஏந்தியபடி தாரை, தப்பட்டை உடன் குண்டம் இறங்க தயாராகினர். இன்று அதிகாலை 3.50 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டம் 12 அடி நீளம், 8 அடி அகலத்தில் இருந்தது. முதலில் குண்டத்தில் பூபந்து உருட்டி விடப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் பூசாரி செந்தில் முதல் நபராக குண்டம் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கினர்.
விழாவில் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அமுதா பயபக்தியுடன் குண்டம் இறங்கினார். இதேபோல் இந்து அறநிலையத்துறை கூடுதல் நிர்வாக ஆணையர் கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, பண்ணாரி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி., காளியப்பன் மற்றும் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் குண்டம் இறங்கினர்.
பொதுமக்கள் கைக் குழந்தையுடன் குண்டம் இறங்கினர். இதேபோல் திருநங்கைகள், பெண்களும் விரதமிருந்து பயபக்தியுடன் குண்டம் இறங்கினர். இதேபோல் கேரளா, கர்நாடகா மாநில பக்தர்களும் குண்டம் இறங்கினார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்கி பண்ணாரி யம்மனை வழிபட்டனர். இதை தொடர்ந்து மதியம் கால்நடைகளும் குண்டம் இறங்குகிறது. குண்டத்தை சுற்றிலும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
குண்டம் விழாவையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை போன்ற மாவட்டங் களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் வசதிக்காக வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
இதேபோல் பண்ணாரி யம்மனை தரிசனம் செய்வதற் காக போக்குவரத்து கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இயக்கப்பட்டன. முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் இன்று இரவு வரை கனரக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் தீயணைப்பு துறை வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் தண்ணீர் பக்கெட்டுடன் தயார் நிலையில் இருந்தனர். பக்தர்கள் சிலர் குண்டம் இறங்கிய போது தட்டுத் தடுமாறி கீழே விழுந்த போது அங்கிருந்த போலீசார் தாங்கி பிடித்தனர். இதனால் பெருமளவில் எதுவும் அசம்பாவிதம் நடைபெறாமல் அமைதியான முறையில் குண்டம் விழா நடைபெற்றது.
இதேப்போல 108 ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.
குண்டம் விழாவை யொட்டி மூலவர் பண்ணாரி யம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு வீணை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் உற்சவர் பண்ணாரி யம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

செவ்வாய் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்ய உகந்த நாள் என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.
பொருளாதார நிறைவை வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும்
சக்தி தேவி.
முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமையில் இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும்.
செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்பு களையும், மாபெரும் சக்தியையும் பொங்கிவரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.
கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு.
வேலை வணங்குவதே வேலை எனச் சொல்லி வீட்டில் வேல் வழிபாடும் செய்யலாம். வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் ஆக ஆறு தீபமிட்டு ஆறுமுக வழி செய்து வந்தால், சீரும் சிறப்பும் வந்து சேரும்.
இந்த விரதத்தை மேற்கொள்ளும் போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் வழிபட வேண்டும். முன்னதாக விநாயகர் படத்தையும் வைத்து வழிபட வேண்டும்.
அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம்.
செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும். வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா.
இந்த திருவிழா ஆண்டு தோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினமும் முருகன், தெய்வானையுடன் காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் அன்ன வாகனம், பூத வாகனம், தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட பல் வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சொக்கநாதர்-பிரியா விடை, மீனாட்சி அம்மன் முன்னிலையில் முருகப் பெருமான்-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று கிரிவல பாதை வழியாக பெரிய தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக காலை 4 மணிக்கு உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான்-தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து முருகப் பெருமான்-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வாசலில் உள்ள பெரிய தேரில் எழுந் தருளினார். காலை 6. 20 மணிக்கு பக்தர்கள் அரோகரா கோஷமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
முன்னதாக சிறிய சட்டத்தேரில் விநாயகப் பெருமான் முன்னே செல்ல, தொடர்ந்து கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, பெரிய தேர் ஆடி அசைந்து அழகாக சென்றது கண் கொள்ளாகாட்சியாக இருந்தது.
தேரோட்ட திருவிழாவில் மதுரை மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர் மோர் பந்தல் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டு செல்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி சகுனம் கேட்டல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது.
கடந்த 11-ந்தேதி தேர் முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 16ந்தேதி இரவு கிராமசாந்தி, கொடியேற்றம், ஞாயிற்றுக்கிழமை வசந்தம் பொங்கல் வைத்தல் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று அதிகாலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுற்று வட்டாரப் பகுதி பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் குண்டம் இறங்கினர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்குவதற்காக நேற்று காலை முதலே பக்தர்கள் காத்திருந்தனர்.
பக்தர்களுடன் சேர்ந்து காவலர்களும் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்கிய பின் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 41 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து கண்காணித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக தீயணைப்புத்துறையினர் குண்டத்தை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

சைவ சித்தாந்தக் கருத்துக்களை உள்ளடக்கிய இந்நூல், முருகப் பெருமானின் தோற்றத்தை வருணித்து, அவரிடமிருந்து கல்வி, ஒழுக்கம் முதலியவற்றை அருளவும், துன்பங்கள் அனைத்தையும் போக்கவும் வேண்டுகிறது.
பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு 1
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய் – ஆதிநடு 2
அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் – வந்த 3
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் – அறிவுக்கு 4
அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மானதிகளுக்கு எட்டா வடிவாய்த் – தனாதருளின் 5
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் – எஞ்சாத 6
பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாதித் – தாரணியில் 7
இந்திரசாலம் புரிவோன் யாரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல் – முந்தும் 8
கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் – திரிகரணம் 9
ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால்இயல
போகஅதி காரப் பொருளாகி – ஏகத்து 10
உருவம் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் – இருள்மலத்துள் 11
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் – தேகமுறத் 12
தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பத்து – மந்த்ரமுதல் 13
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து – மாறிவரும் 14
ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி என்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் – தீர்வரிய 15
கண்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்
சென்மித்து உழலத் திரோதித்து – வெந்நிரய 16
சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் – தர்க்கமிடும் 17
தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே
நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து – முன்னூல் 18
விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச்
சரியைகிரி யாயோகம் சார்வித்து – அருள்பெருகு 19
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து – நால்வகையாம் 20
சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் – பெத்த 21
மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி – உலவாது 22
அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்தநிலை நீங்கிப் – பிறியாக் 23
கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு – திருநோக்கால் 24
ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் – பாழாக 25
ஆணவமான படலம் கிழித்து அறிவில்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் – பூணும் 26
அடிஞானத் தற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி – முடியாது 27
தேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் – போக்கும் 28
வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்
இரவும் கடந்துஉலவா இன்பம் – மருவுவித்துக் 29
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் -மின்னிடந்துப் 30
பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி – மூத்த 31
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று
ஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் – பெருகியெழு 32
மூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேஇருத்தி
ஈன்றபர முத்தி அடைவித்துத் – தோன்றவரும் 33
யானெனதென்று அற்ற இடமே திருவடியா
மோனபரா னந்தம் முடியாக – ஞானம் 34
திருஉருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா – இருநிலமே 35
சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே; எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே – மின்னுருவம் 36
தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் – தேய்ந்தபிறைத் 37
துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் – விண்ட 38
பருவமலரப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் – பருதி 39
பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் – நிலவுமிழும் 40
புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் – வின்மலிதோள் 41
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடித்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் – எவ்வுயிர்க்கும் 42
ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் – சூழ்வோர் 43
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் – விடுத்தலாகப் 44
பால இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடம்
வாச மலர்வதன மண்டலமும் – நேசமுடன் 45
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் – தாகமுடன் 46
வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் – கொந்தவிழ்ந்த 47
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் – ஆரமுதம் 48
தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
வேமக் குழைந்தணைந்த மென்கரமும் – ஓவாது 49
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையால்
சேர அணிந்த திருக்கரமும் – மார்பகத்தில் 50
வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் – மொய்த்த 51
சிறுதொடிசேர் கையும்மணி சேர்ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசம்சேர் கையும் – தெறுபோர் 52
அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் – முதிராத 53
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் – பைம்பொன் 54
புரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் – திருவரையும் 55
நாதக் கழலும் நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் – சோதி 56
இளம்பருதி நூறா யிரங்கொடி போல
வளந்தரு தெய்வீக வடிவம் – உளந்தனில்கண்டு 57
ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே – ஓதியஐந்து 58
ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே – தாங்கரிய 59
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் – பந்தனையால் 60
ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா – வைத்த 61
கலையே அவயவாக் காட்டும்அத்து வாவின்
நிலையே வடிவமா நின்றோய் – பலகோடி 62
அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் – தொண்டுபடும் 63
ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே – மேவ 64
வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தரும்அட்ட யோகத் தவமே – பருவத்து 65
அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் – சுகலளிதப் 66
பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம்
தேரின்ப நல்கும் திருநாடும் – பாரின்பம் 67
எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
அல்லாது உயர்ந்த அணிநகரும் – தொல்லுலகில் 68
ஈறும் முதலுமகன்று எங்குநிறைந்த ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் – ஏறுமதம் 69
தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் – வாய்ந்தசிவ 70
பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் – காரணத்துள் 71
ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்த்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரகம் – சந்ததமும் 72
நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
ஆக்கி அசைத்தருளும் ஆணையும் – தேக்கமழ்ந்து 73
வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசும் தசாங்கமெனப் பெற்றோனே – தேசுதிகழ் 74
பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி – ஆங்கொருநாள் 75
வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் – தந்து 76
திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப – விரிபுவனம் 77
எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் – அங்கண் 78
எடுத்தமைத்து வாயுலைக் கொண்டு ஏகுதினெய்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் – அடுத்ததொரு 79
பூதத் தலைவகொடு போதி எனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் – போதொருசற்று 80
அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் – முன்னர் 81
அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் – குறுமுறுவல் 82
கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறிணையும் – தன்னிரண்டு 83
கையால் எடுத்தணைத்துக் கத்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் – செய்ய 84
முகத்தில் அணைத்துஉச்சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் – சகத்தளந்த 85
வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே – கிள்ளைமொழி 86
மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து – தங்கள் 87
விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீர வாகு – நெருப்பிலிதித்து 88
அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கண் கிடாஅதனைச் சென்றுகொணர்ந்து – எங்கோன் 89
விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதுவர்ந்து எண்திக்கும்
நடத்தி விளையாடும் நாதா – படைப்போன் 90
அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று
உகந்த பிரணவத்தின் உண்மை – புகன்றிலையால் 91
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே – மட்டவிழும் 92
பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே -கொன்னெடுவேல் 93
தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக
வீரவடி வேல் விடுத்தோனே – சீரலைவாய்த் 94
தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து – வெள்ளைக் 95
கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் – சயேந்திரனால் 96
சூரனைச் சோதித்தவரு கென்றுதடம் தோள்விசய
வீரனைத் தூதாக விடுத்தோனே – காரவுணன் 97
வானவரை விட்டு வணங்காமை யால்கொடிய
தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் – பானு 98
பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் – சகமுடுத்த 99
வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
சூருடலம் கீண்ட சுடர் வேலோய் – போரவுணன் 100
அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் – அங்கவற்றுள் 101
சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே – மாறிவரு 102
சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்ந்த மேலோனே – மூவர் 103
குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்து ஆட்கொண்ட தேவே – மறைமுடிவாம் 104
சைவக் கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே – பொய்விரவு 105
காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்துப் – பூமருவு 106
கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து – மேன்மைபெறத் 107
தெள்ளித் தினைமாவும் தேனும் பரித்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே – உள்ளம் உவந்து 108
ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோ னே – நாறுமலர்க் 109
கந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே – சந்ததமும் 110
பல்கோடி சன்பப் பகையும் அவமி|ருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் – பல்கோடி 111
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாகம்அடல்
பூதமுதீ நீரும் பொருபடையும் – தீது அகலா 112
வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் – அவ்விடத்தில் 113
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் – கச்சைத் 114
திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் – விரிகிரணம் 115
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற – வந்திடுக்கண் 116
எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து – பல்விதமாம் 117
ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் – ஓசை 118
எழுத்துமுத லாம்ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து – ஒழுக்கமுடன் 119
இம்மைப் பிறப்பில் இருவா தனைஅகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் – தம்மைவிடுத்து 120
ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் – சேய 121
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள். 122
திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று….

நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப் பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்வது பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது.
சிவராத்திரி தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதாகக் கூறுவார்கள். இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய் மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.
விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை, மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது. இந்த நிலையில் நித்தியான ஆனந்தத்தை உணருவதே உன்னதமானது. அதையே நடராஜரின் தோற்றம் பிரதிபலிக்கிறது.
உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது. இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.
நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப் பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்வது பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது.
எனவே சிவராத்திரி தினத்தன்று மறக்காமல் நடராஜர் சன்னதிலும் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான திண்டுக்கல் நத்தம் மாரியம்மன் கோவில் உருவான வரலாறே சுவாரசியம் மிகுந்தது தான். அதனை பற்றி பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான இந்த கோவில் உருவான வரலாறே சுவாரசியம் மிகுந்தது தான். அதனை பற்றி பார்ப்போம்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த லிங்கமநாயக்கர் என்பவர், தன்னுடைய சகோதரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொந்த ஊரை விட்டு புறப்பட்டு பாண்டியநாடு (மதுரை) செல்ல நினைத்து பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து நடைபயணமாக பல மைல்களை கடந்து வந்தார்.
வழியில் பச்சை பசுமையான மலைக்காடுகள் சூழ்ந்த வனப்பகுதிகளை பார்த்ததும் லிங்கமநாயக்கர் மனதில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. இனி தென்திசையை நோக்கி செல்ல வேண்டாம் என்று அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இதனால் லிங்கமநாயக்கர் அந்த காட்டுப்பகுதியிலேயே தங்கினார். தனது அறிவுத்திறமையால் அந்த காட்டுப்பகுதியை ஒரு குட்டி நாடாக மாற்றினார். பின்னர் கோட்டை, கொத்தளங்களை அமைத்தார். மானாவாரி பயிர்களை விளைவித்தார். விளைந்த தானியங்களை ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கினார். தான் வாழும் பகுதிக்கு ‘‘இரசை’’ என்று பெயரிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த திருமலை நாயக்கர், லிங்கமநாயக்கரை அழைத்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ‘‘இரசை’’ நகரின் சிற்றரசராக லிங்கமநாயக்கர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து இரசை நகர்ப்பகுதியை லிங்கமநாயக்கர் நீதியுடனும், நேர்மையுடனும் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வந்தார். அப்போது அரண்மனையின் தேவைக்கு, அங்குள்ள பண்ணையில் இருந்த பசும்பால் போதவில்லை. இதனால் பக்கத்து ஊரில் இருந்து பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி தினமும் ஒரு பணியாளர் பால் கறந்து, குடத்தில் கொண்டு வந்து சேர்த்தார். ஒருநாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த பணியாளர் பால்குடத்தை கீழே வைத்துவிட்டு, நிழலுக்காக மரத்தடியில் ஒதுங்கி களைப்பு தீர படுத்து தூங்கினார். திடீரென காலில் கட்டெறும்பு கடித்ததும், கண் விழித்த அவர் பால்குடத்தை பார்த்தார். ஆனால் அதில் பால் இல்லாமல் வெற்றுக்குடமாக இருந்தது. இதேபோல் பல நாட்கள் அந்த மரத்தடி அருகே வரும்போது பால் மாயமாகி வந்தது. இதனால் அரண்மனையில் பசும்பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து மன்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே பணியாளரை கூப்பிட்டு மன்னர் விசாரித்த போது, அரசே நீங்களே ஒருமுறை நேரில் வந்து சோதனை செய்து விட்டு, பின்னர் என்னை தண்டியுங்கள் என்று பரிவாக அந்த பணியாளர் கெஞ்சினார்.
பணியாளரின் அந்த கோரிக்கையை பரிசீலித்த மன்னர், மீண்டும் அவரிடமே பால் நிரம்பிய குடத்தை கொடுத்து அதே மரத்தடியில் வைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை மன்னர், அரண்மனை பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் ஒரு மறைவான இடத்தில் நின்று பார்த்தனர். சிறிது நேரம் கழித்து மன்னரும், மற்றவர்களும் போய் அந்த பால் குடத்தை கவனித்தனர். அப்போது அனைவரும் வியப்படையும் வகையில் பால்குடம், வெறும் குடமாக காட்சி அளித்தது. இதனால் அனைவரும் திகைத்தனர். உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்க்க லிங்கமநாயக்கர் உத்தரவிட்டார்.
அதன்படி அந்த பகுதியை பணியாளர்கள் தோண்டும் போது திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் கருடன்கள் வட்டமிட்டன. கடப்பாரையால் ஓங்கி குத்தியபோது பூமிக்கு அடியில் இருந்து ரத்தம் பீறிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது. தொடர்ந்து மண்ணை அகழ்ந்து பார்த்தபோது கையில் உடுக்கை, சூலாயுதத்துடன் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை இருந்ததை கண்டு லிங்கமநாயக்கர் ஆச்சரியம் அடைந்தார். அம்மனின் தோளில் கடப்பாரை பட்டதால் ரத்தம் வந்த அதிசயம் நிகழ்ந்ததும் தெரியவந்தது. சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நிற்கவே, அதே இடத்தில் அம்மன் சிலைக்கு மஞ்சள் நீராட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது மேகம் திரண்டு பலத்த மழை (மாரி) பெய்தது. இதனால் ‘மாரி’ அம்மன் என்று அழைக்கப்பட்டு மன்னரும், மக்களும் வணங்கத்தொடங்கினார்கள்.
சிற்றரசன் லிங்கமநாயக்கர், மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனின் அம்சமான மாரியம்மனுக்கு கும்பம் இல்லாமல் விமான அமைப்பில் கோவில் கட்டினான். 'ரத்தம் பீறிட்ட அம்மன், ரத்தம் காட்டிய அம்மன்' என்று அழைக்கப்பட்டது நாளடைவில் மருவி ‘நத்தம் மாரியம்மன்’ என்று அழைக்கப்பட்டது. பக்தர்கள் நினைத்ததை நிறைவேற்றுவதுடன், நித்தம் அருள் தரும் நத்தம் மாரியம்மனுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அம்மனை போற்றும் படியாக மிகச்சிறப்பாக நடைபெறும் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று தேரோட்டம் நடக்கிறது.
முருகப்பெருமான் குடிகொண்டு அருளாட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 15 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாண வைபோகம் கோலாகலமாக நடந்தது.
இதனையொட்டி நேற்று அதிகாலை 5 மணியளவில் உற்சவர் சன்னதியில் மணமகன், மணமகளாக சுப்பிரமணியசுவாமி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதனையடுத்து மணக்கோல அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. பின்னர் மேள தாளங்கள் முழங்க கோவிலில் இருந்து முருகப்பெருமான் புறப்பட்டு சன்னதி தெரு வழியாக பசுமலை, மூலக்கரை அருகே உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு சென்றார்.
இதே வேளையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் தனித்தனியாக பல்லக்கில் புறப்பட்டு திருப்பரங்குன்றம் நோக்கி வந்தனர். இந்த நிலையில் காலை 7.40 மணிக்கு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் முருகப்பெருமான் தனது தாய்-தந்தையான மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரரை வரவேற்றார். இதன்பின் சந்திப்பு மண்டபத்துக்குள் எழுந்தருளிய சுவாமி- அம்மனுக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்து, அங்கிருந்து புறப்பாடாகி திருப்பரங்குன்றம் கோவிலை சென்றடைந்தனர்.
இந்த நிலையில் கோவிலுக்குள் மணமேடையான 6 கால் மண்டபத்தில், முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைக்க பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினார். பின்பு மீனாட்சி அம்மனும் மேடையில் எழுந்தருளினார்.
இதனையடுத்து தெய்வானையுடன்-முருகப்பெருமான் மேடைக்கு வந்தார். மணமேடையில் அக்னி வளர்க்கப்பட்டு திருமண சம்பிரதாய சடங்குகள் நடந்தன. முருகப்பெருமானின் பிரதிநிதியாக சங்கர் பட்டரும், தெய்வானையின் பிரதிநிதியாக ரமேஷ் பட்டரும் இருந்து திருமண சடங்குகளை நிறைவேற்றினர்.
மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் ஆகியோர் நடத்தி வைக்க, பகல் 12.55 மணிக்கு முருகப்பெருமான்- தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதனை தொடர்ந்து சுவாமி- அம்பாளுக்கு மகா தீபாராதனை நடந்தது. அப்போது அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அட்சதை தூவி, அரோகரா கோஷம் முழங்க திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்தனர்.
திருக்கல்யாணம் முடிந்ததும் சுமங்கலிப்பெண்கள் புதிய மங்கல நாண் மாற்றிக் கொண்டனர். பக்தர்கள் மொய் எழுதினார்கள். திருக்கல்யாணத்துக்கு. முருகப்பெருமானின் 6-ம் படை வீடான ேசாைலமலையில் இருந்து சீர்வரிசை கொண்டுவரப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இரவு 7 மணியளவில் 16 கால் மண்டபம் அருகே பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். இதேவேளையில் சர்வ அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பிறகு அங்கிருந்து விடைபெற்று கோவிலை நோக்கி மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் புறப்பாடு நடந்தது. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபோகத்துக்கு சென்றிருந்ததால் நேற்று காலை முதல் இரவு வரை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. அங்கு பக்தர்கள் வேறு வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (22-ந்தேதி) காலை 6 மணிக்கு கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடக்கிறது.
இதற்காக பாரம்பரிய முறைப்படி கிராம நாட்டாண்மைக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று இரவு அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே அழகு நாச்சியம்மன் கோவில் முன்பாக சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழாவில் நேற்றுமுன்தினம் கண்ணாடி பல்லக்கில் சக்கரவாகேஸ்வரசாமி எழுந்தருள ஏழூர் பல்லக்கு புறப்பட்டது.
இந்த பல்லக்கு அய்யம்பேட்டை, மாகாளிபுரம், வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதி கோவில், இலுப்பக்கோரை சென்று மீண்டும் நேற்று இரவு அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே வந்தடைந்தது. அங்கு அழகு நாச்சியம்மன் கோவில் முன்பாக சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பின்னர் பல்லக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவில் நிர்வாகிகள், அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஏழூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி நேரடி மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா தலைமையில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

கர்ம வினை ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால், கீழ் வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
உலகில் கோடான கோடி நபர்கள் வாழ்கிறார்கள். பல கோடி நபர்களுக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோஷ பாதிப்பு உள்ளது. இதில் பலர் சர்ப்பத்தை(பாம்பு) நேரில் கூட பார்த்து இருக்க மாட்டார்கள். பின் எவ்வாறு சர்ப்ப தோஷம் ஏற்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும். இவைகள் கர்ம வினை ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால், கீழ் வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
காரணமே இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது, நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பிரிப்பது, ஒரு குடும்பத்தை கெடுப்பது, உழைத்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது அடுத்தவர் சொத்தை அபகரிப்பது, திருடுவது, கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தவறுவது, தவறான வைத்தியம் செய்வது, பொய்யான வதந்தியை பரப்புவது, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது, கோவில் சொத்தை அபகரிப்பது பசுக்களை, விலங்குகளை வதைப்பது இயற்கையை மாசுபடுத்துவது நோயை பரப்புவது, வீண் வதந்தியை கிளப்புவது போன்ற காரணங்களால் தான் சர்ப்ப, கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
ராகு மற்றும் கேது என்பது முன்னோர்கள் வழிவழியாய் தொடர்ந்து செய்து வரும் பாவங்களை உணர்த்தும் கிரகங்கள். ராகு தந்தை வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.
இதை அறிவியல் ரீதியாக கூறினால் மனிதர்களின் மரபணுவில் உள்ள 46 குரோமோசோம்கள் ராகு- கேதுக்களின் கலவைகளாகும். குரோமோசோம்கள் என்பவை ஒருவரின் உயரம், தோல், முடி, கண்விழி ஆகியவற்றின் நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரை வியாதி போன்ற அனைத்து குணங்களும் பதிவாகி இருக்கும். 23 குரோமோசோம்கள் தந்தை வழியை குறிப்பவை (ராகு) மற்றும் 23 குரோமோசோம்கள் தாய் வழியை குறிப்பவை (கேது). முன்னோர்கள் செய்த பாவங்களை ராகு-கேதுக்கள் என்ற பாம்புகளின் பிடியில் சிக்கி 33 ஆண்டுகள் அனுபவித்து பல அனுபவங்கள் பெற்று தோஷ நிவர்த்தி பெறுவதாகும்.