என் மலர்

  நீங்கள் தேடியது "Andavar Utharavu Petti"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.
  • இதற்கு முன் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் விபூதி, எலுமிச்சம்பழம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

  திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவில் இதுவாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக்கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

  முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக்கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூக்கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.

  அடுத்த பொருள் மற்றொரு பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.

  இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா கொங்கூர் பகுதியை சேர்ந்த கே.எம்.சிவராம்(வயது 48) என்ற பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி உத்தரவு பெட்டியில் நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்யுமாறு கூறியதாக அந்த பக்தர் கோவிலுக்கு வந்து கோவில் நிர்வாகத்திடம் கூறினார்.

  அதன்படி நேற்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி கம்பு வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. நிறைபடியில் கம்பு வைத்து பூஜிக்கப்படுவதால் கம்பு விளைச்சல் அதிகரிக்கும் என்றும், கம்பால் செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்டபொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் கோவில் பூசாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஏப்ரல் மாதம் 3-ந்தேதி முதல் 3 கிலோ விபூதி, 7 எலுமிச்சம்பழம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஏற்கனவே இருந்த தாமிரத்தால் செய்யப்பட்ட அம்பு அகற்றப்பட்டு நேற்று முதல் செம்மண் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
  திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. மலை மீது உள்ள இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவுபெட்டி வைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

  சிவன்மலை முருகன் கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், பக்தர்கள் கொண்டு வரும் ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இது எந்தக்கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாகும்.

  சிவன்மலை ஆண்டவர் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி, அந்த பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி உத்தரவிடுவார். இவ்வாறு உத்தரவுபெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி தமது கனவில் உத்தரவான பொருளை கூறுவார்.

  கோவில் நிர்வாகம் சன்னிதானத்தில் வைத்து சிவப்பு, வெள்ளை என 2 பூக்கள் வைத்து சாமியிடம் உத்தரவு கேட்பார்கள். வெள்ளை பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட பொருள் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். அந்த பொருளுக்கு தொடர்ந்து தினசரி பூஜையும் செய்யப்படும்.

  இவ்வாறு கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் சாமி வந்து, அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப்பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  இவ்வாறு இங்கு 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

  இவ்வாறு இதற்கு முன்பு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய்நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி, அருகம்புல், மிளகு, கீழாநெல்லி வேர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி முதல் தாமிரத்தால் செய்யப்பட்ட 1½ அடி உயரமுள்ள அம்பு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது

  இந்தநிலையில் திருச்செந்தூர் கிருஷ்ணா தியேட்டர் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (வயது 37) என்பவரது கனவில் வந்த சிவன்மலை முருகன், ஆண்டவன் உத்தரவு பெட்டியில் செம்மண் வைத்து பூஜை செய்ய சொன்னதாக தெரிகிறது. இதுபற்றி அவர் கோவிலுக்கு வந்து அங்குள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து கோவிலில் பூ போட்டு பார்த்து வெள்ளை வந்ததால் ஏற்கனவே வைக்கப்பட்டு இருந்த அம்பு அகற்றப்பட்டு நேற்று முதல் ஒரு பையில் செம்மண் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

  மகாலட்சுமி ஏற்கனவே கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஆறுமுகத்துடன் சிவன்மலைக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  ×