என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
ராகு கேது
புதுவை கோவில்களில் இன்று ராகு-கேது பெயர்ச்சி வழிபாடு, பரிகார பூஜைகள்
By
மாலை மலர்21 March 2022 4:42 AM GMT (Updated: 21 March 2022 4:42 AM GMT)

இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3.15 மணி அளவில் ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
உலகை காக்கும் பரம்பொருளான நவக்கிரகங்களின் செயல்பாட்டின் அடிப்படையில் தான் ஒவ்வொரு நாளும் இயங்குகின்றன. இதில் ராகு-கேது, குரு, சனி ஆகிய கிரகங்கள் மட்டுமே அடிக்கடி இடப்பெயரும் தன்மை கொண்டவை ஆகும். ராகு-கேது நீங்கலாக மற்ற கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கி செல்லும் தன்மை உடையவை.
இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3.15 மணி அளவில் ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
இதனை முன்னிட்டு புதுவையில் உள்ள வேதபுரீஸ்வரர், சித்தானந்தர், வில்லியனூர் திருக்காமீசுவரர், பாகூர் மூலநாதர், திருவண்டார் கோவில் பஞ்சநாதீஸ்வரர், மொரட்டாண்டி உள்பட அனைத்து கோவில்களிலும் நவகிரகங்களுக்கு மகா யாகமும், தொடர்ந்து விசேஷ அபிஷேக, அலங்கார, ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகார பூஜை நடைபெறுகிறது.
புதுவை இடையார்பாளையம் நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள ஆதி சொர்ணபைரவர் கோவிலில் ஒரே கல்லில் உருவான அபயராகு-அனுக்கிரக கேது சன்னதியில் பரிகார சாந்தி, துர்கா கணபதி ஹோம வழிபாடு காலை 10 மனிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து விசேஷ அபிஷேக, அலங்காரத்துடன் வழிபாடு நடக்கிறது.
கோவில்களில் பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடை பிடித்தும் வழிபாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story
×