என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடத்தப்படவில்லை. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு திருமலை அருகே தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடந்தது.
    திருமலையில் உள்ள புண்ணியத்தீர்த்தங்களில் ஒன்று தும்புரு தீர்த்தம். இந்தத் தீர்த்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு பால்குன மாதம் பவுர்ணமி நாளில் உத்தரபால்குனி நட்சத்திரத்தன்று தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நேற்று நடந்தது. கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடத்தப்படவில்லை. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு திருமலை அருகே நேற்று தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடந்தது.

    அதில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலை 6 மணியில் இருந்து காலை 4 மணி வரையிலும், நேற்று காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும் பக்தர்கள் இரு தடவையாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த உற்சவம் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மொத்தம் 12,300 பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

    தும்புரு தீர்த்தத்துக்கு சென்ற பக்தர்களின் வசதிக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பாபவிநாசனம் அணை பகுதியில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கினர். பாபவிநாசனம் அணை பகுதியில் மருத்துவ முதலுதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    பக்தர்களுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல 2 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தும்புரு தீர்த்தம் சென்ற பக்தர்களுக்கு பாபவிநாசனம் அணைப்பகுதியில் இருந்து வழி நெடுகிலும் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.

    பாறைகளில் பக்தர்கள் சிரமமின்றி ஏறி இறங்க வழிநெடுகிலும் ஏணிகள், தடுப்புகள், இரும்பு வேலிகள், கயிறுகள் அமைக்கப்பட்டு இருந்தன. திருமலை-திருப்பதி தேவஸ்தான சுகாதாரத்துறையின் கீழ் 80-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் பணி செய்து வழிகளை தூய்மையாக வைத்திருந்தனர்.

    போலீஸ், வனத்துறை, தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு பாபவிநாசனம் முதல் தும்புரு தீர்த்தம் வரை பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
    மாணவர்களுடைய தலைமை பண்புக்கு தகுதியுடையது செய்வதற்கும், மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்துவதற்கும் கல்வி சாரா கலைகளில் அவர்களுக்கு ஆர்வம் உண்டாகும் வகையில் மாணவர் பேரவை உருவாக்கப்பட்டது.
    நான் ஆடுகள் வாழ்வை பெறும் பொருட்டு அதுவும் நிறைவாக பெறும் பொருட்டு வந்துள்ளேன். நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காக தம் உயிரை கொடுப்பார்(யோவான் 10:10,11)

    தமிழகத்தில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், கல்வியியல் என ஆயிரக்கணக்கான கல்லூரிகள் உள்ளன. இதில் பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் பேரவை தேர்தல் நடத்தப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்த்து கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது. மாணவர்களுடைய தலைமை பண்புக்கு தகுதியுடையது செய்வதற்கும், மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்துவதற்கும் கல்வி சாரா கலைகளில் அவர்களுக்கு ஆர்வம் உண்டாகும் வகையில் மாணவர் பேரவை உருவாக்கப்பட்டது. மேலும், பிரச்சனைகளை அவர்களுக்குள் தீர்த்து கொள்வதற்கும் பேரவை தொடங்கப்பட்டது.

    இவை புறக்கணிக்கப்படுவதால் எதிர்கால சமூகத்தினரிடையே பல நல்ல தலைவர்கள் இனம் கண்டுபிடிக்க முடியாமல் போகிறார்கள்.

    அன்றைய காலக்சூழலில் கட்சியோடு இணைந்து பல நல்ல தலைவர்கள் உருவாவதற்கு கல்விக்கூடங்கள் காரணமாக இருந்தது. இன்று அவை அனைத்துமே மறுக்கப்படுகிறது. இதனால் பல நன்மை தனங்கள் இந்த சமூகத்திலிருந்து அகற்றப்படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு ஆற்றல்களோடும், திறமைகளோடும் கல்விக்கூடங்களுக்கு நுழைகிறார்கள்.

    அவர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் சரியாக இனங்கண்டு அவர்களை தூக்கி நிறுத்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு கல்விக்கூடங்கள் உதவி செய்ய வேண்டும். ஆனால் இவை புறக்கணிக்கப்படுவதால் மாணவர்கள் தங்களது வாழ்வை கூட பல நேரங்களில் இழப்பதற்கு காரணமாக அமைகிறது. அடையாளம் காட்டப்படாததால் அவர்கள் பல நேரங்களில் தங்களுக்குள்ளாகவே மோதிக்கொண்டு பல தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகும் நிலை மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுவது மிகுந்த வேதனைக்குரிய செயலாகத்தான் இருக்கிறது.

    -அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    திருப்பதி ஏழுமலையானை வழிபட ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வெளியிடப்படுகிறது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக அடுத்த மாத (ஏப்ரல்) தரிசனத்துக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை), மே மாத தரிசனத்துக்கு 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), ஜூன் மாத தரிசனத்துக்கு 23-ந் தேதி (புதன்கிழமை) என 3 நாட்களில் ரூ.300 டிக்கெட்டுகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    மேற்கண்ட நாட்களில் காலை 9 மணி முதல் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பக்தர்கள் தங்களின் தரிசன தேதியை குறிப்பிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ரூ.300 டிக்கெட்டுகள் திங்கள் முதல் புதன் கிழமை வரை ஒரு நாளைக்கு 30 ஆயிரமும், வியாழன் முதல் ஞாயிறு வரை ஒரு நாளைக்கு 25 ஆயிரமும் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.

    அதேபோல் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் தங்கும் விடுதி வளாகம், ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களில் சாதாரண பக்தர்களுக்கு நேரில் (ஆப் லைனில்) நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் இதனை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிக்கலாம்...ஓதிமலை முருகன் கோவில்
    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா" கோஷம் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந்தேதி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. 7-ம் நாள் திருவிழாவான நேற்று பங்குனி உத்திரம் ஆகும்.

    இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். அவர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி மலைக்கோவிலில் உள்ள பாரவேல் மண்டபம் 5 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

    பங்குனி உத்திர விழாவின் சிகர நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பின்னர் 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் தந்தப்பல்லக்கில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

    பகல் 12.30 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வடக்கு கிரிவீதியில் இருந்த திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு விநாயகர், அஸ்திர தேவர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். அவர்களுக்கு தீபாராதனை நடைபெற்ற பின் தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதைத்தொடர்ந்து தேரில் எழுந்தருளியிருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது.

    இதையடுத்து திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் நடராஜன், திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, உதவி ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, கார்த்தி, கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வகுமார், நவீன், நரேஷ், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், ஜெயம் லாட்ஜ் உரிமையாளர் சரவணன், வி.பி.எஸ் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர் பெரியசாமி, பழனி நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, ஆனந்தவிலாஸ் முனியாண்டி, ஜவகர் ரெசிடன்சி மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபாலு, சுப்புரத்தினம், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    அப்போது பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" "வீரவேல் முருகனுக்கு அரோகரா" என்று சரண கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர்.

    தேர் நகருவதற்காக அதை பழனி கோவில் யானை கஸ்தூரி முட்டித் தள்ளியது. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரிவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையை பக்தர்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர். பின்னர் 6 மணிக்கு தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. அப்போது பக்தர்கள் "அரோகரா" கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர்.
    ஆனைமலை திரவுபதியம்மன் கோவிலில் இன்று(சனிக்கிழமை) குண்டம் திருவிழா நடைபெறுகிறது. இதை தொடர்ந்து திருத்தேர் ஊர்வலமும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) திருத்தேர் நிலை நிறுத்தலும் நடக்கிறது.
    ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி 70 அடி உயர மூங்கில் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து காலை 9 மணிக்கு மூலவருக்கும், அதை தொடர்ந்து 10 மணிக்கு உற்சவருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கடந்த 14-ந் தேதி இரவு கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு அம்மன் ஆபரணம் பூணுதல் ஊர்வலம், அரவான் சிசு ஊர்வலமும் நடந்தது. நேற்று காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சியும், மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. இதை தொடர்ந்து திருத்தேர் ஊர்வலமும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) திருத்தேர் நிலை நிறுத்தலும், மாலையில் ஊஞ்சல் உற்சவமும், பட்டாபிஷேகமும் நடக்கிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலையில் மஞ்சள் நீராடுதலும், இரவு போர் மன்னன் காவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திரதிருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்
    காஞ்சீபுரம், ஏகாம்பரநாதர் கோவில் பஞ்சபூத தலங்களில் மண் தலமாக விளங்குகிறது.

    இந்த கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11- வது நாளான இன்று அதிகாலை ஏலவார்குழலி- ஏகாம்பரநாதர் திருக்கல்யாணம் மிக விமரிசையாக நடைபெற்றது.

    முன்னதாக நேற்று இரவே ஏகாம்பரநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இரவு முழுவதும் கோவில் வளாகத்தில் பரதநாட்டியம், சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். திருக்கல்யாணம் நிறைவு பெற்றதும்கு ஏகாம்பரநாதர்-ஏலவார்குழலி வீதியுலா நடந்தது.

    வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரியுடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவுபெறுகிறது.
    தமிழ் நூல்கள் இம்மாதத்தைப் பங்குனிப் பருவம் என்றும், இதில் கொண்டாடப்படும் வசந்த விழாவைப் பங்குனி விழா என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.
    1. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    2. 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம்

    3. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.

    4. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.

    5. சிவனின் தவத்தைக் கலைத்தால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.

    6. முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்

    7. பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே.

    8. ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.

    9. மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.

    10. இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.

    11. காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.

    12. தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்- கலைவாணி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.

    13. தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    14. அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான்.

    15. பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

    16. பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான். அது போல திருமழப்பாடியில் நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான்.

    17. பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

    18. காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான், அ¢ன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம்.
    19. 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறு பிறவி தெய்வத் பிறவியாக அமையும்.

    20. இந்த திருநாளில் லோபமுத்திரை அகத்திய முனிவரையும், திருமாலின் புதல்விகளான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும் தேவயானை வள்ளியாகப் பிறவி எடுத்து முருகனையும் மணந்து கொண்டனர். பூரணா, பூஷ்கலா ஐயப்பனையும் ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று சுந்தபுராணம் கூறுகிறது.

    21. திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளயை£ர்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மண முடிச்சநல்லூர், திருப்பாச்சேத்தி, திருவெணங்காடு, திருவேள்விக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், திருநல்லூர், திருமழப்பாடி, திருப்பாலைத் துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்கு¢ற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளூர், சக்தி கோவில் திருமணமங்கலம், விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.

    22. திருமால் கன்னிகா தானம் செய்து வைக்க பிரம்மன் வேள்வி நடத்த சொக்கநாதரான சிவன் மீனாட்சியம்மையை பங்குனி உத்தரத்தில் மணக்கிறார். திருமண வைபத்தில் கன்னிகா தானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது. இக்கோல சுதைச் சிற்பம்தான் எல்லா திருமண மண்டபங்களிலும் மணமேடையின் பின்புற சுவரில் இடம் பெற்றுள்ளது. அவ்வளவு அழகிய அற்புதமான காட்சி இது.

    23. சிவ-பார்வதி திருமணக் கோலங்களில் ஏதேனும் ஒன்றை தரிசித்தாலும், ஆலயங்களில் திருமண வைபவம் நடைபெறும் போது அதில் கலந்து கொண்டாலும் மங்களகரமான மண வாழ்வு பெற்று மகிழ்வுடன் வாழலாம். கன்னிகள் விரதமிருந்து இப்படி தரிசித்தால் விரைவில் திருமணம் கூடுவதுடன் நல்ல கணவன் கிடைத்து இனிமையான வாழ்வும் அமையும்.

    24. பங்குனி உத்திரவிரதம் மேற் கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும்.

    25. இந்த விரதத்தை கடை பிடித்துதான் தேவர்களின் தலைவனான இந்திரன் தனது மனைவியான இந்திராணியையும், படைத்தல் கடவுளான பிரம்மன் தனது மனைவி யான சரஸ்வதியையும் பெற்றார்.

    26. பங்குனி உத்திரம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ந்தேதி வருகிறது. இந்த நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங் குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக் கல்யாணம் நடக்க உள்ளன.

    27. நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் தொடுத்த லீலையும், காரையார் சொரி முத்தையனார் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடைபெற உள்ளது.

    28. அழகன் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.

    29. உவமையற்ற வில்வீரன் அர்ஜுனனுக்கு பல்குணன் என்ற திருநாமம் உண்டு. இது பங்குனி உத்திரத்தன்று பிறந்ததால் வந்த பெயர்.
    30. ஊன் உறக்கமின்றி கண் இமையால் நம்மைகாக்கும் இமையவர்கள் என ஸ்ரீதாயாரும், பாற்கடல் பள்ளி கொண்டோனும் போற்றும் நாள் பங்குனி உத்திரம். உத்திரம், தாயாரின் திருநட்சத்திரம்.

    31 பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும். பனி தரும் குளிர்ச்சியும், சூரிய ஒளிதரும் வெப்பமும் இதமாகவும், பதமாகவும் உள்னன. தமிழ் நூல்கள் இம்மாதத்தைப் பங்குனிப் பருவம் என்றும், இதில் கொண்டாடப்படும் வசந்த விழாவைப் பங்குனி விழா என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.

    32. பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வரமளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று பாரணங்கள் சொல்கின்றன.

    33. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஸ்ரீபரமேஸ்வரர் மணக்கோலத்தில் திருக்காட்சி தந்த தினமும் பங்குனி உத்திரத்தன்றுதான்.

    34. கொள்ளிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபுலீஸ்வரி அம்மன் ஆலயத்திலுள்ள தல விருட்ச மலர்கள் பங்குனி உத்திரத்தன்றுதான் பூக்கும்.

    35. திருவையாறு அருகிலுள்ள திங்களூர் சிவாலயத்தில், பங்குனி உத்திரத் திருநாளில் மட்டும், லிங்கத் திருமேனியை சந்திரன் தனது கிரணங்களால் தழுவி வழிபடுவதைக் காணலாம்.
    பங்குனி உத்திர நாளன்று காவிரிஆற்று மணலில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு விசேஷ அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.
    பொதுவாக பக்தர்கள் திருவிழா நாட்களில் தெய்வ தரிசனம் காண ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சிவாலயத்தில் பங்குனி உத்திர நாளில் சிவனும், அம்பிகையும் மக்கள் இருக்கும் இடங்களுக்கு வரும் புதுமை நடந்து வருகிறது.

    பங்குனி உத்திர நாளன்று காவிரிஆற்று மணலில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு விசேஷ அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.
    விழாநாளில் சில பக்தர்கள் நாவில் அலகு குத்திக் கொள்கிறார்கள். வேறு சிலர் தீ மதிக் கிறார்கள். இந்த ஊரில் பல ஜாதி, மதத்தைச் சார்ந்தவர்கள் ஒற்றுமையோடு வாழ்ந்து வருவதால் இவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு அனைவரும் மத வேறுபாடு இல்லாமல் வருகிறார்கள். முஸ்லீம்கள் கூட சிவாலய விழாக் களுக்கு வருவது உண்டு!

    முன்னொரு காலத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் இந்த தலத்திற்கு வந்து அக்னி கடவுளையும், சவுந்தர நாயகியையும் வணங்கினார்கள். அப்பொழுது அக்னி தேவன் தொட்டப் பொருட்கள் சுட்டெரிக்கப்பட்டு நாச மானது அந்தப் பழியிலிருந்து விடுபட வழி இல்லையா என்று அக்னிதேவன் வேண்டினான். உடனே சிவபெருமான், அக்னி தேவன் முன் தோன்றி இங்குள்ள தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு உன் பெயரை இடு! அந்தக் குளத்து நீரைக்கொண்டு வந்து எனக்கு அபிஷேகம் செய்து என்னை வழி பட்டால் உனக்கு அந்தப் பழிதீரும். அதில் நீராடும் மக்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கும் என்று அருளினார்.
    அப்படிப்பட்ட அக்னி தேவ னால் உண்டாக்கப்பட்ட மகிமை பெற்ற குளம் கொண்ட தலம் திருக்காட்டுப்பள்ளி.

    இங்கு திருஞான சம்பந் தரும், திருநாவுக்கரசரும் வந்து சன்னதியின் முன் அமர்ந்து பதிகங்கள் பாடியிருக்கிறார்கள். அவர்களின் பக்திப் பாடல்கள் பிரகாரச் சுவர்களில் பொறிக்கப்பட்டு உள்ளன.

    இந்தத் திருத்தலத்தில் இறைவனுக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய இடம் இது. அவர் இங்கு வந்து தனக்கும் மும்மூர்த்திகளில் ஒருவர் என்னும் அங்கீகாரம் தரப்படவேண்டும் என்று பிரார்த்தனை செய்யவே அப்படியே சிவன் கூற அவருக்கு தனி இடம் தந்து தங்க அனுமதித்தார். பிரம்மா விற்கு தமிழ்நாட்டில் முதல் தனி சன்னதி அமைந்த இடம் திருக்காட்டுப்பள்ளியே ஆகும்.
    நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீசரணாகரட்சகர் ஸ்ரீபெரியநாயகி கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தில்லையாடி. இங்கே ஸ்ரீபெரியநாயகி சமேதராகக் கோவில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசரணாகரட்சகர்.

    விக்ரம சோழனின் ஆட்சிக் காலம். அவனது மந்திரிகளில் ஒருவரான இளங்காரார். திருக்கடவூர் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே நேரம், தில்லையாடி திருக்கோயிலையும் புதுப்பிக்க பொருளுதவி செய்து கொண்டிருந்தார். அந்த மந்திரி சிறிது காலம் கழித்தே மன்னனுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. உடனே மந்திரியை அழைத்து தில்லையாடி கோவிலின் திருப்பணிக்கான புண்ணிய பலனை தனக்கு தத்தம் செய்யும்படி கேட்டான். மந்திரி மறுத்தார்.

    அதனால் கோபம் கொண்ட சோழ மன்னன். தன்னுடைய வாளால் மந்திரியின் கையை வெட்ட முயற்சித்தான். அப்போது «பரொளியுடன் அமைச்சருக்குக் காட்சி தந்தார் ஈஸ்வரன். ஆனால், அந்த திவ்விய தரிசனத்தைக் காண இயலாதவாறு மன்னணின் பார்வை பறிபோனது. தனது தவற்றை உணர்ந்த அரசன் கதறினான். இந்தக் தலத்துக்கு ஒடோடி வந்து, ஈஸ்வரனைச் சரண் அடைந்து, அவரை பூஜித்து வழிபட்டு, மீண்டும் பார்வை கிடைக்கப் பெற்றான். இதனால் இந்தக் தலத்தின் சிவனார். ஸ்ரீசரணாகரட்சகர் (சாந்தாரைக் காந்த ஸ்வாமி) என்று திருப்பெயர் பெற்றாராம். அற்புதமான இந்தக் கதையை விவரிக்கும் தலபுராணம். இந்த ஆலயத்தின் பழமை சுமார் 5000 வருடங்களுக்கு மேல் என்கிறது.

    சித்திரை வருடப்பிறப்பு துவங்கி மாதாந்திர விசேஷங்கள் அனைத்தும் இங்கே சிறப்புற நடைபெறுகின்றன. ஆடிப்பூரத்தன்று சந்தானபரமேஸ்வரி ஹோமத்தில் கலந்து கொண்டு அம்பாளுக்கு வளையல் சார்த்தியும், அவளின் சன்னதியில் தொட்டில் கட்டியும் பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அது போன்று புரட்டாசி நவராத்திரியின் போது அம்பாளுக்கு ராஜேஸ்வரி அலங்காரம் செய்து வழிபட, திருமணத் தடைகள் நீங்குமாம். சோமவார (திங்கட்கிழமைகளில்) நாளில் 108 சங்காபிஷேகம், கார்த்திகையில் முருகன் வீதியுலா, மார்கழி பஞ்சமூர்த்தி வீதியுலா, மாசி உற்சவம் ஆகிய வைபவங்களும் இங்கே விசேஷம்.

    பங்குனி உத்திரத் திருநாளில்... 21 தட்டுகளில் பூ பழம், சேலை - வேட்டி என வரிசை வைத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடைபெறும். திருக்கல்யாணத்தைக் காணக் கண்ணிரண்டு போதாது. மணப்பேறு வாய்க்கவும், மாங்கல்ய பலம் சித்திக்கவும் அவசியம் தரிசிக்க வேண்டிய வைபவம் இது.
    பங்குனி உத்திர நாளில் குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    * முருகன் - தெய்வயானை திருமணம்
    * ஸ்ரீராமர் - சீதை திருமணம்
    * சுந்தரேஸ்வரர் - மீனாட்சி திருமணம்
    * ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம்
    * ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்த நாள்
    * அர்ஜுனன் அவதார நாள்
    * சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் பிறந்தநாள்

    முருகன் தெய்வயானை திருமணம்

    இத்திருமண நாள் பங்குனி உத்திர நன்னாளில் நடந்தது. பங்குனி உத்திரத்தன்று திருச்செந்தூரில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ராமர் - சீதை திருமணம்

    ராமன் சீதையை பாணிக்கிரஹனம் செய்து கொண்டு தீவலம் வந்தான். பின்னர் அம்மி மிதித்து அருந்ததி பார்த்தனர். செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முனிவர்களையும் தந்தையையும் வணங்கி ப்ரவிச்ச ஹோமம் என்ற சடங்கை செய்து, பின்னர் ராமனும் சீதையும் தம்மாளிகையினுள் புகுந்தனர். இவ்வாறு ராமபிரான் - சீதா பிராட்டி திருமணம் பங்குனி உத்திர திருநாளன்று சிறப்பாக நடைபெற்றது.

    ஸ்ரீ ராம நவமி தினத்தில் செய்ய வேண்டியவை

    சிலர் பத்து நாட்களுக்கு முன்பே ராமாயணம் படிக்க ஆரம்பித்து, ராம நவமியன்று பட்டாபிஷேகத்துடன் முடித்து, சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்வார்கள். சாதாரணமாக தினமும் செய்யும் உணவை தயாரித்து பஞ்சாமிர்தம், பானகம், நீர் மோர் இவைகளை அதிகப்படியாக தயார் செய்து அதை நிவேதனம் செய்ய வேண்டும்.
    அதர்மங்கள் ஒழிந்து நன்மைகள் பெருக, மக்கள் குளிர்ந்த மனமும் நிறைந்த வயிறுமாக இருக்க வேண்டுமென்று ஸ்ரீ ராமன் அவதரித்ததாக கூறுவார்கள். ஆகவே தான் அன்று எளிய பானமான பானகம், நீர் மோர் முதலியன நிவேதனம் செய்யும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

    மன்மதனை எழுப்பித் தந்த நாள்

    காமன் - சிருஷ்டி தொழிலுக்கு ஆக்கபூர்வமாக உதவுபவன். இவனது தேவி ரதியாவாள். காமன் ரதியைப் பிரிந்து வந்து, சண்முக அவதாரம் ஏற்படுவதற்காக தட்சிணாமூர்த்தி சொரூபமாக நின்ற பரமேஸ்வரன் மீது மலர் அம்புகளை ஏவ, அவரது கோபத்திற்கு ஆளாகி, நெற்றிக் கண்ணில் இருந்து கிளம்பிய அக்னியால் சாம்பலானான். இதுவே காமதகனம் எனப்படுகிறது.

    காமதகனம் நடந்ததை கேள்விப்பட்டு ரதி பதறி ஓடி வந்து சிவபெருமானை வணங்கி வேண்ட, காமன் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டான். ரதியின் கண்களுக்கு மட்டுமே காட்சி தரும் சக்தியை பெற்றான். காமதகனம் நடைபெற்ற இடம், தமிழ்நாட்டிலுள்ள திருக்குறுங்கை. இந்த ஊரில் உள்ள குளத்தின் அடிப்பகுதி சாம்பல் மயமாக காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். மன்மதன் மீண்டும் உயிர்ப்பெற்று எழுந்த நாள் பங்குனி உத்திர திருநாளாகும். காமதகனத்தன்று மன்மதன், ரதி தம்பதிகளை வழிபடுவோர் சிவபெருமானின் பரிபூரண அனுக்கிரகத்தை அடைவர்.

    அர்ஜுனன் அவதார நாள்

    பஞ்ச பாண்டவர்களில் மூன்றாவதாக பிறந்தவன் அர்ஜுனன். பத்துவித பெயர்களை உடையவன் அவன். கூர்மையான பார்வையை உடையவன். நினைத்த பொழுது, நினைத்தபடி தூங்கவோ, தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும். அதனால் அவன் குடாகேசன் என்று அழைக்கப்பட்டான். கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தான். கீதை பிறக்க காரணமாய் இருந்தவன் அர்ஜுனன். எனவே அர்ஜுனன் பிறந்த தினமான பங்குனி உத்திர திருநாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் பிறந்தநாள்

    சபரிமலை ஐயப்பன் அவதரித்த தினம் பங்குனி உத்திரமாகும். ஆண்டு தோறும் இந்நாளில் சபரிமலையில் பக்தர்கள் ஐயப்பனுக்கு ருத்ராபிஷேகம் செய்து விசேஷ வழிபாடு செய்கிறார்கள். பலி விழாப் பாடல் செய் பங்குனி உத்திர நாள் ஒலி விழா என்ற திருஞான சம்பந்தர் பங்குனி உத்திரத்தை போற்றி பாடுகிறார்.
    சில கோவில்களில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் திருத்தலங்களில், பங்குனி உத்திரம் பிரம்மோற்சவமாகவும், கல்யாண உற்சமாகவும் கொண்டாடப்படுகிறது.

    குறிப்பாக அன்றைய தினம் பக்தர்கள் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு வருவார்கள். விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள்.
    முருகனின் துணைவியான குறமகள் வள்ளி, ஐயப்பன், வில்வித்தையில் சிறந்தவரும், பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் ஆகியோர் பங்குனி உத்திரத்தன்று பிறந்தனர்.
    * தெய்வ திருமணங்கள் பல, புனிதமான இந்த பங்குனி உத்திர திருநாளில்தான் நிகழ்ந்தன.

    * முருகன்-தெய்வானை, ஆண்டாள்-ரங்கமன்னார், ராமர்-சீதா தேவி திருமணங்கள் பங்குனி உத்திர திருநாளில் நடந்தன.

    * முருகனின் துணைவியான குறமகள் வள்ளி, ஐயப்பன், வில்வித்தையில் சிறந்தவரும், பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் ஆகியோர் பங்குனி உத்திரத்தன்று பிறந்தனர்.

    * சிவபெருமான், தனது நெற்றிக்கண் நெருப்பினால் சாம்பலாக்கிய பின், ரதியின் வேண்டுகோளை ஏற்று மன்மதனை எழுப்பியதும் பங்குனி உத்திர நாளில்தான்.

    * இந்திராணியை பிரிந்து, பின்னர் கடும் விரதம் மேற்கொண்ட இந்திரன் மீண்டும் மனைவியை அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.

    * மகாலட்சுமி உத்திர விரதத்தை அனுசரித்து விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றது பங்குனி உத்திர திருநாளில் தான்.

    * 27 கன்னியர்களை தனது மனைவிகளாக சந்திரன் ஏற்றுக் கொண்டது பங்குனி உத்திர நாளில் தான்..

    * காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5 நாள் நடந்து வந்த வருடாந்திர தெப்போற்சவம் நேற்று நிறைவு பெற்றது. அதையொட்டி நேற்று மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து புஷ்கரணிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    புஷ்கரணி கரையில் உற்சவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து இரவு 7 மணியளவில் மின் விளக்குகளாலும், பல வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். உற்சவத்தில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
    ×