என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
தினமும் காகத்துக்கு உணவிட்டாலும் சனிக்கிழமையன்று இந்த ஸ்லோகத்தைச் சொல்லி சனீஸ்வரரை வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும்.
கோணஸ்தோ பிங்களோ பப்ரு; க்ருஷ்ணோ
ரெளத்ராம்தகோ யம;
ஸெளரீ சனைஸ்வரோ மந்த; பிப்பலாதேன ஸம்ஸ்துந;
என்கிற ஸ்லோகத்தைச் சொல்லி சனி பகவானை வேண்டிக்கொள்ளலாம்.
சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபடுவது மகத்துவம் நிறைந்தது. தினமும் காகத்துக்கு உணவிட்டாலும் சனிக்கிழமையன்று இந்த ஸ்லோகத்தைச் சொல்லி சனீஸ்வரரை வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும். எள் தீபமேற்றி வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் விலகும். சனி பகவானை மனதில் நினைத்து, காகத்துக்கு சனிக்கிழமையில் உணவிட்டால், கெடுபலன்களில் இருந்து விடுபடச் செய்வார் சனி பகவான்.
முடிந்த போதெல்லாம் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, சனீஸ்வர பகவானை வேண்டுங்கள். பாபங்களில் இருந்து விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

திருக்கழுக்குன்றம் வேத கிரீஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா வருகிற மே மாதம் 4-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது.
திருக்கழுக்குன்றம் வேத கிரீஸ்வரர் கோவிலில் சித்திரை மாதத்தில் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை பெருவிழா ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா வருகிற மே மாதம் 4-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது. சித்திரை பெருவிழா நடத்துவது குறித்து உற்சவ உபயதாரர்களின் ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கோவில் உற்சவம் தொடர்பாக நாள் தோறும் ஆலோ சனைகளை பெற வாட்ஸ்- அப் குழு தொடங்க முடிவு செய்யப்பட்டது.
உற்சவர் அலங்காரத்தை தாமதப்படுத்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் சுவாமி புறப்பாடுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி, பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
ஈரோட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலின் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் (நடு) மாரியம்மன் கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 15-ந்தேதி இரவு 9.30 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 19-ந்தேதி இரவு 10 மணிக்கு பெரியமாரியம்மன், சின்ன மாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் (நடு) மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டது.
இந்த கம்பத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். அதன்படி நேற்றும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி, பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
கடந்த 23-ந்தேதி இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தியும், நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கோவிலில் கொடியேற்றமும் நடந்தது. வருகிற 29-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது.
31-ந்தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கிலும், வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன், இரவு 9 மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கிலும் வீதி உலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா 2-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. 3-ந்தேதி காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

மாமலையாவது திருநீர்மலையே என்று திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற பெருமாள் திருக்கோவில் இது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
சென்னை பல்லாவரதிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் மேற்கே உள்ளது. மாமலையாவது திருநீர்மலையே என்று திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற பெருமாள் திருக்கோவில் இது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
தல வரலாறு: ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி இவ்வழியே சென்றனர். அவர்களுக்கு பெருமாளின் சயனக்கோலம் கண்களை விட்டு அகலவே இல்லை. மீண்டும் ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினர். எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என உருக்கமாக பெருமாளை வேண்டினர். அப்போது சுவாமி “போக சயனத்தில்” அரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தார். இவரே இங்கு மலைக்கோவில் மூர்த்தியாக அருளுகிறார். அருகில் பிருகு, மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர்.
இத்தலத்துள்ள பெருமாளைத் தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். கோவில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார்.
தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் அரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகளந்த பெருமாள் என நான்கு கோலங்களையும் காட்டியருளினார். இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோவிலிலும், அரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோவிலிலும் அருள்கின்றனர்.
பாரதப்போர் முடிஞ்சு ஏகப்பட்ட உயிர்களை ‘மேலே’ அனுப்பிய பாவம் போக்க, அர்ஜுனன் தவம் செய்ய வந்த இடம் இது. வரும்போதும் காண்டீபத்தைத் தூக்கி வந்துருப்பான் போல! காண்டீபன் வந்த அடையாளமா இதுக்கு காண்டீப வனம் என்ற பெயர் வந்துருக்கு. இங்கே இருக்கும் மலைதான் தோதாத்ரி. தோதா + அத்ரி. இந்த தோதா என்பது தோயா என்பதன் மரூவு. தோயா என்றால் தண்ணீர். அத்ரி என்றால் மலை. தண்ணீர் சூழ்ந்த மலை(ப்பகுதி). நீர்மலை!
மூன்று யுகங்களில் தேவர்களும் ரிஷிகளும் செய்த யாகங்களால் அக்னிபகவானுக்கு ஆஹுதி கூடிப்போய் வயிறு மந்தமாகிப் போனது. பெருமாளிடம் போய் முறையிட்டார். அவர் காண்டீபவனத்தில் போய் பச்சிலை மூலிகைகள் எடுத்து சாப்பிட்டால் வயிறு சரியாகுமென்று கூறி அனுப்பினார். சீக்கிரம் உடம்பு குணமாக வேண்டுமே என்று ஒரு இலைவிடாமல் பிடுங்கித் தின்றார் அக்னி பகவான்.
இதனால் அந்த இடம் பொட்டல் காடானது. வெப்பாலை மரங்கள் மட்டுமே மீதம் இருந்தது. இதுதான் இங்கே ஸ்தல விருட்சமும் கூட. சளி காய்ச்சலுக்கு நல்ல மருந்து இது! மரங்கள் இல்லாததால் வனத்தில் உஷ்ணம் தகிக்க ஆரம்பித்தது. அங்கே தவமிருந்த ரிஷி முனிவர்களால் தாங்க முடியவில்லை. அவர்களும் நாராயணனிடத்தில் சென்று முறையீடு செய்தார்கம்ள். பெருமாள் வருண பகவானை அழைத்து அங்கே மழை பொழியச் சொன்னார். வருண பகவான் மழையை பொழிந்து தள்ளினார். மலையே மூழ்கும் அளவுக்கு மழை!
கோவில் அமைப்பு:
காண்டவ வனத்தில் தோயாத்ரி மலைவாசல்னு அலங்கார நுழைவு வாசல் உள்ளது. நல்ல அகலமான படிக்கட்டுகள், ஒரே சீரான உயரமுடைய 200 படிகள் உள்ளன. பாதி தூரத்தில் வலப்பக்கம் பிரியும் இடத்தில் நான்கு படி இறங்கி எட்டிப்பார்த்தால் சிறியதாக ஆஞ்சநேயர் சந்நிதி ஒன்று உள்ளது.
கோவில் முகப்பில் மூன்று நிலைக் கோபுரத்தின் முன் நான்கு தூண் கொண்ட மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி மற்றும் 'கல்கி’ சதாசிவம் தம்பதியர் கட்டிய மண்டபம். அவர்களின் திருமணம் இந்தக் கோவிலில் தான் நடந்தது.
உள்ளே நுழைந்தால் வெளிப்பிரகாரத்தில் இடதுபக்கம் ஆதிசேஷனுக்குத் தனிச்சந்நிதி உள்ளது. வலதுபக்கம் கொடிமரம் கடந்து ஒரு பத்துப் படிக்கட்டுகள் ஏறிப்போனால் படியின் முடிவில் பெரியதிருவடி சிறியதாக நிற்கும் சந்நிதி உள்ளது. அவருக்கு நேர் எதிரே கருவறையில் ரங்கநாதர் தெற்கு நோக்கி பள்ளிகொண்டுள்ளார். கருவறைப் படிக்கட்டின் இரண்டு பக்கமும் பாவை விளக்கேந்தும் பழங்காலப் பெண்டிர் சிலைகள் உள்ளன.
பெருமாள் இங்கே சுயம்புவாக தோன்றியார். இது எட்டு சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்றாகும். மற்ற ஏழு சுயம்பு க்ஷேத்ரங்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, ஸாளக்ராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரி. சுயம்பு மூர்த்தி என்பதால் இங்கே மூலவருக்கு அபிஷேகம் இல்லை. கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் மட்டும் தைலக்காப்பு உண்டு. சாம்பிராணித் தைலம் மட்டும் பூசப்படுகிறது.
தனிச்சந்நிதியில் தாயார் ரங்கநாயகி உள்ளார். உட்பிரகாரத்தில் பால நரசிம்மர் சந்நிதி உள்ளது. இவரைச் சாந்த நரசிம்மர் என்றும் சொல்கிறார்கள். ஹிரண்யவதம் முடிந்ததும் கோபம் அடங்காமல் சிலிர்த்த உடலோடு நின்ற சிம்ஹத்தைக் கண்டு ப்ரஹலாதனுக்கு உள்ளூர நடுக்கம் ஏற்பட்டது. பாலகன் முகத்தில் பயத்தைப் பார்த்ததும் 'ஐயோ! குழந்தையைப் பயப்பட வச்சுட்டேனே’ என்று இரக்கம் தோன்ற, அவனுக்குச் சமமாக, அவனுக்கேற்ற உருவத்தில் தானும் குழந்தையாக மாறி இரண்டு கைகளுடன் இங்கே வீற்றிருக்கிறார். இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரைத் தரிசிக்கலாம்.
கிழக்கே உலகளந்தப் பெருமாள் சந்நிதி உள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவரை ஒட்டி த்ரிவிக்ரமன் உள்ளார். மகாபலியின் தலையில் மூன்றாவது அடி வைத்தவர். வைகாசி மாதம் திருவோண நக்ஷத்திர தினத்தில் இவருக்குத் தனி உற்சவம் நடத்தப்படுகிறது.
இக்கோவிலில் மூலவர் அரங்கநாதர் மலைக்கோவிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோவிலிலும் காட்சி தருகின்றனர். சுயம்புவுக்கு அபிஷேகம் இல்லாததால் அபிஷேகம், திருமஞ்சனமெல்லாம் உற்சவருக்குத்தான். கூடவே ஸ்ரீதேவி, பூதேவியர். ஆண்டாளம்மாவும் கூடவே இருப்பது விசேஷம். சித்திரை பிரம்மோத்சவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோவிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
கீழே உள்ள கோவிலில் நீர்வண்ணப் பெருமாள் சந்நிதிக்கு முன் அழகான அஞ்சுநிலைக் கோபுரத்துடன் கூடிய முன்வாசல் உள்ளது.
கோவில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் இராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகித் தனியே உள்ளது.
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
சென்னை தாம்பரத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருநீர்மலை உள்ளது. பல்லாவரம் சென்று, அங்கிருந்து திருநீர்மலை வழியாக செல்லும் பஸ்களில் 5 கி.மீ., சென்றால் இக்கோவிலை அடையலாம்.
முகவரி
அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோவில்,
திருநீர்மலை - 600 044.
காஞ்சிபுரம் மாவட்டம்.
தொலைபேசி: +91- 44-22385484, 9840595374, 9444020820

பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது.
பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோவிலில் ஸ்தலாதிபதி அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் பங்குனி பெருவிழா பிரம்மோற்சவம் கடந்த 19-ம் தேதி சனிக்கிழமை தொடங்கி 11 நாட்கள் நடைபெற்று வருகிறது.
20-ம்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிம்ம வாகனம், அம்ச வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், நாச்சியார் திருக்கோலம், கருடசேவை, யானை வாகனம் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
பங்குனி திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் ஆகியோர் முதல் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நாளை குதிரை வாகன சேவை நடைபெறுகிறது. திங்கட்கிழமை தீர்த்தவாரி பின்பு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து வருகிற 29-ம்தேதி செவ்வாய்க்கிழமையுடன் பிரமோற்சவ உற்சவம் நிறைவடைகிறது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் சுவாமி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது. 29-தேதி வரை நரசிம்மசுவாமி பிரமோற்சவ விழா நடக்கிறது.
வைணவ திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த, ஆழ்வார்களால் போற்றி பாடப்பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், யோகநரசிம்மர் யோகநிலையில் மேற்கு நோக்கி நோய் தீர்க்கும் பெருமானாக எழுந்து அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் உள்ள யோக நரசிம்மரின் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இன்று காலையில் நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாடவீதிகளில் நரசிம்மர் சுவாமிதேர் வலம் வந்து 9 மணிக்கு நிலையை அடைந்தது. வருகிற 29-ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி திருவல்லிக்கேணியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
இதையும் படிக்கலாம்...அரசமரத்தை எந்த கிழமையில் சுற்றினால் என்ன பிரச்சனை தீரும்...

அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்திபெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை முதல் சாமிக்கு 108 வகையான நறுமண பொருட்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு வழிபாடு நடந்தது.
தொடர்ந்து சாமிக்கு 1008 ஆகம பூஜைகளும், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளுடன் வெள்ளிக் கவச அலங்கார சேவையும், மகா தீபாரதனையும் நடந்தது. இந்த சிறப்பு வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி உழவாரப்பணி குழு சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடந்தது. 108 கிலோ மிளகு, 1008 கிலோ மிளகாய் கொண்டு நடந்த இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

அரசமரம் ஆன்மீகத்தில் மிகமுக்கிய பங்கு வகிப்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதிலும் நீங்கள் ஒவ்வொரு நாளும் அரச மரத்தை சுற்றி வருவதால் அந்த நாளுக்கு ஏற்ப பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
அரசமரத்தை திங்கள்கிழமையன்று இன்று வலம்வந்தால் வீட்டில் மங்கலக்காரியங்கள் எந்த தடையும் இல்லாமல் நடக்கும். செவ்வாய்கிழமையில் வளம் வருவது செவ்வாய் தோஷங்களை நீக்கும். புதன்கிழமையில் வலம்வந்தால் வியாபாரம் பன்மடங்கு பெருகும்.
கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமையில் வளம் வர வேண்டும். சகல சௌபாக்கியங்களும் தடையின்றி தொடர்ந்து கிடைக்க வெள்ளிக்கிழமை வலம்வர வேண்டும். எல்லா கஷ்டங்களையும் விலக்கி மகாலட்சுமியின் அருளை சனிக்கிழமை வலம்வருவது பெற்றுத்தரும்.
தீராமல் இருக்கும் எல்லா நோயையும் ஞாயிற்று கிழமை வலம் வருதல் போக்கும். சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திர பகவானுக்கு உரிய திங்கள்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வலம் வருதல் நலம்.
மூலதோ பிரம்மரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபினே
அக்ரத: சிவ ரூபாய
விருக்ஷ ராஜயதே நம
இந்த ஸ்லோகத்தை 108 முறை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வர வேண்டும். கூடவே உங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ பூஜை சார்ந்த பொருட்களோ மரத்தின் முன்னே சமர்ப்பிக்க வேண்டும்.
108 முறை பிரகார வலம் முடிந்ததும் அந்த பொருட்களை தானம் அளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இந்த வழிபாடு அமாசோமவார விரதம் என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் நீங்கள் செய்யும் அன்னதானம் பலமடங்கு புண்ணியங்களை கொண்டு சேர்க்கும்.
துணிகளை தானமாக கொடுக்கலாம். இந்த ஆடிஅமாவாசையை மறந்துவிடாமல் உங்கள் அருகில் உள்ள அரசமரத்தை வலம்வந்து எல்லா நன்மையையும் பெறுங்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா வருகிற 27-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு விழா வருகிற 27-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து கோபுரங்களும் புதுப்பித்தும், சிற்பங்கள் சீரமைத்தும் வர்ணம் பூசப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடமுழுக்கை பக்தர்கள் பார்க்கும் வகையில் கோவில் வாசல் முன்பு பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாமை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் சந்திரகுமார் தொடங்கி வைத்தார். இதில் செவிலியர்கள், மருத்துவ மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பத்துகாணி குருசுமலை திருப்பயண திருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி திரளான பொதுமக்கள் மலையேறி குருசை தரிசனம் செய்கின்றனர்.
தமிழக-கேரளா எல்லை பகுதியில் பத்து காணியில் குருசுமலை அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இங்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம்(ஏப்ரல்) 3-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது.
விழாவின் தொடக்கமாக நாளை மதியம் 2 மணிக்கு வெள்ளறடையில் இருந்து குருசுமலை அடிவாரம் வரை சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4 மணிக்கு கொடி பயணம் புனித பத்தாம் கியூஸ் தேவாலயம் முதல் மலை அடிவாரம் வரை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் திருவிழா கொடியை மலை அடிவாரத்தில் ஏற்றி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து மலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு குருசுமலை இயக்குனர் வின்சென்ட் பீட்டர் வரவேற்று பேசுகிறார். நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சியில் கேரளா எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், சசிதரூர் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்.
தொடர்ந்து நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் முதல் திருப்பலியை நிறைவேற்றுகிறார்.
28-ந் தேதி மதுரை மாவட்டம் ஆவணக் காப்பாளர் ஜோசபின் தலைமையில் திருப்பலி, தொடர்ந்து நற்கருணை ஆராதனை, சிலுவைப்பாதை திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
29-ந்தேதி மாணவர்களின் பங்குத்தந்தை ஜோசப் தலைமையில் திருப்பலி, சிலுவை நவநாள், சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை, ஜெப ஆராதனை, திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.
30-ந்தேதி நெய்யாற்றின்கரை மறை மாவட்டம் முதன்மை குரு தலைமையில் திருப்பலி ஆகியவை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் திருப்பலி, சிறப்பு விருந்தினர்கள் உரை, நற்கருணை ஆராதனை, சிலுவைப்பாதை நிகழ்ச்சி, ஆடம்பர கூட்டுத் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.
விழாவையொட்டி திரளான பொதுமக்கள் மலையேறி குருசை தரிசனம் செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபரைவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கல் ஆகியவை நடந்தது.
தொடர்ந்து காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டன.
இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையில் உள்ள தட்சிண காலபைரவர் கோவில், கந்திகுப்பம் காலபைரவர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து காலபைரவர் ேகாவில்களிலும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சண்முகசாமி வள்ளி- தெய்வானையுடன் உட்பிரகார ஊர்வலம் நடந்தது.
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் சண்முகசாமி வள்ளி- தெய்வானையுடன் உட்பிரகார ஊர்வலம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.