
20-ம்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிம்ம வாகனம், அம்ச வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், நாச்சியார் திருக்கோலம், கருடசேவை, யானை வாகனம் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
பங்குனி திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் ஆகியோர் முதல் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நாளை குதிரை வாகன சேவை நடைபெறுகிறது. திங்கட்கிழமை தீர்த்தவாரி பின்பு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து வருகிற 29-ம்தேதி செவ்வாய்க்கிழமையுடன் பிரமோற்சவ உற்சவம் நிறைவடைகிறது.