என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகம். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.

    தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோவில் சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் மற்றும் 60, 70, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அமிர்த கடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தன. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த 23-ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி தினமும் இரண்டுகால யாகாசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை 5 மணியளவில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8-வது யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 8-வது கால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றன.

    பின்னர் சிவ ஆகமங்கள் முறைப்படி சிவஸ்ரீ எம்.கே.கணேசகுருக்கள் தலைமையில் 120 வேத விற்பன்னர்கள், 27 திருமுறை ஓதுவார்கள் திருமுறை பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், மிரித்திங்கா ஜெபம் ஆகியவை நடைபெற்றது. பூர்ணாஹீதியுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க மேள தாளங்களுடன் வாணவேடிக்கையுடன் கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோபுர விமானத்தில் வந்தடைந்தது.

    இதையடுத்து காலை 10.45 மணியளவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கும், அம்பாளுக்கும் கடத்தில் உள்ள புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது கருடன் வட்டமிட புனித நீரால் கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிக்கலாம்...திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்கள் நாளை ரத்து
    தினமும் காலையில் நீராடிவிட்டு கிழக்கு திசை பார்த்து நின்று சூரியனைப் பகவானை பார்த்து 10 முறை சொல்ல அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம்.
    நாம் தினமும் காலையில் சொல்ல வேண்டிய சூரிய மந்திரத்தை சொல்ல அன்றைய நாள் முழுவதும் நம் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சியைப் பெறும். அதோடு சூரிய பகவானின் அருளும் நமக்கு கிடைக்கப்பெறும்.

    கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூரிய மந்திரங்களை காலையில் நீராடிவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு அதன் பின்னர் சொல்லலாம்.

    அதே போல் நீராடி சூரிய நமஸ்காரம் செய்யும் போது சொல்ல சூரிய பகவானின் அருள் நிறைந்து கிடைக்கும்.

    சூரிய காயத்ரி :

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
    தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

    காயத்ரி மந்திரம் 2

    ஓம் பாஸ்கராய வித்மஹே
    திவாகராய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    சூரிய பகவான் மந்திரம்

    காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
    பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
    வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
    தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி

    இந்த அற்புத சூரிய துதி தூய தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தினமும் காலையில் நீராடிவிட்டு கிழக்கு திசை பார்த்து நின்று சூரியனைப் பகவானை பார்த்து 10 முறை சொல்ல அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம்.

    ஞாயிறு கிழமைகளில் அதிகாலையில் குளித்த பின்னர் சொல்ல இந்த மந்திரத்தில் மேலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    சூரிய மந்திரம் நம் மனதை ஒழுங்கு படுத்தி அமைதியையும், நற்சிந்தனையையும் தரும். அதே போல் சூரிய நமஸ்காரம் நம் உடலை வளப்படுத்தி, எந்த நோயிலிருந்தும் காக்கும் மிக உன்னதத்தைத் தரக் கூடியதாக இருக்கும்.
    கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவில் தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கொல்லங்கோடு பத்திரகாளியம்மன்கோவில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். தமிழக-கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மீன பரணி நாளில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேவஸ்தான தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை கொடியேற்றி வைத்தார்.

    முன்னதாக நேற்று காலை 8 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து அம்மன்கள் எழுந்தருளி பதிவரிசனையின் படி கிணறு வலம் வைத்து ஊர்வலமாக சாஸ்தாநகர், திருமன்னம் பகுதிகளுக்கு சென்று மதியம் மீண்டும் மூலக்கோவில் வந்தடைந்தது. அதை தொடர்ந்து சமூக விருந்தில் கலந்து விட்டு 3 மணிக்கு அம்மன்கள் திருவிழா கோவிலான வெங்கஞ்சி கோவிலுக்கு மேளதாளங்களுடன் தாலப்பொலி, யானை உள்ளிட்ட ஊர்வலங்களுடன் கண்ணனாகம் சந்திப்பு, இளம்பாலமுக்கு வழியாக 7 மணிக்கு வந்தடைந்தது. இதனை தொடர்ந்து அங்கு கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இரவு 8 மணிக்கு தூக்க திருவிழா நிகழ்ச்சியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்குமார் வரவேற்று பேசினார். விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்தி பேசினார். கோவில் பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி நன்றி கூறினார். இதில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.,கோவில் துணை தலைவர் சதி குமாரன் நாயர், இணை செயலாளர் பிஜு குமார், பிரதிநிதி சபை குழு உறுப்பினர்கள் சஜி குமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன் தம்பி, ஸ்ரீகுமாரன் நாயர், பிஜூ, சதி குமாரன் நாயர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் தூக்க நேர்ச்சை வருகிற 4-ந் தேதி நடக்கிறது. இதில் ஏராளமான பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கொடியேற்ற நிகழ்ச்சியை காண தமிழக, கேரள அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் அவசர உதவி மருத்துவ சிகிச்சை வழங்கவும் கொல்லங்கோடு நகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    முன்னதாக குமரி மாவட்டத்திற்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து கலெக்டர் அரவிந்த் பூங்கொத்து ெகாடுத்து வரவேற்றார்.
    திருப்பதி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும் 29-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.
    திருமலை :

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    யுகாதி பண்டிகையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. அதையொட்டி நாளை (திங்கட்கிழமை) சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும் 29-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

    எனவே திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிக்கலாம்...திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில்
    திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தயிர் பள்ளயம் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 1½ வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி இடம்பெயரும் ராகு பெயர்ச்சி விழா கடந்த 21-ந்தேதி நடைபெற்றது.

    ராகுபகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி 2-ம் கட்டமாக கடந்த 23-ந்தேதி முதல் நேற்று வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் ராகு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து தயிர் பள்ளயம் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சி.நித்யா, தக்கார் ஆர். இளையராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    வலங்கைமானில், இன்று பாடைக்கட்டி மகாமாரியம்மன் கோவில் திருவிழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.
    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிராம வழிபாட்டு தலமாகவும் சக்தி தலமாகவும் போற்றப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 11-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. 13-ந் தேதி முதல் காப்பு கட்டுதலும், 20-ந் தேதி 2-ம் காப்பு கட்டுதலும் நடந்தது. விழா நாட்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடைக்காவடி திருவிழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ேநாயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நோய் குணமடைய வேண்டி மகா மாரியம்மனை வேண்டிக் கொள்வர்.

    நோயிலிருந்து குணமடைந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பச்சை ஓலை படுக்கையுடன் பச்சை மூங்கிலால் பாடைகட்டி இறந்தவரை போல பாடையில் படுக்க வைத்து இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்யப்படும். பின்னர் அந்த பாடை காவடியை அருகில் உள்ள குடமுருட்டி ஆற்றுப் பகுதியிலிருந்து உறவினர்கள் 4 பேர் தூக்கிக் கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மகா மாரியம்மன் கோவிலை மும்முறை சுற்றி வலம் வருவார்கள். நோயுற்றவர்களுக்கு மறு உயிர் வழங்கிய அம்மனுக்கு பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வே பாடைக்காவடி திருவிழா என அழைக்கப்படுகிறது.

    இன்று நடைபெறும் பாடைக்காவடி திருவிழாவையொட்டி பக்தர்கள் பாடைக்காவடிகள், பால்குடம், பால்காவடி, பறவைக்காவடி, செடில் காவடிகள் உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய வண்ணம் உள்ளனர். இதனால் மகாமாரியம்மன் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் எங்கு நோக்கினும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    விழாவையொட்டி திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமரன், சுகுணா, கருணாநிதி, விஜயா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் பரமேஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருவையாறு, மன்னார்குடி மயிலாடுதுறை பாபநாசம் ஆகிய இடங்களில் இருந்து வலங்கைமானுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு வலங்கைமான் மகாமாாியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழா இன்று நடைபெற உள்ளதால் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இதனால் வருவாய் துறை, இந்து சமய அறநிலையத் துறை, தீயணைப்பு துறை, போலீசார், சுகாதாரத்துறை, பேரூராட்சி நிர்வாகத்தினர் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் மற்றும் சுற்றுப்புற வளாகம், நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் நெரிசல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஹரிஹரன் தலைமையில் வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    இன்று பாளையங்கோட்டை தெற்கு பஜார் சவேரியார் பேராலயத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருஇருதய சகோதரர்களின் இல்லத்தில் இருக்கிற கிறிஸ்து அரசர் ஆலயம் நோக்கி செல்கிறார்கள்.
    பாளையங்கோட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களின் தவக்கால சிலுவை பயணம் நடைபெறுகிறது. கிறிஸ்தவர்களின் வாழ்வில் தவக்காலம் மிக முக்கியமான காலம் ஆகும். 40 நாட்கள் ஆண்டவரின் மன்னிப்பையும், அருளையும் கூடுதலாக பெறும் காலமாக கருதப்படுகிறது. அத்தகைய தவக்காலம் கடந்த 2-ந்தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது.தொடர்ந்து நோன்பு இருத்தல், புனித ஸ்தலங்களுக்கு செல்லுதல், ஜெபித்தல், நோயாளிகள், ஆதரவற்றவர்களை சந்தித்து உதவி செய்தல் போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே தவக்கால சிலுவை பயணம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி பாளையங்கோட்டை தெற்கு பஜார் சவேரியார் பேராலயத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருஇருதய சகோதரர்களின் இல்லத்தில் இருக்கிற கிறிஸ்து அரசர் ஆலயம் நோக்கி செல்கிறார்கள். இந்த சிலுவை பயணத்தை பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு குழந்தை ராஜ் அடிகளார் தலைமை தாங்கி வழிநடத்துகிறார். இதில் பங்குத்தந்தையர், துறவியர்கள், இறை மக்கள் உள்ளிட்டோர் சிலுவை தாங்கி பயணம் மேற்கொள்கிறார்கள். முடிவில் திருஇருதய சகோதரர்கள் இல்ல மைதானத்தில் திருப்பலியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து ஏப்ரல் மாதம் 14-ந்தேதி பெரிய வியாழனும், 15-ந்தேதி புனித வெள்ளியும் கடை பிடிக்கப்படுகிறது. 17-ந்தேதி ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றானதும், நவதிருப்பதி கோவில்களில் 7-வது திருப்பதியுமாக தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மூலவர் மகரநெடுங்குழைக்காதர். இக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழா நாட்களில் தினமும் சுவாமி நிகரில் முகில்வண்ணன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதி மற்றும் ரதவீதிகளில் உலா வருதலும், 5-ம் திருநாளான கடந்த 22-ந் தேதி கருடசேவையும் நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-வது திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக காலை 7.30 மணிக்கு உற்சவர் நிகரில் முகில் வண்ணன் தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 9 மணிக்கு தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கீழ ரதவீதியில் புறப்பட்ட தேர் தெற்கு ரத வீதி வழியாக, மேல ரத வீதியில் வந்த போது வெயிலின் தாக்கம் அதிகமானதால் தேர் நிறுத்தப்பட்டது.

    பின்னர் மாலை 4 மணிக்கு இழுக்கப்பட்ட தேர் மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக வந்து நிலையத்தை வந்தடைந்தது. விழாவில் கோவில் தக்கார் அஜித், நிர்வாக அதிகாரி இசக்கியப்பன், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் ஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
    மூன்று ராஜ கோபுரங்கள் கொண்ட இந்த கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு விழா நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 23-ந் தேதி தொடங்கியது.
    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகவும், அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக்கி அபிராமி அம்மன் திருவிளையாடல் புரிந்த சிறப்பு பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

    மேலும் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை இக்கோவிலில் பக்தர்கள் கொண்டாடுவது சிறப்பம்சமாகும்.

    மூன்று ராஜ கோபுரங்கள் கொண்ட இந்த கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு விழா நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 23-ந் தேதி தொடங்கியது.

    இன்று காலை 5 மணிக்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் 8-வது யாகசாலை பூஜைகள் நடக்கிறது.. இதன் முடிவில் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடக்கிறது. அதைத்தொடர்ந்து 10.30 மணி அளவில் கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு மகா குடமுழுக்கு நடக்கிறது.

    குடமுழுக்கு விழாவில் ஆதீனங்கள், கட்டளை தம்பிரான்கள், அமைச்சர்கள், தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள், ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    கழு - கழுகு - கங்கம் என்பன ஒருபொருள் குறிக்கும் சொற்கள். கழுகு வழிபட்டதால், வழிபடுகின்றதால் இத்தலத்திற்குத் “திருக்கழுகுன்றம்” எனப் பெயர் வந்தது.
    மூலவர்     -  வேதகிரீஸ்வரர், பக்தவத்சலேஸ்வரர்
    அம்மன்     -  திரிபுரசுந்தரி
    தல விருட்சம்  -  வாழை மரம்
    தீர்த்தம்     -  சங்குதீர்த்தம்
    பழமை     -  1000 வருடங்களுக்கு முன்
    புராணப் பெயர்  -  கழுகுன்றம், திருக்கழுகுன்றம்

    பூஷா, விருத்தா என்கிற இரு முனிவர்கள் சாரூப பதவி வேண்டித் தவம் செய்தனர். இறைவன் தோன்றி வரம் தரும்போது,”சாயுஜ்ஜியப் பதவி தருகிறேன். இப்பதவியில் சில காலம் இருங்கள். பிறகு சாயுச்சியம் தருகிறோம்” என்றார். அதை ஏற்க மறுத்த முனிவர்களை,”கழுகுருவம் அடைக” என்று சாபமிட்டார். முனிவர்கள் கழுகுகளாய்ப் பிறந்தனர். சம்பு, ஆதி எனும் பெயருடன் மலைக் கோயிலை வலம் வந்து, தாங்கள் உண்டாக்கிய பட்சி தீர்த்தம் அருகில் உள்ள பாறையில் நாள்தோறும் அமுதுண்டு இறைவனை வழிபட்டு வருகின்றனர். தினமும் இராமேஸ்வரத்தில் ஸ்நானம் செய்து கழுக்குன்றத்தில் ஆகாரம் உண்டு காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம். கழுகுகளுக்கு அமுதூட்டும் செயல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.

    சுரகுரு மகாராஜாவுக்கு சுவாமி இத்தலத்தில் காட்சி தந்ததாகவும், அவரே இத்திருத்தலம் அமையக் காரணமாக இருந்தவர் என்றும் வரலாறு கூறுகிறது. கழு - கழுகு - கங்கம் என்பன ஒருபொருள் குறிக்கும் சொற்கள். கழுகு வழிபட்டதால், வழிபடுகின்றதால் இத்தலத்திற்குத் “திருக்கழுகுன்றம்” எனப் பெயர் வந்தது.

    இன்னுமொருகதை: பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனராம். முடிவில் சாருப்ய என வரம் கேட்பதற்குப் பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனராம். எனவே நான்கு யுகத்திற்கு இருவர், என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். நண்பகல் நேரத்தில் இக்காட்சியைக் காணலாம்.

    சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம். வேதமே மலையாக அமைந்த தலம். கோடி உருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம். சித்தர்கள் பலர் இம்மலையில் வாழ்ந்தால் தியானம் செய்ய ஏற்ற தலம். இறைவன் காதலித்து உறையும் இடம் கழுகுன்றம் என திருஞானசம்பந்தரால் மகிழ்ந்து போற்றிய தலம் மாணிக்கவாசகருக்கு சுவாமி காட்சி தந்த தலம். என்உடல் வீழும்போதும் நீதான் எனக்கு துணை என்று ஈசனை பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம். உலகின் உச்சமான அமராவதி நகருக்கு நிகரான தலம் திருக்கழுக்குன்றம் என அருணகிரிநாதரால் புகழப்பெற்ற தலம். சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் சுவாமி காட்சி தந்த தலம். மார்க்கண்டன் சிவபெருமான் அருளால் என்றும் பதினாறு வயது பெற்ற தலம்.

    சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்தபோது இறைவன் அருளால் அத்தடாகத்தில் சங்கு தோன்றியது. மார்க்கண்ட தீர்த்தம் என்று வழங்கப்பட்ட இத்தீர்த்த்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சங்கு பிறந்து கொண்டிருப்பதால், சங்கு தீர்த்தம் எனப் பெயர்பெற்றது.

    வலம்புரிச் சங்கு கடலில்தான் கிடைக்கும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு இவ்வாலய சங்கு தீர்த்தக் குளத்தில் தோன்றுகிறது. இவ்வாலயத்தில் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அதில் புகழ்பெற்ற தீர்த்தம்தான் சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடிய பெரிய திருக்குளம். இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மணமுருக வேண்டினால் முழுமையாக குணமடைகின்றனர் என்பது இப்போதும் நடக்கும் அதிசயம். இக்குளக்கரையில் வண்டு(சங்கு) வன விநாயகர் எழுந்தருளியுள்ளார். ஆதியில் மார்க்கண்டேயன் இத்தலம் வந்தபோது ஈசனை வணங்க நினைத்தார். ஈசனை அபிஷேகித்து பூஜிக்கப் பாத்திரம் இல்லையே என இக்குளக்கரை அருகே அமர்ந்து வருந்தினார். அப்போது பெரியதொரு வலம்புரிச் சங்கு இக்குளத்திலிருந்து மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது. அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேயர், அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூஜித்தார். அன்று முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தத்திலிருந்து வலம் புரிச்சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது.

    இதுவரை சிறிதும் பெரிதுமான பல வலம்புரிச் சங்குகள் தோன்றியுள்ளன. புதிய சங்கு தோன்றியதும் பழைய சங்கை பாதுகாப்புடன் ஆபரண அறையில் வைத்துவிடுவார்கள். இப்படி பழைய சங்குகள் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. சங்கு தோன்றப்போவதற்கு அறிகுறியாக குளத்தில் நுரை வருவதைக் காணலாம். மறுநாள் ஓங்கார சப்தம் கேட்கும். உடன் சங்கு வெளிவந்து நீரில் மிதக்கும். தயாராக, உள்ள குருக்கள் குளத்தின் நடுவே சென்று, அதை எடுத்து வந்து சுத்தப்படுத்தி, பொட்டிட்டு, பூவைத்து, பின் மேளதாளத்துடன் பக்த வத்சலர் கோயிலுக்குள் எடுத்துச் செல்வார். பழைய சங்கினை ஆபரண அறையில் வைத்து விட்டு, இதனால் அபிஷேகம் செய்வார்.

    மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். ஈசனை இத்தலத்தில் இந்திரன் பூஜித்தான். தொடர்ந்து இன்றும் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து, சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுகிறது. தாங்கவே முடியாத வெப்பத்தை மறுநாள் கருவறை திறக்கும்போது காணலாம்.

    சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடக்கிறது. 10.11.1930 நடந்ததாக அறிவியலார்கள் கூறி இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.
    அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். எனவே ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் ஆகிய ஆண்டுக்கு மூன்று நாட்கள்தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம் செய்வார்கள்.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பது மாறுபட்டதாகும். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம். 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். புஷ்பகர மேளா எனப் புகழ் பெற்ற இவ்விழா வடஇந்தியாவில் நடக்கும் கும்பமேளா போன்ற மிகப் பெரிய புகழ் பெற்றது.

    பிரார்த்தனை:

    இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

    குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சித்தபிரமை பிடித்தவர்கள் 48 நாட்கள்(ஒரு மண்டலம்)சங்குதீர்த்தத்தில் மூழ்கி விட்டு, இத்தலத்தில் வழிபடும் பட்சத்தில் அவர்கள் முழுமையாக குணமடையும் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. தீராத வியாதிகள் தீருகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் வழிபட்டு பலனடைகின்றனர். இத்தலத்தில் பக்தர்களின் எல்லாவித வேண்டுதல்களும் நிறைவேறுவதாகச் சொல்கின்றனர். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். ஆஸ்துமா ரத்தகொதிப்பு இருதய நோய் உள்ளவர்கள் காலையும் மாலையும் சஞ்சீவிக் காற்று வீசும் இம்மலை ஏறி வந்து ஈசனை வழிபட்டால் அத்தகைய நோய்களிலிருந்து குணமடைகின்றனர் என்பது கண் கண்ட உண்மை.

    நேர்த்திக்கடன்:

    சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம். வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.

    காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்,
    திருக்கழுக்குன்றம்,
    காஞ்சிபுரம். காஞ்சிபுரம் மாவட்டம்.
    இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    திருப்பதி ஸ்ரீனிவாசன் தங்கும் விடுதி, பூதேவி காம்ப்ளக்ஸ் மற்றும் கோவிந்தராஜ சாமி சரித்திரம் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. தரிசன டிக்கெட்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டு வருவதால் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    நேற்று முதல் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசன சிபாரிசு கடிதங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    இதனால் வார இறுதி நாட்களில் சாமானிய பக்தர்கள் அதிகமானோர் சாமியை தரிசிக்க வருகின்றனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்களின் வசதி குறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி ஆய்வு செய்தார்.

    அன்னதான சத்திரம், ராம்பகீச்சா விடுதி, பஸ் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் அவர் ஆய்வு செய்து பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தங்கும் அறைகள் கிடைக்கிறதா? தரிசன ஏற்பாடுகள், இலவச உணவு வசதி போன்றவை குறித்து அவர் பக்தர்களிடம் கேட்டறிந்தார்.

    வரிசையில் காத்திருப்போருக்கு பால், சிற்றுண்டி போன்றவை வழங்குங்கள் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

    இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இலவச தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அங்குள்ள குடோன்களில் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

    இதனால் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருக்கின்றனர். இதேபோல் ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களும் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 65,418 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 33,451 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    திருக்கழுக்குன்றம் வேத கிரீஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா வருகிற மே மாதம் 4-ந் தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.
    திருக்கழுக்குன்றம் வேத கிரீஸ்வரர் கோவிலில் சித்திரை மாதத்தில் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை பெருவிழா ரத்து செய்யப்பட்டது.

    இதையடுத்து இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா வருகிற மே மாதம் 4-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது. சித்திரை பெருவிழா நடத்துவது குறித்து உற்சவ உபயதாரர்களின் ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கோவில் உற்சவம் தொடர்பாக நாள் தோறும் ஆலோ சனைகளை பெற வாட்ஸ்- அப் குழு தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    உற்சவர் அலங்காரத்தை தாமதப்படுத்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் சுவாமி புறப்பாடுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
    ×