என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம்பெருகும், குடும்பத்தில் அமைதிநிலவும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். இதன் காரணமாக இக்கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அம்மனை தரிசனம் செய்வதற்காக தினமும் கார், வேன், பஸ் போன்ற வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு தேர்த்திருவிழா வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை தொடர்ந்து, அன்று காலை 6 மணிக்குமேல் 8 மணிக்குள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதேபோன்று ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். மேலும் தினமும் இரவு 8 மணிக்கு சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
வருகிற 18-ந்தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு மேல் 11.30 அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.வருகிற 20-ந்தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 21-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 26-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்திலும் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த ஸ்லோகத்தை அரசமரமும், வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ஜெபிக்க நிறைவான பலன் கிடைக்கும். சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் உண்டானால் அது விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரத்னமௌளிர் நிரங்குஸ:|
ஸர்ப்பஹார கடீசூத்ர : சர்ப்ப யக்ஞோபவீதவாந் ||
ஸர்ப்பகோடீர கடக: சர்ப்ப க்ரைவேய காங்கத:|
ஸர்ப்ப கக்ஷோதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:||
சர்வ வஸ்யகரோ கர்ப்பதோஷஹா புத்ரபௌத்ரத :||
இந்த ஸ்லோகத்தைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர சர்ப்பதோஷம் நீங்கும். சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் உண்டானால் அது விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதை அரசமரமும், வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ஜெபிக்க நிறைவான பலன் கிடைக்கும்.

சித்திரை திருவிழாவில் திருட்டை தடுக்க தனிப்படை, கள்ளழகர் திருவிழாவிற்கு புதிய செல்போன் செயலி அறிமுகம், ஆள்இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக சித்திரை திருவிழா கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டது. இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால் பக்தர்கள் பங்கேற்புடன் நடக்க உள்ளது. எனவே திருவிழா தொடங்கிய நாளில் இருந்து சுவாமியை பார்க்க பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-
2 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சி அம்மன் மற்றும் அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் மீனாட்சி திருக்கல்யாணம், தேர் திருவிழா, வைகை ஆற்றில் அழகர் இறங்குதல் போன்ற திருவிழாக்களில் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள். எனவே மதுரை நகரில் பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.அதில் சுவாமி 4 மாசி வீதிகளில் காலை, இரவு வலம் வரும் நிகழ்ச்சிகளில் சுவாமியுடன் 2 உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 100 போலீசார் பாதுகாப்புக்காக செல்வார்கள்.
சுவாமி எங்கு சென்றாலும் அவர்கள் உடன் செல்வார்கள். இது தவிர விளக்குத்தூண், தெற்குவாசல், திடீர்நகர், திலகர்திடல் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குள் சுவாமி செல்லும் போது அந்தந்த காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வருகிற 13-ந் தேதி திக்குவிஜயம் நடைபெறும் வரை இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் இவர்கள் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் பிடிப்பார்கள். இதனை முதல் கட்ட பாதுகாப்பு என்று வகுத்து உள்ளோம்.
மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு 2-ம் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செயல்படுத்துவோம். அதில் அன்னதானம், இலவச குடிநீர், இலவச திருமாங்கல்யம் வழங்கும் இடங்களில் தான் அதிகமான கூட்டம் இருக்கும். அப்போது சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்களில் பெண்கள் தான் அதிகம் ஈடுபடுவார்கள். அவர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கல்யாணத்திற்கு டிக்கெட் எடுத்தவர்கள் வடக்கு கோபுரத்திலும், இலவச தரிசனம் செய்பவர்கள் தெற்கு கோபுரத்திலும், முக்கிய பிரமுகர்கள், பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள் என அனைவரும் மேற்கு கோபுரம் வழியாக செல்ல போலீசார் அனுமதிப்பார்கள். திருக்கல்யாணம் முடியும் வரை பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். அதன்பின்னர் தான் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யலாம். இதற்காக கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர் வீதி உலா மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை 3-ம் கட்ட பாதுகாப்பாக செய்துள்ளோம். தேரோட்டத்தின் போது வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் குறிப்பிட்ட பகுதியில் நின்று தான் சுவாமியை தரிசனம் செய்வார்கள். எனவே கூட்டம் அதிகமாக உள்ள பகுதியில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை விடுக்கப்படும்.
குறிப்பாக தேர் திருவிழா மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிக்கப்படும். ஆள் இல்லா விமானம் மூலம் சித்திரை திருவிழாவை கண்காணிப்பது இந்தாண்டு தான் செயல்படுத்துகிறோம். இது தவிர மாசி வீதிகளில் 23 இடங்களில் உயர் கோபுரங்கள் மூலம் கண்காணிப்பு, 20 இடங்களில் எல்.இ.டி.டி.வி. அமைக்கப்படுகிறது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு, மோர் உள்ளிட்டவை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். சாப்பாடு தட்டில் கொடுக்காமல் பொட்டலமாக கொடுக்கப்படும்.
அழகர் திருவிழாவில் மதுரை மாநகர போலீசார் இந்தாண்டு புதுமையாக செல்போன் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளோம். அதில் அழகர் செல்லும் பாதை, மண்டகபடி இருக்கும் இடங்கள் பற்றியும், தேர் திருவிழா, திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளில் எங்கு வாகனங்களை நிறுத்தலாம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்று இருக்கும்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல், எதிர்சேவை, தேர்திருவிழாவிற்காக கூடுதலாக 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சங்கிலி பறிப்பை தடுக்க 25 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சாதாரண உடையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது.
மகாகாலேஸ்வரர் கோவில், உஜ்ஜைன், இந்துக் கடவுளான சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற சிவன் கோவில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. இது சிப்ரா ஆற்றாங்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோவிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, இங்குள்ள முதன்மைக் கடவுளான, சிவனின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தியோட்டத்தை உள்வாங்கித் தானாகத் தோன்றியதாகக் நம்பப்படுகிறது. மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது.
ஜோதிர்லிங்கம் தோன்றியது குறித்த தொன்மம்
புராண காலத்தில் அவந்தியின் அருகில் இருந்த மலைக்காட்டில் ஒரு சாபத்தால் வேதாளமாக மாறிய தூசனன் என்பவன் இருந்தான். அவன் அவ்வப்போது நகருக்கு வந்து சூறையாடி மக்களுக்கு பெரும் துன்பத்தை இழைத்துவந்தான். அப்போது அவந்தி நகரில் வாழ்ந்துவந்த அந்தணரான விலாசனை நகர மக்கள் அணுகி வேதாளத்திடம் இருந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.
அவரும் அதற்கு சம்மதித்து வேத விற்பன்னர்களையும், துறவிகளையும் அழைத்துவந்து சிவனை நோக்கி பெரும் வேள்வி ஒன்றை செய்தனர். வேள்வியின் முடிவில் வேள்வி குண்டத் தரைவெடித்து அதிலிருந்து ஒரு லிங்கம் தோன்றியது. அந்த லிங்கத்தை இரண்டாக பிளந்துகொண்டு ஆவேசத்துடன் மாகாளர் தோன்றி வேதாளத்தை அழித்தார். அதன்பிறகு மக்கள் மாகாளரை அங்கேயே தங்கி தங்களைக் காக்குமாறு வேண்டினர். மாகாலரும் ஆவேசம் தணிந்தார். பிளந்த லிங்கம் ஒன்றுசேர மாகாளர் ஜோதிவடிவில் அதில் கலந்து ஜோதிர்லிங்கமானார்.
கோவில் அமைப்பு
மாகாளர் கோவிலானது உயர்ந்த மதிலால் சூழப்பட்ட பெரிய இடத்தில் அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் அமைந்துள்ள சிகரம் அல்லது விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் மூலத்தானமானது மூன்று அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. தரைமட்டத்துக்கு கீழேயும் ஒரு கருவறை அமைந்துள்ளது. அதற்கு படிக்கட்டுகள்வழியாக சென்று தரிசிக்கவேண்டும். முதன்மைக் கருவறையானது பெரிதாக வட்டவடிவில் உள்ளது. அதில் மாகாளர் பெரிய லிங்க வடிவில் காட்டியளிக்கிறார்.
மகாகாலேஸ்வரர் கருவறைக்கு மேலுள்ள அடுத்த கருவறையில் ஓங்காரேஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலே செல்ல படிக்கப்படுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கடுத்த மூன்றாவது தளத்தில் நாகசந்திரேஸ்வரர் சிலை உள்ளது. அங்கு வணங்குவதற்கு நாகபஞ்சமியன்று மட்டுமே அடியார்கள் அநுமதிக்கப்படுகிறார்கள். கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் பரிவார தெய்வங்களாக பிள்ளையார், பார்வதி, கார்த்திகேயன் பைரவர் ஆகிய கடவுளர் உள்ளனர். தென்புறம் நந்தி சிலை உண்டு.
வரலாறு
1234-5ல் உஜ்ஜைனைத் தாக்கியபோது இக் கோவில் வளாகம் சுல்தான் ஷம்ஸ்-உத்-தின் இலுட்மிஷ் அவர்களால் அழிக்கப்பட்டது. படையெடுப்பின் போது திருடப்பட்ட ஜலதரியுடன் (லிங்கத்தின் கீழ் இருக்கும் ஒரு அமைப்பு) கூடிய ஜோதிர்லிங்கம் அகற்றப்பட்டு அருகிலுள்ள 'கோட்டீர்த்த குந்தா' என்கிற இக் கோவிலுக்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் வீசப்பட்டதாக நம்பப்படுகிறது.
தற்போதைய கட்டமைப்பு மராட்டிய ஜெனரல் ரனோஜி ஷிண்டே என்பவரால் 1734 இல் கட்டப்பட்டது. மகாத்ஜி ஷிண்டே (1730–12 பிப்ரவரி 1794) மற்றும் தௌலத் ராவ் ஷிண்டேவின் மனைவி பைசா பாய் உள்ளிட்ட அவரது வம்சத்தின் மற்ற உறுப்பினர்களால் இக்கோவிலுக்கு புனரமைப்பு வசதிகள் மற்றும் மேலாண்மை செய்யப்பட்டது. (1827-1863). ஜெயாஜிராவ் ஷிண்டேவின் காலத்தில் (1886 வரை), அப்போதைய குவாலியர் மாநிலத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் இந்த கோவிலில் நடத்தப்பட்டன.
மராட்டிய ஆட்சி பதினெட்டாம் நூற்றாண்டின் நான்காம் தசாப்தத்தில் உஜ்ஜைனில் நிறுவப்பட்டது. உஜ்ஜைனின் நிர்வாகப் பொறுப்பு, முதலாம் பேஷ்வா பாஜிராவிடமிருந்து அவரின் உண்மையுள்ள தளபதி ரனோஜி ஷிண்டேவுக்கு சென்றது. ரனோஜியின் திவான் சுகதானகர் ராம்சந்திர பாபா ஷெனாவி ஆவார். அவர் மிகவும் செல்வந்தராக இருந்தார், அவர் தனது செல்வத்தை மத நோக்கங்களுக்காக முதலீடு செய்ய முடிவு செய்தார். இதுதொடர்பாக, அவர் பதினெட்டாம் நூற்றாண்டின் 4 முதல் 5 தசாப்தங்களில் உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஸ்வரர் கோவிலை மீண்டும் கட்டினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு இக்கோவிலின் தேவஸ்தான அமைப்பு, உஜ்ஜைன் நகராட்சி நிறுவனத்தால் மாற்றப்பட்டது. தற்போது, இந்த அமைப்பு, உஜ்ஜைன் மாகாணத்தின் ஆட்சியாளர் அலுவலகத்தின் கீழ் உள்ளது.

உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 13-ந்தேதி வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள சிறந்த சக்தி ஸ்தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை 9 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் ஆண், பெண் பக்தர்கள் திரளாக வந்து கோவிலில் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது. இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து 13-ந் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா காட்சி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 14-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10-ம் திருவிழாவான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 16-ந் தேதி மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

உணவு, உடை, நேரம், பொழுது போக்கு, பயணம் போன்றவற்றை கவனத்தோடு தேவைக்கு மட்டும் நாம் பயன்படுத்தி கொள்வது நிறைவோடு வாழ்வதற்கு உதவி செய்யும்.
எவரிடமும் நாங்கள் இலவசமாக உணவருந்தவில்லை. மாறாக உங்களுள் எவருக்கும் சுவையாய் இராதபடி, இராப்பபலாய் பாடுபட்டு உழைத்தோம்(2 தெச3:8)
மனநிறைவு என்பது ஆசையற்ற மனநிலையை குறிப்பதாகும். இருப்பதை கொண்டு நிறைவோடு வாழ்கின்ற வாழ்க்கை தான் மனநிறைவு. தேவையற்ற ஆசைகளை ஒரு மனிதன் அறவே விலக்கி விட வேண்டும். கடினப்பட்டு உழைக்க வேண்டும். சிலவற்றை செய்வதற்கு நாம் ஆசைப்பட வேண்டும். அதே நேரத்தில் அளவுக்கு மீறி ஆசைப்படுவது நமது சுயகட்டுப்பாட்டை நாம் இழப்பதற்கு வழிவகுக்கும். புத்தர் சொல்வது போன்று ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது. மனநிறைவு என்ற பண்பு நாம் நிறைவோடு வாழ்வதற்கு உதவி செய்கிறது.
சீனாவை சேர்ந்த ஞானி ஒருவருக்கு மோட்சத்தையும், நரகத்தையும் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. நரகத்தில் ஆண்களும், பெண்களும் சோகமாக இருந்தார்கள். விண்ணுலகில் வாழ்ந்த மனிதர்களோ மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால் அங்கு எதுவுமே இல்லை. இந்த நிகழ்வில் இருந்து அவர் சொல்கின்ற செய்தி என்னவென்றால் ஒரு மனிதன் நிறைவோடு வாழ்கின்ற பொழுது அவன் விண்ணுலகில் வாழ்கின்றான். மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்க்காமல் வாழ்கின்ற வாழ்க்கை தான் மேன்மையான வாழ்க்கை ஆகும்.
உணவு, உடை, நேரம், பொழுது போக்கு, பயணம் போன்றவற்றை கவனத்தோடு தேவைக்கு மட்டும் நாம் பயன்படுத்தி கொள்வது நிறைவோடு வாழ்வதற்கு உதவி செய்யும். அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே ஆசைப்பட வேண்டும். எளிய வாழ்க்கை வாழ்வதற்கு எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். இன்றைய கால சூழலில் வெளிநாட்டு பொருட்களுக்கு ஆசைப்படுகின்ற சூழல் மிக அதிகமாக காணப்படுகிறது. மேலை நாட்டு பொருட்களை விட இருக்கின்றதில் நிறைவோடு வாழ்கின்ற ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த நாளில் முயற்சி செய்வோம்.
-அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.

பிரம்மோற்சவ விழாவையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கோட்டை வளாகத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 41-வது ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 4-ந் தேதி கிராம தேவதை செல்லியம்மன் உற்சவமும், நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடந்தது.
அதைத்தொடர்ந்து பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது. கலவை சச்சிதானந்தா சாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சாமிகள் ஆகியோர் தலைமை தாங்கினர். சாமி வீதி உலா, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கோட்டை வளாகத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
வெயில் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தரைவிரிப்புகள் கோவில் வளாகத்தில் விரிக்கப்பட்டுள்ளன. கொடியேற்றத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் காலையில் விநாயகர், சந்திரசேகரர் புறப்பாடும், மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 11-ந் தேதி 63 நாயன்மார்கள் உற்சவமும், 12-ந்தேதி காலையில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும் நடக்கிறது. 13-ந்தேதி பிச்சாண்டவர் உற்சவம், மாலையில் குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.

பங்குனி மாதம் தெய்வங்களுக்கு விரதங்கள் இருப்பதும் வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு சிறந்த மதமாக இருக்கிறது. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் போன்று இந்த பங்குனி மாதம் தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாக இருக்கிறது.
பங்குனி மாத சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும்.
இன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
இன்று இந்தப் பங்குனி வளர்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு நெடுநாட்களாக நீடித்து வந்த எத்தகைய பிரச்சனைகளும் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு கூடியவரையில் அழகான, ஆரோக்கியமான குழந்தை பேறு உண்டாகும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். உங்களுக்கு இருந்து வந்த பொருளாதார கஷ்டங்கள் விரைவில் தீரும்.

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக்குடை ஊர்வலம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப் பதியின் வடக்கு வாசலில் ஆறு வருடங்கள் பக்தர்களுக்காக தவமிருந்தார்.
இந்த தவம் நிறைவு பெற்றபிறகு அந்த தவத்தின் பலனை பற்றி அறிவதற்காக முட்டப்பதி பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமால் கலைமுனி, ஞானமுனி ஆகிய இருவரை அனுப்பி சாமிதோப்பில் இருந்து அய்யா வைகுண்டசுவாமியை முட்டப்பதிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார்.
முட்டப்பதியிலிருந்து சாமிதோப்பு வந்த கலைமுனி, ஞானமுனி ஆகிய இருவருடனும் மற்றும் தனது பக்தர்களுடன் அய்யா வைகுண்டசுவாமி பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று ஊர்வலமாக முட்டப்பதி நோக்கி சென்றார்.
அங்கு பக்தர்கள் கடற்கரையில் காத்திருக்க வைகுண்டசாமி திருப்பாற் கடலுக்குள் சென்று திருமா லுடன் ஆலோசனை பெற்று பின்னர் அன்று மாலையே சாமி தோப்புக்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமிதோப்பு தலைமைப் பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக் குடை ஊர்வலம் நடை பெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடம் முத்து குடை ஊர்வலம் நாளை 7-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
முத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், காலை 6 மணிக்கு தலைமைப்பதியில் முன்பிருந்து முத்து குடைகளும், மேளதாளங்களும் முன்செல்ல முத்துக் குடை ஊர்வலம் புறப்படுகிறது.
இந்த ஊர்வலத்தை பால. ஜனாதிபதி துவக்கி வைக்கிறார். டாக்டர் வைகுந்த் ஊர்வலத்திற்கு தலைமை வகிக்கிறார். பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஜனா.யுகேந்த், பையன் நேம்ரிஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஊர்வலம் சாமிதோப்பில் இருந்து புறப்பட்டு கரும்பாட்டூர், ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், வழியாக முட்டபதி சென்றடைகிறது. ஊர்வலம் போகும் பகுதிகளிலுள்ள நிழல்தாங்கல்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
நண்பகல் ஊர்வலம் முட்டப்பதியை சென்றடைகிறது. அங்கு அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு பணிவிடையும், உச்சி படிப்பும் தொடர்ந்து அய்யாவழி பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.
ஊர்வலம் மீண்டும் 4- மணிக்கு முட்டப்பதிலிருந்து புறப்பட்டு கொட்டாரம், அச்சங்குளம், பொத்தையடி, அரசம்பதி வழியாக சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைகிறது. இந்த ஊர்வலத்தில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சிக்கு பின்னர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 2-வது கட்டமாக லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.
நவக்கிரக தலங்களில் குருபகவானுக்குரிய கோவிலாக இக்கோவில் விளங்குகிறது.
குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறும். அதன்படி குருபகவான் வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு முதல்கட்டமாக குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழா தொடங்கியது. அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.
அலங்கரிக்கப்பட்ட உற்சவர் தெட்சிணாமூர்த்தி சன்னதியில் லட்சார்ச்சனை பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 10-ந் தேதி வரை முதல்கட்ட லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. குருப்பெயர்ச்சிக்கு பின்னர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 2-வது கட்டமாக லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும் என்று கோவில் பணியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையும் படிக்கலாம்...கேது கிரக தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் கிடைக்க இந்த பரிகாரங்களை செய்யலாம்...

ஜோதிடத்தில் “ஞானகாரகன்” என்று கேது பகவான் குறிப்பிடப்படுகிறார். கேது கிரகத்தால் ஏற்படும் தோஷம் குறித்தும், தோஷத்தை நீக்குவதற்குரிய பரிகாரங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கேது பகவான் ஒருவரின் ஜாதகத்தில் கெட்டுப்போயிருந்தால் அந்த நபருக்கு திடீர் பொருளாதார சரிவு, மனகுழுப்பம் அதிகம் ஏற்படுவது, பெயர் புகழ் கெடுவது, குழந்தை பேறு ஏற்படுவதில் தாமதம், எப்போதும் மனதில் ஒரு பதட்டத்தன்மை மற்றும் சோகம் ஆகியவை கேது பகவானின் கெடுதலான நிலையால் ஏற்படும் சில பாதிப்புகளாகும்.
கேது கிரகத்தின் தீய பலன்கள் ஏற்படாமல் தடுத்து, நற்பலன்களை பெற கேது கிரக சாந்தி பரிகார பூஜை செய்வது சிறந்ததாகும். வைடூரியத்தை வெள்ளியில் செய்யப்பட்ட மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வது கேது பகவானின் நல்லாற்றலை உங்களுக்கு பெற்று தரும். விநாயக பெருமான் கேது கிரக பாதிப்புகளை நீக்க கூடியவர். சனிகிழமைகளில் விநாயக பெருமானை வழிபட்டு வருவது கேது தோஷத்தை போக்கும் சிறந்த வழியாகும்
ராகு – கேது கிரகங்களுக்குரிய சிறந்த பரிகார தலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலாகும். சனிக்கிழமை தினத்தில் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று கேது கிரகத்திற்கான கேது பரிகார பூஜையை செய்து சிவபெருமானை வழிபட்டால் கேதுவின் தோஷம் நீங்கும். கேது பகவான் “ஞானகாரகன்” என்பதால் ஜீவ சமாதியடைந்த ஏதேனும் ஒரு சித்தரின் சமாதி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். துறவிகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் அளிப்பதும் கேது தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.

அழகிய சிற்பங்களை காணவும், தாணுமாலயனை தரிசிக்கவும் உள்ளூர்க்காரர்கள் மட்டுமல்லாமல் வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினம், தினம் வருகிறார்கள்.
தாணுமாலயன் என்றால் மும்மூர்த்திகள் என்று அர்த்தம்.
தாணு (சிவன்), மால் (விஷ்ணு), அயன் (பிரம்மா) ஆகியோர் இணைந்த உருவமே தாணுமாலயன். மும்மூர்த்திகளும் ஒரே உருவில் அருள்புரியும் ஈசனை வழிபட்டால் நம் வாழ்வும், நம் சந்ததியினர் வாழ்வும் ஒளிமயமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இம்மும்மூர்த்திகளும் ஒரே லிங்கத்தில் ஐக்கியமாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இடமே சுசீந்திரம்.
நாகர்கோவிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் கன்னியாகுமரிக்கு செல்லும் மெயின் ரோட்டில் சுசீந்திரம் அமைந்துள்ளது. இங்கு தான் தாணு மாலயன் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. முழுக்க, முழுக்க கல்லால் ஆன இந்த கோவிலை சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், திருமலைநாயக்கர் மன்னர்களும் தங்கள் கடுமையான முயற்சியால் 200 வருடங்களாக சிறிது, சிறிதாக கட்டி முடித்துள்ளனர்.
இந்த கோவிலில் பல்வேறு ஆச்சர்யங்களும், அற்புதங்களும் நிறைந்து இருக்கிறது. இங்கு குடிகொண்டுள்ள தாணுமாலய சுவாமியின் தலபுராணமும், அந்த பகுதியில் காணப்படும் நினைவுச்சின்னங்களும் இதனை உணர்த்துகின்றன.
தேவர்களின் தலைவன் இந்திரன் இங்கு வந்து புனிதம் அடைந்ததால் இவ்வூருக்கு சுசீந்திரம் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இக்கோவிலின் சுற்றுப்புறச்சுவரும், வானுயர்ந்து நிற்கும் ராஜகோபுரமும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. கோவிலின் முன் எப்போதும் நீர் நிறைந்து வற்றாது காணப்படும் தெப்பக்குளமும் அனைவரையும் கவருகின்றன.
மும்மூர்த்திகள் மட்டுமல்லாமல் கோவிலுக்குள் நுழைந்தது முதல் பல்வேறு தெய்வங்களின் சன்னதிகள் அமையபெற்றுள்ளது. குறிப்பாக 18 அடி உயர ஆஞ்சநேயர் சன்னதிக்கு பல சிறப்புகள் உள்ளது. இங்கிருக்கும் ஆஞ்சநேயரை தரிசிக்கவே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவதுண்டு.
இக்கோவிலில் சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான கலைநயமிக்க சிற்பங்கள் ஏராளம் உள்ளன. இந்த அழகிய சிற்பங்களை காணவும், தாணுமாலயனை தரிசிக்கவும் உள்ளூர்க்காரர்கள் மட்டுமல்லாமல் வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினம், தினம் வருகிறார்கள்.