என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முக்கிய விரதங்கள்
X
முருகனுக்கு உகந்த சஷ்டி விரதமும்.... தீரும் பிரச்சனைகளும்...
Byமாலை மலர்7 April 2022 6:43 AM GMT (Updated: 7 April 2022 6:43 AM GMT)
பங்குனி மாதம் தெய்வங்களுக்கு விரதங்கள் இருப்பதும் வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு சிறந்த மதமாக இருக்கிறது. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் போன்று இந்த பங்குனி மாதம் தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாக இருக்கிறது.
பங்குனி மாத சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும்.
இன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
இன்று இந்தப் பங்குனி வளர்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு நெடுநாட்களாக நீடித்து வந்த எத்தகைய பிரச்சனைகளும் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு கூடியவரையில் அழகான, ஆரோக்கியமான குழந்தை பேறு உண்டாகும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். உங்களுக்கு இருந்து வந்த பொருளாதார கஷ்டங்கள் விரைவில் தீரும்.

Next Story
×