என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்7 April 2022 7:03 AM GMT (Updated: 7 April 2022 7:03 AM GMT)
பிரம்மோற்சவ விழாவையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கோட்டை வளாகத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 41-வது ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 4-ந் தேதி கிராம தேவதை செல்லியம்மன் உற்சவமும், நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடந்தது.
அதைத்தொடர்ந்து பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது. கலவை சச்சிதானந்தா சாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சாமிகள் ஆகியோர் தலைமை தாங்கினர். சாமி வீதி உலா, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கோட்டை வளாகத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
வெயில் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தரைவிரிப்புகள் கோவில் வளாகத்தில் விரிக்கப்பட்டுள்ளன. கொடியேற்றத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் காலையில் விநாயகர், சந்திரசேகரர் புறப்பாடும், மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 11-ந் தேதி 63 நாயன்மார்கள் உற்சவமும், 12-ந்தேதி காலையில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும் நடக்கிறது. 13-ந்தேதி பிச்சாண்டவர் உற்சவம், மாலையில் குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.

Next Story
×