என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மாசிமகத்தை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    கும்பகோணம் மகாமககுளத்தில் ஆண்டு தோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசிமகமும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாநாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை 5.30 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டமும், காலை 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரோட்டமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை, சண்டிகேஸ்வரர் வெள்ளிவாகனத்தில் வீதிஉலா புறப்பட்டு மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதேபோல் மாசிமக விழாவை முன்னிட்டு காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    இந்த ஸ்லோகத்தை சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமைகளில் சொல்லி, பூஜை செய்பவருக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்று தேவர்களுக்கு மகாலட்சுமி அருள்புரிந்தாள்.
    இந்த ஸ்லோகத்தை சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமைகளில் சொல்லி, பூஜை செய்பவருக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்று தேவர்களுக்கு மகாலட்சுமி அருள்புரிந்தாள்.

    1. நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம:
    நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம:

    2. த்வம் ஸாக்ஷõத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா
    பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ

    3. பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி
    அருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா

    4. ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா
    நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி

    5. ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி
    ரமா ரக்ஷ்க்ஷõகரீ ரம்யா ரமணீ மண்டலோத்தமா ... !!!
    ராமேசுவரம் கோவிலில் உள்ள ஸ்படிக லிங்கம் கடந்த 22-ந் தேதி அதிகாலை எதிர்பாராதவிதமாக சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய ஸ்படிக லிங்கம் சிருங்கேரி மடத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறந்த பின்பு 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் மட்டும் ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெறும். மற்ற நேரங்களில் இந்த ஸ்படிக லிங்கத்தை தரிசனம் செய்ய முடியாது.

    ராமேசுவரம் கோவிலில் உள்ள ஸ்படிக லிங்கம் கடந்த 22-ந் தேதி அதிகாலை எதிர்பாராதவிதமாக சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலுக்கு புதிய ஸ்படிக லிங்கம் சிருங்கேரி மடத்தின் சார்பில் நேற்று வழங்கப்பட்டது.

    கர்நாடக மாநிலம் சிருங்கேரி மடத்தில் இருந்து நேற்று காலை சுமார் 2 கிலோ எடையில் புதிய ஸ்படிக லிங்கம் கொண்டுவரப்பட்டு ராமேசுவரம் கோவில் அருகே உள்ள சிருங்கேரி மடத்தில் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து மாலை 6 மணிக்கு புதிய ஸ்படிக லிங்கத்தை சிருங்கேரி மடத்தின் நிர்வாகிகள் சித்த ராம்தாஸ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோவில் இணை ஆணையர் கல்யாணியிடம் ஒப்படைத்தனர்

    பின்னர் மடத்தில் இருந்து மேளதாளம் முழங்க ஸ்படிகலிங்கம் கிழக்கு ரதவீதி வழியாக கொண்டுவரப்பட்டு கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு விநாயகர், காசி விஸ்வநாதர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு யாக பூஜை நடந்த பின்பு கருவறையில் புதிய ஸ்படிக லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கருவறையிலேயே வைக்கப்பட்டது.

    இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கல்யாணி கூறியதாவது:- ராமேசுவரம் கோவிலில் ஸ்படிகலிங்கம் சேதம் அடைந்ததால் கடந்த 2 நாட்களாக ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெறவில்லை. இதையடுத்து சிருங்கேரி மடத்தின் சார்பாக புதிதாக ஸ்படிகலிங்கம் வழங்கப்பட்டு உள்ளது. 25-ந்தேதி (இன்று) அதிகாலை முதல் இந்த புதிய ஸ்படிக லிங்கம் தரிசனத்திற்கு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, ராமேசுவரம் சிருங்கேரி மடத்தின் பொறுப்பாளர் மணிகெண்டி நாராயணன், கோவில் பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், காசாளர் ராமநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    சுக்ரனின் ஆதிக்கம் நிறைந்தது, வெள்ளிக்கிழமை. இந்த நாளில் வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும், திரயோதசி திதி அன்று சூரியன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரத்தையே ‘பிரதோஷ காலம்’ என்பார்கள். ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு.

    சுக்ரனின் ஆதிக்கம் நிறைந்தது, வெள்ளிக்கிழமை. இந்த நாளில் வரும் பிரதோஷத்தில் வழிபாடு செய்யும் ரிஷபம், துலாம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், சுக்ர தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். ஆண்களின் ஜாதகத்தில் சுக்ரன் நீச்சம், அஸ்தமனம், குறைந்த பாகை பெற்றதால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும்.

    கணவன் - மனைவி ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் சுபீட்சம் நிலவும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். மேலும் சுப பலன்கள் அதிகமாக, வில்வ இலைகளாலும் , வாசனை மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
    தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் மாதம் 23-ந்தேதி நடைபெறுகிறது.
    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் வரவில்லை. இங்கு சதய விழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகின்றன.

    இதே போன்று சித்திரை திருவிழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தேரோட்டமும் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா கொண்டாடப்படவில்லை. இதனால் தேரோட்டமும் நடைபெற வில்லை. இந்த ஆண்டு சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை 9.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதில் சிவாச்சாரியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 9-ந்தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 23-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    தேவ சாயலாக உள்ள மனிதனின் வாழ்வில் முக்கியமானது வாலிப பருவம். இந்த வாலிப பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவனது வாழ்க்கையை சீரமைக்கின்றன. எனவே இந்தவாலிப பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
    இறைவன் இந்த உலகத்தின் ஒவ்வொரு படைப்புகளையும் அர்த்தமுள்ளாகவே படைத்துள்ளார். அது போலவே மனிதனையும் படைத்துள்ளார். அதுவும் அவருடைய சாயலாகவே படைத்துள்ளார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    இப்படி தேவ சாயலாக உள்ள மனிதனின் வாழ்வில் முக்கியமானது வாலிப பருவம். இந்த வாலிப பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவனது வாழ்க்கையை சீரமைக்கின்றன. எனவே இந்தவாலிப பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

    அன்றைய நாட்களிலே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம், காலையில் எழுந்தவுடன் வேதம் வாசிக்க வேண்டும். கோவிலுக்கு செல்ல வேண்டும். பின்னர் படிக்க வேண்டும். பெரியவர்கள் ஆசிரியர்கள் என்று எல்லோரையும் மதிக்க வேண்டும் என்று நல்ல பழக்கங்களை கற்று கொடுத்தனர். ஆனால் இந்த காலத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் இப்படி இருக்கக்கூடாது. நன்றாக படிக்கவேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தவுடனே பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை பார்த்து போதும் நிறுத்துங்கள் என்று கூறி தங்கள் பெற்றோர்களின் வாயை அடைத்து விடுகின்றனர்.

    மேலும் இப்போது வாலிபர்களின் நிலை காலையில் எழுத்தவுடன் எது இப்படி இருந்தால் என்ன எங்கு என்னுடைய செல், யார், யார் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்கள், யார் எனக்கு போன் செய்துள்ளார்கள் என்று பல்வேறு விஷயங்களை செல்போனிலேயே தேடிக்கொண்டிருக்கிறனர்.

    இப்படி செல்போனில் ஒவ்வொன்றாக தேடிக்கொண்டிருப்பதினால், பெற்றோர்களின் அன்பு, உறவுகளின் நட்பு கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டு அவனின் வாழ்க்கை தடுமாற்றத்தில் முடியும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஆனால் இயேசுவோ, தன் வாலிப பருவத்தில் தான் இறை வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருடைய இளைமையான துடிப்பும், தேவனின் அருளும் அவர் நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க வழிவகுத்தன. அவர் எப்போதுமே விண்ணாக தந்தையோடு ஜெபத்தில் நிலைத்திருந்து, பெற்றோருக்கு கீழ்படிந்தவராக வாழ்ந்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    வேதாகமத்தில் பிரசங்கி 11-ம் அதிகாரம் 10-ம் வசனத்தில் நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாமிசத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு, இளவயதும், வாலிபமும் மாயையே என்று சொல்லப்பட்டுள்ளது. ஆம் தேவ பிள்ளைகளே நாமும் எப்போதும் செல்போனை உபயோகப்படுத்தாமல் கடவுளுக்கு நேரத்தை ஒதுக்கி பெற்றோர்களுக்கு கீழ்படிந்து இந்த வாலிப பருவத்தில் உள்ளத்திலே நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயல் பட இந்த தவக்காலத்தில் தீர்மானிப்போம். வெற்றி பெறுவோம்.

    சகோ.சாம்ராஜ், கோவில்வழி.
    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக உற்சவருக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் ஒய்யாரி நடனத்துடன் சந்திரசேகரர்-திருப்புரசுந்தரி தாயார் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். அதைதொடர்ந்து காலை 10.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. “தியாகராயா ஆரோரா... ஒற்றியூரா நமச்சிவாய...” என பக்தி கோஷங்கள் முழங்க, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், கே.கார்த்திக், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    வடிவுடையம்மன் கோவில் சன்னதி தெருவில் இருந்து புறப்பட்ட 42 அடி உயரம் கொண்ட தேர், 108 கைலாய வாத்தியம் முழங்க, சிவாச்சாரியார்கள் புடைசூழ, சிலம்பாட்டம், பரதநாட்டியம், 108 சங்க நாதம் முழங்க திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பிரமாண்ட மெட்ரோ ரெயில் தூண்கள் நடுவே 4 மாட வீதிகளை சுற்றி வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு நீர்மோர், பழங்கள் வழங்கப்பட்டது. பல வீடுகளில் குடும்பமாக வந்து தேருக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். மாசி திருவிழாவின் 9-ம் நாள் உற்சவமான திருக்கல்யாணம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதைதொடர்ந்து 63 நாயன்மார்களின் வீதி புறப்பாடு உற்சவமும் நடைபெறுகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த மாதமும் கிரிவலத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை :

    கொரோனா காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து பவுர்ணமி கிரிவலத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 3.50 மணியளவில் தொடங்கி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 2.45 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த மாதமும் கிரிவலத்துக்கு தடை விதித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    வேலைவாய்ப்பு, செல்வம், திருமண வாழ்க்கை, புத்திரப்பேறு, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற பல விஷயங்களில் பாதகங்கள் நீங்கி மேன்மையான நிலையை பெறுவதற்கும் இந்த கிரக சாந்தி பூஜை செய்யலாம்.
    மனிதர்களுக்கு அவர்களின் கர்மவினைக்கு ஏற்ப நவகிரகங்களும் பாதகமான பலன்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுத்து வாழ்வில் மேலான நிலையை அடைய கூறப்பட்ட ஒரு வழிமுறைதான் கிரக சாந்தி பூஜையாகும்.

    ஜாதகத்தில் கிரகங்களின் பாதகமான கோத்திரங்கள் திசா புக்தி காலங்கள் நடப்பவர்களும், வாழ்வில் கல்வி, வேலைவாய்ப்பு, செல்வம், திருமண வாழ்க்கை, புத்திரப்பேறு, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற பல விடயங்களில் பாதகங்கள் நீங்கி மேன்மையான நிலையை பெறுவதற்கும் இந்த கிரக சாந்தி பூஜை செய்யலாம்.

    கிரக சாந்தி பூஜையை செய்வதற்கு ஹோம பூஜைகள் செய்வதில் அனுபவம் பெற்ற வேதியர்களிடம் ஒரு நல்ல நாளை குறித்து கொள்ள வேண்டும். உங்கள் பிறந்த நட்சத்திர தினம் அல்லது ஏதேனும் சுப முகூர்த்த தினங்களில் இந்த சாந்தி பூஜையை செய்வது மிகவும் சிறப்பானது. இந்த பூஜையை உங்கள் வீட்டிலேயே அல்லது கோயில்களிலோ செய்து கொள்ளலாம். இந்த பூஜையில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்வது நல்லது. அப்படி செய்வதால் அனைவருக்கும் வாழ்வில் அற்புதமான பலன்கள் உண்டாகும்.

    கிரக சாந்தி பூஜை செய்கின்ற குடும்பத்தின் தலைவரும், அவரின் வாழ்க்கை துணையும் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பது இந்த கிரக சாந்தி பூஜையின் பலன் பன்மடங்காக கிடைக்கும். கிரக சாந்தி பூஜைக்கான பொருட்கள் அனைத்தும் வேதியர்களுக்கு வழங்கப்பட்ட பின் நல்ல முகூர்த்த நேரத்தில், ஹோமம் வளர்த்து வேதியர்கள் நவகிரக மந்திரங்களை துதித்து, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் பாவங்களும் நீங்கும் வகையில் ஹோம பூஜைகள் செய்வர். பூஜையின்போது குடும்பத்தலைவர் வேதியர்கள் அறிவுறுத்தும் வகையில் மாவிலைகள், மலர்கள் அரிசி மற்றும் நவ தானியங்கள் போன்றவற்றை ஹோமத் தீயில் இட்டு நவக்கிரகங்களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மலை மேல் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி- தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் முருகன் அருணகிரிநாதருக்கு காட்சி தந்து அவருக்கு அஷ்டமாசித்தி வழங்கிய இடமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய திருப்பணி குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகம் முடிவு செய்து கடந்த 2018-ம் ஆண்டு பாலாலயம் நடத்தப்பட்டது. மேலும் தற்போது புனரமைப்பு பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது.

    கடந்த 22-ந்தேதி காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. பின்னர் விமான கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று மாலை முதற்கால யாக பூஜையுடன் விழா தொடங்கியது. 23-ந்தேதி 2- ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் தொடங்கி நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலையில் 6-ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி கோவில் விமான கலசம், ராஜ கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி மூலவருக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.
    அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும், முருகப்பெருமான் விமான கோபுர கலசத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    கோவையை அடுத்த பெரிய தடாகத்தில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் ராமாயண காலத்தில் தொடர்புடைய தலமாக விளங்குகிறது.

    அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வந்தபோது அவருக்குத் தாகம் ஏற்படவே இம்மலையில் நின்று முருகப்பெருமானை நினைத்து வேண்டவே முருகப்பெருமான் தனது வேலால் இம்மலையில் சுனையை ஏற்படுத்தி அனுமனுக்கு நீர் வழங்கியதாக ஐதீகம் உள்ளது.

    அந்த வகையில் அனுமனுக்கு தாகம் தணித்த இடமாக அனுவாவி கோவில் விளங்குகிறது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டது.

    இதையொட்டி கடந்த மாதம் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள பாத விநாயகர், கன்னி விநாயகர், அருணாச்சலேஸ்வரர் அனுவாவி ஆஞ்சநேயர், நவகிரகங்கள், இடும்பன் சுவாமி, சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சன்னதிகள், கோபுரங்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் மற்றும் அடிவாரத்திலிருந்து மலை கோவில் வரை உள்ள படிக்கட்டுகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் முடிவடைந்தது.

    இதனைதொடர்ந்து கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் மலைக் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம் தன பூஜை, மாலை 5 மணிக்கு முதல் கால வழிபாடு விநாயகர் வழிபாடு, தீபாராதனை இரவு 8 மணிக்கு தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை, திருமுறை பாராயணம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து இன்று அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும், முருகப்பெருமான் விமான கோபுர கலசத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பின்னர் அன்னதானம் நடக்கிறது.

    பகல் ஒரு மணிக்கு தச தரிசனம், மகா அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு முருகன், வள்ளி தெய்வயானை திருக்கல்யாண விழா நடைபெறுகிறது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.

    அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பகல் 11.45 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்த சுவாமியை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    10-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா தேரரோட்டத்தில் பெரிய தேரில் சுவாமி எழுந்தருளி, வெளி வீதி நான்கிலும் பவனி வருவார். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தாண்டு பெரிய தேர் இரண்டும் ஓடவில்லை.

    இதனால் விநாயகர், சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன், தெய்வானை அம்மன் தனித்தனி மூன்று சிறிய தேர்களில் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) 11-ம் திருநாள் இரவு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் விஷ்ணுசந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    ×