என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் தங்கதுரை என்பவர் ரூ.2 கோடியில் 3½ கிலோ எடையில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட சங்கு, சக்கரத்தை காணிக்கையாக வழங்கினார்.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் தங்கதுரை என்பவர் ரூ.2 கோடியில் 3½ கிலோ எடையில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட சங்கு, சக்கரத்தை காணிக்கையாக வழங்கினார்.

    அதனை கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் வைத்து பெற்றுக் கொண்டார். அந்தப் பக்தருக்கு ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.
    கோயம்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் இடையில் இருக்கிறது குண்டடம் என்ற ஊர். இங்கு வடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
    கோயம்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் இடையில் இருக்கிறது குண்டடம் என்ற ஊர். இங்கு வடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமான மூர்த்தமாக, பைரவர் விளங்குகிறார். ஈசனை வழிபடுபவர்களுக்கு காவல் தெய்வமாக இருந்து காப்பவர் இவரே. இவரை வணங்குபவர்களுக்கு எம பயம் இல்லை. சிவாலயங்கள் அனைத்திலும் இவர் வீற்றிருப்பார். நாயை வாகனமாகக் கொண்டவர். வேதங்களே, நாய் வடிவில் இவரது வாகனமாக இருப்பதாக நம்பப்படுகிறது.

    ஆதி காலத்தில் குண்டடம் பகுதியில் அரச மரங்களும், இலந்தை மரங்களும் நிறைந்திருந்தன. எனவே இதற்கு ‘இந்து வனம்’ என்று பெயர். இந்த இடத்தில் விடங்கி முனிவர் என்பவர், ஆசிரமம் அமைத்து சிவபெருமானை நினைத்து தவம் இருந்து வந்தார். இந்த நிலையில் அந்த வனத்தில் இருந்த சீசகன் என்ற அரக்கன், விடங்கி முனிவரின் தவத்திற்கு இடையூறு செய்து வந்தான். அவரையும் கொல்லத் துணிந்தான். இதனால் பதறிப் போன முனிவர், காசி விசுவநாதரையும், விசாலாட்சி அம்மனையும் நினைத்து வேண்டினார்.

    தன்னுடைய பக்தனுக்கு ஏதாவது இடையூறு என்றால், ஈசன் விட்டு விடுவாரா என்ன.. முனிவரின் வேண்டுதலுக்கு மதிப்பு கொடுத்து, தன்னுடைய வடிவங்களில் ஒருவரான வடுக பைரவரை அனுப்பி வைத்தார். காசியில் இருந்து குண்டடம் வந்த வடுக பைரவர், அரக்கனை கொன்று தன்னுடைய கடமையை செய்து முடித்தார். இதையடுத்து விடங்கி முனிவர் மீண்டும் தன்னுடைய தவத்தைத் தொடங்கினார். அவருக்கு வேறு எந்த அரக்கர்களாலும் இடையூறு வந்துவிடக்கூடாது என்பதற்காக, பைரவர் அங்கேயே நிரந்தரமாக தங்க விரும்பினார். இதற்காக அங்கிருந்த ஒரு இலந்தை மரத்தடியில் குடியமர்ந்தார்.

    விடங்கி முனிவர் தன்னுடைய தவம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சொர்க்கம் செல்ல முன்வந்தார். அதற்கு முன்னதாக, பைரவர் குடிகொண்டிருந்த இலந்தை மரத்தைச் சுற்றி சிறிய கோவில் ஒன்றை எழுப்பினார். விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால், இத்தல இறைவன் ‘விடங்கீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார். காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு ‘கொங்கு வடுகநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

    ஆலய அமைப்பு

    ஆரம்ப காலத்தில் இந்தக் கோவில் எட்டு பிரகாரங்கள், எட்டுத் தெப்பக்குளங்கள் என்று மிகப் பிரமாண்டமாக அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் இந்த ஆலயம் தற்போதைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கோவிலின் எதிரே திருக்குளம் உள்ளது. நடுவில் அழகிய மண்டபம். அங்கே ஒரு நந்தி. கொஞ்சம் நடந்தால் பழமையான விளக்குத்தூண் காட்சியளிக்கிறது. அதில் விநாயகர், திரிசூலம், லிங்கத்தின் மேல் பால் சுரக்கும் பசு போன்ற வடிவங்கள் தென்படுகின்றன.

    ராஜகோபுரத்தை தரிசித்து ஆலயத்திற்குள் நுழைந்தால், பிரகாரத்தில் சூரியன், சந்திரன், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பட்டக்காரர், வரதராஜப் பெருமாள், சனீஸ்வரர், நவக்கிரகங்களை தரிசிக்கலாம். கோவிலுக்கு என்று நந்தவனமும் அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமானின் வாகனமான மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக இடது பக்கம் நோக்கிய நிலையில் இருக்கிறது. தனிச் சன்னிதிகளில் விசாலட்சி அம்மனும், விடங்கீஸ்வரரும் வீற்றிருக்கிறார்கள். அடுத்ததாக காலபைரவரின் வடிவமான வடுகநாதரின் சன்னிதி இருக்கிறது. தேய்பிறை அஷ்டமி தினங்களில் இந்த பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக செய்யப் படுகின்றன. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கோயம்புத்தூரில் இருந்து சுமார் 66 கிலோமீட்டர் தொலைவிலும், பல்லடத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் குண்டடம் அமைந்துள்ளது. பல்லடத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

    நித்தியகல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் வெண்ணெய்த்தாழி சேவை நடந்தது. தொடர்ந்து, பெருமாள் திருப்பல்லக்கில் மாடவளாகம், வீதியுலா நடைபெற்றது.
    காரைக்கால் பாரதியார் சாலையில், காரைக்கால் அம்மையார் கோவில் அருகில் நித்திய கல்யாணப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது. 8-ம் நாளான நேற்று வெண்ணெய்த்தாழி சேவை நடந்தது.

    தொடர்ந்து, பெருமாள் திருப்பல்லக்கில் மாடவளாகம், வீதியுலா நடைபெற்றது. விழாவில், கைலாசநாதர் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, இன்று (புதன்கிழமை) காலை தேரோட்டம், 27-ந் தேதி திருமலைராயன்பட்டினம் மாசிமக விழாவில் பங்கேற்கும் வண்ணம் பெருமாள் திருப்பல்லக்கில் வீதியுலா, மார்ச் 1-ந் தேதி இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்து வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக விளங்கும் மாரியம்மன் கோவில் பழனி நகரின் கிழக்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசித்திருவிழா கடந்த 12-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் 12-ம் நாளான நேற்று இரவு 7 மணியளவில் மாரியம்மன் சன்னதியில் 5 கலசங்கள் வைத்து புண்ணியாவாஜனம், விநாயகர் பூஜை, சிறப்பு யாகம், காப்புகட்டுதல் நடந்தது.

    பின்னர் கொடிப்படம் கோவிலை வலம் வந்து கொடிமரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்து வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியை காண அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் மாரியம்மன் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும், அக்னி சட்டி எடுத்து வந்து கம்பத்தில் வைத்தலும், தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் மாரியம்மன் பெரிய தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு அடிவாரம் அழகு நாச்சியம்மன் கோவிலிலும், குமாரசமுத்திரம் அழகு நாச்சியம்மன் கோவிலிலும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர் இரவில் சிம்ம வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.
    கோவையின் காவல்தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
    கோவையின் காவல்தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 15-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக 16-ந்தேதி இரவு பூச்சாட்டு விழா நடந்தது. இதற்காக பூக்கம்பம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், அந்த கம்பம் கோவிலில் இருந்து தொடங்கி வைசியாள் வீதி, கற்பககவுண்டர் வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோவிலை அடைந்தது. கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேர்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். வருகிற 1-ந் தேதி வரை அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். 2-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 3-ந் தேதி மதியம் 2 மணியளவில் நடக்கிறது.
    ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்- ஞானப்பிரசுனாம்பிக்கை தாயார், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் பீஷ்ம ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்- ஞானப்பிரசுனாம்பிக்கை தாயார், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    பக்தர்கள் 4 மாட வீதிகளிலும் சாமி, அம்பாளுக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
    சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
    சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி முதல் 10-ந் தேதிவரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலையில் சுப்ரபாதம், சுவாமியை எழுப்பி தோமாலசேவா கொலுவு பஞ்சாங்க சிரவணம் நடைபெற்றது.

    காலை 6 மணி முதல் ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதன்பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
    குடிபோதைக்கு அடிமையானவர்கள் மத்தூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தினால் அவர்கள் குடிபோதையில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது.
    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே உள்ள கருங்கல்லூர், மேட்டுப்பளையூர், வீரனூர், கோமாளிகாடு ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி, அம்மன் கோவில் ஒன்றை கட்டி வழிபாடு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையின் நடு மலையில் உள்ள ஒரு ஓடையில் அம்மன் சுயம்புவாக காட்சி அளிப்பதை கண்டனர்.

    அப்போது பக்தர் ஒருவருக்கு அருள் வந்து, நான் அம்மன் சக்தியாக உருவாகி மந்தையில் இருந்து உருவானதால் நான் மத்தூர் மாரியம்மன் என்ற திருநாமத்தில் வீற்றிருப்பதாக அருள்வாக்கு சொன்னார். பின்னர் அங்கிருந்த சுயம்பு அம்மனுக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டு மேட்டுப்பளையூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.

    கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்க மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என இந்த பகுதி கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு செய்து இந்த மலை அம்மனை மத்தூர் மாரியம்மன் என அழைத்து வழிபாடு செய்து வருகின்றனர். ஸ்ரீ மத்தூர் மாரியம்மன் பல நோய்களை போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தையே தல விருட்சமாக கொண்டு சக்தியின் மற்றொரு நிலையாக அருள்பாலிப்பதாக கிராம மக்கள் நம்புகிறார்கள்.

    குடிபோதைக்கு அடிமையானவர்கள் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தினால் அவர்கள் குடிபோதையில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தி குடிபோதை என்னும் கொடிய தீய பழக்கத்தில் இருந்து மீண்டுள்ளதாக இந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
    திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் தெப்போற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தெப்பம் தங்கள் அருகில் வந்தபோது அவர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கினர்.
    திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது. மாசி பவுர்ணமியையொட்டி கடந்த 20-ந் தேதி தெப்போற்சவம் தொடங்கியது.

    அதன் ஒரு பகுதியாக நேற்றுமுன்தினம் மாலை கோவிந்தராஜ சாமி கோவிலில் வீற்றிருக்கும் கல்யாண வெங்கடேஸ்வரர், தனது நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 5 முறை வலம் வந்து அருள் பாலித்தார்.

    திரளான பக்தர்கள் படித்துறையில் அமர்ந்து தரிசனம் செய்தனர். தெப்பம் தங்கள் அருகில் வந்தபோது அவர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கினர். தெப்பலில் நாதஸ்வர இசை, வேதபாராயணம் நடந்தது.

    அதேபோன்று தெப்போற்சவத்தையொட்டி தி்ருக்குளம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடந்தது.
    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்துள்ள துறவிக்காடு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்துள்ள துறவிக்காடு கிராமத்தில், பாலசுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலை புதிதாக நிர்மானிக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து திருப்பணி குழு அமைக்கப்பட்டு, பல லட்சம் ரூபாய் செலவில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பணி வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்று(புதன்கிழமை) 2-ம் மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெறுகின்றன. நாளை(வியாழக்கிழமை) காலை 4-வது கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து காலை 9

    மணிக்கு மேல் 9.30 மணிக்குள் பாலசுப்பிரமணியசுவாமிக்கும், அதன் பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. பின்னர் மூலவருக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
    தேவ பிள்ளைகளே இந்த தவக்காலத்தில் நம் ஒவ்வொருவடைய வீட்டிலும் இயேசு பிரவேசிக்க அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நாம் ஒவ்வொருவருக்கும் தெய்வீக சமாதானம் கிடைக்க முயற்சி செய்வோமாக ஆமென்.
    ஒருநாள் இயேசு எரிகோ என்னும் பட்டணத்திற்கு வந்தார். அவர் வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் மக்கள் கூட்டம் கடல் போல் திரண்டது. இந்த கூட்டத்தில் சகேயு என்னு பெயர் கொண்ட மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவன் ரோம பேரரசிற்காக மக்களிடம் வரி வசூலிக்கும் அரசாங்க வேலை செய்தவன். இவனுக்கு எல்லாம் நிறைவாய் இருந்தது. ஆனால் அவன் சொந்தநாட்டு மக்களே அவனை வெறுத்தனர். மக்களை ஏமாற்றி குறுக்கு வழியில் பணம் சம்பாதித்ததே  அதற்கு காரணம்.

    இயேசு குருடர், செவிடர், முடவர், குஷ்ட ரோகி யாவரையும் குணமாக்கியிருக்கிறார். மரிதோரையும் உயிரோடு எழுப்பியிருக்கிறார் என்று கேள்விபட்ட சகேயு இப்பேற்பட்ட பரிசுத்த தேவ குமாரனை எப்படியாவது காண வேண்டுமென்ற மிகுந்த ஆசையோடும், ஆவலோடும், அருகிலிருந்த காட்டத்தி மரத்தில் ஏறினான். சகேயு குள்ளாயிருந்தபடியால்  அப்படி செய்தான்.

    இயேசு அந்த மரத்தின் கீழ் வந்தபோது சகேயுவே நீ சீக்கிரமாய் இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும் என்றார். சகேயு உடனே கீழே இறங்கி மிகுந்த சந்தோஷமாய் இயேசுவை பார்த்து என் ஆதிகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கிறேன். ஒருவரிடத்தில்  அதிகமாய் எதையாகிலும் பெற்றிருந்தால் 4 மடங்காய் திருப்பி தருகிறேன் என்றான். அதற்கு இயேசு அவனிடம் இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது என்றார். இயேசு சகேயுவின் வீட்டிற்கு வந்ததும் பாவம் போனது. இரட்சிப்பு வந்தது. தெய்வீக சமாதான வீட்டை நிறைத்தது.

    நாமும் நம் பாவம் நீங்கி, இரட்சிப்பு அடைந்து சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும் வாழ இயேசுவை நம் இல்லத்திலும் உள்ளத்திலும் தங்குவதற்று அழைப்போமா?

    வெளிப்படுத்தல் 3-ம் அதிகாரம் 20-ம் வசனத்தில் இதோ வாசற்படியில் நின்று தட்டுகிறேன். ஒருவன் என்(இயேசு) சத்தத்தை கேட்டு கதவை திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து அவனோடு போஜனம் பண்ணுவான் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

    எனவே தேவ பிள்ளைகளே இந்த தவக்காலத்தில் நம் ஒவ்வொருவடைய வீட்டிலும் இயேசு பிரவேசிக்க அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நாம் ஒவ்வொருவருக்கும் தெய்வீக சமாதானம் கிடைக்க முயற்சி செய்வோமாக ஆமென்.

    சகோதரி.ரூத்பிமோராஜ்,
    கே.ஜி.கார்டன், திருப்பூர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழாவின் போது நம்பெருமாள் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் வீதி உலா வந்தார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவுபெற்றது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நேற்று பந்தகாட்சியுடன் நிறைவுபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார்.

    பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் எழுந்தருளி பந்த காட்சியில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார். பந்தக்காட்சியின் போது நம்பெருமாள் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் வீதி உலா வந்தார். பின்னர் படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவுபெற்றது.

    ×