என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி இந்த மந்திரத்தை சொல்லி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் சிறப்பு
ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய
மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது
அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா
விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் சிறப்பு ..! விநாயக விரதத்தை அங்காரகன் (செவ்வாய்) அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றான பதவி பெற்றதால் சங்கட ஹர சதுர்த்தி விரதம் அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி இன்று நள்ளிரவு மயான பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 1 மணிக்கு ஆழியாற்றங்கரையில் மயான பூஜை நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு விடிய, விடிய 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜையும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு குண்டம் கட்டுதல், இரவு 6 ம ணிக்கு சித்திரைத்தேர் வடம்பிடித்தல், 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்குதல் 27-ந்தேதி காலை 7.30 மணிக்கு நடக்கிறது. இதையடுத்து 28-ந்தேதி காலை 8 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மேல் மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையும், 1-ந்தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந் தேதி காலை நடைபெறுகிறது.
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதன்மையாக விளங்குவது இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் ஆகும். இந்த கோவிலின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி, நேற்று முன்தினம் ஆதிமாரியம்மன் கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
இன்று(புதன்கிழமை) யானை வாகனத்திலும், நாளை(வியாழக்கிழமை) ரிஷப வாகனத்திலும், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) அன்ன வாகனத்திலும், 27-ந்தேதி குதிரை வாகனத்திலும் அம்மன் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந் தேதி காலை நடைபெறுகிறது.

திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவில் மாசி மகப்பெருவிழாவில் பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதி உலா புறப்பாடு நடந்தது.
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மகப்பெருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 4-ந் தேதிவரை நடக்கிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை, பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதி உலா புறப்பாடு நடந்தது.
இரவு தங்க கருட சேவை நடந்தது. இதில் பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது..

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடைய பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தந்து, மூடிக்கிடந்த கோவில் திருக்கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப் பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு.
பல்வேறு சிறப்பு பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசிமகத் திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜர் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகள் வழியாக தேர் வலம் வந்து தேரடியை அடைந்தது.

ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. புதன் கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் கடைபிடித்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும், திரயோதசி திதி அன்று சூரியன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரத்தையே ‘பிரதோஷ காலம்’ என்பார்கள். இந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடு, பலகோடி மடங்கு புண்ணியத்தைத் தரும். சிவனுக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமானது ‘பிரதோஷ விரதம்’ ஆகும். பிரதோஷ நேரத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம், பிரதோஷ நேரம்தான்.
புத பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாள், புதன்கிழமை. இந்தநாளில் பிரதோஷ வழிபாடு செய்யும் மிதுனம், கன்னி ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், புதன் தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். புதன் நீச்சம் பெற்றதால் வரும் கெடுபலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிப்பில் ஆா்வம் இல்லாதவர்கள் கூட நன்றாக படிப்பார்கள்.
குழந்தைகள் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். இளம் வயதினரின் தவறான நட்பால் ஏற்படும் பாதிப்பு தீரும். நண்பர்களிடையே நல்ல நட்பு நீடிக்கும். வங்கி கடன் தீரும். காலி நிலம் தொடர்பான சர்ச்சைகள் அகலும். தோல் வியாதி, நரம்பு மண்டல பாதிப்புகள் நீங்கும். ஜோதிடர்களுக்கு வாக்கு வன்மை அதிகரிக்கும். ஆசிரியர்களுக்கு வேலையில் இருந்து வரும் இடர்கள் குறையும். பத்திரம், அடமானம், ஜாமீன் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பூமி லாபம் உண்டாகும். புதனை வலிமைப்படுத்த பச்சை பயிறு, சுண்டல் தானம் செய்யுங்கள்.
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

கொளத்தூர் அருகே உள்ள மேட்டுப்பளையூரில் மத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே உள்ள கருங்கல்லூர், மேட்டுப்பளையூர், வீரனூர், கோமாளிகாடு ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி, அம்மன் கோவில் ஒன்றை கட்டி வழிபாடு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையின் நடு மலையில் உள்ள ஒரு ஓடையில் அம்மன் சுயம்புவாக காட்சி அளிப்பதை கண்டனர்.
அப்போது பக்தர் ஒருவருக்கு அருள் வந்து, நான் அம்மன் சக்தியாக உருவாகி மந்தையில் இருந்து உருவானதால் நான் மத்தூர் மாரியம்மன் என்ற திருநாமத்தில் வீற்றிருப்பதாக அருள்வாக்கு சொன்னார். பின்னர் அங்கிருந்த சுயம்பு அம்மனுக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டு மேட்டுப்பளையூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.
கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்க மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என இந்த பகுதி கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு செய்து இந்த மலை அம்மனை மத்தூர் மாரியம்மன் என அழைத்து வழிபாடு செய்து வருகின்றனர். ஸ்ரீ மத்தூர் மாரியம்மன் பல நோய்களை போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தையே தல விருட்சமாக கொண்டு சக்தியின் மற்றொரு நிலையாக அருள்பாலிப்பதாக கிராம மக்கள் நம்புகிறார்கள்.
இந்த நிலையில் இந்த 3 கிராம மக்கள் ஒன்றிணைந்து மத்தூர் மாரியம்மனுக்கு கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டனர். தற்போது ரூ.2 கோடியில் திருப்பணிகள் முடிந்து இந்த கோவிலுக்கு இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.
இந்த கோவிலின் நான்கு புறமும் பிரதான வாசல்கள் ஆகம விதிகளின்படி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் ஒருபுறம் பிரமாண்டமான குதிரை சிலைகளும், மற்றொரு புறம் நவக்கிரகங்களுக்கான மகா மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் மேட்டூர்-மாதேஸ்வரன் மலை செல்லும் வழியில் கருங்கல்லூர் பஸ் நிறுத்தத்திற்கு அருகில், பெட்ரோல் பங்கிற்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கோவிலின் தர்மகர்த்தாக்கள் மாரப்பன், குமார் மற்றும் கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
குடிபோதைக்கு அடிமையானவர்கள் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தினால் அவர்கள் குடிபோதையில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தி குடிபோதை என்னும் கொடிய தீய பழக்கத்தில் இருந்து மீண்டுள்ளதாக இந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கோவிலில் ஆயாதி கணித்து, வாஸ்து நட்சத்திரம், ராசி நட்சத்திரம், கர்த்தா நட்சத்திரம், ராசிக்கு பொருந்திய ஆயாதி அளவுகள் தீர்மானித்து 3 நிலை விமானம் நீண்ட சதுரம் அமைப்பில் 3 பக்க வாசலுடன் கூடிய மகா மண்டபத்துடன் அமைந்திருப்பது சிறப்பானதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் மண்டல பூஜை நாளை(வியாழக்கிழமை) முதல் 48 நாட்களுக்கு நடைபெற உள்ளது. பூஜைக்கு பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கோவில் விழாக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பசுமையை போற்றும் வகையில் துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த பிரசாதங்கள் பாலித்தீன் பைகளில் வழங்கப்பட்டது.
சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க பாலித்தீன் பைகள் நிறுத்தப்பட்டு, துணிப்பைகளில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பசுமையை போற்றும் வகையில் துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காலியான பைகளை மண்ணில் போடும் போது துளசி விதைகள் செடிகளாக முளைக்கின்றன. தேவஸ் தான நிர்வாகம் பச்சை நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பைகள் பச்சை மேஜிக் பைகள் என அழைக்கப்படுகிறது.இதற்கு பல் வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் 7-ம் நாளில் சுவாமி சண்முகர், சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழாவின் 7-ம் திருநாளான நேற்று விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதனை தொடர்ந்து உருகு சட்ட சேவை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமி சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 8.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுவாமி பின்புறம் சிவாம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார். சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி இருந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் 8 வீதிகளிலும் உலா வந்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாண்டிய மன்னன் குலசேகரனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு எழுப்பப்பட்ட திருக்கோயிலே அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலாகும்.
இறைவன் : அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி
இறைவி : காமாட்சியம்மன்
தலவிருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : பஞ்சநதி தீர்த்தக்குளம்
தலசிறப்பு
செட்டிகுளம் ஊரின் நடு நாயகமாக விளங்குகின்ற அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலும், ஊரின் கீழ்புறம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலும் வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோயிலாகும். உறையூர் சோழன் பராந்தகனுக்கும் பாண்டியமன்னன் குலசேகரனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு எழுப்பப்பட்ட திருக்கோயிலே அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலாகும். மலையின் மீது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தன் கையில் 11 கணுக்களை உடைய செங்கரும்பினை ஏந்தி காட்சி அளிப்பது சிறப்பு அம்சமாகும்.
தன் ஆணைக்கு இணங்க அசுரர்களை அழித்த முருக பெருமானுக்கு தன் கையில் இருந்த கரும்பை பரிசாக வழங்கி அன்னை காமாட்சியம்மன் ஆசி வழங்கினார். அன்று முதல் இத்தலத்தில் கரும்பு ஏந்திய கண்ணனாய் கலைகள் களையும் தோழனாய் அருள்பாலித்து வருகிறார். அதனாலே இத்தளத்திலுள்ள காமாட்சியம்மன் கையில் கரும்பு இல்லாமல் காட்சி தருகிறார்.
சூரிய பூஜை
அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் திருக்கோயில்i கிழக்கு நோக்கியும், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலையின் மீது தன் தந்தையை பார்த்து மேற்கு நோக்கியும் காட்சி கொடுப்பது தனிச்சிறப்பாகும். அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் சுவாமியின் மீது பங்குனி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலைநேர கதிரவனின் ஒளி விழும் இந்த ஒளியானது சுவாமி மீதிருந்து நகர்ந்து சற்று நேரத்தில் அம்பாள் மீது ஒளிப்படும். இக்காட்சியை காண பக்தர்கள் பெருமளவில் கூடுவர். தண்டாயுத சுவாமி மீது மாசி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் சூரியன் மறையும்போது ஒளிக்கதிர்கள் விழும் வகையிலும், சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்
ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா பெருந்திருவிழாவாகும். மலைகோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா பெருந்திருவிழாவாகும். மலைக்கோயிலில் இருந்து பங்குனி உத்திர திருவிழாவின்போது மட்டும் உற்சவர் மலையில் இருந்து இறங்கி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் பங்குனி உத்திர திருவிழா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே அறிவிக்கை செய்யப்பட்ட திருவிழா ஆகும். கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாட்கள் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் காலை மற்றும் இரவு என சுவாமி திருவீதிஉலா நடைபெறுகிறது. இவ்விழாவில் திருக்கல்யாண உற்சவமும் ஒவ்வொரு நாளும் குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம், புஸ்ப பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
குழந்தைப்பேறு பிரார்த்தனை ஸ்தலம்
மழலைபேறு வேண்டுவோர் சஷ்டியில் விரதம் இருந்து மலைமீதுள்ள தலவிருட்சமான வில்வமரத்தில் தொட்டில்கட்டி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மலையேறி தங்கள் வேண்டுதலை நிறைவு செய்கின்றனர்.
12 இராசிகளுக்குமான குபேரன்
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் அம்பாள் சன்னதிக்கு எதிரில் குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு குபேரன் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இந்த சன்னதியில் பக்தர்களுக்கு பச்சை குங்குமம் பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது வேறு எந்த திருக்கோயிலிலும் இல்லாத சிறப்பாகும். இதுவன்றி 12 ராசிகளுக்கும் குபேரன் ஓம் வடிவில் ஆலய தூண்களில் அமைந்துள்ளனர். குபேரனுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்வது சிறப்பு.
இதன் மூலம் குபேர சம்பத்துக்கு வழிகாட்டும் தளமாக இது திகழ்கின்றது. குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று குபேர ஹோமமும், சிறப்பு வழிபாடும் வெகு சிமர்சையாக நடைபெற்று வருகிறது.
வெள்ளித்தேர்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி வீற்றிருக்கும் மலையின் வெளி பிரகாரத்தில் மாலை 6.00 மணிக்கு வெள்ளி ரதம் பவனி வருகிறது. வெள்ளிரத புறப்பாட்டு கட்டணமாக ரூ. 1000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ரூ. 20,000/-ம் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தி ஆண்டுக்கு ஒருமுறை தாங்கள் விரும்பிய நாளில் வெள்ளிரத புறப்பாடு செய்யலாம்.
அழகிய மலை மீது அழகன் முருகன் அருள்பாளிக்கிறார். இம்மலை மீது ஏறிசெல்ல தனிப்படிகளும், இறங்கி வர தனிப்படிகளும் வாகனங்கள் செல்ல தனிப்பாதையும் அமைந்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் உற்சவர் சந்திரசேகரர் சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக உற்சவர் சந்திரசேகரர் மனோன்மணி தாயாருடன், அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க, மாடவீதிகளில் தேர் உலா வருகிறது.
தேரோட்டத்துக்கு வசதியாக சாலை சீரமைப்பு, மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. வருகிற 27-ந் தேதி கொடியிறக்கம், 28-ந் தேதி பந்தம் பறிஉற்சவம், 18 திருநடனத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

கள்ளழகர் கோவில் தெப்பத் திருவிழா வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதைதொடர்ந்து அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி வந்த வழியாக சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேரும்.
மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பவுர்ணமி நிறை நாளில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி வருகிற 26-ந் தேதி மாலையில் 6 மணிக்கு கஜேந்திர மோட்சம் நடைபெறும்.
27-ந் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் ஸ்ரீதேவி பூதேவி, சமேத சுந்தர ராச பெருமாள் என்ற கள்ளழகர் பல்லக்கில் புறப்பாடாகி செல்கிறார். மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் வழி நெடுகிலும் சேவை சாதித்து மண்டூக தீர்த்தம் எனும் பொய்கைகரைபட்டி புஷ்கரணிக்கு செல்கிறார்.
அங்கு காலை 10.30 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் தெப்பம் சென்று அலங்கார மண்டபத்தில் தேவியர்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதைதொடர்ந்து அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி வந்த வழியாக சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேரும். இத்துடன் தெப்ப உற்சவம் நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.