என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
தினமும் காலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விநாயகரின் அற்புதமான இந்த மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள். திருஷ்டியெல்லாம் கழியும். திருப்பங்களும் ஏற்றங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
எந்தவொரு விஷயத்தை எழுதினாலும் அதில் முதலாவதாக பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டுத்தான் எழுதுவோம். இப்படியாக நாம் செய்யும் எல்லாச் செயலும் பிள்ளையாரை முதன்மைப்படுத்தியே இருக்கின்றன. பிள்ளையாருக்கு முதல் வணக்கம் செய்த பின்னரே அடுத்தடுத்த வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
வாழ்வில் எந்த சிக்கல்கள் ஏற்பட்டாலும் கவலைகள் வந்து அழுத்தினாலும் துக்கமும் துயரமும் கொண்டு வருந்தினாலும் பிள்ளையாரை மனதார வழிபட்டால், சகல சிக்கல்களையும் போக்கித் தருவார் கணபதி. துக்கங்களையும் துயரங்களையும் நீக்கியருளுவார். வேதனைகளைக் காணாமல் போக்குவார் ஆனைமுகன்.
தினமும் காலையில் விநாயகரின் அற்புதமான இந்த மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள்.
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
என்கிற மந்திரத்தைச் சொல்லிவாருங்கள். முடியும்போதெல்லாம் பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்துங்கள். வெள்ளெருக்கு மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள்.
நம் விக்னங்களையெல்லாம் போக்கி அருளுவார் பிள்ளையாரப்பன். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவார் ஆனைமுகத்தான். சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், பிள்ளையாருக்கு சுண்டல், கொழுக்கட்டை, பாயசம் என ஏதேனும் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். அந்தநாளில், தெரு முச்சந்தியில் சிதறுகாய் உடைத்து வேண்டிக்கொள்ளுங்கள். திருஷ்டியெல்லாம் கழியும். திருப்பங்களும் ஏற்றங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் மாசி மக திருவிழாவில் விபசித்து முனிவருக்கு காட்சி அளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி கடந்த 17-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
விழாவின் 6-ம் நாள் திருவிழாவான நேற்று கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தல் என்ற ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். விபசித்து முனிவர் தனி மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதையடுத்து பஞ்சமூர்த்திகளுக்கும், விபசித்து முனிவருக்கும் பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி மகா தீபாராதனைகள் காட்ட திரை விலக்கப்பட்டு, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள், நேர் எதிர் மண்டபத்தில் அமர்ந்திருந்த விபசித்து முனிவருக்கு காட்சி அளித்தனர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் ஓம் நமசிவாய என்கிற பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து பஞ்சமூர்த்திகள் விபசித்து முனிவருக்கு காட்சி அருளியபடி கிழக்கு கோபுர வாசல் வழியாக வெளியே வந்தனர். அப்போது பக்தர்கள் மலர்தூவி பக்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து விபசித்து முனிவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விருத்தாசலம் கடைவீதி, நான்கு கோட்டை வீதி வழியாக வீதி உலா சென்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும், 26-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 27-ந் தேதி(சனிக்கிழமை) தெப்ப உற்சவமும், 28-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், மார்ச் 1-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.

குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் நீங்கவும், உடல் நலக்குறைவு நீங்கி நலம் பெறவும் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து பழனிக்கு வருகின்றனர்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம்படை வீட்டுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதில் காவடி அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. காவடி என்பது தோளில் சுமந்து சென்று நேர்த்திக்கடனை குறிப்பிடுவதால் அந்த பொருட்களின் அடிப்படையில் பெயர் பெற்றுள்ளது. பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, வேல் காவடி, எண்ணெய் காவடி, மச்சக்காவடி, சர்ப்ப காவடி என்பன அந்தந்த நேர்த்திக்கடன் பொருட்களின் அடிப்படையில் பெயர் பெற்றவையாகும்.
அதேபோல் சுமந்து வரும் முறையிலும் அதன் பெயர் மாறுபடுகிறது. அதாவது அலகுக்காவடி, அக்னி காவடி, பறவை காவடி, ரதக்காவடி போன்றவை பக்தர்கள் எடுத்து வரும் முறையை பொறுத்து பெயர் பெற்றதாக உள்ளது. குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் நீங்கவும், உடல் நலக்குறைவு நீங்கி நலம் பெறவும் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து பழனிக்கு வருகின்றனர். குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழா நாட்களில் அதிகளவு பக்தர்கள் காவடி எடுத்து வருகின்றனர்.

கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு காவடியுடன் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் உள்ள முத்தாரம்மன் கோவில், மறக்குடி தெருவில் உள்ள சுப்ரமணியசாமி, கோவில் வடக்கு தெருவில் உள்ள ப்ரானோபகாரி தர்ம மடம் முருகன்கோவில், கலைஞர்குடியிருப்பில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் ஆகிய 4 கோவில்களில் காவடி கட்டு விழா நடந்தது.
இந்த கோவில்களில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பன்னீர்காவடியை பக்தர்கள் மேளதாளம் முழங்க வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதன்பிறகு இந்த 4 காவடிகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர்.
கன்னியாகுமரியை சேர்ந்த பக்தர் ஒருவர் பரசுராமர் விநாயகர் கோவிலில் வைத்து அலகு குத்தி திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த பாதையாத்திரை அஞ்சுகிராமம், கூடன்குளம், நவ்வலடி, திசையன்விளை, உடன்குடி, தட்டார்மடம் வழியாக திருச்செந்தூர் சென்று அடைகிறார்கள்.
வழிநெடுகிலும் பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் செந்திலாண்டவர் பாதயாத்திரை குழு சார்பில் இலவச உணவும் வழங்கப்படுகிறது. இந்த பாதயாத்திரை திருச்செந்தூர் சென்றடைந்ததும் அங்கு காவடியில் எடுத்து செல்லும் பன்னீரால் முருகனுக்கு அபிஷேகம் நடத்துகிறார்கள்.
பின்னர் அவர்கள் பச்சை சாத்து தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து புறப்படுகிறார்கள். அதே வழியாக மீண்டும் 26-ந்தேதி காலையில் கன்னியாகுமரி வந்து அடைகிறார்கள்.
கன்னியாகுமரிக்கு வரும் காவடியை விவேகானந்தபுரம் சக்கர தீர்த்தம் காசி விஸ்வநாதர் கோவில் முன்பு இருந்து மேளதாளம் முழங்க வரவேற்று அந்தந்த கோவிலுக்கு அழைத்து வருகிறார்கள். பின்னர் இரவு 8 மணிக்கு இடும்பன் பூஜை நடக்கிறது. அன்னதானமும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.

திருவானைக்காவல்-ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 1-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் கொண்டாடப்படும்.
அதேபோல, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சுவாமி, அம்மன், விநாயகர், சோமாஸ் கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நேற்று காலை 6.40 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து காலை 7.15 மணிக்கு மீன லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவினைதொடர்ந்து வருகிற 11-ந் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ் கந்தர் புறப்பாடும், 2-ம் நாள் சூரியபிரபை வாகனத்திலும், சந்திரபிரபை வாகனத்திலும், 3-ம் நாள் பூத வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும், 4-ம் நாள் கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் அடுத்த மாதம்(மார்ச்) 16-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து 17-ந்தேதி வெள்ளி மஞ்சத்திலும், 18-ந்தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 19-ந் தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷ வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
20-ந்தேதி காலை நடராஜர் ஊடல் உற்சவம், நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை ஏக சிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். அதனைத்தொடர்ந்து சொக்கர் உற்சவம், மவுனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.
மார்ச் 30-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர்.
ஏப்ரல் 1-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் தெப்பத் திருவிழாவையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் திருவிழாவையொட்டி உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் தெப்ப உற்சவம் கண்டருளிய போது எடுத்த படம்.(உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்)
ஸ்ரீரங்கம், பிப்.23-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் தெப்பத் திருவிழாவையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பஉற்சவம் நேற்று மாலை நடைபெற்றது. இதனையொட்டி மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சி விகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தார்.
அதனைத்தொடர்ந்து இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுளினார். பின்னர் இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைந்தார். அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் 9-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து பரிவார கோபுரங்கள் கும்பாபிஷேகம், அதை தொடர்ந்து காமாட்சியம்மனுக்கு மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது.
பொள்ளாச்சி பாலமாணிக்கம் வீதியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 19-ந் தேதி மங்கள இசை, கணபதி ஹோமம் மற்றும் விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து 20-ந் தேதி காலை 9 மணிக்கு பஞ்சகவ்யபூஜை, திசா ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு 2-ம் காலயாக பூஜை, 11 மணிக்கு கோபுரகலசங்கள் பிரதிஷ்டை, மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகபூஜை நடைபெற்றது.
இதை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு தீபாராதனை, உபாசார பூஜை, 9 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் பூஜை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, காலை 8.30 மணிக்கு யாத்ராதானம், கலசங்கள் புறப்படுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காலை 9 மணிக்கு காமாட்சியம்மன் கோபுர மகா கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து பரிவார கோபுரங்கள் கும்பாபிஷேகம், அதை தொடர்ந்து காமாட்சியம்மனுக்கு மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அக்னீஸ் முகுந்தன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு அன்னதானம், பகல் 11 மணிக்கு மகா அபிஷேகம், 12 மணிக்கு தசதரிசனம் கோமாதாபூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், அம்மன் திருவீதி உலா மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி நடைபெறுகிறது.
பழனி கிழக்கு ரதவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி 12-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருக்கம்பம் சாட்டுதல் கடந்த 16-ந்தேதி நடைபெற்றது. இதற்காக தேக்கந்தோட்டம் பகுதியில் இருந்து கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டு நடப்பட்டது. இதையடுத்து தினமும் பக்தர்கள் பால், மஞ்சள்நீர் ஆகியவற்றை கம்பத்தில் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அப்போது பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மன் வெள்ளியானை, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி நடைபெறுகிறது.
அன்று இரவு அம்மன் தங்க குதிரை வாகனத்தில் உலா வருகிறார். தேரோட்டம் 3-ந்தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த நாள் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

நாம் பயப்படும் போது இயேசு கிறிஸ்துவை தைரியமாய் நம்பி நிற்போம். இந்த தவக்காலத்தல் விசுவாத்தோடு ஜெபித்து ஜெயம் பெறுவோம்.
யோவான் 14-ம் அதிகாரம் 1-ம் வசனத்தில் உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவசமாயிருங்கள். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் சொல்லப்பட்டுள்ளதை நாம் வேதாகமத்தில் படிக்க முடியும். ஆம் தேவ பிள்ளைகளே நம்முடைய இருதயம் அநேக காரியங்களை குறித்து இன்றைய உலக சுகாதார சூழ்நிலையக் கண்டு கலங்காதவரே இல்லை.
ஆனால் நம் தேவனோ நம்மை பயப்படவே வேண்டாம் என்று தெளிவாக அறிவுறுத்துகிறார். அதனால் தான் பயப்படாதே, திகையாதே கலங்காதே என்று ஆண்டவர் நம்மை ஆற்றித் தேற்றுவதை பார்க்கலாம். பயப்படாதே என்று வார்த்தை மட்டும் 365 முறை பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் ஒரு நாளுக்கு ஒரு முறையாவது கர்த்தர் நம்மை பார்த்து பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்று அன்போடு சொல்கிறார்.
கர்த்தர் இத்தனை கரிசனையோடு ஏன் பயப்படாதே என்று தன் பிள்ளைகளுக்கு சொல்கிறார் தெரியுமா? பயம் சாத்தானுடைய கொடிய ஆயதங்களில் ஒன்று பயம் நம்முடைய விசுவாசத்தையும், நம்பிக்கையையும் முற்றிலும் நிர்மூலமாக்கக்கூடியது. நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்று 1 யோவன் 5-ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பயம் நம்முடைய ஜெயத்தை தடை செய்யும் ஆயுதமாயிருக்கிறது.
பயப்படும் எந்த கிறிஸ்தவனாலும் திறப்பில் நின்று பாரத்தோடு தன் தேசத்திற்காக ஜெபிக்க முடியாது. அற்புதத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ளவே முடியாது. சங்கீதம் 56-ம் அதிகாரம் 3-ம் வசனத்தில் நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் என்று நாம் வாசிக்கிறோம். எனவே நாம் பயப்படும் போது இயேசு கிறிஸ்துவை தைரியமாய் நம்பி நிற்போம். இந்த தவக்காலத்தல் விசுவாத்தோடு ஜெபித்து ஜெயம் பெறுவோம்.
சகோதரி.ரூத்பிமோராஜ். கே.ஜி,கார்டன்,திருப்பூர்.

பிரம்மஹஸ்தி தோஷம், மூதாதையர்கள் மோட்சம், மன உளைச்சல் ஏற்படும் விரக்தி போன்றவை மாசி மாத ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் நம்மை விட்டு நீங்கும்.
காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரமும், கங்கைக்கு மிஞ்சிய தீர்த்தமும், தாய்க்கு சமமான தெய்வமும், ஏகாதசிக்கு சமமான விரதமும் இல்லை என்று அக்னிபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஏகாதசி விரதத்தின் பலன் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தைத் தரும். இந்த ஏகாதசி விரதத்தைப் பற்றி, சிவ பெருமானே பார்வதி தேவியிடம் எடுத்துக்கூறியதாக புராணங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும், 11 ஆம் நாள் வளர்பிறை ஏகாதசி என்றும், பெளர்ணமிக்குப் பிறகு வரும் 11 ஆம் நாள் தேய்பிறை ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.
ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு தனிப்பட்ட பலனும் உண்டு. மார்கழி மாத வளர்பிறை, வைகுண்ட ஏகாதசி என்ற சிறப்பை பெறுகிறது. அன்றைய நாளிலிருந்து ஏகாதசி விரதம் கடைப்பிடித்து வந்தால் கிடைக்கும் பலன்கள், கணக்கில் அடங்காது
மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜயா'' எனப்படும். அகால மரணம் அடைந்த மூதாதையர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.
மாசி மாத தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா'' எனப்படும். இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும்.
மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் "ஷட்திலா'' என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.

பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் உள்ள 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க நேர்த்திக்கடனாக வடமாலை சார்த்த கோவில் நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இங்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக வடமாலை சாத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த மார்ச் மாதம் உருவான கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களில் நடைபெற்று வந்த பல்வேறு பூஜை மற்றும் திருவிழாக்கள் தடைபட்டதுடன் வழிபாடுகளும் நிறுத்தம் செய்யப்பட்டன.
பின்னர் தமிழக அரசு பல்வேறு தளர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் திருவிழாக்கள் மற்றும் வழிபாடு நடத்தவும் உத்தரவு பிறப்பித்தது. இதைதொடர்ந்து பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் உள்ள 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க நேர்த்திக்கடனாக வடமாலை சார்த்த கோவில் நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரவு பிறப்பித்த கோவில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் சங்கம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ் பெற்றது காரமடையில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோவிலாகும். பழமை வாய்ந்த இந்த கோவிலில் மாசிமக திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திருமுளை நகர சோதனை என்கிற கிராம சாந்தி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் அரங்கநாத சுவாமிக்கு திருமஞ்சன பூஜை நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவ அரங்கநாத பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து கொடிமரத்திற்கு கீழ் வீற்றிருக்கும் கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து கொடியேற்ற நிகழ்ச்சி யாகசாலை மண்டபத்தில் தொடங்கியது.
திருமலை நல்லான் சக்கரவர்த்தி சுவாமிகள், வேத வியாசர்கள், சுதர்சன பட்டர் சுவாமிகள், ஸ்ரீதர் பட்டர் சுவாமிகள், மற்றும் கோவில் அர்ச்சகர்கள் கருடாழ்வர் சின்னம் பதித்த கொடிக்கு வேதமந்திரங்கள் ஓத சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இதன்பின்னர் வேத கோஷங்கள் முழங்க, கோவில் உள்பிரகாரம் வலம் வந்து காலை 11.15 மணிக்கு கொடிமரத்தில் கருடாழ்வார் சின்னம் பதித்த கொடி ஏற்றி வைக்கப்பட்டது. கொடியேற்றத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா... ராமா... கோவிந்தா... கோபாலா... என கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சியின் போது வானத்தில் கருடன் வட்டமிட்டு கோவிலை சுற்றி வலம் வந்தது. இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சியில் கருடன் வானத்தில் வட்டமிடும் நிகழ்ச்சி சிறப்பம்சமாகும்.
கொடியேற்ற விழாவில் ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஏ.கே.செல்வராஜ், தொழில் அதிபர் எம்.எம்.ராமசாமி, கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணன், காரமடை பேரூராட்சி முன்னாள் தலைவர் டி.டி.ஆறுமுகசாமி, தாசப்பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.ராஜ்குமார், கோவில் மிராசுதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு கொடியேற்ற கட்டளைதாரர்களுக்கு கோவில் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இரவு 8.30 மணிக்கு அன்ன வாகன உற்சவம் நடைபெற்றது. 25-ந் தேதி ஸ்ரீ பெட்டத்தம்மன் அழைப்பும், 26-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 28-ந் தேதி பரிவேட்டை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி இரவு 10.30 மணிக்கு தெப்ப திருவிழாவும், 2-ந் தேதி உற்சவ பூர்த்தி விழாவும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன், கோவில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.