என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
வலிமையான குடும்பம் உருவாகும்போது அது வலுவான சமூகத்தை உருவாக்கும். வலுவான சமூகமே வலிமையான தேசம் உருவாக காரணமாக அமையும்.
நபிகள் நாயகம் அவர்கள் நல்ல நட்புக்கு உதாரணம் கூறும்போது கஸ்தூரி (வாசனைப் பொருள்) விற்பவருக்கு ஒப்பாகக் கூறியுள்ளார்கள். ‘அவன் உனக்கு வாசனைப் பொருளைத் தராவிட்டாலும் அவரிடமிருந்து நல்ல வாசனையையாவது பெற்றுக்கொண்டே இருப்பாய்’.
தீய நட்புக்கு உதாரணம் கூறும்போது, உலை ஊதும் கொல்லனுக்கு உதாரணமாகக் கூறுகிறார்கள். ‘அவன் உலை ஊதும்போது நெருப்புப்பொறி உன் மீது படாவிட்டாலும் அங்கு ஏற்படும் புகையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது’.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது நல்லவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஒரு பெண் நான்கு விஷயங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறாள் அழகு, குலப்பெருமை, செல்வம், மார்க்கப்பற்று.
மார்க்கப்பற்றுள்ள பெண்ணுக்கு முன்னுரிமை அளிப்பாயாக. மற்றவை அழிந்துவிடும் அல்லது அவளது செருக்குக்கு காரணமாக அமைந்து விடும். ஆனால் மார்க்கப்பற்று, மிகச் சிறந்த வாழ்க்கை துணையாக அமைவதற்கு உதவும்.
அதேபோல மார்க்கப்பற்றுள்ள நல்லொழுக்கமுள்ள மணமகன் பெண் கேட்டு வந்தால் அவருக்கு முன்னுரிமை அளிக்கும்படி கூறியுள்ளார்கள். எளிமையான திருமணமே மிகச்சிறந்த திருமணம். ஆடம்பரம், வீண்விரயம் தவிர்க்கப்பட வேண்டும்.
கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து தியாக மனப்பான்மையுடன் வாழ்வது நிலையான மண வாழ்விற்கு வழிவகுக்கும்.
இன்றைய சூழ்நிலையில் அத்தகைய புரிந்துணர்வும் ஒற்றுமையும் இல்லாமையால் குடும்பங்களில் குழப்பம், வன்முறை எனத்தொடங்கி பெருகிவரும் தற்கொலைகளும், விவாகரத்துகளும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றும் போது வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி, ஆற்றுப்படுத்தி அத்தகைய கருத்து வேறுபாடுகளைக் களைய முயற்சி செய்ய வேண்டும். அவர்களின் தலையீடு, பிணக்கை தீர்ப்பதாக அமைய வேண்டுமேயல்லாது, மேலும் பிரச்சினை அதிகமாகக் காரணமாக அமைந்து விடக்கூடாது.
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்த பிறகு ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொள்ளக் கூடாது. இருவரின் வாழ்வும் திறந்த புத்தகமாக, ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் கூடிய அன்போடு நடந்து கொள்ள வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் வாழ்க்கை வீணாகிவிடும். சந்தேகம் என்பது கொடிய நோயாகும்.
நபிகள் நாயகம் அவர்கள் ஒருமுறை முன்னிரவு நேரத்தில் தனது மனைவியுடன் பேசிக்கொண்டு நின்றார்கள் . அவ்வழியே இரண்டு தோழர்கள் கடந்து சென்றார்கள். நபிகள் நாயகம் அவர்கள் சற்று உரத்த குரலில், ‘நான் எனது மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள்.
உடனே அந்தத் தோழர்கள், ‘நபியவர்களே, உங்கள் மீது சந்தேகப்படுவோமா?’ என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் அவர்கள், ‘சைத்தான் மனிதனின் உள்ளத்தில் தவறான எண்ணங்களை விதைக்கக் கூடியவன்’ என்றார்கள்.
சந்தேகப்படக் கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் கணவன், மனைவி எவராக இருந்தாலும் அந்த விஷயத்தில் உண்மை நிலையைத் தெளிவு படுத்தி விட வேண்டும். அதன் மூலம் சந்தேகம் என்ற நோயை அறவே ஒழிக்க முடியும்.
தெளிந்து தெரிந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுத்தவர் மீது சந்தேகம் கொள்வது தீராத துன்பத்தை தரும் என்கிறார் வள்ளுவர்.
நபிகள் நாயகம் அவர்களின் காலத்தில் ஒரு தம்பதியர் வந்தனர். எனக்கு பிறந்த பிள்ளை என் சாயலில் இல்லையே என்ற ஒரு குற்றச்சாட்டை வைத்தார் அந்தக் கணவர்.
உங்களுடைய தாய் தந்தை, அவர்களின் தாய் தந்தை அல்லது அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரின் ஏதாவது ஒரு வகையில் உமது குழந்தையின் சாயல் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூற அவர் சமாதானம் அடைந்தார்.
சந்தேகம் ஏற்பட்டால் அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். சரியாக வராத சூழலில் வேறு வழியே இல்லை என்றால் பிரிந்து விடுவதே நல்லது. சந்தேகத்தால் கொலை செய்து அவ்வாறு சந்தேகப்பட்டதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தால் உயிரை திரும்பத் தர முடியுமா? தக்க காரணமின்றி ஒரு உயிரைக் கொலை செய்வது மனித இனத்தையே கொன்றதற்கு சமம். ஒரு உயிரை வாழ வைப்பது மனித இனத்தையே வாழ வைப்பதற்கு சமம்.
சிறுவர்கள் மீது அன்பும், பெரியவர்கள் மீது கண்ணியமும் கொண்ட குடும்ப சூழல் உருவாக வேண்டும்.
இவ்வாறாக வலிமையான குடும்பம் உருவாகும்போது அது வலுவான சமூகத்தை உருவாக்கும். வலுவான சமூகமே வலிமையான தேசம் உருவாக காரணமாக அமையும்.
பி.சையது இப்ராஹிம், சென்னை.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில், தேர்த்திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பிரம்மோற்சவ தேர்த்திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக 15-ந்் தேதி விநாயகர் உற்சவம் நடந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து பல்வேறு வாகன உற்சவங்கள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. 20-ந் தேதி தேரின் மீது கலசம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல் நாள் தேர்நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி, தேரின் மீது ஏற்றுதல் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது சாமி அமர்ந்து, மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு தேரில் ஏற்றப்பட்ட வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. மாவட்ட வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் குப்பத்தா மோட்டூர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள் சோமநாதபுரம் சின்னதுரை, ஸ்ரீசைலம், வள்ளிமலை கோவில் செயல் அலுவலர் சிவா, ஆய்வாளர் செண்பகம், மேலாளர் நித்தியானந்தம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர், அறங்காவலர்கள், தேர் உற்சவதாரர்கள், உபயதாரர்கள், நாட்டாண்மை தாரர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் வள்ளிமலை முருகனுக்கு அரோகரா, வள்ளி மணாளனுக்கு அரோகரா, வள்ளி தெய்வானைக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பினர்.
தேரோட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கீழே விழுந்தனர்.
முதல் நாளான நேற்று இரவு, மலை சுற்றுப்பாதையில் உள்ள துண்டு கரையருகே தேர் நிறுத்தப்பட்டது. அங்கு சாமிக்கு பூஜைகள் நடைபெற்றது. இரண்டாவது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மீண்டும் தேரோட்டம் நடக்கிறது.

சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரை காளியம்மன் பக்தர்களுக்குத் திங்கள் கிழமை காட்சி தருவதாகவும், எனவே தான் சிறுவாச்சூர் ஆலயம், வெள்ளி, திங்கள் மட்டும் திறந்து பூஜை செய்யப்படுவதாகவும் ஆன்றோர்கள் செவிவழியே இந்த அரிய வரலாற்றை தெரிவித்துள்ளனர்.
தலவரலாறு
சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்பு படுத்தி இங்குஅம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டு வருகிறது. கற்புடைத் தெய்வம் கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு மனம் பொறாமல் கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் இத்தலமடைந்து அமைதி கொண்டாள் எனவும் கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பி அமர்ந்தாள் எனவும் பெரியோர்கள் கூறுகின்றனர்.
சிறுவாச்சூர் வழிபாடு தெய்வம் செல்லியம்மன் ஆகும். ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இவ்வம்மையைக் கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்கும் பயன் படுத்திவந்துள்ளான்.
அன்னை மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு வந்து சேர்ந்தபோது செல்லியம்மனுடன் இரவு தங்க இடம் கேட்க செல்லியம்மனோ தன்னை மந்திரவலிமையால்தொல்லைப் படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறிய போது மதுரைகாளியம்மன் தான் அதற்குத் தக்க வழி செய்வதாகக் கூறி தங்கி, வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை மதுரை காளி எதிர்கொண்டு அழித்து விட, செல்லியம்மன் அன்னையின் திறன் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாலித்து வர வேண்டும் என வேண்டி, தான் அருகிலிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டு மெனவும் கூற, மதுரை காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்திலே அமர செல்லியம்மன் பெரியசாமி மலை சென்று கோயில் கொண்டுவிடுவதாகவும், சிறுவாச்சூர்க்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரை காளியம்மன் பக்தர்களுக்குத் திங்கள் கிழமை காட்சி தருவதாகவும், எனவே தான் சிறுவாச்சூர் ஆலயம், வெள்ளி, திங்கள் மட்டும்திறந்து பூசை செய்யப்படுவதாகவும் ஆன்றோர்கள் செவிவழியே இந்த அரிய வரலாற்றை தெரிவித்துள்ளனர்.
இந்த நாட்கள் தவிர ஆலய சிறப்புத் திருநாட்கள் சிலவற்றிலும் ஆலயம் திறந்து பூசை செய்யப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் மதுரகாளியம்மனும், செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாக ஐதீகம் உள்ளது. மதுரை காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுவார்கள் சினங்கொண்டு வந்த மதுரகாளியம்மன் இங்கு வந்து அமைதியுற்றுப் பக்தர்களுக்குப் பல இனிய நிகழ்வுகளை அருளுவதாலும், மதுரகாளியம்மன் (மதுரம்/ இனிமை) என்ற பெயர் பெற்றாள் என்பதும் பொருத்தமுடையதே ஆகும்.
செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை தரவேண்டுமென்று கேட்டதற்கு ஏற்ப பூசையின் போது தீபாராதனை காட்டுகையில் முதலில் மலை நோக்கி மேலே தீபாராதனை காட்டி விட்டுத்தான் பின்னர் மதுரகாளியம்மனுக்குத் தீபாராதனை காட்டும் வழக்கம் இது தொண்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
திருவிழாக்கள்
ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் அமாவாசைக்கு பின் வரும் முதல் செவ்வாய் அன்று பூசொரிதலுடன் தொடங்கி அதற்கு அடுத்த செவ்வாய் அன்று காப்புகட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது.
சிறப்பு வழிபாடுகள்
மேலும் தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு நாட்கள், ஆடி 18ம் பெருக்கு, புரட்டாசி நவராத்திரி 10 நாட்கள், ஐப்பசியில் தீபாவளித் திருநாள், கார்த்திகையில் தீபத் திருநாள், மார்கழி மாதப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, தைப் பொங்கல், தைபூசம், மாசிமகா சிவராத்திரி ஆகிய நாட்களில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு வரிபாடுசெய்யப்படுகிறது.
நடை மற்றும் பூஜை நடைபெறும் நாட்கள்
வழிபாடு அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் வாரத்தில் திங்கள், வெள்ளி கிழமைகளிலும் மற்றும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் திருக்கோயில் நடை திறக்கப்படும். காலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை சன்னதி திறக்கப்படும். காலை 11.00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து தங்க கவசம் அணிவித்து இரவு 9.00 மணி வரை அம்பாள் தரிசனம் செய்யலாம். உபயதாரர் இருப்பின் மாலை 6.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும்.
அலுவலக முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில்,
சிறுவாச்சூர், பெரம்பலூர் வட்டம் மற்றும் மாவட்டம்
பின்கோடு 621113
கைபேசி : 8056553356

பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கோவிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக முழு பரிசோதனைக்கு பின்னரே கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் மலைப்பாதை வழியாக மட்டுமே கோவிலுக்கு செல்ல வேண்டும்.
கோவில் வளாகத்தில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

பிப்ரவரி மாதம் 23-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 1-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
23-ம் தேதி செவ்வாய் கிழமை :
* சர்வ ஏகாதசி
* சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்
24-ம் தேதி புதன் கிழமை :
* பிரதோஷம்
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - பூராடம், மூலம்
25-ம் தேதி வியாழக்கிழமை :
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம்- பூராடம், உத்திராடம்
26-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சதுர்த்தசி
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்
27-ம் தேதி சனிக்கிழமை :
* பௌர்ணமி
* மாசிமகம்
* கரிநாள்
* சந்திராஷ்டமம் - அவிட்டம், திருவோணம்
28-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* கரிநாள்
* சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
1-ம் தேதி திங்கள் கிழமை :
* கரிநாள்
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - பூரட்டாதி
* சர்வ ஏகாதசி
* சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்
24-ம் தேதி புதன் கிழமை :
* பிரதோஷம்
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - பூராடம், மூலம்
25-ம் தேதி வியாழக்கிழமை :
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம்- பூராடம், உத்திராடம்
26-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சதுர்த்தசி
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்
27-ம் தேதி சனிக்கிழமை :
* பௌர்ணமி
* மாசிமகம்
* கரிநாள்
* சந்திராஷ்டமம் - அவிட்டம், திருவோணம்
28-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* கரிநாள்
* சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
1-ம் தேதி திங்கள் கிழமை :
* கரிநாள்
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - பூரட்டாதி
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவையொட்டி கோவிலின் நடை திறப்பு நேரம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக தினமும் மதியம் உணவு இடைவேளையின் போது கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கோவில் நடை திறப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறும்போது, மாசித் திருவிழாவையொட்டி கோவிலின் நடை திறப்பு நேரம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். உணவு இடைவேளையின் போது நடை அடைக்கப்படுவது இல்லை.
இந்த நடைமுறை அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி அதாவது மாசி திருவிழாவின் தெப்ப உற்சவம் நடைபெறும் நாள் வரை கடைபிடிக்கப்படும் என்றனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நாளை(திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று நம்பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
7-ம் நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளுகிறார்.
பின்னர் உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நாளை(திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். பின்னர் இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார்.
இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 9-ம் திருநாளான 23-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார்.
பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்ப திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
28-ந் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6 மணிக்கு பஜனை, 6.30 மணிக்கு உஷ பூஜை, 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றமும், 8.30 மணிக்கு நடைபெறும் சமய மாநாடு திறப்பு விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.. வெள்ளிமலை ஆஸ்ரம தலைவர் சைதன்யானந்த மகராஜ் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.
மதியம் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, 2 மணிக்கு ஆன்மீக உரை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு பரத நாட்டியமும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது.
மறுநாளான 1-ந் தேதி காலை 6 மணிக்கு ஸ்ரீசாய்சத் சரிதம், 10 மணிக்கு மகாபாரத தொடர் விளக்கவுரை, இரவு 8 மணிக்கு இன்னிசை விருந்தும் நடக்கிறது. தொடர்ந்து 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை காலை 9.30 மணி, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, மாலை 5 மணிக்கு பரத நாட்டியமும், இரவு 9 மணிக்கு கதகளியும் நடக்கிறது.
விழாவில் 3-ந் தேதி பகல் 12 மணிக்கு அகவல் பாராயணமும், 4-ந் தேதி மாலை 3.30 மணிக்கு கர்நாடக சங்கீதமும், இரவு 9 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சியும், 5-ந் தேதி இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை பூஜையும், 6-ந் தேதி மாலை 5 மணிக்கு யோகா நிகழ்ச்சியும், 7-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு கவி அரங்கமும்,
3.30 மணிக்கு பக்தி கான இசையும், இரவு 8 மணிக்கு அகிலத்திரட்டு விளக்கவுரையும், 8-ந் தேதி மதியம் 1 மணிக்கு தெய்வீக சத்சங்க பக்தி இன்னிசையும், 2 மணிக்கு வில்லிசையும், இரவு 8 மணிக்கு பாலே என்னும் நாடகமும், 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியும் நடக்கிறது.
விழாவில் கடைசி நாளான 9-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து களப பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, 5 மணிக்கு திருநடை அடைப்பு, 5.30 மணிக்கு பூமாலை, பகல் 12 மணிக்கு குத்தியோட்டம், 12.30 மணிக்கு சிந்தனை சொல்லரங்கம், மாலை 5 மணிக்கு நடைதிறப்பு, இரவு 9 மணிக்கு பக்தி இன்னிசை, 9.30 மணிக்கு அம்மன் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனியும், 1 மணிக்கு ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது.
தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் தினசரி காலை 6.30 மணி, மதியம் 1 மணி, மாலை 6.30 மணி இரவு 9 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

ஸ்ரீசொர்ண பைரவரை ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் ஒவ்வொரு வியாபரத் தலங்களின் கல்லாப்பெட்டி அருகிலும், ஆபரணக் கடைகளிலும் இந்த சொர்ண பைரவரின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது.
செல்வத்திற்கே அதிபதியான குபேரர் மற்றும் மகாலட்சுமி போன்றவர்களுக்கே பொன் கொடுக்கும் தலைமைக் கடவுளாக ஸ்ரீ சொர்ண பைரவர் கூறப்படுகின்றார். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது.
ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் விரதம் இருந்து வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. ஸ்ரீசொர்ண பைரவரை ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் ஒவ்வொரு வியாபரத் தலங்களின் கல்லாப்பெட்டி அருகிலும், ஆபரணக் கடைகளிலும் இந்த சொர்ண பைரவரின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீ சொர்ண பைரவரின் படம் அல்லது பொற்காசு அல்லது டாலர் போன்றவற்றை வடக்குத் திசை நோக்கி வைத்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். இப்படத்திற்கு நல்ல மணமுள்ள வண்ண மலர்களை மாலையாக அணிவித்து தாம்பூலம், பழம், தேங்காயுடன் மூன்று வேளையும் பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஸ்ரீ சொர்ண பைரவருக்கு அவல் பாயாசம் விருப்பமான நைவேத்தியமாகக் கூறப்படுகிறது.
மிகவும் எளிமையான இந்த நைவேத்தியத்திற்கு மனமிரங்கி தன்னை வழிபடும் அன்பர்களின் இல்லங்களில் செல்வ மழையைப் பொழியச் செய்வார். இந்த சொர்ண பைரவரின் படத்தை டாலரையோ சட்டைப்பை மற்றும் கைப்பை பர்சுகளில் வைத்தால் பணத்தட்டுப்பாடு வராது என்று கூறப்படுகிறது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சொர்ண பைரவர் படத்தினை எத்தகைய அலங்காரங்களுக்கும் பயன்படுத்தக் கூடாது. கார், மோட்டார் சைக்கிள், வீட்டு வாசற்படி, வரவேற்பறை போன்ற பலரின் நடமாட்டம் உள்ள இடங்களில் வைக்கக்கூடாது. புனிதமான பூஜை அறையில் அல்லது பூஜை செய்யப்படும் இடத்தில் மட்டுமே வைத்து வணங்க வேண்டும்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தப் படத்தில் அணிவிக்கப்படும் பூமாலை அல்லது பூக்களை வாடி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாடிய பூக்களையோ பிளாஸ்டிக் காகிதப் பூக்களையோ எந்தக் காரணத்தைக் கொண்டும் அணிவிக்கக் கூடாது.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரமான 4.30 மணி முதல் 7.00மணி வரை , 1 1நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்ராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாமம் செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடும். வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும் வியாபார முன்னேற்றம், பணி செய்யும் இடத்தில் உள்ள பிரச்னைகள் நீங்கி மனதில் மகிழ்ச்சியை பெறலாம்.
சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டுக்கான மாசி மகம் தீர்த்தவாரிக்காக வைத்திக்குப்பம் கடற்கரையில் சுத்தம் செய்து பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி மகம் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரிக்கு மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், லட்சுமி நாராயண பெருமாள், செஞ்சி ரங்க நாதர், திண்டிவனம் நல்லியகோடான் நகர் சீனிவாச பெருமாள் மற்றும் வெளியூர்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கொண்டுவரப்படுவது வழக்கம்.
அதேபோல் புதுவை மணக்குள விநாயகர் மற்றும் உள்ளூரில் இருந்து உற்சவ மூர்த்திகள் வைத்திக்குப்பம் கடற் கரைக்கு கொண்டு வரப்படும். அதனைதொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டுக்கான மாசி மகம் தீர்த்தவாரிக்காக வைத்திக்குப்பம் கடற்கரையில் சுத்தம் செய்து பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் புதுவை மணக்குள விநாயகர் மற்றும் உள்ளூரில் இருந்து உற்சவ மூர்த்திகள் வைத்திக்குப்பம் கடற் கரைக்கு கொண்டு வரப்படும். அதனைதொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டுக்கான மாசி மகம் தீர்த்தவாரிக்காக வைத்திக்குப்பம் கடற்கரையில் சுத்தம் செய்து பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் நேற்று காலை பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த பால்குட ஊர்வலம் திண்டுக்கல் பெரியகடைவீதியில் உள்ள நாடார் பேட்டை கருப்பணசாமி கோவிலில் இருந்து புறப்பட்டது. இதில் ஏராளமானோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் 4 ரதவீதிகள் வழியாக கோட்டை மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. இதையடுத்து அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.
இதைத் தொடர்ந்து கோட்டை மாரியம்மன் கோவில் முன்மண்டபத்தில் மாலை 6 மணிக்கு மாதர் சங்கத்தினரால் மாக்கோலம், பூக்கோலமிடப்பட்டது. மேலும் பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்க்கை அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதன்பின்னர் கோட்டை மாரியம்மனுக்கு சந்தனகாப்பு, பூஜை, நைவேத்தியம் நடத்தப்பட்டது. மேலும் கோவில் கலையரங்கில் நண்பர்கள் இசைக்குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
இதில் உறவின்முறை தலைவர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்க தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஸ்ரீதரன், துணை தலைவர் பூமண்டலம், உதவி செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாதர் சங்கத்தினர் செய்து இருந்தனர்.

வால்பாறையில் காமாட்சியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் அன்னை ஶ்ரீ காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 53-ம் ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நெய்வேத்திய பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடத்தப்பட்டு பல்வேறு கோவில்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்து காமாட்சி அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது.
27-ந் தேதி கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காமாட்சி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறுகிறது.
பின்னர் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து சீர்வரிசைகளுடன் ஏகாம்பர ஈஸ்வரர் மாப்பிள்ளை அழைத்து வந்து ஸ்ரீ அன்னை காமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மாவிளக்கு எடுத்து வால்பாறையின் முக்கிய வீதிகள் வழியாக அன்னை ஶ்ரீகாமாட்சியம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாகமிட்டியினர் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.