
திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடத்தப்பட்டு பல்வேறு கோவில்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்து காமாட்சி அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது.
27-ந் தேதி கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காமாட்சி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறுகிறது.
பின்னர் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து சீர்வரிசைகளுடன் ஏகாம்பர ஈஸ்வரர் மாப்பிள்ளை அழைத்து வந்து ஸ்ரீ அன்னை காமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மாவிளக்கு எடுத்து வால்பாறையின் முக்கிய வீதிகள் வழியாக அன்னை ஶ்ரீகாமாட்சியம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாகமிட்டியினர் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.