என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கன்னியாகுமரியில் 3 கோவில்களில் காவடி கட்டு விழா நடந்தது இதையொட்டி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவடிகளை பக்தர்கள் மேளதாளம் முழங்க விடிய-விடிய வீதி உலாவாக எடுத்துச் சென்றனர்.
கன்னியாகுமரி மறக்குடி தெருவில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் காவடி கட்டு விழா நடந்தது. இதையொட்டி காலையில் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக வந்த நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் சுப்பிரமணியசுவாமி, விநாயகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் அன்னதானம், மாலையில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பன்னீர் காவடியை பக்தர்கள் மேளதாளம் முழங்க வீதி உலாவாக எடுத்து வந்தனர். இந்த காவடி வீதிஉலா விடிய-விடிய நடந்தது.
இதேபோல கன்னியாகுமரி வடக்குத் தெருவில் உள்ள ப்ரானோபகாரி தர்ம மடத்திலும் காவடி கட்டு விழா நடந்தது. இதையொட்டி காலையில் கடற்கரையிலுள்ள பரசுராமர் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் மேளதாளம் முழங்க அபிஷேக பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் பகல் 12 மணிக்கு கோவிலில் கலச பூஜையும், மதியம் 1 மணிக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. மாலையில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பன்னீர் காவடியை பக்தர்கள் மேளதாளம் முழங்க வீதி உலாவாக எடுத்து வந்தனர். இந்த காவடி பவனி விடிய -விடிய நடந்தது.
மேலும் கன்னியாகுமரி கலைஞர் குடியிருப்பில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் காவடி கட்டு விழா நடந்தது. விழாவையொட்டி காலையில் விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவிலில் இருந்து பக்தர்கள் மேளதாளம் முழங்க பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் காவடிக்கு மகா அபிஷேகமும், காவடியில் பன்னீர் நிரப்பி காவடி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பன்னீர் காவடி பக்தர்கள் மேளதாளம் முழங்க வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இந்த காவடி பவனி விடிய விடிய நடந்தது.

தேவ பிள்ளைகளே இந்த தவக்காலத்தில் சிலுவைபாடுகளை நாம் நினைவுகூரும் வேளையில் நாம் பெருமை உள்ளவர்களாய் இல்லாமல் தாழ்மையுள்ளவர்களாய் காணப்பட தேவன் தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள், பெருமையுள்ளவர்ளுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்( 1 பேதுரு 5:5) பெருமையுடையவன் எனக்கு எல்லாம் தெரியும். ஒருவரும் எனக்கு போதிக்க வேண்டியதில்லை என்று எல்லாவற்றிலும் எதிர்த்து நிற்பான். அவனிடத்திலிருந்து கோபம், எரிச்சல், பேராசை, பொறாமை என்ற துர்குணங்கள் தோன்றும். நான் செய்வது சரியென்று கூறுவான். அவர்கள் செயல்களோ கொந்தளிக்கும் கடலைப்போல காணப்படும். ராஜாவாகிய சவுல் தன்னைத்தானே உயர்த்தி பெருமை கொண்ட போது அவன் விழுந்தான். அபிஷேகத்தையும் வேத பாதுகாப்பையும் இழந்தான். தன் ஆயுதத்தால் மரித்து போனான்.பெருமையுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கின்றார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தாழ்மை என்பது ஓர் இளைப்பாறுதலுக்கான ஜீவிதம், தாழ்மையுள்ள ஒரு மனிதன் அவமானப்படும் போதும். நிந்திக்கப்படும் போதும் துன்புறுத்தப்படும்போதும், தன் உணர்வால் அவன் மனதை புண்படுத்த முடியாது. ஏனென்றால் அவன் தாழ்மையின் சுபாவத்தை புண்படுத்த முடியாது. தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் இரக்கமும் கிருபையும் அளிக்கிறார்.
தாழ்மையுள்ளவன் ஒருபோதும் இடறல் அடைவதில்லை. தாழ்மை இளைப்பாறுதலான ஜீவிதம். பரிசுத்தமான வாழ்க்கை. தாழ்மையுடைவர்கள் சாந்தமும் சமாதானமும் நிறைந்த வார்த்தைகளை பேசுவார்கள். அவர்கள் வாழ்க்கை முழுவதையுமே தேவன் மறுரூபப்படுத்தி செழித்தோங்கச் செய்கிறார்.
இதேபோல் தான் ஏசுவும் தன் பிதாவின் சித்தத்தின் படியே உலகத்தின் பாவத்தை எல்லாம் சிலுவையில் சுமந்து பலியாக வேண்டும் எனறு தெரிந்தும் கூட இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மை தாமே தாழ்த்தினார். பிதா அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தினார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.
எனவே தேவ பிள்ளைகளே இந்த தவக்காலத்தில் சிலுவைபாடுகளை நாம் நினைவுகூரும் வேளையில் நாம் பெருமை உள்ளவர்களாய் இல்லாமல் தாழ்மையுள்ளவர்களாய் காணப்பட தேவன் தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
சகோ. அல்போன்ஸ், பல்லடம்

கும்பகோணத்தில் மாசிமக திருவிழாவையொட்டி 63 நாயன்மார்கள் வீதி உலா வழக்கமான முறைப்படி நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்பட 6 சிவன் கோவில்களில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3 வைணவ கோவில்களில் 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 4-ம் நாள் விழாவையொட்டி சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 63 நாயன்மார்களும் வீதி உலாவாக ஆதிகும்பேஸ்வரர் கோவில் வீதி மற்றும் நாகேஸ்வரர் கோவில் வீதிகளுக்கு செல்வது வழக்கம். இதை இரட்டை வீதி உலா என அழைப்பார்கள்.
ஆனால் நேற்று நடந்த 4-ம் நாள் விழாவில் 63 நாயன்மார்கள் வீதி உலா ஆதிகும்பேஸ்வரர் கோவில் வீதிகளில் மட்டும் நடந்தது. நாகேஸ்வரர் கோவில் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடப்பதால் அங்கு நாயன்மார்கள் வீதிஉலா நடைபெறவில்லை.
மாசிமக திருவிழாவில் நாயன்மார்கள் வீதிஉலா வழக்கமான முறைப்படி நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருவானைக்காவல் பிடாரியார் இரணியம்மன் கோவில் திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யானை வாகனத்தில் அம்மன் புறப்பட்டு பல்வேறு முக்கிய வீதிகளில் வலம் வருவார்.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி கோவிலின் சார்பு கோவிலான, எல்லை காவல் தெய்வமான பிடாரியார் இரணியம்மன் கோவில் திருவானைக்காவல் ஊரின் தென்கிழக்கு மூலையில் உள்ளது.
மிகுந்த வரப்பிரசாதியான இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் மாசிமாதத்தில் ஒருவாரம் முழுவதும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.திருச்சி மாவட்டத்தில் இரணியம்மன் கோவில் திருவிழாவிற்கு பிறகுதான் மற்ற ஊர் கிராம தெய்வங்களுக்கு திருவிழாக்கள் நடைபெறும். இவ்விழாவிற்காக கடந்த 9-ந்தேதி முதல்காப்பும், 16-ந்தேதி இரண்டாம் காப்பும், 23-ந்தேதி 3-வது காப்பும் கட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து முதல்நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) யானை வாகனத்திலும், 2-வது நாள் குதிரை வாகனத்திலும், 3-வது நாள் பூதவாகனத்திலும் அம்மன் புறப்பட்டு பல்வேறு முக்கிய வீதிகளில் வலம் வருவார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 24-ந்தேதி இரணியம்மன் பூந்தேரில் எழுந்தருளி 27-ந்தேதி வரை அனைத்து தெருக்களிலும் வீதியுலா வருவார்.
அப்போது வழிநெடுக பக்தர்கள் ஆடுகள் பலியிட்டும், மாவிளக்கு வைத்தும் வழிபடுவர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் தலைமையில், கோவில் அலுவலர்கள், உள்ளூர் பக்தர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

இந்த சந்திரனுக்குரிய மந்திரத்தை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றும் வேளையில் உச்சரிக்க வேண்டும். சந்திரனுக்குரிய தோஷங்கள் விலகி ஓடும்.
‘பத்ம த்வாஜய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
ஸ்ரீ வேங்கடலாசலபதி தந்நஸ் ஸோம ப்ரசோதயாத்’
இந்த சந்திரனுக்குரிய மந்திரத்தை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றும் வேளையில் உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிக்கும் முன்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபத்தை நெல் பரப்பி அதன்மீது வைக்க வேண்டும். பின்னர் வெண் பொங்கல் நைவேத்தியம் படைத்து, 108 எண்ணிக்கையில் மல்லிகை பூவைக் கொண்டு வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து, சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் 11 முறை ஜெபித்து வந்தாலும் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும். சந்திரனுக்குரிய தோஷங்கள் விலகி ஓடும்.
ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன். எனவே தாயின் சாபம் பெற்றவர்கள், தாயை நல்ல முறையில் பேணி பாதுகாக்காதவர்கள், அவசியம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சந்திரனை வழிபடுவது நல்ல பலன்களை அள்ளித்தரும்.

நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.
நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதேபோல் ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், நடைபெற்றது.
திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹரமங்களமாருதி ஆஞ்சநேயர், நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் எழுந்தருளியுள்ள விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர் சன்னதிகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சாமி, அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகன்நாயகி அம்பாள் சமேத பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு மாசி மக பிரம்மோற்சவ விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று மாலை சாமி, அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.
பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு “பாரிஜாத வனம், தருவனம், கற்பகவனம்” என்ற புராணப்பெயர்கள் உண்டு. இத்தல இறைவன் “களர்முளை நாதேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார்.
சிதம்பரம், பேரூரில் ஆனந்த தாண்டவம், திருவாரூரில் அஜபா தாண்டவம், மதுரையில் ஞான சுந்தர தாண்டவம், அவினாசியில் ஊர்த்துவ தாண்டவம், திருமுருகன் பூண்டியில் பிரம்ம தாண்டவம் தந்தருளிய சிவபெருமான் இத்தலத்தில் பிரம தாண்டவ தரிசனம் தந்துள்ளார். 80 அடி உயர ராஜ கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. சிவன், அம்மன் இருவரும் கிழக்கு நோக்கி தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.
இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும்; கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்,
திருக்களர்,
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சித்தநாத் ஆசிரமம் உள்ளது. இங்குள்ள மிகப்பெரிய சிவலிங்கத்தில் என்ன அதிசயம் என்றால், இது பாதரசத்தால் உருவாக்கப்பட்ட சிவலிங்கமாகும்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சித்தநாத் ஆசிரமம் உள்ளது. இங்கு மிகப்பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கத்தில் என்ன அதிசயம் என்றால், இது பாதரசத்தால் உருவாக்கப்பட்ட சிவலிங்கமாகும்.
பாதரசத்தை சுத்தப்படுத்தி கட்டுவது என்பது மிகப்பெரிய விஷயம். அது பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்களுக்கு மட்டுமே கைவந்த கலை என்று சொல்லப்படுகிறது. அப்படி ஒரு சித்தரால் வடிவமைக்கப்பட்டது,
இந்த சிவலிங்கம் என்று சொல்கிறார்கள். சித்த மார்க்கத்தில் செல்பவர்கள், இந்த ஆசிரமத்திற்குச் சென்று பாதரச லிங்கத்தை தரிசிக்கலாம். இதன் அருகாமையே நமக்கு பல நல்ல பலன்களைத் தருமாம்.

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் மதுரையில் தமக்கென கோவில் அமைக்க முடிவு செய்து, வைகைக் கரையில் இக்கோயிலை அமைத்ததாக செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.
மூலவர் – வீர ஆஞ்சநேயர்
தீர்த்தம் – அழகர் கோயில் தீர்த்தம்
ஆகமம் – பாஞ்சராத்ரம்
பழமை – 500 வருடங்களுக்கு முன்
ஊர் – வண்டியூர்
மாவட்டம் – மதுரை
மாநிலம் – தமிழ்நாடு
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் மதுரையில் தமக்கென கோயில் அமைக்க முடிவு செய்து, வைகைக் கரையில் இக்கோயிலை அமைத்ததாகவும், இதற்கென அவர்கள் தனியே ஆஞ்சநேயர் விக்ரகத்தினை ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத்தொடங்கியதாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.
வைகை நதிக்கறையில் தென் திசை நோக்கி அமைந்துள்ள இத்தலம் வைகை ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படினும் கூட இக்கோயிலின் வாசலுக்கு முன்பாக மட்டுமே தண்ணீர் தொட்டுச் செல்லும் என்பது பெருமையாகக் குறிப்பிடத்தக்க செய்தியாகக் கூறப்படுகிறது.
இத்தலத்துடன் இணைந்து சிவன், விநாயகர், நாகர் மற்றும் பாண்டி முனிசாமிகளுக்கு தனிச்சந்நிதிகள் உள்ளது. இங்கு நைவேத்தியமாக தயிர் சாதம் படைக்கப்படுகிறது. இத்தலத்தில் ஆஞ்சநேயர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
திருவிழா:
மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், விளக்கு பூஜைகளும் நடத்தப்படுகிறது. மேலும் சித்திரைத் திருவிழாவின் போது அங்க பிரதட்சண நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
வேண்டுகோள்:
திருமணத்தடை, குழந்தைப் பேறு இல்லாமைக்கும், தீராத வயிறு வேதனைக்கும் இங்குள்ள ஆஞ்சநேயரை மனம் உறுகி வழிபட்டால் அவை விரைவில் குணமாகிறது. மேலும், உடல் பலம் கொடுக்கவும், பயம் நீங்கிடவும், நல்ல புத்தி கிடைக்கவும். நோய்கள் தீரவும் வாழ்க்கை கீர்த்தி பெறவும் இங்கு பிரார்த்தனை செய்தால் நற்பலன் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
எண்ணிய காரியம் நிறைவேறினால், இங்குள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு தயிர் சாதத்தை நைவேத்தியமாகப் படைத்து அர்ச்சனை செய்தும், வடை மாலை, வெற்றிலை மாலை மற்றும் துளசி மாலை சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் அதிகாலையிலேயே நடை திறந்திருக்கும்.
அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில்,
வண்டியூர், மதுரை,
மதுரை மாவட்டம்.
+91 452 262 3060 (மாற்றங்களுக்குட்பட்டது)

திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் தெய்வானையுடன் 335 நாட்களுக்கு பிறகு வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந் தேதி மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் கோவில் திறக்கப்பட்டு கருவறையில் நேரடியாக சாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் மேலும் கூடுதல் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு கடந்த 3-ந்தேதி முதல் அனைத்து அர்ச்சனைகளும் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 11-ந்தேதி முதல் கோவிலுக்குள் தங்கத் தேர் உலா நடைபெற்றது. ஆனால் நகர் வீதிகளில் சுவாமி புறப்பாடு இல்லாத நிலை இருந்து வந்தது. கோவிலுக்குள் இருந்து சுவாமி மேள தாளங்கள் முழங்க நகர் வீதிகளில் வலம் வரும் நாளை பக்தர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் கடந்த 335 நாட்களுக்கு பிறகு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமியுடன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், சர்வ அலங்காரமும், மகா தீப, தூப ஆராதனையும் நடந்தது. அதன்பின் மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் அமர்ந்து நகர் உலா வந்தார். சன்னதி தெரு கீழ ரத வீதி, மேல ரத வீதி மற்றும் பெரிய ரத வீதிகளில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 335 நாட்களுக்கு பிறகு சுவாமி எழுந்தருளியதால் பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மாசி திருக்கல்யாண விழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி முருகன் சன்னதி எதிரே திருக்கல்யாணத்திற்கு கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. 25-ந் தேதி காலை 8 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனை பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளச் செய்து பறக்கையில் உள்ள காசிவிசுவநாதர் கோவிலில் அம்மனுக்கு திரு நீராட்டு நடக்கிறது.
பின்னர் அம்மனை மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பல்லக்கு வாகனத்தில் ஆசிரமம் கிராமத்திற்கு எடுத்து வந்து, ஆசிரமம் சோழன் திட்டை அணைக்கட்டு கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதன்பிறகு மதியம் திருக்கல்யாண சாப்பாடு நடக்கிறது.
மாலையில் அறம் வளர்த்த நாயகி அம்மனை அலங்கரித்து தந்தப்பல்லக்கில் பூமாலை தோரணம் கட்டி மேளதாளம் முழங்க ஆசிரமம் கிராமத்தில் இருந்து வீதி வழியாக பக்தர்கள் வெற்றிலை, பூமாலை, திருமண பட்டு, மஞ்சள், குங்குமம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தாம்பூல தட்டுடன் ஊர்வலமாக தாணுமாலய சாமி கோவிலை வந்தடைகின்றனர்.
அங்கு இரவு 8 மணிக்கு அலங்கார மண்டபத்தில் வைத்து ரிஷப வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் தாணுமாலயசாமி கரத்தில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு, கருடவாகனத்தில் திருமால் வீற்றிருக்க அவரது முன்னிலையில் தாணுமாலய சாமி கையிலுள்ள திருமாங்கல்யம் வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் குலவை யிட அறம் வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் கட்டப்படும்.
திருமணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம், குங்குமம், வெற்றிலைச் சுருள் ஆகியவை வழங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து திருமணம் முடிந்த தம்பதிகளான உமாமகேஸ்வரர் மற்றும் திருமால் அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.
மறுநாள் மாலையில் இந்திரன் தேர் என்ற சப்பரத்தில் ரத உற்சவம் நடக்கிறது. இரவு ஆறாட்டு விழாவுடன் திருக்கல்யாண விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.