search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி மறக்குடி தெருவில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் காவடி கட்டு விழா நடந்த போது எடுத்த படம்.
    X
    கன்னியாகுமரி மறக்குடி தெருவில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் காவடி கட்டு விழா நடந்த போது எடுத்த படம்.

    கன்னியாகுமரியில் 3 கோவில்களில் பக்தர்கள் காவடி எடுத்து விடிய-விடிய வீதிஉலா

    கன்னியாகுமரியில் 3 கோவில்களில் காவடி கட்டு விழா நடந்தது இதையொட்டி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவடிகளை பக்தர்கள் மேளதாளம் முழங்க விடிய-விடிய வீதி உலாவாக எடுத்துச் சென்றனர்.
    கன்னியாகுமரி மறக்குடி தெருவில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் காவடி கட்டு விழா நடந்தது. இதையொட்டி காலையில் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக வந்த நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் சுப்பிரமணியசுவாமி, விநாயகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் அன்னதானம், மாலையில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பன்னீர் காவடியை பக்தர்கள் மேளதாளம் முழங்க வீதி உலாவாக எடுத்து வந்தனர். இந்த காவடி வீதிஉலா விடிய-விடிய நடந்தது.

    இதேபோல கன்னியாகுமரி வடக்குத் தெருவில் உள்ள ப்ரானோபகாரி தர்ம மடத்திலும் காவடி கட்டு விழா நடந்தது. இதையொட்டி காலையில் கடற்கரையிலுள்ள பரசுராமர் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் மேளதாளம் முழங்க அபிஷேக பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் பகல் 12 மணிக்கு கோவிலில் கலச பூஜையும், மதியம் 1 மணிக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. மாலையில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பன்னீர் காவடியை பக்தர்கள் மேளதாளம் முழங்க வீதி உலாவாக எடுத்து வந்தனர். இந்த காவடி பவனி விடிய -விடிய நடந்தது.

    மேலும் கன்னியாகுமரி கலைஞர் குடியிருப்பில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் காவடி கட்டு விழா நடந்தது. விழாவையொட்டி காலையில் விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவிலில் இருந்து பக்தர்கள் மேளதாளம் முழங்க பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் காவடிக்கு மகா அபிஷேகமும், காவடியில் பன்னீர் நிரப்பி காவடி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பன்னீர் காவடி பக்தர்கள் மேளதாளம் முழங்க வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இந்த காவடி பவனி விடிய விடிய நடந்தது.
    Next Story
    ×