என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சன்னதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.
    செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்ய தகுந்த நேரம், காலம் உள்ளது. அந்த நேரங்களில் பரிகாரம் செய்தால் முழு பலனையும் பெற முடியும். சுபமான பரிகாரங்களை வளர்பிறை நாட்களிலும் துயரம், துக்கம் நீக்கும் பரிகாரங்களை தேய்பிறை நாட்களிலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சன்னதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.

    செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமையை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்துக்கு 4,8,12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது.

    பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4,8,12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக்கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்த குழந்தையின் 4,8,12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக்கூடாது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் மூன்றாம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில் வெளிப்பிரகாரத்தில் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தசரா திருவிழா கொடியேற்றம் அன்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.

    இரண்டாம் திருவிழாவான நேற்றுமுன்தினம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் பக்தர்களுக்கு கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் வெளிப்பிரகாரத்தில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு காப்புக்கட்டி சென்றனர்.

    தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் ஊருக்கு வெளியே புறவழிச் சாலை அருகே தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    வெளியூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வரும் உள்ளூர் வாசிகள் அனைவரும் சுமார் 2 கிலோ மீட்டர் முதல் 3 கிலோ மீட்டர் வரை நடந்து தான் வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. மேலும் குலசேகரன்பட்டினம் ஊர் நுழைவுவாயில் அனைத்து பகுதிகளும் பேரிகார்டு மூலம் அடைக்கப்பட்டுள்ளதால் உள்ளூர்வாசிகள் வெளியில் சென்று திரும்பும்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க உள்ளூர்வாசிகள் சிரமமின்றி வெளியூர் சென்று வருவதற்கு போலீசார் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பிரம்மோற்சவ விழா நடந்து வருவதால், சற்று தூரத்தில் நின்றபடி பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவர் மலையப்பசாமியை வழிபட்டு செல்கிறார்கள்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை சிறிய சேஷ வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு ஹம்ச வாகன சேவை நடந்தது.

    அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பிரம்மோற்சவ விழா நடந்து வருவதால், சற்று தூரத்தில் நின்றபடி பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவர் மலையப்பசாமியை வழிபட்டு செல்கிறார்கள். மேலும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் அனைத்து நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒளி பரப்பப்படுகிறது.

    மாவிளக்கிட்டு பூஜை செய்ய பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.
    திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி இலையால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்ய பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.

    பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு. சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.

    அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது. பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைப்பது மரபு. எல்லோரும் பக்திப் பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து திருப்பதி வெங்கடேசப்பெருமாளை நினைத்து வழிபடும் விழாவானதால், அன்று வீட்டிலுள்ள பிள்ளைகளின் நெற்றியில் நாமம் இடுவர். வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர். இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.
    வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது.
    பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக்கூடாது.

    காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும்போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும்.

    காலையில் 4.30 மணிலிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

    காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக்கூடாது.

    விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது. விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது.

    பால், தயிர், பச்சைக்காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது.

    நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்குமுன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக்கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

    பால் பொங்கி வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    உப்பு

    வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்கவும்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நேற்று தொடங்கியது. தாயார் திருவடி சேவை 12-ந் தேதி நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நேற்று தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான நேற்று பகல் 1.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்டபம் வந்தடைந்தார். கொலு, இரவு 7.45 மணிக்கு ஆரம்பித்து 8.45 மணி வரை நடைபெற்றது. இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    2-ம் நாளான இன்று முதல் 6-ம் திருநாளான 11-ந் தேதி வரையும் மற்றும் 8-ம் திருநாளான 13-ந் தேதியும் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார்.

    7-ம் திருநாளான 12-ந் தேதி, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான 14-ந் தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இணைஆணையர் (பொறுப்பு) கல்யாணி, உதவிஆணையர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் புரட்டாசி திருவிழா நாட்களில் அய்யா வைகுண்ட தர்மபதி அன்னம், கருட வாகனம், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வருவார்.
    சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்திப்பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) காலை அய்யா திருநாம கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.

    முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செங்கொடி, பதியை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடியேற்றம் நடக்கும். அன்று மாலை அய்யா காளை வாகனத்தில் பதிவலம் வருவார். அதை தொடர்ந்து திருவிழா நாட்களில் அய்யா வைகுண்ட தர்மபதி அன்னம், கருட வாகனம், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வருவார்.

    விழாவின் 8-ம் நாளான 15-ந் தேதி இரவு முக்கிய நிகழ்வான சரவிளக்கு பணிவிடை, திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடைபெறுகிறது. 17-ந் தேதி காலை 11 மணிக்கு திருத்தேர் உற்வசமும், அன்று இரவு அய்யா பூம்பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதலும் நடக்கிறது., அதைதொடர்ந்து திருநாம கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறுகிறது.
    அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. முதல்நாளில் அம்மன் குமாரி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மகாளய அமாவாசையை அடுத்த நாள் நவராத்திரி விழா தொடங்குவது வழக்கம். அதன்படி நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. நேற்று முதல் 9 நாட்களும் மண்டபத்தில் அம்மன் கொலுவில் இருப்பார்.

    முதல் நாளான நேற்று அம்மன் குமாரி அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளி கோவிலின் உள்பிரகாரத்தை வலம் வந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அம்மனை வணங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து கொலு மண்டபத்தை அம்மன் சென்றடைகிறார்.

    10-ம் நாளான விஜயதசமி அன்று வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் அம்மன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவில் உள்பிரகாரம் மின் அலங்காரத்தில் ஜொலிக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    முன்னதாக நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை என்பதால் காலையில் இருந்தே கார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும், பாத யாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் சமயபுரம் வந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். சிலர் முடிகாணிக்கை செலுத்தியும், குழந்தையை கரும்புத்தொட்டிலில் சுமந்து சென்றும், அக்னிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வந்து கோவில் முன்புறம் தீபமேற்றி வழிபட்டனர்.
    கடலுக்குள் இருக்கும் நவக்கிரக மண்டபம் தான் தேவிபட்டினம். நமது முன் ஜென்ம பாவங்களில் விலகி, முன்னோர்களின் ஆசியைப் பெற இது மிகவும் ஏற்ற தலம்.
    ராவணனால் சீதை கடத்தி செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள். அவளை மீட்க வந்த ராமபிரான் தேவிபட்டினம் கடற்கரையில் அமர்ந்து மணலை ஒன்பது பிடி எடுத்து பிரதிஷ்டை செய்தார்.

    அந்த ஒன்பது கற்கள் ‘நவபாஷாணம்’ என்ற பெயரில் நவக்கிரகங்களாக வழிபடப்படுகிறது. இந்த ஒன்பது கிரகங்களும் கடலுக்குள் இருப்பது குறிப்பித்தக்கது. நவக்கிரகங்கள் உள்ள இந்த தலத்தில் நீராடினால் மிகவும் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.

    நமது முன் ஜென்ம பாவங்களில் விலகி, முன்னோர்களின் ஆசியைப் பெற இது மிகவும் ஏற்ற தலம். இந்த ஒன்பது கிரகங்களையும நவதானியங்கள் வைத்து வழிபட்டால் சகல பலன்களும் கிடைக்கும்.

    ராமமேஸ்வரம் அல்லது ராமநாதபுரத்திலிருந்து இறங்கி இவ்ஊருக்கு செல்லலாம். ராமமேஸ்வரத்திலிருந்து 77 கி.மீ. தொலைவிலும், ராமநாத புரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
    கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட உள்ளது. பிரம்மோற்சவ விழாவை காண ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்குள் அனுமதிக்கபடுவார்கள்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலத்துடன் இன்று தொடங்கியது. மின்விளக்கு, மலர் அலங்காரத்தில் கோவில் ஜொலிக்கிறது. இன்று மாலை 5.10 மணிமுதல் 5.30 மணிக்கு இடையே ஆகம முறைப்படி வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று இரவு அங்குரார்ப்பணம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு பெரிய சே‌ஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஏழுமலையான் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.

    சீனிவாச பெருமாள் குடியிருக்கும் மலையும் அவர் சயனித்து இருப்பதும் சே‌ஷத்தின் (ஆதிசே‌ஷன்) மீது என்பதால் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நாளை 7 தலைகளுடன் கூடிய பெரிய சே‌ஷ வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட உள்ளது. பிரம்மோற்சவ விழாவை காண ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்குள் அனுமதிக்கபடுவார்கள்.

    புரட்டாசி மாதம் என்பதால் தமிழக பக்தர்கள் விரதம் இருந்து கோவிந்த மாலை அணிந்து பாத யாத்திரை வருவது வழக்கம். ஆனால் மாலை அணிந்திருந்தாலும் டிக்கெட் இருந்தால் மட்டுமே திருமலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்களுக்காக தினந்தோறும் 3 லட்சம் லட்டுகள் இருப்பு வைத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திருமலையில் உள்ள தரிகொண்ட வேங்கமாம்பா அன்னபிரசாத கூடத்தித்தில் அன்னதானம் வழங்கப்படும்.

    பக்தர்களுக்காக திருப்பதி - திருமலை இடையே 200 அரசு பஸ்கள் மூலம் தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு மாலை அணிந்து வருவார்கள்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திபெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா கோவில் உள்பிரகார மண்டபத்தை மட்டும் சுற்றி வந்தன.

    திருக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் ராகு, கேது, தோ‌ஷம் நீங்கி கன்னிப் பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிகை ஆகும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு நேற்று அனுமதி வழங்கப்படவில்லை.

    2-ம் நாளான இன்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று பக்தர்களுக்கு அனுமதி என்பதால் ஏராளமான பக்தர்கள் நடைதிறப்புக்கு முன்பே அதிகாலையிலேயே கோவிலுக்கு வர தொடங்கினர்.

    அவர்கள் கடற்கரையில் கடல் நீர் எடுத்து, கோவிலுக்கு வந்துசாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    இரவு 9 மணிக்கு அம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் விசுவகர்மசுவரர் திருக்கோலத்தில் எழுந்தருளி பவனி வந்து காட்சி அளிக்கிறார்.கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததாலும், கடும் கட்டுப்பாடுகள் காரணமாகவும் வழக்கத்தைவிட குறைந்த அளவே பக்தர்கள் மாலை அணிந்தனர்.

    இன்று கோவிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்

    இந்த ஆண்டு தொற்று பரவல் மிகவும் குறைந்து கட்டுக்குள் இருப்பதாலும், கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாகவும் ஏராளமானவர்கள் விரதம் தொடங்கி உள்ளனர். திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி பக்தர்கள் 11, 21, 31, 41 நாட்கள் கடும் விரதம் மேற்கொண்டு மாலை அணிந்துள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு மாலை அணிந்து வருவார்கள். மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது குலசையின் சிறப்பாகும்.

    வழக்கமாக கோவிலில் கொடியேற்றப்பட்டதும் பக்தர்களுக்கு பூசாரி கையினால் காப்பு என்ற மஞ்சள் கயிறு வழங்கப்படும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அவர்களுக்கு அந்தந்த ஊர்களிலேயே காப்புகள் அணிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.எனினும் தசரா குழுக்களுக்கு கோவிலில் காப்புகள் இன்று முதல் வழங்கப்படுகிறது.

    குழுவை சேர்ந்தவர்கள் மற்றவர்களுக்கு காப்புகளை வாங்கி செல்லலாம். இதற்காக 5, 10, 50, 100 என தனித்தனியே கவர்களில் லட்சக்கணக்கான காப்புகள் தயார் நிலையில் உள்ளது. இன்று ஏராளமான தசரா குழுவை சேர்ந்தவர்கள் காப்புகளை வாங்கிச் சென்றனர்.

    கல்வி பயிலத் தொடங்கும் முன், இங்கு உள்ள இறைவனை வழிபட்டால் கல்வி தடையின்றி பயிலும் அருள் கிடைக்கும். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சுவாமி : அருள்மிகு எழுத்தறிநாதர்.
    அம்பாள் : அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை, நித்ய கல்யாணி.
    மூர்த்தி : விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சந்திரன், பைரவர், நடராஜர், தட்சிணாமூர்த்தி நால்வர்.
    தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்.
    தலவிருட்சம் : பலா, செண்பகம்.

    தலச்சிறப்பு : ஐராவதம் வழிபட்ட தலம். அகத்தியர் வழிபட்டு இலக்கண உபதேசம் பெற்ற தலம். ஈசன் தாமே கணக்கெழுதிக் கொடுத்த தலமாகும். கல்வி பயிலத் தொடங்கும் முன், இங்கு உள்ள இறைவனை வழிபட்டால் கல்வி தடையின்றி பயிலும் அருள் கிடைக்கும். இத்திருக்கோயிலில் உள்ள சிவலிங்கம் பெரியதாகும்.

    தலவரலாறு : முன் ஒரு சமயத்தில் தான் பெற்ற சாபம் காரணமாக சூரியன் தன்னுடைய பொலிவை இழந்து ஒளி குறைந்து இருக்கும் சமயம் தனக்கு எங்கு சாபம் நிவர்த்தியாகும் என்று யோகிகளிடம் கேட்க பூர்வ ஜென்ம பாவ நிவர்த்தி தலமான ஐராவதம் வழிபட்ட இன்னம்பரில் உள்ள (ஐராவதேஸ்வரர் ) சுயம்புநாத சுவாமியை வழிபட்டால் சாபம் நிவர்த்தியாகும் எனக் கூறுகின்றனர்.

    இங்கு வந்து சிவ பெருமானை தரிசனம் செய்ய முயலும் பொழுது நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியன சிவபெருமானை மறைக்கவே தன் நிலையை அவர்களிடம் கூறி தனக்கு சாப விமோசனம் கிடைக்க உதவுமாறு வேண்டுகோள் விடுகின்றார். சூரியனின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியோர் சூரியன் வழிபட சற்று விலகி வழி கொடுத்தனர். நந்தி விலகிய தலங்களில் இந்த தலமும் ஒன்று.

    நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

    கோவில் முகவரி :

    அருள்மிகு எழுத்தறி நாதேசுவரர் திருக்கோயில்,
    சுவாமி மலை திருக்கோயிலின் இணைக்கோயிலாகும்.
    இன்னம்பூர் அஞ்சல்,
    திருப்புறம் பியம் (வழி) - 612 003,
    கும்பகோணம் வட்டம்,
    தஞ்சை மாவட்டம்.
    ×