search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில்
    X
    மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில்

    மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் புரட்டாசி திருவிழா நாளை தொடங்குகிறது

    மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் புரட்டாசி திருவிழா நாட்களில் அய்யா வைகுண்ட தர்மபதி அன்னம், கருட வாகனம், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வருவார்.
    சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்திப்பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) காலை அய்யா திருநாம கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.

    முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செங்கொடி, பதியை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடியேற்றம் நடக்கும். அன்று மாலை அய்யா காளை வாகனத்தில் பதிவலம் வருவார். அதை தொடர்ந்து திருவிழா நாட்களில் அய்யா வைகுண்ட தர்மபதி அன்னம், கருட வாகனம், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வருவார்.

    விழாவின் 8-ம் நாளான 15-ந் தேதி இரவு முக்கிய நிகழ்வான சரவிளக்கு பணிவிடை, திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடைபெறுகிறது. 17-ந் தேதி காலை 11 மணிக்கு திருத்தேர் உற்வசமும், அன்று இரவு அய்யா பூம்பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதலும் நடக்கிறது., அதைதொடர்ந்து திருநாம கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறுகிறது.
    Next Story
    ×