என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் குவிந்தனர். 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
இதுமட்டுமின்றி சுபமுகூர்த்தம், மாதபிறப்பு, வார விடுமுறை, பள்ளி விடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் சுற்றுலா தலங்கள், கோவில்களில் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.
அந்த வகையில், இன்று வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதியது. மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட இடங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.
இதனால் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக, தீர்த்தக்காவடி எடுத்து கொண்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள், கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தீர்த்தக்காவடிகளை வைத்து பூைஜ செய்து வழிபட்டனர்.
வைகாசி மாத பிறப்பையொட்டி பழனி கோவிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு சிறப்பு யாகம், 16 வகை அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் அக்னி நட்சத்திர கழு திருவிழா நடந்து வருவதால் உள்ளூர் மட்டுமின்றி சேலம், கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் வந்து கிரிவீதிகளை சுற்றி வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதில் பெண்கள் கடம்ப மலர்களை தலையில் சூடியும், ஆண்கள் பூக்களை கையில் ஏந்தியபடி கிரிவலம் வந்தனர்.
இதற்கிடையே ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்ததால் அடிவாரம், பஸ்நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்து போலீசார் சீரமைத்தனர்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கல் உப்பு பரிகாரத்தை மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும்.
சமீபகாலமாக அதிகமான பணவரவிற்கு உப்பை வைத்து பல பரிகாரங்களை நாம் செய்து வருகின்றோம். உப்பை வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் வாங்கி வைத்து வருவதன் மூலம், மஹாலக்ஷ்மியின் அம்சம் நம் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்திருக்கும் ஒரு சாஸ்த்திரம்.
கடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் பொருட்களுக்கு ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல மகத்துவம் உண்டு என்பதும் உண்மை. இப்படி இருக்கும்போது அந்தத் கடல்தண்ணீரையே காயவைத்து எடுக்கப்படும் இந்த உப்பிற்கு சக்தி அதிகமாக தான் இருக்கும். இதனால் தான் உப்பிற்கு நம் முன்னோர்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். சமுத்திர தண்ணீரில் குளித்தால் சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்பதும் நம் ஐதிகமாக உள்ளது.
நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி குடுவையில் சிறிதளவு கல் உப்பைக் கொட்டி வைத்து அதில் சில்லரை காசுகளை போட்டு சேமித்து வாருங்கள். மாதம் ஒருமுறை அதனை எடுத்து பெருமாள் கோவில்களில் உண்டியலிலோ அல்லது தர்ம காரியத்திற்கோ செலவு செய்யுங்கள். இதனால் உங்களின் வருமானம் அதிகரிக்கும். மன நிம்மதியும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் உங்கள் குடும்பத்தில் நிறைந்து இருக்கும்.
இப்படி மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும். எந்த தடைகள் வந்தாலும் அதனை நம்மால் தகர்த்தெறிய முடியும் என்ற நம்பிக்கையை நம் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையையும், நாம் செய்யும் பரிகாரமும் ஒன்றாக சேர்ந்தால் வெற்றி நிச்சயம். எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல் பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு முன்னேற்றம் வரவில்லை என்று கூறுவது தவறு.

வாடிகனில் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி, அவருடைய கல்லறை அமைந்துள்ள கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நடந்தது.
குமரி மண்ணில் பிறந்து, வளர்ந்து, கிறிஸ்தவத்துக்காக மறைசாட்சியாக மடிந்தவர் தேவசகாயம். அவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக ஆயர் மன்றம் சார்பிலும், கோட்டார், குழித்துறை மறைமாவட்ட ஆயர்கள் சார்பிலும், இறைமக்கள் சார்பிலும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான ரோமில் உள்ள புனிதர் பட்ட பேராயத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
அதைத்தொடர்ந்து திருச்சபையின் பல்வேறு ஆய்வுகளுக்குப்பிறகு அவர் புனிதராக ஏற்றுக் கொள்ளப்பட்டு, நேற்று வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதையொட்டி சனிக்கிழமை வரையிலான 3 நாட்கள் கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்கள் சார்பில் முன்னேற்பாட்டு திருப்பலி நடைபெற்றது.
நேற்று புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி காலையில் தேவசகாயம் கல்லறை அமைந்துள்ள நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. தேவசகாயத்துக்கான புனிதர் பட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்று இந்த திருப்பலியில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கினார். புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டேன்லி சகாயசீலன், இணை பங்குத்தந்தை பிராங்கோ சிலுவை, அருட்பணியாளர் அமலநாதன் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.
திருப்பலி முடிவில் பேராலய பலிபீடத்தின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள புனித தேவசகாயம் கல்லறைக்கு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாகர்கோவில் நகரில் ராமன்புதூர் திருக்குடும்ப ஆலயம், புனிதர் தேவசகாயம் சுட்டுக்கொல்லப்பட்ட தேவசகாய மவுண்டில் உள்ள ஆலயம், நட்டாலம், புலியூர்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலும் சிறப்புத் திருப்பலிகள், சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் நடந்த நிகழ்ச்சியில் ரோமில் தேவசகாயம் புனிதராக அறிவிக்கப்பட்ட நேரத்தில் (இந்திய நேரம் 1.30 மணி) தேவசகாயம் மவுண்ட் பங்கு பேரவை நிர்வாகிகள் அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமையில் கிரீடத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.அந்த கிரீடத்தை மேடையில் வைக்கப்பட்டிருந்த புனிதர் தேவசகாயம் சொரூபத்திற்கு சூட்டினர். இதில் பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உலகம் முழுவதும் பௌத்த மதத்தைப் பின்பற்றும் பௌத்தர்கள் இந்த புத்த பூர்ணிமா தினத்தில், விரதம் இருந்து புத்தரை வழிபாடு செய்து வேண்டிக் கொள்கின்றனர்.
புத்தருக்கு ஞானம் கிடைத்த நாளே இந்த புத்த பூர்ணிமா என்று கூறப்படுகிறது. தற்போது இந்த பண்டிகை புத்தரின் 2584-ஆவது பிறந்த நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நேற்று (மே 15) 12.45க்கு புத்த பூர்ணிமா திதி தொடங்கியது. இது இன்று (மே 16) காலை 9.43 வரை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. கௌதம புத்தரின் பிறந்தநாள் புத்த பூர்ணிமா எனக் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் பௌத்த மதத்தைப் பின்பற்றும் பௌத்தர்கள் இந்த புத்த பூர்ணிமா தினத்தில், விரதம் இருந்து புத்தரை வழிபாடு செய்து வேண்டிக் கொள்கின்றனர். புத்தர் கோயிலுக்குச் சென்று வேண்டுதல் செய்பவர்கள் மற்றவர்களுக்குப் பல பொருட்களைத் தானமாக வழங்குகின்றனர். விரதம் ஏற்றுத் தியானம் இருந்து தங்களது வழிபாடுகளைச் செய்கின்றனர்.
பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்குப் பீகார் மாநிலத்தில் உள்ள கயா என்ற இடம் வழிபாடு செய்ய முக்கிய ஸ்தலமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகத்தில் பல முக்கியமான இடங்களும் உள்ளது.
இந்த புத்த கயா என்னும் இடத்தில் தான் புத்தருக்கு ஞானம் கிடைத்ததாகவும் இன்றுவரை நம்பப்படுகிறது. அவரது பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாம் இந்த புத்த பூர்ணிமாவில் நிகழ்ந்ததாகப் பௌத்தர்கள் அனைவரும் நம்புகின்றனர். அதனால் இந்த நாள் மிகவும் சிறப்புப் பெற்ற நாளாக அவர்களால் கொண்டாடப்படுகிறது.
புத்தர் அவதரித்த வைகாசி மாதம் பெளர்ணமி தினத்தை புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி அல்லது விசாக் என பல பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த புனித நாளில் விரதம் இருந்து மகாவிஷ்ணு வழிபாடு, எமதர்மன், சந்திர வழிபாடு செய்வது விசேஷமாக பார்க்கப்படுகிறது.
வைகாசி பெளர்ணமி நாளில், கங்கை போன்ற புனித நதி நீரை நீங்கள் குளிக்கும் நீரில் இரண்டு சொட்டாவது சேர்ந்து குளிக்கவும். வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்யவும். விளக்கேற்றி வழிபடவும். குறிப்பாக வீட்டில் இருக்கும் துளசி செடிக்கு தீப தூபம் காண்பித்து வழிபடவும்.
வைசாக பூர்ணிமா தினத்தன்று விரதம் அனுஷ்டிப்பதன் மூலம், விஷ்ணு மற்றும் யமராஜாவிடம் இருந்து தெய்வீக வரம் பெறலாம் மற்றும் கோர மரண பயத்திலிருந்து விடுபடலாம்.
வைசாக பூர்ணிமா நாளில் விஷ்ணு மற்றும் சந்திரனை வழிபட்டால் பண நெருக்கடிகள் நீங்கும். மனநோய்களிலிருந்து விடுபடுவதோடு, தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. சாதனை, புகழ், கௌரவம் கூடும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கெங்கையம்மன் தேர்த் திருவிழாவும் சிரசு திருவிழாவும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா உலக அளவில் புகழ் பெற்றது. இந்த திரு விழாவில் வேலூர் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா பாண்டிச்சேரி மற்றும் வட இந்திய மாநிலங்கள், சிங்கப்பூர், மலேசியா இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு கெங்கையம்மன் சிரசு திருவிழா நேற்று நடந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கெங்கையம்மன் தேர்த் திருவிழாவும் சிரசு திருவிழாவும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.
2 ஆண்டுகளாக கெங்கையம்மன் திருவிழா நடைபெறாததால் பக்தர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் இருந்தனர். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால் தேர்த்திருவிழா கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தேர் திருவிழா நடைபெற்றது.
2 ஆண்டுகளுக்கு பின் நடந்த தேர் திருவிழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலையில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. அதிகாலையில் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து நீலிகோவிந்தப்ப செட்டிதெரு, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து கோவிலை சென்றடைந்தது.
வழிநெடுகிலும் நேர்த்திக்கடனாக பக்தர்கள் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து வழிப்பட்டனர். வீடுகளிலும், மாடிகளிலும், சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் திரண்டுநின்று அம்மன் சிரசை வழிப்பட்டனர்.
வழிநெடுகிலும் பூ மாலை அணிவிக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர். அதிகாலை முதலே வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
தொடர்ந்து ஊர்வலமாக பக்தர் வெள்ளத்தில் மிதந்து சென்ற கெங்கையம்மன் சிரசு கோவிலை வந்தடைந்ததும் சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலில் அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மாலையில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
காலை முதலே அறுசுவை உணவு கொண்ட அன்னதானமும், குளிர்பானங்கள், நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் விடிய, விடிய ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வே பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மதியம் 12.15 மணியளவில் தொடங்கி இன்று (திங்கள்கிழமை) காலை 10.20 மணியளவில் நிறைவடைகிறது. இந்த நிலையில் நேற்று பவுர்ணமி மட்டுமின்றி வைகாசி மாத பிறப்பு மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே தனித்தனியாக கிரிவலம் சென்றனர்.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வழியில் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் வந்த பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது. பகலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சில இடங்களின் தரையில் சூடு தாங்க முடியாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நிழலை தேடி ஓடி சென்றனர்.
மாலை சுமார் 5 மணிக்கு மேல் பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. இதனால் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்த பஸ்கள் ஈசான்ய மைதானம், அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சி மைதானம், திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இரவிலும் விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு பக்தர்கள் கற்பூரம், தீபம் ஏற்றி வழிப்பட்டனர். பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அகத்தியான்பள்ளி என்ற ஊரில் அமைந்திருக்கும், அகத்தீஸ்வரர் கோவிலைப் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
மூலவர்: அகத்தீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர்
அம்பாள்: மங்கைநாயகி, பாகம்பிரியாள்
தல மரம்: வன்னி மரம்
தீர்த்தம்: அகத்திய தீர்த்தம், அக்னிதீர்த்தம் (கடல்)
தேவாரப் பாடல் பெற்ற தமிழ்நாட்டின் 274 சிவாலயங்களில், இது 190-வது ஆலயமாகும். அதேபோல் தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு காவிரித் தென்கரை தலங்களில், 126-வது தலம் இது.
மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த இந்த ஆலயத்தில், ராஜராஜன், மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
குலசேகர பாண்டியன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, அவருக்கு தீராத நோய் ஏற்பட்டது. அப்போது அவர் இத்தல உற்சவத்தை நடத்தியதன் பலனாக, அவரது நோய் நீங்கியது.
இந்த ஆலயத்தில் மூலவரான அகத்தீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இறைவனின் சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்பாளின் சன்னிதி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது.
எமதர்மராஜன் வழிபாடு செய்த இந்த ஆலயத்தில், நவக்கிரகங்கள் அதன் அதன் திசையைத் தவிர்த்து, ஒரே திசையைப் பார்த்தபடி அமைந்திருப்பது வித்தியாசமான அமைப்பாக பார்க்கப்படுகிறது.
சிவன்-பார்வதி திருமணம் கயிலை மலையில் நடைபெற இருந்தது. அதைக் காண தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவரும் கயிலையில் குவிந்ததால் அந்தப் பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. உலகை சமநிலைபடுத்த அகத்தியரை, சிவபெருமான் தென்பகுதிக்கு அனுப்பினார். அப்போது இந்தப் பகுதிக்கு வந்த அகத்தியருக்கு, சிவபெருமான் தன்னுடைய திருமணக் காட்சியை காட்டி அருளினார். அகத்தியர் வழிபட்டதால் இந்த ஊர் ‘அகத்தியான் பள்ளி’ என்று பெயர் பெற்றது என்பது தல வரலாறு.
இந்த ஆலயத்தில் திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும், செல்வ வளம் பெருகவும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
வேண்டுதல் நிறைவேறியவர்கள், இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் சாலையில், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அகத்தியான் பள்ளி திருக்கோவில்.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் சிறப்பு வழிபாடாக 41 நாட்கள் ராம நாம பிரார்த்தனை இன்று தொடங்குகிறது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
கோவில்கொடி மரத்துக்கு தங்க முலாம் பூசப்பட்ட கவசம் உருவாக்கும் பணிகள் சென்னையில் நடந்து வருகிறது. மூலவரின் கடுசர்கரையோக சிலையை முழுமைப்படுத்தும் மருந்துக்கலவைகள் மாத்தூர் மடத்தில் தயாரிக்கப்பட்டு, திருவட்டாருக்கு கொண்டு வரப்படுகிறது. அத்துடன் பெருமாளின் சிலைக்குரிய இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகிறது. சுற்றுப்பகுதியில் விளக்குகள் பொருத்தும் பணி பாதியளவு முடிந்துள்ளது.
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கப்பட்ட போது கும்பாபிஷேகத்துக்கு முன்பு பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி கடந்த 8 மாதங்களாக மாதம் ஒருமுறை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியவை நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வருகிற 16, 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற உள்ளது. 16-ந் தேதி கணபதி ஹோமம், மகா மிருத்யுஞ்சய ஹோமம், திரிகால பூஜைகள், 17-ந் தேதி அதிகாலையில் கணபதி ஹோமம், மாலையில் பகவதி சேவை, 18-ந் தேதி காலை கணபதி ஹோமம், சுத்தி கலச பூஜை, கலசாபிஷேகம் போன்றவை நடக்கிறது. மேலும் வருகிற 25-ந் தேதி சர்ப்பபலி பூஜை நடைபெறும்.
கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு வழிபாடாக 41 நாட்கள் ராம நாம பிரார்த்தனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 41 நாட்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ராம நாம பிரார்த்தனை நடைபெறும்.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டுதல் செய்ய உள்ளனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் ஜூலை 15ந் தேதி வரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, நீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது.
மாட வீதிகளில் நீர் பந்தல்கள் வெள்ளைநிற குளிர்ச்சி பெயின்ட் சிவப்பு கம்பளங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் ஜூலை 15ந் தேதி வரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:
ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்து வருவதால் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டள்ளது.
ஏழை பெண்களின் திருமணத்திற்கு கல்யாண மஸ்து திட்டத்தின் கீழ் 5 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தத் திட்டம் மீண்டும் தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயர் சாமி பிறந்த இடம் பற்றிய விரிவான புத்தகம் தெலுங்கு, ஆங்கிலம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் பக்தர்களுக்கு விரைவில் கிடைக்க செய்யப்படும். தேவஸ்தான இணையதளத்திலும் கிடைக்கும். மகாராஷ்டிரா நவி மும்பையில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக ரூ.70 கோடி செலவில் கோவில் கட்ட நன்கொடையாளர் ஒருவர் முன் வந்துள்ளார். விரைவில் கட்டுமான பணி தொடங்கப்படும்.
புவனேஸ்வரில் புதியதாக கட்டப்பட்ட கோவிலுக்கு இந்த மாதம் 26ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஜம்மு சீதன்பேட்டை, அமராவதி ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் நேற்று 6 2,001 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.32, 303 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.03 உண்டியல் காணிக்கை வசூலானது.
இதையும் படிக்கலாம்...அழியாத செல்வமும், பெயரும் புகழும் நிலைத்திருக்க அனுஷ்டிக்க வேண்டிய விரதம்...

கும்பகோணம் சாரங்க பாணி சுவாமி கோவில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சாரங்கபாணி சுவாமி கோவில் சித்திரைப் பெருவிழா கடந்த 6ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்யதேசங்களில் இந்த திருக்கோவில் மூர்த்தி தலம் தீர்த்தம் மற்றும் திருத்தேர் திருவாபரணம் பெற்றதாகும்.
முக்கிய விழாவான திருத்தேரோட்டம் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக காலை 5 மணி அளவில் புகை நாச்சியாருடன் பெருமாள் தேரில்எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சாரங்கா சாரங்கா என வடம் பிடித்து இழுத்தனர்.

மன கவலையோடு சோர்வோடு முகத்தில் சிரிப்பு இல்லாமல் இருக்கும் போது இந்த மந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை முதலில் நினைத்துக் கொண்டு பின்பு கோரக்கர் சித்தரை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.
பூஜை அறையிலேயே ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொண்டு, முடிந்தால் உங்களுடைய கையில் இரண்டு துளசி இலைகளை வைத்துக் கொண்டு ‘ஓம் கோரட்ச சித்தாய நம’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மனதார கோரக்க சித்தரை நினைத்து இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் உங்களுடைய மனக்கவலை நீங்கும். துன்பங்கள் நீங்கும். துன்பம் வந்தாலும் உங்களுடைய முகம் சுருங்கி போகாது. அதை எதிர்கொண்டு எப்படி சமாளிக்க வேண்டும் என்ற தைரியம் கிடைத்துவிடும்.

இன்று காலை 9 மணிக்கு ஸ்ரீகருணாம்பிகை அம்மன், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கருணா ம்பிகை உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு சித்திரை மாத தேரோட்ட திருவிழா கடந்த 5ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
திருவிழாவின் மகுடம் சூட்டும் நிகழ்ச்சியாக பெரியதேரோட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. உற்சவ மூர்த்தியான சோமஸ்கந்தர் உமாமகேஸ்வரி தேரில் எழுந்தருளிய நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திபரவசத்துடன் சிவசிவ கோஷத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
பின்னர் அவினாசி மேற்கு ரதவீதி குலாலர் மண்டபம் அருகே தேர் நிறுத்தப்பட்டது. மீண்டும் நேற்று தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு வடக்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு ஸ்ரீகருணாம்பிகை அம்மன், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.