என் மலர்

  தோஷ பரிகாரங்கள்

  வருமானத்தை அதிகரிக்கும் கல் உப்பு பரிகாரம்
  X
  வருமானத்தை அதிகரிக்கும் கல் உப்பு பரிகாரம்

  வருமானத்தை அதிகரிக்கும் கல் உப்பு பரிகாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கீழே கொடுக்கப்பட்டுள்ள கல் உப்பு பரிகாரத்தை மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும்.
  சமீபகாலமாக அதிகமான பணவரவிற்கு உப்பை வைத்து பல பரிகாரங்களை நாம் செய்து வருகின்றோம். உப்பை வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் வாங்கி வைத்து வருவதன் மூலம், மஹாலக்ஷ்மியின் அம்சம் நம் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்திருக்கும் ஒரு சாஸ்த்திரம்.

  கடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் பொருட்களுக்கு ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல மகத்துவம் உண்டு என்பதும் உண்மை. இப்படி இருக்கும்போது அந்தத் கடல்தண்ணீரையே காயவைத்து எடுக்கப்படும் இந்த உப்பிற்கு சக்தி அதிகமாக தான் இருக்கும். இதனால் தான் உப்பிற்கு நம் முன்னோர்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். சமுத்திர தண்ணீரில் குளித்தால் சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்பதும் நம் ஐதிகமாக உள்ளது.

  நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி குடுவையில் சிறிதளவு கல் உப்பைக் கொட்டி வைத்து அதில் சில்லரை காசுகளை போட்டு சேமித்து வாருங்கள். மாதம் ஒருமுறை அதனை எடுத்து பெருமாள் கோவில்களில் உண்டியலிலோ அல்லது தர்ம காரியத்திற்கோ செலவு செய்யுங்கள். இதனால் உங்களின் வருமானம் அதிகரிக்கும். மன நிம்மதியும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் உங்கள் குடும்பத்தில் நிறைந்து இருக்கும்.

  இப்படி மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும். எந்த தடைகள் வந்தாலும் அதனை நம்மால் தகர்த்தெறிய முடியும் என்ற நம்பிக்கையை நம் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையையும், நாம் செய்யும் பரிகாரமும் ஒன்றாக சேர்ந்தால் வெற்றி நிச்சயம். எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல் பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு முன்னேற்றம் வரவில்லை என்று கூறுவது தவறு.


  Next Story
  ×