என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி மலைக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தாயுமான சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு மேல் மேஷ லக்கனத்தில் சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகினர். பின்னர் 5.40 மணிக்கு தாயுமான சுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.
தொடர்ந்து காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல, தொடர்ந்து கோவில் யானை லட்சுமி செல்ல பெரிய தேரையும், சிறிய தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தின் போது, பக்தர்கள் சிவ சிவா, தாயுமான ஈசா என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் தேர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. தேர் கீழ ஆண்டாள்வீதி, சின்னக்கடைவீதி, என்.எஸ்.பி.ரோடு, தெப்பக்குளம் நந்திகோவில்தெரு, வடக்கு ஆண்டாள் வீதி வழியாக காலை 10.40 மணி அளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது.
இதையடுத்து பக்தர்கள் தேர் நிலைக்கு முன்பு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி தீபாராதனை செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேரில் இருந்து கீழே வந்து கோவில் சென்றடைந்தனர்.
இன்று (சனிக்கிழமை) காலை தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி மாநகர போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தேரை சுற்றிலும் போலீசார் ஒரு வளையம் போல் கயிற்றை அமைத்து தேரை நகர்த்தி வர ஏற்பாடு செய்திருந்தனர். முதன்முறையாக இந்த தேர் திருவிழாவில் நேற்று முன்தினம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

பூண்டி மாதா பேராலய பெருவிழாவில் இன்று(சனிக்கிழமை) தேர்பவனி நடைபெறுவதையொட்டி ஏராளமான பக்தர்கள் பூண்டி மாதா பேராலயத்தில் குவிந்துள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும், பல்வேறு அருட்தந்தையர்களால் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
விழாவில் நேற்று மாலை சிறு சப்பரபவனி நடந்தது. தொடர்ந்து நவநாள் திருப்பலி நடைபெற்றது. மரியா -பாவிகளின் அடைக்கலம் என்ற தலைப்பில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய அதிபர் இருதயராஜ் அடிகளார் திருப்பலியை நிறைவேற்றினார். இதில் பூண்டி பேராலய அதிபர் பாக்கியசாமி மற்றும் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் இன்று(சனிக்கிழமை) தேர்பவனி நடைபெறுவதையொட்டி ஏராளமான பக்தர்கள் பூண்டி மாதா பேராலயத்தில் குவிந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கிய சாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் சாம்சன், உதவி பங்கு தந்தையர்கள் ஜான்சன், இனிகோ, ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

நாளை (15-ந்தேதி) புஷ்ப யாகம் வாசித்தல் நிகழ்ச்சியும், ஆஸ்தானம் எழுந்தருளல் நிகழ்ச்சியும் 16-ந்தேதி பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்தாண்டிற்காக இந்த விழா கடந்த 5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினந்தோறும் இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி சிம்மவாகனம், அனுமார் வாகனம், கருடசேவை, சேஷ வாகனம், குதிரை வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
கடந்த 10-ந்தேதி அன்று வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் மாலை சூர்ணாபிஷேகம் மற்றும் தங்க தோளுக்கினியாள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (சனிக்கிழமை) காலையில் ரிஷப வாகனத்தில் திருத்தேருக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4.50 மணி முதல் 5.25 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை இத்தேரோட்டம் நடக்கிறது.
இதை தொடர்ந்து நாளை (15-ந்தேதி) புஷ்ப யாகம் வாசித்தல் நிகழ்ச்சியும், ஆஸ்தானம் எழுந்தருளல் நிகழ்ச்சியும் 16-ந்தேதி பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

நாகை சட்டைநாதர் கோவில் தேரோட்டத்தில் அமிர்தவல்லி அம்பாள் சமேத, சட்டைநாத சாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளியதும், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகையில் உள்ள சட்டைநாத சாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, பஞ்ச மூர்த்திகள் அபிஷேகத்துடன் தொடங்கியது. 5-ந் தேதி கொடியேற்று விழா நடைபெற்றது. அன்று இரவு சேஷ வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 11-ந் தேதி ரிஷப வாகனத்தில் சாமி, அம்பாள் எழுந்தருள ஓலை சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அமிர்தவல்லி அம்பாள் சமேத, சட்டைநாத சாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளியதும், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக தேர் வலம் வந்தது.
அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளில் காத்திருந்து சாமிக்கு அர்ச்சனை செய்தனர். இரவு சட்டைநாத சாமிக்கு பஞ்சமுக அர்ச்சனை நடைபெற்றது.

கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் என்று இயற்கை சூழலில் அமைந்து இருக்கும் கொடுமுடி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் அமைந்து உள்ளது.
சிவன், பிரம்மா, திருமால் என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் புண்ணியஸ்தலம் கொடுமுடி. ஈரோட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது கொடுமுடி.
பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் பிரம்மபுரி என்றும், திருமால் பூஜித்ததால் அரிகரபுரம் என்றும், கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமுதபுரி என்றும் இந்த தலத்துக்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட தலம் என்பது மிகவும் சிறப்பானதாகும்.
மலையின் முடியே இங்கு சிவலிங்கமாக காட்சி அளிப்பதால் கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளி உள்ள சிவபெருமானை மகுடேசுவரர் என்று அழைக்கிறார்கள். மகுடேசுவரரின் திருமணத்தை காண திருமாலும், பிரம்மனும் இங்கு வந்தார்கள் என்பது ஐதீகம். கோவிலின் முன்பு காவிரி ஆறு செல்கிறது.
கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள வன்னிமரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
நாகதோஷம் உள்ளவர்கள், ராகு கேது தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் வந்து பரிகாரம் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். நாக தோஷம் நீங்குவதற்கு, ஒருவருக்கு எத்தனை வயது ஆகிறதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்ததாக வன்னி மரத்திற்கு அடியில், கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் நாக தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று கூறுகிறது வரலாறு.
கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் என்று இயற்கை சூழலில் அமைந்து இருக்கும் கொடுமுடி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் அமைந்து உள்ளது.
கோவிலின் அருகிலேயே ரெயில் நிலையமும் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் வந்து சாமியை தரிசித்து செல்கிறார்கள். பழனி கோவில் திருவிழா என்றாலும், கொடுமுடியின் சுற்றுவட்டார கோவில்கள் திருவிழா என்றாலும் கொடுமுடி காவிரி கூடுதுறையில் இருந்துதான் தீர்த்தம் எடுத்துச்செல்லப்படும். இதனால் எப்போதும் கொடுமுடி திருவிழா கோலம் பூண்டு இருக்கும்.
செல்லும் வழி
ஈரோட்டில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவிலும் கொடுமுடி உள்ளது.
முகவரி:
அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்,
திருப்பாண்டிக் கொடுமுடி-638 151,
ஈரோடு மாவட்டம்.

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை தேர் திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் பூஜை நடைபெற்று வந்தது. மேலும் சாமி வாகன வீதி உலாவும் நடந்தது. 11-ந் தேதி வடிவுடை நாயகி உடனமர் மகுடேஸ்வரருக்கும், பூதேவி, ஸ்ரீதேவி சமேத வீரநாராயண பெருமாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்று கோவில் முன்பு கொண்டு நிறுத்தினர். முன்னதாக கொடுமுடி தேர் வீதிகளில் உள்ள மின் இணைப்புகளை கொடுமுடி மின்வாரிய ஊழியர்கள் துண்டித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
விழாவையொட்டி பேரூராட்சி மூலமாக பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் கொடுமுடி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ் செய்திருந்தார்.

நீண்ட நாட்களாக திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனுக்கு மாங்கல்ய பொட்டு செலுத்தி வழிபட்ட உடன் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூர் வண்ணாரபாளையத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுமாறு அம்மனை வேண்டிக் கொண்டு அங்கபிரதட்சணம் செய்து வழிபாடு செய்கின்றனர். இந்த கோவிலில் அரசமரம், வேப்பமரத்தின் அடியில் நாகரும், விநாயகரும் உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்துவிட்டு அதன் பின்னர் நாகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தால் அவர்களுக்குரிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
முத்து மாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடை பெறும். அதன்பின்னர் கோவிலில் சிறப்பு யாக நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் பில்லி சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது உடலில் உள்ள பிணிகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள்.
இந்தக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு முன்பாக அணையா விளக்கு ஒன்று உள்ளது. அந்த விளக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுமாறு அம்மனை வேண்டிக் கொண்டு அந்த விளக்கில் எண்ணெயை ஊற்றி செல்வார்கள்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு அம்மனுக்கு திருமாங்கல்ய பொட்டு சாத்துவதாக வேண்டிக் கொண்டு தங்கத்தினால் செய்யப்பட்ட சிறிய வடிவிலான பொட்டு போன்ற பொருளை மஞ்சள் கயிற்றில் கோர்த்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினால் திருமண தடை நீங்கி உடனடியாக திருமணம் நடைபெறும்.
நீண்ட நாட்களாக திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனுக்கு மாங்கல்ய பொட்டு செலுத்தி வழிபட்ட உடன் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து 48 நாட்கள் நெய்தீபம் ஏற்றி அம்மனை மனம் உருகி வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில் தினமும் அன்ன வாகனம், யானை வாகனம், சிங்க வாகனம், காளை வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் சாமி வீதி உலா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட இ.வெள்ளனூர் ஊராட்சி ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 3-ந் தேதி மறுகாப்பு கட்டப்பட்டது. மேலும் தினமும் அன்ன வாகனம், யானை வாகனம், சிங்க வாகனம், காளை வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் சாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள், இளைஞர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து இரவு 7.30 மணியளவில் கோவிலை வந்தடைந்தது. நேற்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவுபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம கரைக்காரர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

சுமார் 120 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தரும் ஸ்ரீ மதுரம்மா திருக்கோவில் தேர், சுமார் 20 அடுக்குகளைக் கொண்டு காணப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது, ஹஸ்கூர் என்ற இடம். இங்கு ஸ்ரீ மதுரம்மா திருக்கோவில் அமைந்திருக்கிறது.
இந்த கோவில் திருவிழாவின் போது, இழுக்கப்படும் தேர் மிகவும் வித்தியாசமான முறையிலும், பிரமாண்டமாகவும், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆலயத்தின் தேர், பல அடுக்குகளைக் கொண்ட, உயரமான கட்டிட அமைப்பு போல காட்சி தருகிறது. சுமார் 120 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தரும் இந்த தேர், சுமார் 20 அடுக்குகளைக் கொண்டு காணப்படுகிறது. இந்த ஆலயத் தேர் திருவிழாவின் போது, இதே போல இன்னும் சில பிரமாண்ட தேர்களும் நகரை வலம் வருமாம்.

தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர் திருவிழாவில் வருகிற 16ந் தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெற உள்ளது.
தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவில் 9ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அறம் வளர்த்த நாயகி அம்மன், ஐயாறப்பர் தனித்தனி பெரிய தேர்களிலும், பின்னால் விநாயகர், முருகன், ஆட்கொண்டார், சண்டிகேஸ்வரர், அகப்பை சித்தர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் தனித்தனி சிறிய தேர்களிலும் எழுந்தருளினர். மொத்தம் 2 பெரிய தேர்கள், 5 சிறிய தேர்கள் என 7 தேர்கள் அடுத்தடுத்து வலம் வந்தன.
தேரை கல்யாணபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். நான்கு ராஜவீதிகளிலும் 7 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆடி அசைந்து வலம் வந்தது. இன்று மாலையில் தேர்கள் அனைத்தும் கீழவீதி நிலையை அடைகிறது. அப்போது சிறப்பு ஆராதனைகள் நடக்கிறது.
தேர் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் வருகிற 16ந் தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெற உள்ளது.

இந்த ஸ்லோகத்தை திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானவரை நினைத்து தினமும் மூன்று முறை சொல்லி வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழும்.
'ஹே சங்கர ஸ்மரஹர பிரமாதி நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர திரிசூலின்
சம்போ சுகப்ரஸவக்ருத் பவமே தயாளோ
ஸ்ரீமாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே
'இந்த ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை சொல்லி வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழும். திருச்சி மலைக்கோட்டையில் கோயில்கொண்டுள்ள, செட்டிப்பெண்ணுக்கு அவளது தாய் உருவில் வந்து பிரசவம் பார்த்த ஸ்ரீதாயுமானவரின் அருளால் இது சாத்தியமாகும்!''

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த திரளான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.
காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்பு சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த பிரதோஷ வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.