என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ‘ஜோதி ஜோதி, வக்ரகாளி ஜோதி, ஜோதியை பார்த்தால் பாவம் தீரும்’ என பக்தி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.
திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமியையொட்டி மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு கோவிலின் மேல் பிரகாரத்தில் அமைந்துள்ள பீடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ‘ஜோதி ஜோதி, வக்ரகாளி ஜோதி, ஜோதியை பார்த்தால் பாவம் தீரும்’ என பக்தி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன், செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் உமா சிவாச்சாரியார், குருக்கள் சேகர், மேலாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர். மகா தீபத்தையொட்டி, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் திருவிழாவில் வேடபரி நிகழ்ச்சி தொடங்கும் முன் பாரம்பரிய கலைகளாக நெருப்பு தீப்பந்தம் ஏந்தி ஆடுதல், சிலம்பம் என பல்வேறு நடனங்கள் நடைபெற்றது.
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
நேற்று முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி இரவில் அம்மன் குதிரை வாகனத்தில் வேடபரி திருவீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் ராஜவீதிகளின் வழியாக வேடபரி வாகனம் கோவிலை வந்தடைந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வேடபரி நிகழ்ச்சி தொடங்கும் முன் பாரம்பரிய கலைகளாக நெருப்பு தீப்பந்தம் ஏந்தி ஆடுதல், சிலம்பம் என பல்வேறு நடனங்கள் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அதன் பின்னர் கிடா, கோழி வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர்.
இதே போல் பலரும் கரும்பில் தொட்டில் கட்டி பிள்ளைகளை சுமந்து வந்தனர். நாளை (புதன் கிழமை) காலை காப்பு களைதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகி்றது.

காவல்கிணறு இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
காவல்கிணறு இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் கொடியேற்றினார். விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 8-ம் திருநாள் காலை திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது.
9-ம் திருநாள் மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது. 10-ம் திருநாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருவிழா திருப்பலி மற்றும் உறுதிப்பூசுதல் விழா நடக்கிறது.
பிற்பகல் 3 மணிக்கு அன்னையின் தேர் பவனியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் திருநாள் மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் ஆரோக்கியராஜ், வினித்ராஜா மற்றும் பங்கு மேய்ப்பு பணி குழுவினர் செய்து வருகின்றனர்.

கிரிவலம் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் நண்பகல் 12.15 மணி அளவில் தொடங்கி நேற்று காலை 10.20 மணி அளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் பகலில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பகலில் அடித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மாலைக்கு மேல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு வரை திருவண்ணாமலையில் மிதமான மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கையில் குடையை பிடித்தப்படி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
மழையின் காரணமாக திருவண்ணாமலை நகரில் நேற்று முன்தினம் இரவு குடை விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதிகாலை 4 மணி வரை லேசான சாரல் மழை பெய்தது. இருப்பினும் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
நேற்று காலை வரை பவுர்ணமி நீடித்ததால் 2-வது நாளாக நேற்று பகலிலும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பொது மற்றும் கட்டண தரிசனம் வழி கோவிலுக்குள் மட்டுமின்றி சாலை வரை நீண்டு காணப்பட்டது.
பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மே மாதம் 17-ம் தேதியில் இருந்து மே மாதம் 23-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
17-ம் தேதி செவ்வாய் கிழமை :
* வீரபாண்டி கௌமாரியம்மன் பொங்கல் பெருவிழா
* காரைக்குடி கொப்புடையம்மன் ரதோற்சவம்
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல்
* சந்திராஷ்டமம்: பரணி
18-ம் தேதி புதன் கிழமை :
* குமரகுருபரஸ்வாமி திருஞான சம்பந்தர் குருபூஜை
* கௌமாரியம்மன் விடாயாற்று
* சந்திராஷ்டமம்: கார்த்திகை
19-ம் தேதி வியாழக்கிழமை:
* சங்கடஹர சதுர்த்தி
* காரைக்குடி கொப்புடையநாயகி தெப்போற்சவம்
* சுவாமிமரை முருகன் தங்க கவசம் வைரவேல் தரிசனம்
* திருப்பதி பெருமாள் புஷ்பாங்கி சேவை
* சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்
20-ம் தேதி வெள்ளிக்கிழமை:
* பஞ்சமி திதி
* காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா
* திருத்தணி முருகன் கிளி வாகன சேவை
* கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம்: மிருகசீருஷம்
21-ம் தேதி சனிக்கிழமை:
* திருவோண விரதம்
* கரிநாள்
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள் புறப்பாடு கண்டருளல்
* சந்திராஷ்டமம்: திருவாதிரை
22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை:
* நெல்லையப்பர், காந்திமதியம்மன் தாமிரபரணி ஆற்றில் ஜலத்தில் திருமஞ்சன சேவை
* கண்ணுறு கழித்தல், ஆரோக்கிய ஸ்நானம் நன்று
* பெரிய நகசு
* சந்திராஷ்டமம்: புனர்பூசம்
23-ம் தேதி திங்கட்கிழமை:
* தேய்பிறை அஷ்டமி
* இன்று பைரவஸ்வாமி வழிபட நன்று
* சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
* சந்திராஷ்டமம்: பூசம்

உலக புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் வருகிற 19-ந்தேதி தேரோட்டத்தை முன்னிட்டு தீயணைப்பு வீரர்கள் தேரை சுத்தம் செய்தனர்.
உலக புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பிரம்மோற்சவ விழா நடைபெறாமல் இந்த ஆண்டு நடப்பதால் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
காந்திரோட்டில் நிலை கொண்டுள்ள தேரின் சக்கரம், ஹைட்ராலிக் பிரேக் நல்ல நிலையில் இருக்கிறதா, தேரில் வேறு ஏதாவது பழுது உள்ளதா என்று சரிபார்த்த நிலையில் தேரை சுத்தம் செய்யும் பணி நடந்தது. 73 அடி உயரமுள்ள 7 நிலைகொண்ட சிற்பங்கள் வேலைப்பாடுகள் கொண்ட இந்த தேரை சுத்தம் செய்ய தீயணைப்பு துறை உதவியுடன் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தேரை சுத்தம் செய்தனர்.

திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்தவாரும் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை ஒட்டி நேற்று இரவு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கி இன்று காலை 10.20 மணி வரை பவுர்ணமி கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்தநிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணியிலிருந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்தவாரும் கிரிவலம் சென்றனர்.
கிரிவலம் முடித்த வெளியூர் பக்தர்கள் ஊருக்கு செல்வதற்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனங்களில் வேதநாராயண பெருமாள் உபயநாச்சியாருடன் புறப்பாடும், 19-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரத்தில் வேதநாயகி தாயார் சமேத வேதநாராயண பெருமாள் கோவில் உள்ளது. வைணவ தலங்களில் ஆதிரங்கம் என்றழைக்கப்படும் இக்கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் ஒன்றாகும். இங்கு ரிக், யஜூர், சாம, அதர்வன ஆகிய நான்கு வேதங்களை தலையணையாக கொண்டு, பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் காட்சியளிக்கிறார். இதனால், தன்னை வணங்க வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி செல்வத்தை அவர் அள்ளித் தருவதாக நம்பிக்கை. மேலும் பிரகலாத ஷேத்திரம், அரையருக்கு மோட்சம் தந்த தலம் என பல சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா மற்றும் தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 13-ந் தேதி துவஜாரோகணத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனங்களில் வேதநாராயண பெருமாள் உபயநாச்சியாருடன் புறப்பாடும், 19-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ந் தேதி காலை 8 மணியளவில் தொடங்கி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் விஜயராணி, செயல் அலுவலர் அமரநாதன் மற்றும் ஊர் பொதுமக்களும், கோவில் பணியாளர்களும் செய்து வருகின்றனர்.

வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் வேடபரி நிகழ்ச்சி இன்று(திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது.
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு அலங்காரங்களில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான பால்குட விழா நேற்று காலை தொடங்கியது. இதில் மாரியம்மன் கோவிலின் பின்புறமுள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் பால்குட ஊர்வலம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பால்குடத்தை சுமந்து கொண்டு பக்தி பரவசத்துடன் ராஜவீதிகளின் வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். இதையடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து கோவில் பரம்பரை அறங்காவலர்களை பாராம்பரிய முறைப்படி அழைத்துச்செல்ல, அதைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் செல்லும் பகுதியில் பலரும் பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். மேலும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் போன்றவற்றை பொதுமக்கள் வழங்கினர். நிகழ்ச்சியை ஆசிரியர் திருவாச நல்லுசாமி தொகுத்து வழங்கினார்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் மற்றொன்றான வேடபரி நிகழ்ச்சி இன்று(திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் வேப்பிலை மாரியம்மன் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பட்டு ராஜவீதிகளின் வழியாக மீண்டும் கோவிலை சென்றடைகிறார். நாளை(செவ்வாய்க்கிழமை) காலை அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், கரும்பு தொட்டில், கரும்புள்ளி, செம்புள்ளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
முன்னதாக பக்தர்கள் பால்குடம் எடுத்து செல்வதற்கு முறையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு, இடையூறின்றி ராஜ வீதிகளில் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோவில் செயல் அலுவலர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் தலைமையில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மணப்பாறை நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்று வருவதால், மணப்பாறை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மணப்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. மேலும் பால்குட விழா நடைபெறும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்குமோ? என்று ெபாதுமக்கள் எண்ணிய நிலையில், நேற்று வெப்பத்தின் தாக்கமின்றி வானம் மேகமூட்டமாக காட்சி அளித்ததுடன், குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்ததுடன் வெப்பத்திற்கு விடைகொடுத்து குளிர்ந்த சூழ்நிலை ஏற்படுத்திய வேப்பிலை மாரிக்கும், வருணபகவானுக்கும் நன்றி தெரிவித்தனர். பால்குட விழா முடிந்ததும் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
பால்குட விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்ததால், சாலையில் வழியே இல்லாத நிலையில் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. இந்நிலையில் கோவில்பட்டி சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று அவசர தேவைக்காக சென்றது. அதைப்பார்த்த பக்தர்கள் சில வினாடிகளில் ஒதுங்கிக் கொண்டு ஆம்புலன்சிற்கு வழிவிட்டனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்திற்கு இடையே ஆம்புலன்ஸ் எந்தவித இடையூறுமின்றி சென்றது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. ஆம்புலன்சுக்கு பக்தர்கள் வழிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
சித்திரை திருவிழாவில் பால்குட விழாவிற்கு காப்பு கட்டி, விரதம் இருந்த பக்தர்கள், பயபக்தியுடன் பால்குடம் எடுத்து வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும், பாலாபிஷேகம் செய்த பின்னர் தங்களின் காப்புகளை அவிழ்த்துவிட்டு செல்வார்கள். அதன்படி நேற்று பக்தர்கள் காப்புகளை அவிழ்க்க மணப்பாறை இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் உதவி செய்தது காண்போரை நெகிழ வைத்தது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 45 நாட்கள் தொடர்ந்து சொல்லி ஆலிலை கிருஷ்ணரை வழிபாடு செய்ய வேண்டும்.
ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை
துர்க்காயை ஸததம் நம:
புத்ரபாக்யம் தேஹி தேஹி
கர்ப்ப விருத்திம் குருஷ்வந:
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
ஜம் ஜம் ஜம் மகாகாளீ மகாலக்ஷ்மீ
மகா சரஸ்வதீ ரூபிண்யை நவகோடி மூர்த்யை நம:
ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் துர்கார்த்தி நாசினீ
ஸந்தான சௌக்யம் தேஹி தேஹி
வந்த்யத்வம் ம்ருதவத் ஸத்வம் சார ஹர ஹர
கர்ப்ப ரட்சாம் குரு குரு
குலஜாம் பாஹ்யஜாம் க்ருதாம் க்ருதாம்ஸ
நாஸய நாஸய ஸர்வகாத்ராணி ரக்ஷ: ரக்ஷ:
கர்ப்பம் போஷய போஷய சர்வோ பத்ரவம்
சோஷய சோஷய ஸ்வாஹா
அனேன கலைசேனாங்கம் ஸப்த வாராபி மந்த்ரிதம்
ருதுஸ்நாதா ஜலம் பீத்வா பவேத கர்ப்பவதீத்ருவம்
கர்ப்ப பாதபயே பீத்வா த்ருட கர்ப்பா ப்ரஜாயதே
அனேன கவசேனாத மார்ஜீதாய நிசாகமே
ஸர்வ பாதா விநிர்முக்தா கர்ப்பிணி ஸ்யாநீந ஸம்சய:
அனேன கவசேன ஹக்ரந்திதம் ரக்த தோரகம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) இரவு அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடாகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். பஞ்ச பூதங்கள், ஐம்பெரும் தொழில், ஐம்பெரும் கலை, ஐம்பெரும் பீடம், (பிரம்மா, விஷ்ணு, ருத்ரா, மகேஸ்வர, சதாசிவம்) மற்றும் ஐம்பெரும் உயிர் அவத்தைகள் (பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு, முக்தி) இவற்றை விளக்கும் தத்துவமாக இந்த பஞ்சப்பிரகார உற்சவம் உள்ளது.
மாயா சூரனை சம்ஹரிக்க பராசக்தி மகாமாரி வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னி நட்சத்திரத்தின் உஷ்ணகிராந்தியை தணிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வசந்த உற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கியது.
நவ கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய நூதன ஆதிபீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக நேற்று பஞ்சப்பிரகார மகா அபிஷேகம் நடைபெற்றது. பஞ்சப்பிரகார விழாவை யொட்டி இக்கோவிலுக்கு பாரம்பரியமாக ஒரு தங்க குடம் மற்றும் 25 வெள்ளி குடங்களில் பரிவாரங்கள் புடைசூழ மேளதாளத்துடன் கொள்ளிடம் ஆற்றில் இருந்து திருமஞ்சனத்துடன் புனிதநீர் கொண்டு வரப்பட்டது.
அதைத்தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் இருந்து காலை 10 மணிக்கு யானை மேல் புனிதநீர் அடங்கிய தங்க குடத்தை வைத்து மேளதாளங்கள் முழங்க, கடைவீதி ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் உள்ள உற்சவர் மண்டபத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்ட உற்சவம் அம்மனுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் சிறப்பு வேதபாராயணம், வேதமந்திரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மதியம் 2 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மன் நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளி விமானத்தில் வெள்ளை நிற பாவாடை அணிந்து, மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்று, தங்க கொடிமரம் இரண்டாவது சுற்று, தங்கரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்று, தெற்கு ரத வீதியில் பாதியும் வடக்கு மாடவீதியிலும் நான்காவது சுற்று, கீழரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரதவீதி ஐந்தாவது சுற்றாக பஞ்சப்பிரகார சுற்றுகளை சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று (திங்கட்கிழமை) இரவு அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடாகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார். 18-ந்தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந்தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், 20-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி மர கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந்தேதி மர காமதேனு வாகனத்திலும், 23-ந் தேதி மர அன்னபட்சி வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் மேலாளர் ராஜாங்கம், உள்துறை கண்காணிப்பாளர்கள் சாந்தி, அழகர்சாமி மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மிக்கேல் அதிதூதர், வியாகுல அன்னை, புனித செபஸ்தியார், தூய அடைக்கல அன்னை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினர்.
திருவாடானை தாலுகா ஆண்டாவூரணி கிராமத்தில் தூய அடைக்கல அன்னை ஆலய திருவிழா நடைபெற்றது. பங்குத் தந்தை அந்தோணி மைக்கேல் தலைமையில் அருட் தந்தையர்கள் வசந்த், ஞானதாசன் ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த ஆலய திருவிழா 7 நாட்கள் நடைபெற்றது.
இதில் தினமும் நவநாள் திருப்பலி சிறப்பு மறையுரை, மாதா மன்றாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை பங்குத்தந்தை அந்தோணி மைக்கேல் தலைமையில் அருட் தந்தையர்கள் ஞானதாசன், லூயிஸ், ஜெயசீலன் ஜெயக்குமார், அருளானந்து ஆகியோர் நிறைவேற்றினர்.
தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மிக்கேல் அதிதூதர், வியாகுல அன்னை, புனித செபஸ்தியார், தூய அடைக்கல அன்னை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். நேற்று காலை திருவிழா நிறைவு திருப்பலி, சப்பர பவனி மற்றும் கொடி இறக்கம் நடைபெற்றது. இதனையொட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அன்ன தானம் நடைபெற்றது.