என் மலர்

  வழிபாடு

  திருவண்ணாமலையில் மழையால் நனைந்தபடி கிரிவலம் சென்ற பக்தர்கள்.
  X
  திருவண்ணாமலையில் மழையால் நனைந்தபடி கிரிவலம் சென்ற பக்தர்கள்.

  வைகாசி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் மழையில் நனைந்து கிரிவலம் சென்ற பக்தர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்தவாரும் கிரிவலம் சென்றனர்.
  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை ஒட்டி நேற்று இரவு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

  நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கி இன்று காலை 10.20 மணி வரை பவுர்ணமி கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

  நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்தநிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணியிலிருந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்தவாரும் கிரிவலம் சென்றனர்.

  கிரிவலம் முடித்த வெளியூர் பக்தர்கள் ஊருக்கு செல்வதற்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
  Next Story
  ×