என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
தென்மாவட்டங்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் இருக்கன்குடியில் உள்ள அர்ச்சுனா ஆற்று பகுதியை கடந்து தான் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
சாத்தூர் அர்ச்சுனா நதியில் வெள்ளப்பெருக்கு ஏறபட்டுள்ளதால் இருக்கன்குடி கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் வைப்பாறு- அர்ச்சுனா ஆறுகள் சந்திக்கும் இடத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தென்மாவட்டங்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் இருக்கன்குடியில் உள்ள அர்ச்சுனா ஆற்று பகுதியை கடந்து தான் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஆனால் கடந்த சில தினங்களாக விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இருக்கன்குடி அணை முழு கொள்ளவை எட்டியது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அர்ச்சுனா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக ஆற்றை கடந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர். எனவே கோவிலுக்கு செல்லும் வகையில் பொதுப்பணித்துறையினர் அந்த பகுதியில் பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நம்முடைய வாழ்விற்கு தேவையான நிரந்தரமான ஆசிர்வாதங்களை வழங்கி நமது ஜெபத்திற்கு பதில் கொடுப்பவராய் இருக்கிறார்.
கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சை கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் ‘அழகு வாயில்’ என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டார்.
பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, ‘‘எங்களைப் பார்’’ என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார். பேதுரு அவரிடம், ‘‘வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்’’ என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார்கள்.
உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார். துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார். அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்கள் அனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகு வாயில் அருகே பிச்சை கேட்டுக் கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்மறந்து நின்றனர்.
கோவில் நுழைவாயிலின் பெயரோ ‘அழகு வாயில்’. ஆனால் அதற்கு சற்றும் பொருத்தம் இல்லாத வகையில் கால் ஊனமுற்றிருந்த மனிதரை, பிச்சையெடுப்பதற்கு சிலர் கொண்டு வந்து அங்கு அமர வைத்தார்கள். வருவோர் போவோரிடம் எல்லாம் கேட்பது போன்றே, அவர் பேதுருவிடமும் யோவானிடமும் ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு பிச்சை கேட்டார். பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, ‘எங்களைப் பார்’ என்று கூறிய உடன், அவர் பொன்னோ பொருளோ ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன்தான் அவர்களை ஆவலுடன் நோக்கினார். ஆனால் அவர்கள் அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றத்தை கொடுப்பார்கள் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவர் கேட்டது அன்றாட தேவைக்கான பணமோ பொருளோ தான். பிறப்பில் இருந்தே நடக்க முடியாத தன்னால், வாழ்நாள் முழுவதும் பிச்சையெடுத்து தான் வாழ்வை கடத்த வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தார். தன்னாலும் மற்றவர்களை போல் சுயமாக எழுந்து நடக்க இயலும் என்று அவர் எண்ணியது கூட இல்லை.
‘என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல’ என்று எசாயா நூலில் கூறப்பட்டுள்ளது. தன் வாழ்வின் அன்றைய பொழுதிற்கு தேவையானதை கேட்ட உடனேயே கால் ஊனமுற்றிருந்த நபருக்கு, பேதுருவும் யோவானும் இயேசுவின் பெயரால் அந்த மனிதர் எண்ணி பார்க்காத, சுகத்தையும் பலத்தையும் கொடுத்தார்கள்.
அந்த நடக்க முடியாதவரை போல், சில நேரங்களில் நம்முடைய தேவை இதுதான் என்று நாம் நினைத்து ஒரு காரியத்தை குறித்து ஜெபிக்கலாம். ஆனால் அனைத்தையும் அறிந்த தேவன் நம்முடைய தற்போதைய நிலையை மட்டும் எண்ணாமல், எதிர்காலத்தையும் கண்ணோக்குகிறார். அவர் தற்காலிக ஆசிர்வாதத்தையோ அல்லது விடுதலையையோ நமக்கு கொடுப்பவர் இல்லை. நம்முடைய வாழ்விற்கு தேவையான நிரந்தரமான ஆசிர்வாதங்களை வழங்கி நமது ஜெபத்திற்கு பதில் கொடுப்பவராய் இருக்கிறார்.

டிசம்பர் மாதம் 7-ம் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 13-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
7-ம் தேதி செவ்வாய் கிழமை :
* சதுர்த்தி விரதம்
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல்
* சந்திராஷ்டமம் - மிருககீருஷம்
8-ம் தேதி புதன் கிழமை :
* சுபமுகூர்த்தம்
* திருவோண விரதம்
* தேவமாதா கருவுற்ற திருநாள்
* வளர்பிறை பஞ்சமி
* சந்திராஷ்டமம் - திருவாதிரை
9-ம் தேதி வியாழக்கிழமை :
* சுபமுகூர்த்தம்
* சஷ்டி விரதம்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம்- புனர்பூசம்
10-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சுபமுகூர்த்தம்
* ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் வெள்ளி சிவிகையில் பவனி
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை
* வள்ளியூர் சுப்ரமணியசுவாமி தெப்பம்
* சந்திராஷ்டமம் - பூசம்
11-ம் தேதி சனிக்கிழமை :
* சித்தயோகம்
* வளர்பிறை அஷ்டமி
* சந்திராஷ்டமம் - ஆயில்யம்
12-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* அமிர்த யோகம்
* சிதம்பரம் சிவபெருமான் காலை சந்திரபிரபையில் பவனி
* சந்திராஷ்டமம் - மகம்
13-ம் தேதி திங்கள் கிழமை :
* சுபமுகூர்த்தம்
* சிதம்பரம் சிவபெருமான் காலை தங்க சூரிய பிரபையில் புறப்பாடு
* திருவெண்காடு, திருக்கழுகுன்றம், திருவாடானை, திருக்கடவூர் இத்தலங்களில் 1008 சங்காபிஷேகம்
* சந்திராஷ்டமம் - பூரம்

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா வருகிற 11-ந் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கி 20- ந் தேதி வரை நடக்கிறது.
முன்னதாக 10-ந் தேதி காலை 9.15 மணியளவில் திருவிழாவிற்கான மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 4 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியர் சமுதாயத்தினர் கொடி பட்டத்தை மேள, தாளம் முழங்க முத்துக்குடை ஏந்தி வந்து கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் முதல் நாளான 11 -ந்தேதி காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜை நடக்கிறது. தொடர்ந்து 7.30 மணிக்கு மேல் தாணுமாலயர் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்கு மண் மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்டபள்ளிமடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கிறார். தொடர்ந்து பக்தி இன்னிசையும், திருமுறை பெட்டக ஊர்வலமும் நடக்கிறது.
12-ந் தேதி காலை 6 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருதலும், 9 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா வருதலும், இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதலும் நடக்கிறது.
13-ந்தேதி காலை 8 மணிக்கு புஷ்பக விமானம் வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதலும், இரவு 10.30 மணிக்கு சாமி வீதிஉலா வரும்போது கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சாமி, வேளிமலை குமாரசாமி தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காண வரும்" மக்கள் மார் "சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
14-ந் தேதி காலை 8 மணிக்கு பூத வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும், இரவு 10 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல் நடைபெறும்.
15-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், காலை 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில் முன் சாமி, அம்பாள், பெருமாள் மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் காட்சியும், மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சாமிக்கு அஷ்டாபிஷேகமும், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும் நடக்கிறது.
16-ந்தேதி காலை 8 மணிக்கு வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும், இரவு 10 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும் நடைபெறும்.
17-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பல்லக்கில் சாமி வீதிஉலா வருதலும், இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும் நடக்கிறது.
18-ந்தேதி காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா வருதலும், பேரம்பலம் கோவில் முன் நடராஜ பெருமான் ஆனந்த நடன காட்சியும், இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா வருதலும் நடக்கிறது.
19-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்கள் உலா வருகின்றன. நள்ளிரவு 12 மணிக்கு சப்தவர்ண காட்சியும், திருவிழாவின் இறுதி நாளான 20 -ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜ மூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆராட்டு விழாவும் நடக்கிறது.
திருவிழாவையொட்டி தினமும் மாலை கோவில் கலையரங்கத்தில் சமய சொற்பொழிவு, சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்கமும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

நம்பெருமாள் சவுரிகொண்டை, வைரஅபயகஸ்தம், தங்கக்கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திரு அத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.
பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைபவம் வந்துள்ளது. அதன்படி வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் (3-ந்தேதி) தொடங்கியது.
4-ம்தேதி பகல்பத்து உற்சவம் தொடங்கியது. பகல்பத்து நிகழ்ச்சியின் முதல் நாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2-வது நாளான நேற்று நம்பெருமாள் சவுரிகொண்டை, வைரஅபயகஸ்தம், தங்கக்கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (13-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ராப்பத்து ஏழாம் திருநாளான 20-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 21-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று கார்த்திகை மாத 3-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.
இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் சாமி துளசி மாலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்ககவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து சுமார் 2 ஆண்டுக்கு பிறகு நாமக்கல் ஆஞ்சநேயர் வெண்ணைகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக இவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டது.

ஐயப்பனை தரிசிக்கவும், அவரது அருளாசிகளைப் பெறுவதற்கும் விரதம் மேற்கொண்டு, கடினமான மலைப் பாதையில் பயணம் செய்து மலை உச்சியில் அமர்ந்திருக்கும் ஐயப்பனை காண வருகின்றனர்.
சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இங்கு தான் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18 மலைத்தொடர்களுக்கு நடுவே சுவாமி ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை முழுவதிலும் கார்த்திகை மாதம் வந்துவிட்டால் சரண கோஷங்கள் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். ஜாதி, மதம், மொழி, இனம் என்ற பாகுபாடில்லாமல் அனைத்துவிதமான பக்தர்களும் ஐயப்பனை தரிசிக்கவும், அவரது அருளாசிகளைப் பெறுவதற்கும் விரதம் மேற்கொண்டு, கடினமான மலைப் பாதையில் பயணம் செய்து மலை உச்சியில் அமர்ந்திருக்கும் ஐயப்பனை காண வருகின்றனர்.
ஐயப்பர் வரலாறு:
மகிஷாசுரனை வதம் செய்த அன்னை ஆதிபராசக்தியின் மீது கோபம் கொண்டு, அவனது தங்கையான மகிஷி பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்து வரங்களைப் பெற்றாள். வரம் பெற்ற மகிஷி தேவர்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்தி வந்தாள். இதைக் கண்ட சிவபெருமானும், விஷ்ணுவும் மகிஷியை அழிக்க வேண்டி, விஷ்ணு மோகினி அவதாரமெடுக்க, சிவபெருமானுக்கும், விஷ்ணுவான மோகினிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அனைத்து தெய்வாம்சங்களும் அமைந்திருந்தது. சிவனும், விஷ்ணுவும் காட்டில் ஒரு மரத்தடியில் குழந்தையை அதன் கழுத்தில் ஒரு மணி மாலையை அணிவித்து போட்டுவிட்டு சென்றுவிட்டனர். எல்லாம் இறைவனின் லீலை.
இதற்கிடையே கேரளாவில் பந்தள மகாராஜா ராஜசேகரனும், அவனது மனைவியும் குழந்தையில்லாமல் தவித்து வந்தனர். அவர்கள் இருவரும் இறைவனிடம் மனமுருக பிரார்த்தித்து வந்தனர். ஒரு நாள் பந்தள மகாராஜா காட்டிற்கு வேட்டைக்கு வந்தார். அப்போது காட்டிற்குள்ளிருந்து ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. மகாராஜாவுக்கோ சந்தேகம், காட்டிலிருந்து எப்படி குழந்தை சத்தம் வருகிறது என்று தேடினார். அப்போது மரத்தடியில் இருந்த குழந்தையைப் பார்த்து அருகில் சென்றார். அங்கே ஜொலித்துக் கொண்டிருந்தார் ஐயப்பர்.
பந்தள மன்னனுக்கு ஒரே மகிழ்ச்சி. குழந்தையில்லையே என்ற இறைவனை பிரார்த்திர்த்தது வீண் போகவில்லை. அந்த பகவான் தான் நமக்கு இந்த குழந்தையை கொடுத்திருக்கிறார் என்று ஆசையோடும், அன்போடும் அரண்மனைக்கு எடுத்து வந்தார். மகாராணியும் குழந்தையைப் பார்த்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினாள். ஜோதிடர்கள் இந்த குழந்தை தெய்வாம்சம் நிறைந்த குழந்தை என்று கூறினார். கழுத்தில் மணி மாலையோடு இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பந்தள மகாராஜா. நாளடைவில் மகாராணியும் கர்ப்பமுற்று ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ராஜராஜன் என்று பெயரிட்டனர். மகாராஜவுக்கும், மகாராணிக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. மணிகண்டன் வந்த நேரம் தான் நமக்கு இன்னொரு குழந்தை கிடைத்திருக்கிறது என்று எண்ணினர்.
மந்திரியின் சதி:
அரண்மனையில் சிறப்பாக வளர்ந்து வந்த மணிகண்டனுக்கு பந்தள மகாராஜா பட்டாபிஷேகம் நடத்த முடிவு செய்தார். இதையறிந்த மந்திரி எங்கே மணிகண்டன் அரசரானால் தனக்கான முக்கியத்துவம் போய்விடுமோ என்று பயந்து சதி செய்தான். மகாராணியிடம் சென்று உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க, மன்னர் மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்யவிருக்கிறார். அதனால் ராஜராஜனுக்குப் பதிலாக மணிகண்டன் அடுத்த அரசராகி விடுவான் போலிருக்கிறது என்று ராணியின் மனதில் விஷத்தை விதைத்தான்.
புலிப்பால் கொண்டு வரச்சென்ற ஐயப்பர்:
மந்திரியின் சூழ்ச்சியால் ராணி தனக்கு தீராத வயிற்று வலி வாட்டுகிறது என்றும், அரண்மனை வைத்தியரைக் கொண்டு இதற்கு புலிப்பால் கொண்டு வந்தால் குணமாக்க முடியும் என்று சொல்ல வைத்தாள். சூழ்ச்சியை அறிந்து கொண்ட 12 வயது பாலகனான ஐயப்பன் காட்டிற்கு சென்றார். காட்டிற்குள் வந்து கொண்டிருந்த ஐயப்பனை தடுத்து நிறுத்தினாள் மகிஷி. வில்லாளி வீரன் ஐயப்பன் மகிஷியுடன் சண்டையிட்டு இறுதியில் மகிஷியை அழித்தார்.
மகிஷியின் அழிவால் தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் மகிழ்ந்தனர். இந்திரன் புலியாக மாறினார். அவர் மீது அமர்ந்தார் ஐயப்பர். தேவர்களும் புலிப்படையாக மாறினர். ஐயப்பர் புலி மேல் அமர்ந்து அரண்மனையை நோக்கி வந்தார். ஊருக்குள் புலிகள் கூட்டமாக வருவதைக் கண்ட மக்களும், மகாராணியும் அஞ்சினர். மகாராணியும், மந்திரியும் தங்களது தவறை உணர்ந்து ஐயப்பனிடம் மன்னிப்புக் கோரினர்.
ஐயப்பனும் தனது அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும், நான் பூமியில் எதற்காக பிறந்தேனோ அந்த வேலை முடிந்துவிட்டது. அதனால் நான் தேவலோகம் செல்கிறேன் என்றார். மகனைப் பிரியப் போகிறோமே என்று மனமுடைந்த பந்தள மன்னன் ஐயப்பனிடம் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக ஒரு கோயில் கட்ட விரும்புகிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று கேட்டான். ஐயப்பர் ஒரு அம்பை எடுத்து எய்தார். இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கே கோயில் கட்டுங்கள் என்றார். அந்த அம்பு சபரி மலையில் போய் விழுந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும், பக்கத்தில் மாளிகைபுறத்தம்மனுக்கும் கோயில் கட்டுங்கள் எனக் கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.
மணிகண்டனின் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையின் பேரில் பந்தள மன்னர் ஊண் உறக்கம் இல்லாமல் தானே நேரடியாக மேற்பார்வை கொண்டு பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார். அங்கு ஆண்டுதோறும் லட்சோப லட்சம் பக்தர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலை வந்து தரிசித்து ஐயப்பனின் அருளைப் பெறுகின்றனர்.
சபரிமலை கோயில்:
ஐயப்பனின் கருவறை ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில் நீளவாக்கில் அமைந்துள்ளது. அந்த நீண்ட சதுரத்தின் மீது கொட்டகை போட்டது போன்று தங்கத்தகடுகள் தட்டையாக இல்லாமல் இரண்டு புறமும் சாய்ப்புல் போல் இருக்கும். இந்தக் கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் முன் பகுதியில் இடது, வலதாக அமைந்த ஓட்டு வீடு போன்ற நுழைவாயில் உள்ளது. அந்த ஓட்டு வீட்டின் முகப்பும் நீட்டிவிடப் பெற்றுச் சாய்ப்பான ஓட்டு வீடு போல்தான் இருக்கும். ஐயப்பனின் முன்னுள்ள ஓட்டுப் பகுதியில் நின்றால் மட்டுமே வெயில் மழை நம்மீது படாது.
உயரமான ஒரு பெரிய முதல் மாடியில் அமைந்துள்ள கோவிலாக அமைந்திருப்பதால் சரங்குத்தி வந்தவுடனேயே கோவில் நம் கண்ணில் தென்பட்டு, ‘கண்டேன், கண்டேன் உன் திருக்கோவில்’ என்று கூற வைக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
மஞ்சமாதா கோயில்:
மகிஷியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலிலிருந்து லீலா என்ற தேவதை போன்ற பெண்ணொருத்தி வெளிவந்து ஐயப்பனை வணங்கி ‘நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன். என் சாபம் நீங்குவதற்கு காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வரவேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்...’ என வேண்டினாள்.
ஐயப்பன் அவளிடம் ‘நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாகச் சத்யப்பிரமாணம் செய்துள்ளேன்...’ என்று கூறி அந்த பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்து கோவிலின் இடப்புறம் மாளிகைபுறத்து அம்மன் என்ற பெயரில் அமர்ந்து இங்கே என்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஐயப்பன் கேட்டுக்கொண்டபடி, அந்த பெண் சபரிமலையில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுறத்தம்மனாக அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறாள்.
பக்தர்கள் மஞ்சமாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், அவளது திருக்கோவில் பிரகாரத்தைச் சுற்றி தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அவளது அருளைப் பெற்று வருகிறார்கள்.
பம்பை நதி:
ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த பம்பா நதியில் நீராடிய பின்பே சபரிமலை ஏறுகின்றனர். கங்கையை போன்ற புண்ணிய நதி பம்பா. இங்கிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் சபரிமலை உள்ளது. தர்மசாஸ்தா மணிகண்டனாக இம்மண்ணுலகில் அவதரித்த இடம் இதுதான். இந்த இடத்துக்கு பம்பா சக்தி என்ற இன்னொரு பெயரும் உண்டு. மேற்கு தொடர்ச்சி மலையின் புளிச்ச மலைப் பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு ஆலப்புழா, பந்தனம்திட்டா, மாவட்டங்களின் வழியாக பாய்ந்தோடி வேம்நாட்டு ஏரியில் கலக்கிறது.

முறைப்படி அறிவித்து, புது தண்ணீரை திறந்துவிட கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காரைக்கால் அருகே திருநள்ளாறில் சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா தொடர் ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிப்பாட்டுத்தலங்களில் இயல்பாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால், கடந்த 3.6.2020 முதல், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பொதுவாக, திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் ஐதீகமுறைபடியும், கடந்த பல நூற்றாண்டுகளாகவும், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள், முதலில், நளன் குளத்தில் புனித நீராடி, தங்கள் ஆடைகளை, குளத்தில் வீசிவிட்டு செல்வதுதான் வழக்கம். பலர் ஆடைகளை கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல்படி, குளத்தின் கரையில் போட்டு வருகின்றனர்.
ஆனால், கொரோனா தொற்று காரணமாக, மார்ச் 2020 முதல் நளன் குளத்தில் புனிதநீராட கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடை இதுவரை நடைமுறையில் உள்ளது. அதற்கு ஏற்றார் போல், நளன் குளத்தில் தண்ணீர் இரைக்கப்பட்டு, சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது. இதனால், பக்தர்கள் நளன் குளத்தில் புனிதநீராடாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் அருகில் உள்ள தனியார் விடுதிகளில் குளித்து விட்டு தங்களது ஆடைகளை, நளன் குளத்தின் கரைகளிலும், கோவிலை சுற்றியுள்ள பிரம்மதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் உள்ளிட்ட புனித தீர்த்தங்களிலும் வீசிவிட்டு செல்வதால், மேற்கண்ட குளங்களில் குப்பைகள் அதிகரித்து வந்தது.
எனவே, சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் நலன் கருதி, முன்னோர்கள் கூறிவந்த ஐதீகமுறைப்படி, நளன்குளத்தில் புனித நீராட, கோவில் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். அல்லது, நளன் குளத்து புனித நீரை, பக்தர்கள் தலையில் தெளித்துகொள்ள நவீன கருவிகள் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். பக்தர்களின் ஆடைகளை போட, புனித தீர்த்தம் அருகில், தற்காலிக தொட்டிகளை அமைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், கோவில் நிர்வாகம் தடையை நீடித்து வந்தது.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, நளன் குளத்தில் வெள்ளம் போல் தண்ணீர் நிரம்பியது. தற்போது ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பலர் மாலை அணிந்திருப்பதால், சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வரும் போது, நளன் குளத்தில் நீராடி செல்கின்றனர்.
நேற்று சனிக்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள் நளன் குளத்தில் புனித நீராடினர். இதனை கோவில் நிர்வாகம் தடுக்கவோ, ஆதரிக்கவோ இல்லை. இதனால், பக்தர்கள் 2 ஆண்டுகளுக்கு பிறகு மன நிம்மதியோடு புனித நீராடி சென்றனர். இதை முறைப்படி அறிவித்து, புது தண்ணீரை திறந்துவிட கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்லும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஐயப்ப பக்தர்கள் தன் தலையில் தாங்கி நிற்கும் இருமுடியின் தத்துவத்தை தெரிந்து கொள்வது அவசியம். மணிகண்டன் என்ற நாமத்துடன் ஐயப்பசாமி பூவுலகில் ராஜசேகரன் மன்னன் மகனாக வாழ்ந்த போது புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு சென்றார்.
அப்போது குலதெய்வமாகிய சிவபெருமானை துணைக்கு அழைப்பது போல் 3 கண்ணுடைய தேங்காயை எடுத்துக்கொண்டு போகும்படி மணிகண்டனுக்கு மன்னன் ஆலோசனை சொன்னார். அவரும் அப்படி செய்தார்.
அதே பழக்கத்தைத்தான் இப்போது சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்வதன் மூலம் கடைபிடித்து வருகிறார்கள். இருமுடியில் ஒருபுறம் பக்தனுக்கு தேவையான பொருட்கள், யாத்திரை முடியும் போது ஐயப்ப பக்தன் தனக்கென்று கொண்டு போன பொருட்களை எல்லாம் காலி செய்து விடுகிறான்.
ஆண்டவனின் பதினெட்டு படிகளை கடக்கிறான். ஆண்டவனை நெருங்கும் வரை தான் தனக்கென்று தேவைப்படுகிறது. நெருங்கியவுடன் நமக்கென்று ஒன்றும் தேவை இல்லை எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் ஆகிவிடுகிறது என்பது தான் இருமுடியின் தத்துவம்.

இந்த போற்றியை அர்ச்சித்த பின்னர் சாம்பிராணி, ஊதுபத்தி, காண்பித்து, நிவேதனம் செய்து கற்பூரத்தை ஏற்றிக்கொண்டு, ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் சரணம் என்று காட்டவும்.
1. அச்சங்கோவில் அரசே போற்றி
2. ஆரியங்காவு அய்யாவே போற்றி
3. அகில நாயகனே போற்றி
4. ஆறுமுகன் சோதரனே போற்றி
5. அன்பர்க்கு மெய்யன்பனே போற்றி
6. ஆனைமுகன் தம்பியே போற்றி
7. இருமுடிப் பிரியனே போற்றி
8. ஈசன் மகனே போற்றி
9. இடரை தீர்ப்பவனே போற்றி
10. ஈடில்லா தெய்வமே போற்றி
11. இளநீர் பிரியனே போற்றி
12. வன்புலி வாகனனே போற்றி
13. உண்மையின் தத்துவமே போற்றி
14. உலகைக் காப்பவனே போற்றி
15. உலக நாயகனே போற்றி
16. ஊழ்வினை களைபவனே போற்றி
17. ஐயந் தவிர்ப்பவனே போற்றி
18. ஐயப்ப தெய்வமே போற்றி
19. ஓங்கார ரூபனே போற்றி
20. ஒற்றுமையில் ஒளிர்பவனே போற்றி
21. கற்பூரப் பிரியனே போற்றி
22. காந்தமலை வாசனே போற்றி
23. கற்பூர ஜோதியே போற்றி
24. சபரி பீடமே போற்றி
25. தர்ம சாஸ்தாவே போற்றி
26. கால சாஸ்தாவே போற்றி
27. தீப ஜோதியே போற்றி போற்றி
என்று அர்ச்சித்த பின்னர் சாம்பிராணி, ஊதுபத்தி, காண்பித்து, பானகம், நீர்மோர், கடலை சுண்டல், வெற்றிலை பாக்கு, பழம் வைத்து நிவேதனம் செய்து கற்பூரத்தை ஏற்றிக்கொண்டு, ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் சரணம் - என்று காட்டவும்.
பிறகு மூன்று முறை நமஸ்கரித்து மேற்கண்ட நாமாக்களை சரணம் சொல்லி வணங்கவும். பூஜை முடிந்தவுடன் சிறிது பாலை தீபத்திற்கு வைக்கவும்.
அனுதினமும் இவ்விதம் செய்ய மகர ஜோதியை இறைவனின் கருணையால் நன்கு தரிசித்து சகல சௌபாக்யங்களையும் பெறலாம். ஏழரை ஆண்டு சனி கிரகம் கொடுக்கும் தொல்லைகளிலிருந்தும் விடுபடலாம்.'

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட வாகன சேவை நடந்தது. இதில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ பூபால வாகன சேவை மற்றும் மாலை 5 மணியில் இருந்து 6 மணிவரை தங்கத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை நடந்தது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணி முதல் 8 மணி வரை கருட வாகன சேவை நடந்தது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

புனித அமல அன்னை தேர்த்திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திருவிழா சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 140 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த தேர்த்திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
நேற்று காலை ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான்சேவியர் தலைமையில், காங்கேயம் குழந்தை மாதா திருத்தல அதிபரும், பங்குத்தந்தையுமான கிளாடியஸ் திருப்பலி (பூஜை) நிறைவேற்றினார். பின்னர் அமல அன்னையின் திருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.
அன்னை மரியாள் உருவம் பதித்த கொடியை பங்குத்தந்தையர்கள் ஏற்றியபோது கூடி இருந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். விழாவையொட்டி நற்கருணை (புதுநன்மை) வழங்கும் வழிபாடும் நடந்தது. விழாவில் உதவி பங்குத்தந்தை ராயப்ப தாஸ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய உதவி பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது. 9-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை இம்மானுவேல் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது.
10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரத்தினபுரி புனித சின்னப்பர் ஆலய பங்குத்தந்தை அருள் இருதயராஜ் நவநாள் திருப்பலி, ஆராதனை மற்றும் திருப்பலி நடக்கிறது. நவநாள் திருப்பலிகளுடன் சிறப்பு மறையுரை நடக்கிறது.
12-ந் தேதி புனித அமல அன்னை தேர்த்திருவிழா சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அன்றைய தினம் காலை 6 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குரு ஜான் சேவியர் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. காலை 8 மணிக்கு மறைமாவட்ட வக்கீலும் பங்குத்தந்தையுமான ஆரோக்கிய பிரதீப் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோவைப்புதூர் குழந்தை ஏசு திருத்தல உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இந்த 3 திருப்பலிகளின் போதும், திருப்பலி முடிந்ததும் ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.
இதுபற்றி பங்குத்தந்தை ஜான் சேவியர் கூறும்போது, ‘புனித அமல அன்னை தேர்த்திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திருவிழா சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 12-ந் தேதி தேர்த்திருவிழா அன்று மாலையில் தேர் வீதி ஊர்வலம் நடைபெறாது. அதற்கு பதிலாக ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்படும்’ என்றார்.