search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruchanoor Sri Padmavathi Thayar Temple"

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடக்க உள்ளது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் நடக்க உள்ளது. அதையொட்டி இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை யாக சாலையில் புண்ணியாவதனம், ரக்‌ஷாபந்தனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் மற்றும் காரியக்கர்மங்கள் நடக்கிறது..

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை தங்கக் கொடிமரத்துக்கு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தனூர் லக்னத்தில் காலை 9.45 மணியில் இருந்து காலை 10 மணிக்குள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின்போது தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி வாகன மண்டபத்தில் தரிசனம் தருகிறார்.

    நாளை இரவு சிறிய சேஷ வாகன சேவை, 1-ந்தேதி காலை பெரிய சேஷ வாகன சேவை, இரவு ஹம்ச வாகன சேவை, 2-ந்தேதி காலை முத்துப்பந்தல் வாகன சேவை, இரவு சிம்ம வாகன சேவை, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன சேவை, இரவு ஹனுமந்த வாகன சேவை, 4-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகன சேவை, 5-ந்தேதி காலை சர்வ பூபால வாகன சேவை, மாலை தங்கத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை, இரவு கருட வாகன சேவை.

    6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன சேவை, இரவு சந்திர பிரபை வாகன சேவை, 7-ந்தேதி மரத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை, இரவு குதிரை வாகன சேவை, 8-ந்தேதி வாகன மண்டபத்தில் பஞ்சமி தீர்த்தம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.

    இத்துடன் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற வாசனைத் திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பதி இணை அதிகாரி வீரபிரம்மன் கலந்து கொண்டார்.

    காலை 6 மணி முதல் 9 மணி வரை கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற வாசனைத் திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

    இதன் ஒரு பகுதியாக, சர்வ தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோவில் துணை தாசில்தார் கவுஸ்தூரிபாய் மற்றும் பிரபாகர் ரெட்டி, கண்காணிப்பாளர் சேஷகிரி, கோவில் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்த பக்தர்கள் 90 நாட்களுக்குள் சிறப்பு நுழைவு வரிசையில் இலவசமாக சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டு தோறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி வருகிற 29-ந்தேதி நடக்கும் குங்கும லட்சார்ச்சனை சேவைக்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கும். குங்கும லட்சார்ச்சனை சேவை கொரோனா பரவலால் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.

    தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்த பக்தர்கள் 90 நாட்களுக்குள் சிறப்பு நுழைவு வரிசையில் இலவசமாக சென்று சாமி தரிசனம் செய்யலாம். தரிசனத்தின்போது பக்தர்களுக்கு ஜாக்கெட், மஞ்சள் அரிசி ஆகியவை வழங்கப்படுகிறது. இணையதளம் மூலம் தரிசன சேவைக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி 23-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. அன்று காலை 6 மணியில் இருந்து காலை 9 மணி வரை கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள், பாத்திரங்கள் போன்றவற்றை நீரால் சுத்தம் செய்யப்படுகிறது.

    பின்னர் நாமகொம்பு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், குங்குமம், மஞ்சள், சந்தனப்பொடி போன்ற சுகந்த திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. அதன் பிறகு இலவச தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×