என் மலர்

  ஆன்மிகம்

  திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்
  X
  திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்

  திருச்சானூர் கோவிலில் குங்கும லட்சார்ச்சனைக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் வினியோகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்த பக்தர்கள் 90 நாட்களுக்குள் சிறப்பு நுழைவு வரிசையில் இலவசமாக சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
  திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டு தோறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி வருகிற 29-ந்தேதி நடக்கும் குங்கும லட்சார்ச்சனை சேவைக்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கும். குங்கும லட்சார்ச்சனை சேவை கொரோனா பரவலால் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.

  தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்த பக்தர்கள் 90 நாட்களுக்குள் சிறப்பு நுழைவு வரிசையில் இலவசமாக சென்று சாமி தரிசனம் செய்யலாம். தரிசனத்தின்போது பக்தர்களுக்கு ஜாக்கெட், மஞ்சள் அரிசி ஆகியவை வழங்கப்படுகிறது. இணையதளம் மூலம் தரிசன சேவைக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

  வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி 23-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. அன்று காலை 6 மணியில் இருந்து காலை 9 மணி வரை கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள், பாத்திரங்கள் போன்றவற்றை நீரால் சுத்தம் செய்யப்படுகிறது.

  பின்னர் நாமகொம்பு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், குங்குமம், மஞ்சள், சந்தனப்பொடி போன்ற சுகந்த திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. அதன் பிறகு இலவச தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×