என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சபரிமலைக்கு மாலை அணிஞ்சு போறதுல எவ்வளவோ சிறப்பான அம்சங்கள் இருக்கு. மாலை போட்டு விரதமிருக்கும்போது நம்மை நாமே சுயபரிசோதனை செஞ்சுப் பார்த்துக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கு.
    1. திருநாமங்கள் - அரிஹரசுதன், சாஸ்தா, மணிகண்டன், மாசாத்தான், கண்டன் சாத்தன், சாத்தப்பன், ஐயனார்
    2. கேரளத்தில் திரு அவதாரம் செய்தது - கொல்லம் ஆண்டு 79 (கி.பி.803)
    3. பெற்றோர் - சிவன்-மோகினி உருக்கொண்ட திருமால்
    4. பிறந்தநாள் - மார்கழி மாதம், சனிக்கிழமை, பஞ்சமி திதி, உத்திர நட்சத்திரம், விருச்சிக லக்னம் கூடிய சுபதினம்.
    5. சகோதரர்கள் - கணபதி, கந்தன், ராஜராஜன் (பந்தள மன்னரின்மகன்)
    6. மூலமூர்த்தி - பூரணை- புஷ்கலை
    7. திருக்குமாரர் - சத்யகன் (சிவனின் ஒரே பேரன்)
    8. நிலவுலக அவதாரம்    பெற்றோர் - ஜெயந்தன்- பந்தன அரசகுமாரி
    9. அவதார நோக்கம் - மகிஷிவதம்
    10. திருநாமம் - மணிகண்டன்
    11. வளர்ப்பு தந்தை - பந்தள மன்னன்- ராஜசேகரன்
    12. நண்பர் - வாபரர் (இஸ்லாமியர்)
    13. விரும்பி உறைவது - சபரி பீடம்
    14. பிற ஆலயங்கள் - அச்சன்கோவில், ஆரியங்கா, எருமேலி, காந்தலை
    15. உடன் பிறந்தோர் - விநாயகர், முருகன், பந்தன மன்னன் குமாரன்
    16. பிடித்தது - தெய்த்தேங்காய், இருமுடி
    17. விரும்புவது - சரணகோஷம்
    18. சிறந்த திருநாள் - மகரஜோதி, தை முதல்நாள்
    19. திருக்கோலம் - யோக நிலை
    20. திருக்கரங்கள் - இரண்டு மட்டுமே
    21. ஆயுதங்கள் - ஏதும் இல்லை
    22. ஆற்றல் - திருமாலின் காத்தல், சிவனின் அழித்தல்
    23. அவதார பலன் - சைவ வைணவ ஒற்றுமை
    24. அருளிப்பாடு - மன்னித்து வாழ்விப்பது
    ஐயப்ப பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள நெய் தேங்காய்களை உடைத்து அதை சுவாமி அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்து கிடைக்கும் நெய்யை பிரசாதமாக உபயோகப்படுத்த வேண்டும்.
    எருமேலி:

    தர்மசாஸ்தா சன்னதி (எருமேலி) ஐயப்ப பக்தர்கள் இச்சன்னதியில் அவசியம் பேட்டை துள்ள வேண்டும். மணிகண்டன் ராஜசேகரமன்னன் ஆணைப்படி காட்டுக்கு வேட்டையாடச் சென்று வந்ததன் நினைவாக இது செய்யப்படுகிறது. பேட்டைதுள்ளல் என்பது மகிழ்ச்சியாக ஆடப்படும் நடனம், பேட்டை துள்ளலின்போது சாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தக்கத்தோம் என்று பாடவேண்டும் காணிக்கைகளை உண்டியலில் போடவேண்டும்.

    பாம்பா நதி வழிபாடு:

    பம்பை நதியில் பக்தியுடன் ஐயப்பனை நினைவில் கொண்டு நீராட வேண்டும். நீராடியபின், குருதட்சணை, அன்னதானம், பம்பை விளக்கு ஆகிய சக்திக்குரிய பூஜைகளை நடத்த வேண்டும். பம்பை நதிக்கரையில் பம்பா சத்யா எனும் அன்னதானம் செய்ய வேண்டும். காட்டிலுள்ள மூலிகை மரம், வேர் போன்றவற்றை விறகாகக் கொண்டு தயாரிக்கப்படும் அன்னத்தையும் மற்றும் உள்ள பதார்த்தங்களையும் உண்பதால் உடலில் உள்ள நோய்கள் குணமாகின்றன.

    பம்பை-ஸ்ரீராமர் அனுமர் கோவில் வழிபாடு:

    பம்பை நதிக்கரையில் உள்ள கணபதி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டபின் ஸ்ரீராமர் கோவிலிலும், ஸ்ரீஹனுமார் கோவிலிலும் வழிபடவேண்டும்.

    பந்தள ராஜவந்தனம்:

    நீலிமலை ஏறுவதற்கு முன்பாக நதிக்கரையில் வீற்றிருக்கும் பந்தளராஜா ஆசிரமத்திற்கு வந்து இறைவனை வழிபட்டபிறகே செல்ல வேண்டும்.

    அப்பாச்சிக்குழி, இப்பாச்சிக்குழி:

    ஐயப்ப சுவாமியின் முக்கியமான பூதகணமாக கடுவரனால் துர்பூதங்களும், துர்வேதனங்களும் இங்கு அடங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கன்னி சுவாமிகள் தங்கள் மூத்த குருசுவாமி ஆணைப்படி இந்த இடத்தில் அரிசிமாவு உருண்டையும் வெல்ல உருண்டைகளையும் இந்தக்குழியில் போட வேண்டும்.

    சரஸ்குழி ஆல்துறை:

    கன்னிசுவாமிகள் குருதட்சணை வழங்கியபிறகு இந்த இடத்தில் சரக்கோல் குத்த வேண்டும்.

    நெய் அபிஷேகம்:

    நெய் அபிஷேகம் ஸ்ரீ சன்னிதானத்தில் செய்ய வேண்டிய ஒன்றாகும். ஐயப்ப பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள நெய் தேங்காய்களை உடைத்து அதை சுவாமி அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்து கிடைக்கும் நெய்யை பிரசாதமாக உபயோகப்படுத்த வேண்டும்.

    கணபதி சுவாமி சன்னதி:

    இங்கு ஒரு ஹோமகுண்டம் இருக்கும். இதில் நெய், தேங்காயின் ஒரு பங்கை போட வேண்டும்.

    சண்முக சுவாமி சன்னதி:

    இதுவும் மகா கணபதி சன்னிதானத்தைப்போல சன்னதிக்குள் இருக்கிறது. இங்கு பன்னீர், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் முதலியவற்றை ஏற்றி வழிபட வேண்டும். மாளிகைப்புறத்தம்மா ஐயப்ப சக்தி ஸ்வரூபிணி தேங்காய் உருட்டல் அந்த அம்மனுக்குரிய முக்கியமான வழிபாடு, இங்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலைப்பாக்கு முதலியவற்றை தேவியின் முன்வைக்க வேண்டும். இங்கு பிரசாதம் வாங்கிக் கொள்ளவும்.

    கருத்த சுவாமிகள்:

    அவல், நெல்பொறி, வெல்லம், பழம், தேங்காய், வறுத்தபொடி முதலியவற்றை செலுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.

    கருப்ப சுவாமிகள்:

    இங்கு கற்கண்டு திராட்சைப்பழம், கற்பூரம் ஆகியவற்றை காணிக்கையாக வைத்து வழிபட வேண்டும்.

    நாகராஜா, நாகஷியம்:

    இங்கு மஞ்சள்பொடி, கற்பூரம் வைத்து வணங்க வேண்டும். பின் ஸர்ப்ப தோஷம் ஏற்படாமல் இருக்க ஸ்ர்ப்ப பாட்டு பாட வேண்டும்.

    வாபர் சுவாமி:

    இந்த சன்னதியில் வாசனை திரவியங்களாக பன்னீர், ஊதுபத்தி, தேங்காய், நெல், மிளகு ஆகியவற்றை வைத்து வணங்க வேண்டும்.
    பத்மாவதி தாயார் கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை 11.52 மணிக்கு பஞ்சமி தீர்த்தம் (சக்கர ஸ்நானம்) பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. நிறைவு நாளான நாளை (புதன்கிழமை) காலை 11.52 மணிக்கு பஞ்சமி தீர்த்தம் (சக்கர ஸ்நானம்) பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. கோவிலில் உள்ள வாகன மண்டபத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சிறிய புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரை புஷ்ப யாகம் நடக்கிறது.

    முன்னதாக கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது, என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். திருமண வரம், குழந்தை வரம், வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, தொழில்விருத்தியும் உண்டாகும்.
    மருத மரம் நிறைந்த பகுதியை ‘அர்ச்சுனம்’ என்பார்கள். ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் - மல்லிகார்ச்சுனம் (தலை மருது), திருவிடைமருதூர் - மத்தியார்ச்சுனம் (இடைமருது), திருப்புடைமருதூர்- புடார்ச்சனம் (கடைமருது).திருப்பம் தரும் திருவிடைமருதூர்இந்தியாவில் இரண்டு இடங்களில்தான் மூகாம்பிகைக்கு சிறப்புவாய்ந்த சன்னிதி உள்ளது.

    ஒன்று கர்நாடக மாநிலம் கொல்லூர், மற்றொன்று இந்தத் திருத்தலம். இந்த சன்னிதியில் மகா மேரு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாளின் திருநாமம் ‘பெருமுலையாள்’, ‘ப்ரஹத் சுந்தர குஜாம்பிகை’ என்பதாகும். மூலவர் சன்னிதிக்கு தென்பகுதியில் விநாயகர் சன்னிதி உள்ளது. இவர், மகாலிங்கப் பெருமானை பஞ்சாட்சர விதிப்படி பூஜித்து வருகிறார்.

    மேலும் இந்த இடத்தில் இருந்து தனது அருட்சக்தியால் உலகை விநாயகர் ஆள்வதாக சொல்கிறார்கள். எனவே இவருக்கு ‘ஆண்ட விநாயகர்’ என்று பெயர்.மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். திருமண வரம், குழந்தை வரம், வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, தொழில்விருத்தியும் உண்டாகும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

    * திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் மூலவர் ‘மகாலிங்கம்’, ‘மகாலிங்கேஸ்வரர்’ என்று அழைக்கப்படு கிறார்.

    * இந்த ஆலயத்தின் நான்கு திசைகளிலும் லிங்கங்கள் உள்ளன. கீழ வீதியில் விசுவநாதர்கோவில், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோவில், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோவில், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோவில் இருக்க, நடுநாயகமாக மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். எனவே இது ‘பஞ்சலிங்க தலம்’ என்றும் அழைக்கப் படுகிறது.

    * திருவலஞ்சுழி விநாயகர், சுவாமிமலை முருகன், சேய்ஞசலூர் சண்டிகேஸ்வரர், சூரியனார்கோவில் சூரிய பகவான் முதலான நவக்கிரகங்கள், சிதம்பரம் நடராஜர், சீர்காழி பைரவர், திருவாவடுதுறை நந்தி ஆகிய பரிவாரத் தலங்களுடன், மையத்தில் மூலமூர்த்தியாக மகாலிங்கப் பெருமான் இருக்கிறார். எனவே இது ‘மூல லிங்க தலம்’ எனப் படுகிறது.

    பட்டினத்தாரும், மன்னனாக இருந்து பட்டினத்தாரின் சீடராக மாறிய பத்திரகிரியாரும், இந்த ஆலயத்தின் இறைவனை வழிபாடு செய்துள்ளனர்.

    இத்தல இறைவனுக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், அரிசி மாவு, தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி கொண்டு அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மரத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகனச் சேவையும், இரவு குதிரை வாகனச் சேவையும் நடக்கிறது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை உற்சவர் பத்மாவதி தாயார் சூரிய பிரபை வாகனத்தில் வேணுகோபாலகிருஷ்ணன் அலங்காரத்தில் எழுந்தருளி வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வாகனச் சேவையில் பெரிய ஜீயர், சி்ன்ன ஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி கஸ்தூரிபாய், உதவி அதிகாரி பிரபாகர்ரெட்டி, பாஞ்சராத்ரா ஆகம பண்டிதர் சீனிவாச்சாரியார், அர்ச்சகர்கள் பாபுசுவாமி, சுபந்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மரத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகனச் சேவையும், இரவு குதிரை வாகனச் சேவையும் நடக்கிறது.

    திருப்பதியைச் சேர்ந்த பக்தர்கள் பொன்னாலசுதாகர், உதய் ஆகியோர் 100 டஜன் கண்ணாடி வளையல்கள், உண்டியல் மீது போர்த்தப்படும் துணியை காணிக்கையாக வழங்கினர். அதை, திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மய்யா ெபற்றுக்கொண்டார்.
    பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கொடுத்தால் திரும்பி வராது.
    ஜாதகத்தில் சனி வலிமை பெற்றவர்கள் கடுமையான உழைப்பாளிகள் .சனி வலிமை பெற்றவர்கள், அதிகமாக சொந்த தொழில் செய்பவர்களாகவும், பணப்புழக்கம் அதிகம் இருப்பவர்களாகவும் இருப்பார்கள். மிகக் குறிப்பாக பரம்பரை தொழிலை செய்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் உழைத்த உழைப்பை புதன் வலிமையானவர்கள் ஏமாற்றி பறிப்பார்கள்.

    மேலும் இவர்கள் தொழிலின் ஆழம் புரியாதவர்கள். புதனின் வலிமை குறைவால் சரியாக திட்டமிடத் தெரியாது. தவறான முதலீடு (குறிப்பாக பங்கு சந்தை) செய்வதுடன், தவறான வாடிக்கையாளரை தேர்வு செய்து பெரும் முதலீட்டை இழப்பார்கள். அத்துடன் ஜாமீன் கையெழுத்து போட்டு அதற்கு பொறுப்பேற்று ஏமாறுவார்கள்.

    புதன், சனியுடன் கேது சம்பந்தம் பெறுபவர்கள் தவறான தொழில் கூட்டாளிகளை தேர்வு செய்து வழக்குகளை சந்திப்பார்கள். இவர்கள் ஜாதகத்தில் புதன், சனி சம்பந்தம் பெற்று மறைவு ஸ்தானமான 6, 8, 12-ல் இருக்கும். இவர்கள் தொழிலை மிக கவனமாக நடத்த வேண்டும். கோச்சார புதன் ஜனன சனியுடன் சம்பந்தம் பெறும் போது இழப்பு அதிகமாகவும் மற்ற நேரங்களில் குறைவாகவும் இருக்கிறது. அத்துடன் புதன், சனி தசை நடைபெறும் போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    மிகச் சுருக்கமாக புதன், சனி சம்பந்தம் பெற்றவர்கள் முடிவெடுக்கும் திறனில்லாமல் ஏமாறுபவர்களாகவோ, ஏமாற்றுபவர்களாகவோ, ஏமாறப்போகிறவர்களாகவோ இருக்கிறார்கள். உலவியல் ரீதியாக இந்த கிரக இணைவு இருப்பவர்கள் தொடர்ந்து, ஏமாற்றத்தை சந்தித்து மன சோர்வால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள்.

    பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாத நாட்கள்

    ஒருவருக்கு ஏற்படும் நன்மையோ, தீமையோ, யோகமோ, அவயோகமோ அதை அனுபவிப்ப தன் மூலம் பிறவிப் பயனை அனுபவிக்கிறோம். ஒருவருடன் ருண பந்தம் இருந்தால் மட்டுமே நட்பு, பகை, கொடுக்கல், வாங்கல் போன்ற நிகழ்வுகள் உண்டாகும். ருண பந்தம் இல்லாத பண பரிவர்த்தனைக்கு வாய்ப்பு குறைவு.

    பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கொடுத்தால் திரும்பி வராது. நகை அடமானம் வைக்க கூடாது. ஜாமீன் போடக்கூடாது. இந்த 12 நட்சத்திரங்களின் அதிதேவதைகள் உக்கிர சுபாவம் உடையவர்களாக இருப்பதால் இந்த நாட்களில் பணப் பரிவர்த்தனையை தவிர்க்கவும்.

    பரிகாரம்: ஒருவருக்கு துன்பம் ஏற்படும் போது காலச்சக்கரத்தினால் பக்தர்களை காப்பாற்றக் கூடியவர் பைரவர் என்பதால் ஆபதுத்தாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார். ஆபதுத் தாரணர் - என்றால் பக்தர்களின் துன்பத்தை அடியோடு அழிப்பவர் என்று பொருள்படும்.

    வளமும், நலமும் பெற்று வாழ சீர்காழி அருள்மிகு ஸ்ரீ சட்டை நாதரை மானசீகமாக ஆத்மார்த்தமாக வழிபட்டால் இழந்த பணம் எந்த வடிவிலாவது திரும்பி வரும். ஜாமீன் கையெழுத்தால் ஏற்பட்ட பண பிரச்சினை தீரும். கொடுத்த பணம் வசூல் ஆகும். உழைப்பு ஏற்ற வருமானமும் திறமைக்கு உரிய அங்கீகாரமும் கிடைக்கும். மேலும் கர்ம வினை நீங்கி காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவில் வைகுந்த ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 3- ம்நாளான நேற்று நம்பெருமாள் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திரு அத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.

    பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைபவம் வந்துள்ளது. அதன்படி வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் (3-ந்தேதி) தொடங்கியது.

    4-ம்தேதி பகல்பத்து உற்சவம் தொடங்கியது. பகல்பத்து நிகழ்ச்சியின் முதல் நாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    2-வது நாளான 5-ம் தேதி நம்பெருமாள் சவுரிகொண்டை, வைரஅபயகஸ்தம், தங்கக்கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பகல் பத்து உற்சவத்தின் 3- ம்நாளான நேற்று நம்பெருமாள்நித்தியப்படி கிரீடம், புஜகீர்த்தி, வைரஅபயஹஸ்தம், வைர கைகாப்பு, அர்த்த சந்திரன், மகாலட்சுமி பதக்கம், பெருமாள் பதக்கம், காசு மாலை,முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (13-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    ராப்பத்து ஏழாம் திருநாளான 20-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 21-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.
    சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டு பஜனை நடத்த வேண்டும். கூட்டு பஜனையை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டு பஜனை நடத்த வேண்டும். கூட்டு பஜனையை எப்படி நடத்த வேண்டும் தெரியுமா?

    முதலில் மஞ்சள் பொடி கொண்டு மஞ்சள் பிள்ளையார் ஒன்று செய்து வைத்து வணங்க வேண்டும். குருசாமியும் மற்ற சாமிகளும் விநாயகர் முதற்கொண்டு மற்ற கடவுள்களை மனதில் வணங்கி பின்னர் ஒவ்வொருவராக சரண கோஷம் எழுப்ப வேண்டும்.

    விநாயகர், முருகன், சக்தி, சிவன், விஷ்ணு என்ற வரிசையில் ஆரம்பித்து பிறகு ஐயப்பன் மீது பாடல்கள் பாட வேண்டும். பாடல்கள் பாடி முடித்ததும் தேங்காய் உடைத்து நீர் தெளித்து தீபம் காட்ட வேண்டும். பிறகு 18 படிகள் இருந்தால் அதிலோ அல்லது வாழை இலையின் இருபக்கங்களிலும் பக்கத்திற்கு 9 வீதம் வாழைப்பழத்துண்டுகளை நறுக்கி வைத்து அதில் கற்பூரத்தை வைத்து படிப்பாட்டு பாட தொடங்க வேண்டும்.

    படிப்பாட்டு முடிந்தவுடன் படிகளில் உள்ள கற்பூரத்தை ஏற்றி படி பூஜை செய்ய வேண்டும். பிறகு மங்களம் சொல்லி அனைவரும் கற்பூர தீபத்தை கண்களில் ஒற்றிக்கொள்ள இப்பூஜை இனிதே முடியும்.

    பஜனை முடிந்த பிறகு நடக்கும் அன்னதானத்தில் முதலில் கன்னிச்சாமி ஒருவரை உண்ணச்செய்ய வேண்டும். சாமிகள் சரணம் சொல்லிய பிறகே அன்னத்தில் கைவைக்க வேண்டும். அதுபோல சரணம் சொல்லிய பிறகே எழுந்திருக்க வேண்டும்.
    சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் நீராடி முடித்ததும் கன்னி ஐயப்பமார்களுக்கு விருந்து கொடுத்து உபசரிப்பார்கள். இந்த விருந்தில் ஐயப்பனே நேரில் வந்து உணவு உட்கொள்வதாக நம்பப்படுகிறது.
    ஓம் சுவாமியேஸசரணம் ஐயப்பா
    அரிஹரசுதனேசரணம் ஐயப்பா
    அன்னதானப் பிரபுவேசரணம் ஐயப்பா
    அமுதமலை ஏற்றமேசரணம் ஐயப்பா
    அமுதமலை இறக்கமேசரணம் ஐயப்பா
    அன்புள்ளம் கொண்டவனேசரணம் ஐயப்பா
    அமுதா நதியேசரணம் ஐயப்பா
    அலங்காரப் பிரியனேசரணம் ஐயப்பா
    அச்சன் கோவில் அரசேசரணம் ஐயப்பா
    அனாத ரட்சகனேசரணம் ஐயப்பா    10
    ஆபத்தபாந்தவரேசரணம் ஐயப்பா
    ஆரியங்காவு ஐயாவேசரணம் ஐயப்பா
    ஆனந்த ரூபனேசரணம் ஐயப்பா
    ஆதிசக்தி மைந்தனேசரணம் ஐயப்பா
    ஆறுமுகன் சோதரனேசரணம் ஐயப்பா
    இச்சை தவிர்ப்பவனேசரணம் ஐயப்பா
    இருமுடிப்பிரியனேசரணம் ஐயப்பா
    இணையில்லா தெய்வமேசரணம் ஐயப்பா
    இன்சுவை பொருளேசரணம் ஐயப்பா    20
    இடர்களை ஒழிப்பவனேசரணம் ஐயப்பா
    இருளகற்றிய ஜோதிசரணம் ஐயப்பா
    இன்பம் தருபவனேசரணம் ஐயப்பா
    இஷ்டம் வரம் தருபவரேசரணம் ஐயப்பா
    ஈடில்லா தெய்வமேசரணம் ஐயப்பா
    ஈசனின் மைந்தனேசரணம் ஐயப்பா
    ஈன்றெடுத்தே தாயேசரணம் ஐயப்பா
    ஈகை நிறைந்தவனேசரணம் ஐயப்பா
    உண்மைப் பரம்பொருளேசரணம் ஐயப்பா
    உலகாளும் காவலனேசரணம் ஐயப்பா    30
    உத்தமனே சத்தியனேசரணம் ஐயப்பா
    உடும்பறைக் கோட்டையேசரணம் ஐயப்பா
    ஊமைக்கருள் புரிந்தவனேசரணம் ஐயப்பா
    ஊழ்வினை அழிப்பவனேசரணம் ஐயப்பா
    எங்கள் குல தெய்வமேசரணம் ஐயப்பா
    என் குருநாதரேசரணம் ஐயப்பா
    எங்கள் குறை தீர்ப்பவனேசரணம் ஐயப்பா
    எருமேலி வாசனேசரணம் ஐயப்பா
    எங்களை காத்தருள்வாய்சரணம் ஐயப்பா
    ஏழைப் பங்காளன்சரணம் ஐயப்பா    40
    ஏற்றம் மிகுந்தவனேசரணம் ஐயப்பா
    ஏகாந்த மூர்த்தியேசரணம் ஐயப்பா
    ஏத்தமானூர் அப்பனேசரணம் ஐயப்பா
    ஒளிரும் திருவிளக்கேசரணம் ஐயப்பா
    ஓங்காரப் பரம்பொருளேசரணம் ஐயப்பா
    ஓதும்மறை பொருளேசரணம் ஐயப்பா
    ஔடதம் ஆனவனேசரணம் ஐயப்பா
    கன்னி மூலகணபதி பகவானேசரணம் ஐயப்பா
    கருத்த சுவாமியேசரணம் ஐயப்பா
    கரிமலை ஏற்றமேசரணம் ஐயப்பா    50
    கரிமலை இறக்கமேசரணம் ஐயப்பா
    கண்கண்ட தெய்வமேசரணம் ஐயப்பா
    கலியுக வரதனேசரணம் ஐயப்பா
    கல்லிடும் குன்றேசரணம் ஐயப்பா
    கற்பூர ஜோதியேசரணம் ஐயப்பா
    கருப்பண்ண சுவாமியேசரணம் ஐயப்பா
    கருணையின் வடிவேசரணம் ஐயப்பா
    காந்தமலை ஜோதியேசரணம் ஐயப்பா
    காருண்ய மூர்த்தியேசரணம் ஐயப்பா
    காமாட்சியே தாயேசரணம் ஐயப்பா    60
    காளைகட்டி நிலையமேசரணம் ஐயப்பா
    குலத்துபுழை பாலகனேசரணம் ஐயப்பா
    குறைகளை நீக்கிடுவாய்சரணம் ஐயப்பா
    குற்றங்களை பொறுத்தருள்வாய்சரணம் ஐயப்பா
    குழந்தை மனம் படைத்தவனேசரணம் ஐயப்பா
    குருவாயூர் அப்பனேசரணம் ஐயப்பா
    குன்றின் மீது அமர்ந்திருப்பவனேசரணம் ஐயப்பா
    கொண்டு போய் கொண்டு வரனும் பகவானே    சரணம் ஐயப்பா
    சபரி பீடமேசரணம் ஐயப்பா    70
    சரங்குத்தி ஆலேசரணம் ஐயப்பா
    சபரி கிரீஸனேசரணம் ஐயப்பா
    சங்கடங்களை தீர்த்துடுவாய்சரணம் ஐயப்பா
    சத்ரு சம்ஹரனேசரணம் ஐயப்பா
    சரண கோஷப் பிரியனேசரணம் ஐயப்பா
    சாஸ்தாவின் நந்தவனமேசரணம் ஐயப்பா
    சாந்த சொரூபனேசரணம் ஐயப்பா
    சாந்தி தரும் பேரழகேசரணம் ஐயப்பா
    சிறிய கடுத்தசாமியேசரணம் ஐயப்பா
    சிதம்பரனார் பாலகனேசரணம் ஐயப்பா    80
    சுடரும் விளக்கேசரணம் ஐயப்பா
    தர்ம சாஸ்தாவேசரணம் ஐயப்பா
    திருமால் மருகனேசரணம் ஐயப்பா
    தித்திக்கும் தெள்ளமுதேசரணம் ஐயப்பா
    தேனாபிஷோக பிரியரேசரணம் ஐயப்பா
    நாகராஜக்களேசரணம் ஐயப்பா
    நித்திய பிரம்மச்சாரியேசரணம் ஐயப்பா
    நீலமலை ஏற்றமேசரணம் ஐயப்பா
    நீலமலை இறக்கமேசரணம் ஐயப்பா
    நீல லஸ்தர தாரியேசரணம் ஐயப்பா    90
    நெய் அபிஷேக பிரியரேசரணம் ஐயப்பா
    பம்பா நதியேசரணம் ஐயப்பா
    பம்பையின் சிசுவேசரணம் ஐயப்பா
    பம்பை விளக்கேசரணம் ஐயப்பா
    பந்தள மாமணியேசரணம் ஐயப்பா
    மமதையெல்லாம் அழிப்பவனேசரணம் ஐயப்பா
    மகர ஜோதியேசரணம் ஐயப்பா
    வாவரின் தோழனேசரணம் ஐயப்பா
    வன்புலி வாகனனேசரணம் ஐயப்பா
    வில்லாளி வீரனேசரணம் ஐயப்பா
    வீரமணி கண்டனேசரணம் ஐயப்பா
    விபூதிப் பிரியனேசரணம் ஐயப்பா
    பொன்னம்பல வாசனேசரணம் ஐயப்பா
    பஞ்சமாதா திருவருளேசரணம் ஐயப்பா
    மாளிகை புரத்தம்மனேசரணம் ஐயப்பா
    தேவிலோக மஞ்சாதவேசரணம் ஐயப்பா
    ஐங்கரன் தம்பியேசரணம் ஐயப்பா
    ஐஸ்வர்யம் தருபவனேசரணம் ஐயப்பா    108
    சுவாமியே சரணம் ஐயப்பா!
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய வழிபாடுகளில் படிபூஜை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வழிபாடு மாலை நேரத்தில் புஷ்பாபிஷேகம் முடிந்த பின்னர் நடைபெறும்.
    திருவனந்தபுரம் :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

    கொரோனா பிரச்சினை குறைந்து வருவதால் கோவிலுக்கு செல்ல தினமும் 45 ஆயிரம் பக்தர்களுக்கு நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைன் முன்பதிவு மூலம் 40 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு மூலம் 5 ஆயிரம் பேரும் சபரிமலை செல்லலாம்.

    கோவில் நிர்வாகத்தின் அனுமதியை தொடர்ந்து வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சனி, ஞாயிறு தினங்களில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் கோவிலுக்கு செல்ல 40 ஆயிரத்து 620 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதில் 30 ஆயிரத்து 117 பேர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய வழிபாடுகளில் படிபூஜை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வழிபாடு மாலை நேரத்தில் புஷ்பாபிஷேகம் முடிந்த பின்னர் நடைபெறும். இதனை கோவில் தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி நேரில் நடத்துவார். சன்னிதானத்திற்கு செல்லும் 18 படிகளிலும் விளக்குகள் ஏற்றி, மலர்களால் அலங்கரித்து பூஜை நடைபெறும். இந்த பூஜைக்கு ரூ.40 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே இந்த வழிபாட்டை காண அனுமதிக்கப்படும். அதன்படி வருகிற 2036-ம் ஆண்டு வரை இப்பூஜைக்கான முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கவேண்டுமென்றால், கன்னிசாமியாக இருந்தாலும் குருசாமியாக இருந்தாலும் கட்டாயம் 41 நாள்கள் விரதம் இருக்க வேண்டும்.
    ஐயப்பனுக்கு மாலை அணிந்து மண்டல விரதம் இருப்பது, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அற்புத ஆன்மிக அனுபவம். சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணியும் பலரும் அவரவர் போக்கில் மாலை அணிந்து, ஐயப்பனை தரிசிக்கச் செல்கிறார்கள். ஆனால் அப்படிச் செல்லக்கூடாது. ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கவேண்டுமென்றால், கன்னிசாமியாக இருந்தாலும் குருசாமியாக இருந்தாலும் கட்டாயம் 41 நாள்கள் விரதம் இருக்க வேண்டும். ஒரு மண்டலம் என்பது 48 நாள்கள். சிலர் 56 முதல் 60 நாள்கள் வரையிலும்கூட அதாவது கார்த்திகை முதல் நாளிலிருந்து ஜனவரி 15 -ம் தேதி மகர ஜோதி வரை விரதம் இருப்பது மிகவும் நல்லது. இதை விடுத்து, திடுதிப்பென நண்பர்கள் அழைக்கிறார்கள், அதிகாரி அழைக்கிறார் என மாலை அணிந்து ஒரு வாரத்தில், மூன்று நாட்கள் மட்டும் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.

    மாலையணிந்து விரதமிருந்து சபரிமலைக்குச் செல்ல முடிவுசெய்தால் தனது தாய், தந்தை மற்றும் குருவிடம் ஒரு வாரம் முன்பாகவே தகவல் தெரிவித்து, அனுமதி வாங்கிய பிறகே மாலை அணிய வேண்டும். குறிப்பாகக் கோவிலிலோ, தாயார் முன்னிலையிலோ மாலை அணிவது நல்லது.

    மாலையைத் தேர்வு செய்யும்போது துளசி மணி மாலைதான் ஐயப்பனுக்கு உகந்தது. அவரவர் வசதிக்கேற்ப துளசி மணி மாலையை வாங்கி அணியலாம். செம்பிலோ வெள்ளியிலோ, மணிகளைக் கட்டினால் நம் ஆயுள் முழுவதுக்கும் அந்த மாலையைப் பயன்படுத்தலாம்.

    பொதுவாக ஒவ்வொரு முறை சபரிமலை செல்லும்போதும் ஒரே மாலையை அணிந்து செல்வது சிறப்பு.  அந்த மாலை தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று வரும்போது அது  ராஜ முத்திரையைப் போல மகத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு, ஐயப்பனை மலர்களால் அலங்கரித்து தூப தீபங்களைக் காண்பிக்கவேண்டும். இதைத் தொடர்ந்து 108 முறை சுவாமி ஐயப்பனின் சரண கோஷத்தைச் சொல்லி பூஜை செய்யவேண்டும்.

    விரதம் இருப்பதைப் பொறுத்த வரை சைவ உணவை அவரவரின் உடலுக்குத் தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம். ஒரேயடியாக  சாப்பிடாமல் இருந்து உடலை வருத்திக் கொள்ளத்தேவையில்லை. இச்சையுடன் கிடைப்பதையெல்லாம் சாப்பிடவும் கூடாது. புலனடக்கத்தில் நாம் எப்படி இருக்கிறோம். நம் மனம் எந்த அளவு வலிமையுடன் இருக்கிறதென்பதை மாலை அணிந்திருக்கும்போது நாம் அறிந்து கொள்ளலாம்.  

    தற்கால வாழ்க்கைமுறைச் சூழலில் பலரும் தன் சொந்த ஊரில் இருந்து புலம் பெயர்ந்து நகரம் சார்ந்த வாழ்க்கையை வாழ்கின்றோம். அலுவலகப் பணிகளின் காரணமாக மாலையில் சிலரால் உரிய நேரத்தில் வீடு திரும்பமுடியாது. அதனால் எப்போது வீட்டுக்கு வருகிறோமோ அப்போது நாம் குளித்து பூஜை செய்தால் போதுமானது.

    கன்னிசாமிகள் கண்டிப்பாக கருப்பு வண்ண உடையையே அணிய வேண்டும். காலில் காலணிகள் இல்லாமல் நடந்து பழக வேண்டும். எப்போதும் மனம், வாக்கு, செயல் மூன்றிலும் ஐயப்பனை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும். எல்லோரிடமும் கனிவாக நடந்து கொள்ளவேண்டும் சுடு சொற்கள் சொல்லக்கூடாது. மனம், உடல் இரண்டையும் தூய்மையாக வைத்துக்கொண்டு வேண்டினால் நிச்சயம் நம் எண்ணம் பலிக்கும். ஏனென்றால் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக ஐயப்பன் திகழ்கிறார்.
    சுசீந்திரம் கோவிலில் மூலம் நட்சத்திரத்தையொட்டி, சுமார் 1¾ ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஆஞ்சநேயர் சாமிக்கு முழு உருவ வெள்ளி அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இங்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த சாமியை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.

    ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாதம்தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சாமிக்கு முழு உருவ வெள்ளி அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடும், தீபாராதனையும் நடப்பது வழக்கம்.

    கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளால் வெள்ளி அங்கி அணிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து சுசீந்திரம் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சாமிக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, வெண்ணெய் சாத்துதல்,, மாகாப்பு, சந்தன காப்பு மற்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மூலம் நட்சத்திரத்தையொட்டி, சுமார் 1¾ ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஆஞ்சநேயர் சாமிக்கு முழு உருவ வெள்ளி அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது. அதேநேரம் நேற்று சோமவாரம் என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
    ×