என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
கடலூர் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். சிறப்பு வாய்ந்த இந்த விழாக்களில் மூலவரான நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
வேறு எந்த கோவில்களிலும் இந்த சிறப்பை காண இயலாது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா வருகிற 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
விழாவில் 15-ந்தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 19-ந்தேதி தேரோட்டமும், முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 20-ந்தேதியும் நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜருக்கு மகா அபிஷேகமும், திருவாபரண அலங்காரமும், மாலை 4 மணி அளவில் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது.
வருகிற 21-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது. ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதியில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவில் வைகுந்த ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 4-ம் நாளில் நம்பெருமாள் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திரு அத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.
பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைபவம் வந்துள்ளது. அதன்படி வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் (3-ந்தேதி) தொடங்கியது.
4-ம்தேதி பகல்பத்து உற்சவம் தொடங்கியது. பகல்பத்து நிகழ்ச்சியின் முதல் நாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2-வது நாளான 5-ம் தேதி நம்பெருமாள் சவுரிகொண்டை, வைரஅபயகஸ்தம், தங்கக்கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பகல் பத்து உற்சவத்தின் 3- ம்நாளான 6-ம்தேதி நம்பெருமாள்நித்தியப்படி கிரீடம், புஜகீர்த்தி, வைரஅபயஹஸ்தம், வைர கைகாப்பு, அர்த்த சந்திரன், மகாலட்சுமி பதக்கம், பெருமாள் பதக்கம், காசு மாலை,முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
4-ம் நாளான நேற்று நம்பெருமாள் தொப்பரைக்கொண்டை, மகரி, சந்திர பதக்கம், நெற்றி சரம், ரத்தின அபயஹஸ்தம், மகர கர்ண பத்ரம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, முத்துச்சரம், காசு மாலை உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (13-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ராப்பத்து ஏழாம் திருநாளான 20-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 21-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல், ஐயப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன. அவற்றை ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்றே சொல்லலாம்.
சபரிமலை :
இங்கு தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார்.
எருமேலி :
இங்கு ஐயப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார்.
ஆரியங்காவு :
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கேரளா மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சி தருகிறார் ஐயப்பன்.
அச்சன்கோவில் :
செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் ஐயப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பன் கல்யாண சாஸ்தா என்று அழைக்கிறார்கள். இதனால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.
பந்தளம் :
இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.
குளத்துப்புழா:
செங்கோட்டையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலை வில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் பால சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர் கள், ஐயப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார்.
முதல்படி: விஷாதயோகம், பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய என்ற ஆத்மத் துடிப்பே விஷாதயோகம் இதுவே முதல்படி.
இரண்டாம்படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாம்படி.
மூன்றாம்படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்ப்பார்க் காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.
நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம்படி.
ஐந்தாம்படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.
ஆறாம்படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.
ஏழாம்படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்... எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவதுபடி.
எட்டாம்படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.
ஒன்பதாம்படி: ராஜவித்ய, ராஜ குஹ்யயோகம், கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத் தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மீகம் என்று உணர்வது ஒன்பதாம்படி.
பத்தாம்படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தை கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம்படி.
பதினொன்றாம்படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது பதினொன்றாம் படி.
பன்னிரண்டாம்படி: பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம்படி.
பதிமூன்றாம்படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம்படி.
பதினான்காம்படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.
பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம்.தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகா¤ப்பது பதினைந்தாம் படி.
பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம், இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.
பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம், சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாம் படி.
பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம், யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

இந்த ஆண்டு 16-ந்தேதி மார்கழி மாதம் பிற்பகல் 12.26 மணிக்கு பிறப்பதால் மறுநாள் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை திருப்பாவை சேவை நடத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் 11 மாதங்கள் வரை ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை அதிகாலை நேரத்தில் துயில் எழுப்பப்பட்டு அன்றைய நாளின் இதர சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.
ஆனால் தமிழ் மாதமான மார்கழி மாதத்தில் மட்டும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடி ஏழுமலையான் துயில் எழுப்பப்படுகிறார். இந்த ஆண்டு 16-ந்தேதி மார்கழி மாதம் பிற்பகல் 12.26 மணிக்கு பிறப்பதால் மறுநாள் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை திருப்பாவை சேவை நடத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கோவிந்தராஜர் கோவில், பத்மாவதி தயார் கோவில், கபில் தீர்த்தம், ஸ்ரீநிவாச மங்காபுரம் ஆகிய தேவஸ்தான கோவில்களிலும் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

மாலை அணிந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழி நடைசரணத்தை தினமும் பாடி வழிபாடு செய்ய வேண்டும்.
சுவாமியே........ அய்யப்போ
அய்யப்போ..... சுவாமியே
சுவாமி சரணம்..... அய்யப்ப சரணம்
அய்யப்ப சரணம்.... சுவாமி சரணம்
தேவன் சரணம்..... தேவி சரணம்
தேவி சரணம்..... தேவன் சரணம்
ஈஸ்வரன் சரணம்.... ஈஸ்வரி சரணம்
ஈஸ்வரி சரணம்.... ஈஸ்வரன் சரணம்
பகவான் சரணம்.... பகவதி சரணம்
பகவதி சரணம்... பகவான் சரணம்
சங்கரன் சரணம்.... சங்கரி சரணம்
சங்கரி சரணம்.... சங்கரன் சரணம்
பள்ளிக்கட்டு.... சபரிமலைக்கு
சபரிமலைக்கு.... பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும்...காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை... கல்லும் முள்ளும்
குன்டும் குழியும்... கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம்... குன்டும் குழியும்
இருமுடிக்கட்டு...... சபரிமலைக்கு
சபரிமலைக்கு.... இருமுடிக்கட்டு
கட்டும் கட்டு.... சபரிமலைக்கு
சபரிமலைக்கு...... கட்டும் கட்டு
யாரை காண.... சுவாமியை காண
சுவாமியை கண்டால்... மோக்ஷம் கிட்டும்
எப்போ கிட்டும்... இப்போ கிட்டும்
தேக பலம் தா... பாத பலம் தா
பாத பலம் தா... தேக பலம் தா
ஆத்மா பலம் தா... மனோ பலம் தா
மனோ பலம் தா.. ஆத்மா பலம் தா
நெய் அபிஷேகம்.... சுவாமிக்கே
சுவாமிக்கே... நெய் அபிஷேகம்
பன்னீர் அபிஷேகம்..... சுவாமிக்கே
சுவாமிக்கே... பன்னீர் அபிஷேகம்
அவலும் மலரும்...... சுவாமிக்கே
சுவாமிக்கே... அவலும் மலரும்
சுவாமி பாதம்... ஐயப்பன் பாதம்
ஐயப்பன் பாதம்... சுவாமி பாதம்
தேவன் பாதம்... தேவி பாதம்
தேவி பாதம்... தேவன் பாதம்
ஈஸ்வரன் பாதம்... ஈஸ்வரி பாதம்
ஈஸ்வரி பாதம்... ஈஸ்வரன் பாதம்
சுவாமி திந்தக்க தோம் தோம்..... அய்யப்ப் திந்தக்க தோம் தோம்..

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தில் பத்மாவதி தாயார் ஸ்வர்ண ரதத்துக்குப் பதிலாக சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் 8-ம் நாள் விழா நேற்று நடந்தது. காலையில் பத்மாவதி தாயார் ஸ்வர்ண ரதத்துக்குப் பதிலாக சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 8 மணி முதல் 9 மணி வரை வாகன சேவை நடந்தது.
இரவு 7 மணி முதல் 8 மணி வரை வாகன பந்தலில் அஸ்வ வாகன சேவை நடைபெற்றது.

ஒரு காலத்தில் கனத்த காட்டுப் பகுதியாக இருந்த ஒற்றை வழிப்பாதை, தற்பொழுது மேம்படுத்தப்பட்டு, இரு பக்கங்களிலும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய சாலையாக இன்று காணப்படுகின்றன.
சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் பத்தனம் தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது.
பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐய்யப்பன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான கடல் நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது.
சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச் சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பிழைத்துக் கொண்ட பாகங்களை காணலாம்.
ஆண்டு தோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும். சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வோறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உட்கொண்டும், அதாவது இறைவனை சுவாமி ஐயப்பன் திருவடிகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
இருந்தாலும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை. மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாறுக் கதைகளில் வீட்டு விலக்குரிய பெண்கள் இங்கு வருவதை தடை செய்துள்ள படியாலும் மேலும் இதர பல காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே.
மண்டல பூஜை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கன்றும் (ஜனவரி 14 மகா சங்கராந்தி) மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.
புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு முதலில் 41 நாட்கள் கொண்ட விருதத்தை (கடினமாக தவம்) பக்தர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக பக்தர்கள் துவக்க நாளன்று ருத்ராக்ஷத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது முதலே விருதத்தை மேற்கொள்ளும் அடியார்கள் பொதுவாக மாமிச உணவு, மீன், மதுபானங்கள், புகையிலை, பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் வார்த்தைகளை தவிர்த்தல் மேலும் தலைமுடி மற்றும் முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தாமல் இருக்க வேண்டும்.
இது போன்ற விதிமுறைகளை ஆசாரத்துடன் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ளூர் கோவில்களுக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் எளிய கருப்பு, நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ள பாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும். தற்பொழுது விருதங்களுக்கான விதிமுறைகளை கெடுபிடியுடன் முந்தைய நாட்களில் இருந்தது போன்று பின்பற்றா விட்டாலும், இருந்தாலும் மக்கள் பொதுவாக ஒரு விதிமுறைக்கு உட்பட்டு நல்லெண்ணத்துடன் அனுஷ்டித்து வருகின்றனர்.
நூற்றுக்காணக்கான பக்தர்கள் இன்றும், சுவாமி ஐயப்பன் அன்றைய தினங்களில் மேற்கொண்டது போலவே என்ற நம்பிக்கையுடன் எருமேலியில் இருந்து புறப்பட்டு, பரம்பரை பரம்பரையாக வரும் காட்டுப் மலைப் பாதைகளில், (சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் கொண்டது) காலணிகள் அணியாமல் நடந்து செல்வதையே இன்னும் விரும்புகின்றனர்.
ஆனால் புதிய யாத்திரையை மேற்கொள்ளும் பல பக்தர்கள் வாகனங்களில் பயணம் செய்து மாற்று வழிகளில் புனிதமான பம்பா நதிக்கரையை அடைகின்றனர். அதற்கு பிறகு, புனிதயாத்திரை மேற்கொள்ளும் அனைவரும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஏற்றதுடன் கூடிய (நீலிமலை) காட்டு மலைப் பாதையில் ஏறி சபரிமலையை அடைய வேண்டும்.

நமது புனித சவேரியார் பேராலயம் இந்திய தாய் திருநாட்டிற்கும், நமது கோட்டார் மறை மாவட்டத்திற்கும், நமது பேராலய பங்கு சமூகத்திற்கும் மிக முக்கியமானது.
கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களை ஒவ்வொரு நாளும் அற்புதங்களால் ஈர்த்து கொண்டிருக்கிறது. உலகில் புனித சவேரியாருக்கென்று முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையுடன் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இந்த பேராலயத்தின் அழகும், அற்புத அருளின் பொழிவும் பக்தர்களை ஆனந்த பரவசம் அடைய செய்கின்றது.
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்ற நம்பிக்கையோடு மன்றாடும் பலர் அன்றாடம் பல நன்மைகளைப் பெற்று மனநிறைவுடன் செல்கின்றனர். பல்வேறு வரலாற்று சிறப்புகளுடன் விளங்கும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் சாதி, சமய வேறுபாடுகளின்றி எல்லா மக்களும் நாடி வரும் கோடி அற்புதங்கள் விளையும் புண்ணிய பூமியாக காட்சி அளிக்கிறது.
ஒருவர் உலகமெல்லாம் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன (லூக்கா 9:25) என்ற வாக்கியம் புனித சவேரியார் வாழ்வுக்கு ஆதாரமாக அடித்தளமாக இருந்தது. மேலும் ஆழ்ந்த ஆன்மிக அனுபவமும் நற்செய்தி பணியாற்ற தூண்டியது. உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்ற இறைவார்த்தையின் படி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி அறிவித்து அனைவரையும் இறையரசில் உட்படுத்த வேண்டும் என்ற ஆவல் இயேசு சபையை நிறுவிய புனித இஞ்ஞாசியாரின் உள்ளத்தில் மேலோங்கி நின்றது. இஞ்ஞாசியார் தன்னுடன் சில குருக்களையும் அழைத்துக் கொண்டு ரோமுக்கு சென்று திருத்தந்தை 3-ம் சின்னப்பரை சந்தித்து ஆன்மிக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் என்ற விருப்பத்தை தெரிவித்தார்.
போர்த்துக்கீசிய மன்னரின் ஆளுகைக்குட்பட்ட இந்தியாவின் சில பகுதிகளுக்கு மறைதூது அருட்பணியாளர்கள் தேவைப்பட்டனர். எனவே போர்த்துக்கீசிய மன்னர் 3-ம் ஜான் மன்னரது உதவியோடு புனித சவேரியார் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவிலேயே மறைதூது பணி செய்ய அனுப்பப்பட்டார்.
இந்திய திருநாட்டின் தென்கோடியில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டம் மலைவளமும், வயல் வளமும், கடல் வளமும் கொண்ட ஒரு சிறிய அழகிய, இனிமையான, படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம்.
இங்கு அமைந்துள்ள கோட்டார் என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். பன்னாட்டு வர்த்தகர்கள் மொய்க்கும் வர்த்தக பொருளகரமாக விளங்கியது. கோட்டார் வந்த சவேரியார் இந்த பகுதியில் சுற்றி வந்து மக்களை சந்தித்து மக்களுடைய அன்றாட வாழ்வோடு இணைந்தார். இவர் சாதி, சமய பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி பணியாற்றினார். மேலும் நம்பிக்கையோடு முன்வந்த மக்களுக்கு திருமுழுக்கு வழங்கினார்.
கோட்டார் பேராலயத்திற்கு இன்னுமொரு சிறப்பு இங்கு தான் மறைசாட்சி தேவசகாயம்பிள்ளையின் கல்லறை அமைந்துள்ளது. நமது புனித சவேரியார் பேராலயம் இந்திய தாய் திருநாட்டிற்கும், நமது கோட்டார் மறை மாவட்டத்திற்கும், நமது பேராலய பங்கு சமூகத்திற்கும் மிக முக்கியமானது. இங்கு தான் நமது புனித சவேரியார் தங்கியிருந்து திருப்பலி நிறைவேற்றினார். மக்களோடு மக்களாக கலாசாரத்திலும், பண்பாட்டிலும் ஒன்றாகினார். நம் பாதுகாவலரிடம் உரிமையோடும், அன்போடும், நம்பிக்கையோடும் நம் தேவைகளை எடுத்துச் சொல்லி மன்றாடுவோம்.
பேரருட் பணி ஸ்டான்லி சகாய சீலன், பங்குதந்தை

அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.50 தரிசனகட்டணம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சாதாரண மக்கள் வேதனை அடைந்தனர்.
கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்கள் மாலையணிந்து, விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள். முன்னதாக தமிழகத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு யாத்திரை செல்வார்கள். அதன்படி சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். நேற்று 50-க்கும் மேற்பட்ட பஸ்களில் திருவண்ணாமலை வந்த ஐயப்ப பக்தர்கள் தங்களது பஸ்களை ஈசானிய மைதானத்தில் நிறுத்தியிருந்தனர். அங்கேயே பலர் சமைத்து சாப்பிட்டு விட்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பலர் கிரிவலம் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல் தாமதமாக வந்த ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
ஐயப்ப பக்தர்கள் வருகை காரணமாக திருவண்ணாமலை கோவில் பகுதியில் உள்ள கடைகளில் அமோகமாக பொருட்கள் விற்பனையாகின. கோவிலில் ரூ.50 தரிசனகட்டணம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சாதாரண மக்கள் வேதனை அடைந்தனர்.
குறைந்த கட்டணமான ரூ.20 சிறப்பு கட்டண டிக்கெட்டுகளையும் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினர். இது தொடர்பாக பலமுறை பக்தர்கள் கோரிக்கை விடுத்த போதிலும் கோவில் நிர்வாகம் இதுபற்றி பரிசீலனை செய்யாமல் வியாபார நோக்கத்தில் ரூ50 கட்டணம் மட்டும் வாங்கி வருவது உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சபரிமலையில் 26-ந் தேதி மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி, தங்க அங்கி 22-ந் தேதி காலை 7 மணிக்கு ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளது.
மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 26-ந்தேதி (ஞாயிறுக்கிழமை) நடக்கிறது. காலை 11.55 முதல் பகல் 1 மணி வரை மண்டல பூஜை நடைபெறும். அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் பாலராம வர்மா மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 சவரன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
இந்த தங்க அங்கி, பத்தனம்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் 26-ந் தேதி மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி, தங்க அங்கி 22-ந் தேதி காலை 7 மணிக்கு ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளது.
அன்றையதினம் சிறப்பு பூஜைகளுக்கு பின், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலம் சபரிமலைக்கு புறப்படும். அன்று இரவு ஓமல்லூரிலும், 23-ந் தேதி இரவு கோண்ணியிலும், 24- ந் தேதி பெரிநாட்டிலும் தங்கி இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.
அதன்பின்னர் 25-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவிலுக்கு தங்க அங்கி வந்து சேரும். அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு செல்வார்கள். அன்று மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.
பின்னர் 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும். அதை அவர்கள் 18-ம் படி வழியாக கொண்டு சென்று மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிப்பார்கள்.
அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் 26-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து, காலை 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பின்னர் பகல் 11.55 மணி முதல் 1 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜைகள் நடைபெறும்.
அதன் பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படுவதையொட்டி, 25-ந்தேதி பிற்பகலில் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மகர விளக்கையொட்டி, ஐயப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் ( ஜனவரி) 14-ந் தேதி நடக்கிறது. தற்போது சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதை தொடாந்து, பம்பை, சன்னிதானம் மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சபரிமலை சென்று திரும்பி வந்ததும் தினமும் விளக்கு ஏற்றிய இடத்தின் அருகில் தேங்காய் உடைத்து சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷத்தை சொல்ல வேண்டும்.
பரசுராமன் பிரதிஷ்டை செய்த விக்கிரகத்தில் ஸ்ரீ ஐயப்பன் சென்று ஐக்கியமானவர் என்பது ஐதீகம். இருமுடி கட்டுடன் சரணம் முழங்கி மலையேறும் போது அதன் பொருள் அறிந்து செல்ல வேண்டும். தன் தாய் பந்தள ராணியின் நோய் நீங்கப்புலிப்பாலுக்காக தயார் செய்து தான் இருமுடி கட்டு. அமைச்சர், ஐயப்பன் மீது காட்டிய வஞ்சனையின் தண்டனையாக 41 நாள் விரதம் மேற்கொண்டது தான் பிற்காலத்தில் 41 நாள் விரதமாக பழக்கத்திற்கு வந்தது.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் நீராடி முடித்ததும் கன்னி ஐயப்பமார்களுக்கு விருந்து கொடுத்து உபசரிப்பார்கள். இந்த விருந்தில் ஐயப்பனே நேரில் வந்து உணவு உட்கொள்வதாக நம்பப்படுகிறது.
பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் 7 தலை முறையினர் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
60 ஆண்டுகளுக்கு முன்பு வரை சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றவர் சில நூறு பேர் மட்டுமே. வாகன வசதி வந்த பிறகு தான் சபரிமலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து இன்று பல கோடி ஆகிவிட்டது.
ஒரு ஐயப்ப பக்தர் மாலை அணிந்ததில் இருந்து அவர் சபரிமலை சென்று திரும்பும்வரை தினமும் வீட்டு வாசலில் விளக்கு ஏற்ற வேண்டும். அந்த விளக்கு குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது எரிய வேண்டும். சபரிமலை செல்லும் பக்தருக்கு இந்த விளக்கு வழி காட்டுவதாக ஐதீகம் உள்ளது. சபரிமலை சென்று திரும்பி வந்ததும் தினமும் விளக்கு ஏற்றிய இடத்தின் அருகில் தேங்காய் உடைத்து சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷத்தை சொல்ல வேண்டும். அதன் பிறகே வீட்டுக்குள் செல்ல வேண்டும்.