search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவண்ணாமலையில் வழிபாடு செய்த பக்தர்கள்.
    X
    திருவண்ணாமலையில் வழிபாடு செய்த பக்தர்கள்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.50 தரிசனகட்டணம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சாதாரண மக்கள் வேதனை அடைந்தனர்.
    கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்கள் மாலையணிந்து, விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள். முன்னதாக தமிழகத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு யாத்திரை செல்வார்கள். அதன்படி சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். நேற்று 50-க்கும் மேற்பட்ட பஸ்களில் திருவண்ணாமலை வந்த ஐயப்ப பக்தர்கள் தங்களது பஸ்களை ஈசானிய மைதானத்தில் நிறுத்தியிருந்தனர். அங்கேயே பலர் சமைத்து சாப்பிட்டு விட்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பலர் கிரிவலம் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல் தாமதமாக வந்த ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஐயப்ப பக்தர்கள் வருகை காரணமாக திருவண்ணாமலை கோவில் பகுதியில் உள்ள கடைகளில் அமோகமாக பொருட்கள் விற்பனையாகின. கோவிலில் ரூ.50 தரிசனகட்டணம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சாதாரண மக்கள் வேதனை அடைந்தனர்.

    குறைந்த கட்டணமான ரூ.20 சிறப்பு கட்டண டிக்கெட்டுகளையும் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினர். இது தொடர்பாக பலமுறை பக்தர்கள் கோரிக்கை விடுத்த போதிலும் கோவில் நிர்வாகம் இதுபற்றி பரிசீலனை செய்யாமல் வியாபார நோக்கத்தில் ரூ50 கட்டணம் மட்டும் வாங்கி வருவது உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    Next Story
    ×