என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
முதன் முறையாக சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தன்மார்கள் (கன்னி ஐயப்பன் மார்கள்) குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியை சுமந்துவர வேண்டும்.
திருவாபரணங்கள்
ஐயப்பனின் திருமுகம், ஐயப்பனின் உடல் பாகம் பொன்னால் செய்யப்பட்ட 2 வாள்கள், தங்கத்தால் செய்யப்பட்ட 2 யானைகள், 2 லட்சுமி உருவங்கள், தங்க ஒட்டியாணம், தங்கச்சங்கு, அழகிய முத்து மணி மாலைகள் இன்னும் பல கலைப்பூர்வமான ஆபரணங்கள் அதில் உள்ளன.
நெய் அபிஷேகம்
இந்த கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதன்மை சடங்கானது பக்தர்கள் அவர்களுடைய தலையில் சுமந்து வரும் பள்ளிக்கட்டு அல்லது இருமுடியில் (பருத்தித் துணியால் கைகளால் தைக்கப் பெற்ற இறைவனுக்கு படைப்பதற்காக பொருட்களை வைப்பதற்கு இரு அறைகள் கொண்ட பை) காணப்படும் புனிதமான நெய்யைக் கொண்டு சுவாமி ஐயப்பனின் மூல விக்ரஹத்தின் மீது புரியப்படும் நெய்யபிஷேகமே ஆகும். ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் புனித சேர்க்கையைக் குறிக்கும் தத்துவமாக இது கருதப்படுகிறது. முதன் முறையாக பயணம் மேற்கொள்ளும் பக்தன்மார்கள் (கன்னி ஐயப்பன் மார்கள்) குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியை சுமந்துவர வேண்டும். இதர புனிதப் பயணம் மேற்கொள்வோர் கருப்பு அல்லது நீல வண்ணத்திலான இருமுடிகளை பயன்படுத்துவார்கள்.
கோவில் பிரசாதங்கள்
சபரிமலை கோவிலில் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இவை அரிசி, நெய், சர்க்கரை போன்ற பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. சபரி மலையில் இந்த பிரசாதத்தை செய்வதற்கான அரிசி செட்டிக்குளங்கரை தேவி கோவிலில் இருந்து பெறப்படு கிறது. திருவாங்கூர் தேவஸ்வம் போர்டின் கீழ் உள்ள கோவில்களில் இக்கோவில் 2-வது மிகப் பெரிய கோவிலாகும். இந்தக் கோவில் மாவேலிக்கரா என்ற இடத்தில் உள்ளது.
18 படி தெய்வங்கள்
ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.
1. விநாயகர், 2. சிவன், 3. பார்வதி, 4. முருகன், 5. பிரம்மா, 6. விஷ்ணு, 7. ரங்கநாதர், 8. காளி, 9. எமன், 10.சூரியன், 11. சந்திரன், 12. செவ்வாய், 13. புதன், 14. குரு (வியாழன்), 15. சுக்கிரன், 16. சனி, 17. ராகு, 18. கேது.

நம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைர கைக்காப்பு, நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திரு அத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.
பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைபவம் வந்துள்ளது. அதன்படி வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் (3-ந்தேதி) தொடங்கியது.
4-ம்தேதி பகல்பத்து உற்சவம் தொடங்கியது. பகல்பத்து நிகழ்ச்சியின் முதல் நாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2-வது நாளான 5-ம் தேதி நம்பெருமாள் சவுரிகொண்டை, வைரஅபயகஸ்தம், தங்கக்கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பகல் பத்து உற்சவத்தின் 3- ம்நாளான 6-ம்தேதி நம்பெருமாள்நித்தியப்படி கிரீடம், புஜகீர்த்தி, வைரஅபயஹஸ்தம், வைர கைகாப்பு, அர்த்த சந்திரன், மகாலட்சுமி பதக்கம், பெருமாள் பதக்கம், காசு மாலை,முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
4-ம் நாளான 7-ம் தேதி நம்பெருமாள் தொப்பரைக்கொண்டை, மகரி, சந்திர பதக்கம், நெற்றி சரம், ரத்தின அபயஹஸ்தம், மகர கர்ண பத்ரம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, முத்துச்சரம், காசு மாலை உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
5-ம் நாளான நேற்று நம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைர கைக்காப்பு, விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள்அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (13-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ராப்பத்து ஏழாம் திருநாளான 20-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 21-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.

சிம்மக்குளம், சூரிய தீர்த்தம் (பாலாறு) மற்றும் பிரம்மக்குளம் தீர்த்தம் ஆகியவற்றில் பெண்கள் நீராடி குழந்தை வரம் வேண்டி கோவிலில் இறைவன் முன்படுத்து உறங்கி ஆண்டு தோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கடைஞாயிறு திருவிழா வருகிற 12-ந் நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிம்ம குளம் திறப்பு 11-ந் தேதி நள்ளிரவு திறக்கப்படுகிறது.
சிம்மக்குளம், சூரிய தீர்த்தம் (பாலாறு) மற்றும் பிரம்மக்குளம் தீர்த்தம் ஆகியவற்றில் பெண்கள் நீராடி குழந்தை வரம் வேண்டி கோவிலில் இறைவன் முன்படுத்து உறங்கி ஆண்டு தோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.
இந்த திருவிழாவையொட்டி அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் 11-ந் தேதி முதல் சிம்மக்குளம் உள்ளிட்ட நீர்நிலை தீர்த்தங்களில் நீராட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
இந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் பரவல் உள்ளதாலும், இந்த பெருந்தொற்று நோயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 2 நாட்கள் திருவிழாவில் பொதுமக்கள் பொது தரிசனம் செய்ய இணையவழி மூலம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
பொது தரிசனம் செய்ய விருப்பமுள்ளவர்கள் www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.
மேற்படி தரிசனமானது 1 மணி நேரத்திற்கு 180 பக்தர்கள் வீதம் ஒரு நாளைக்கு 3000 பக்தர்கள் 6.30 முதல் இரவு 8 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். வயதானவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி ஒரு தவணையாவது செலுத்தாதவர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய், பழம் மற்றும் பூக்கள் ஆகியவற்றை எடுத்துவர அனுமதி இல்லை. கோவிலில் தீர்த்தம், விபூதி மற்றும் குங்குமம் போன்ற எவ்வித பிரசாதங்களும் வழங்கப்படமாட்டாது.
இந்து சமய அறநிலையத் துறை மூலம் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நோய் பரவல் தொற்று தடுப்பதற்கான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று பஞ்சமி தீர்த்தம் நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று வாகன மண்டபத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு இருந்த சிறிய அளவிலான புஷ்கரணியில் காலை 11.50 மணியளவில் பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கர ஸ்நானம் நடந்தது.
முன்னதாக காலை பத்மாவதி தாயாருக்கு பல்லக்கு சேவை, ஆஸ்தானம் நடந்தது. அதைத்தொடர்ந்து தாயாருக்கு ஏழுமலையான் வழங்கிய சீர்வரிசை பொருட்கள், பட்டு வஸ்திரம் ஆகியவற்றுக்கு பூஜைகள் செய்யப்பட்டது.
வாகன மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், சக்கரத்தாழ்வாருக்கு குங்குமப்பூ, ஏலக்காய், ஆப்பிள், திராட்சை, மயிலிறகு, ரோஜாபூ, துளசி மாலைகள், கிரீடங்கள் ஆகியவற்றை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் இரவு கோவிலில் பத்மாவதி தாயார் தங்கத் திருச்சி வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடிக்கம்பத்தின் அருகில் வைக்கப்பட்டார். தாயாரின் முன்னிலையில் கொடியிறக்கம் நடந்தது. இத்துடன் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ேக.எஸ்.ஜவகர்ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழாவின் நாளை காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, மாலை 5.30 மணிக்கு கொடி பவனி, ஜெபமாலை, 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருவிழா கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார்.
விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவில் 11-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி, காலை 8 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி நடக்கிறது.
16-ந்தேதியும், 17-ந்தேதியும் இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது.
விழாவில் 18-ந்தேதி இரவு 8 மணிக்கு வான வேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனி, 19-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தேர் திருப்பலி, 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, 9 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி, பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி ஆகியவை நடக்கிறது.
திருவிழாவில் பங்கு மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்து கொள்ளுமாறு திருத்தல நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்தந்தை ஆன்டணி அல்காந்தர், பங்கு தந்தையர்கள் ஜேக்கப், கிங்ஸ்லி, மெர்வின், பங்கு பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், துணை செயலாளர் பினோ, பொருளாளர் தீபக் மற்றும் பங்கு பேரவை, அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.

சோழவந்தான், தென்கரை வைகையாற்றில் ஐயப்பசாமிக்கு பால், தயிர் உட்பட 21 அபிஷேகங்கள் நடைபெற்றன. நெய் அபிஷேகமும், புனிதநீரால் மகாஅபிஷேகமும் நடைபெற்றது.
சோழவந்தான் மற்றும் தென்கரை ஐயப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா நடந்தது. இங்கு வருடந்தோறும் ஆராட்டு விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு நேற்று அதிகாலை தென்கரை ஐயப்பன் கோவிலில் கண்ணன் பட்டர் மற்றும் பிரசாந்த் சர்மா தலைமையில் யாகபூஜை நடந்தது.
தொடர்ந்து யானை மீது ஐயப்பசாமி அலங்கரித்து ஐயப்ப பக்தர்கள் பக்திபாடல்கள் பாடிஆடி வந்தனர். தொடர்ந்து ஐயப்பசாமிக்கு பால்,தயிர் உட்பட 21 அபிஷேகங்கள் நடைபெற்றன. நெய் அபிஷேகமும், புனிதநீரால் மகாஅபிஷேகமும் நடைபெற்றது.
வைகை ஆற்றில் உள்ள தண்ணீரில் ஐயப்பசாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. பின்னர் ஐயப்ப சாமிக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. மீண்டும் யானை மீது ஐயப்ப சாமி வலம் வந்து கோவிலை அடைந்தார். இங்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தென்கரை பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தென்கரை ஐயப்பன் கோவில் பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதேபோல் சோழவந்தான் ஐயப்பன் கோவில் சண்முக வேல் அர்ச்சகர் தலைமையில் யாகபூஜை நடந்தது. தொடர்ந்து அங்கிருந்து ஐயப்பசாமி யானைமீது அமர்ந்து கோவிலில் இருந்து மாரியம்மன் சன்னதி, கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி வழியாக வைகை ஆற்றுக்கு சென்று அங்கு ஐயப்பனுக்கு பால், தயிர் உள்பட 12 அபிஷேகம் மற்றும் நெய்யபிஷேகம் நடந்தது.
இதைத்தொடர்ந்து புனிதநீரால் மகாஅபிஷேகம் நடந்தது. பின்னர் வைகையாற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடந்தது. ஐயப்பன் அலங்கரிக்கப்பட்டு யானை மீது அமர்ந்து பக்தர்கள் பக்தி பஜனை பாடல்கள் பாடி, ஆடி வந்தனர். இதில் ஐயப்ப பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

குருசாமிகளாக இருப்பவர்தான் எல்லா வகையிலும் மிக சுத்தமாகவும் தூய்மையாகவும் இருந்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும்.
ஐயப்பனின் அருளாலும், தன்னுடைய நெறியான விரத மகிமையினாலும் பல பக்தர்கள் வாழ்வின் மிக உன்னதமான நிலைக்கு வந்துள்ளனர். பகவான் ஐயப்பனுக்கு அடுத்தபடியாக ஐயப்பபக்தர்கள் நினைவு கூருவது அவர்களுக்கு ஐயப்ப பக்தியை அறிமுகப்படுத்தி நல்வழி காட்டும் குருசாமிகளைத்தான்.
குருசாமிகளாக இருப்பவர்தான் எல்லா வகையிலும் மிக சுத்தமாகவும் தூய்மையாகவும் இருந்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும். கன்னிசாமிகளுக்கும் மற்ற சீடர்களுக்கும் ஐயப்பன் பெருமையைப் பற்றியும், சபரிமலை யாத்திரையின் உயர்வை பற்றியும் விரதத்தை நெறியாக முறையாக கடைப்பிடிப்பதன் அவசியம் பற்றியும் எடுத்து சொல்லி அவர்களை சரியான வழியில் நடத்திச் செல்ல வேண்டும்.
எந்தவிதமான சுயநலத்துக்கும் உட்படாமல் ஐயப்பனுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் சேவை செய்வது மிகவும் அவசியம். குறைந்தது 10 கன்னிசாமிகளை முறையாக 41 நாட்கள் விரதத்தைக் கடைப்பிடிக்க செய்து ஐயப்ப நெறியைப் புரிய வைத்து எவ்வித பிரதி பலனையும் எதிர்பாராமல் அவர்களை மட்டும் பிரத்யேகமாக சபரிமலைக்கு அழைத்துச் சென்று வருவது குருசாமியின் கடமையாகும்.

தற்காலத்தில் சபரிமலையில் இறைவன் உறங்கச் செல்வதற்கு முன் இசைக்கப்படும் தாலாட்டுப் பாட்டை (உறக்கப்பாட்டு), ஹரிவராசன் என்ற பாடலை, ஸ்ரீ கரம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் அவர்கள் இயற்றி இசை அமைத்ததாகும்.
இரவில் கோவிலின் நடை சார்த்தப்படுவதற்கு முன்பு ஹரிவராசனம் (6) என்ற பாடல் இசைக்கப்படுகிறது. தற்காலத்தில் சபரிமலையில் இறைவன் உறங்கச் செல்வதற்கு முன் இசைக்கப்படும் தாலாட்டுப் பாட்டை (உறக்கப்பாட்டு), ஹரிவராசன் என்ற பாடலை, ஸ்ரீ கரம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் அவர்கள் இயற்றி இசை அமைத்ததாகும்.
ஸ்ரீனிவாச அய்யர் அவர்கள், கோவில், சுவாமி ஐயப்பரின் சன்னிதியில் நின்று கொண்டு, அத்தாழ பூஜைக்குப் பிறகு, இந்த பாடலை பாடி வந்தார். சுவாமி விமொசானந்தா அவர்களின் முயற்சியால், கோவிலின் தந்திரி மற்றும் மேல்சாந்தி அவர்கள், இப்பாடலை ஒரு தாலாட்டுப் பாடலாக ஏற்றுக் கொண்டனர்.
இந்தப் பாடல் 352 எழுத்துக்கள், 108 சொற்கள் மற்றும் 32 வரிகள் கொண்டதாகும். (8 செய்யுள் பத்திகள்) (7) அநேக புகழ் பெற்ற பாடகர்களால் பாடப்பெற்ற இந்த பாடலின் பதிப்புகள் இருந்தாலும், கோவில் நடையில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய பாடலே ஒலி பரப்பப்படுகின்றது.
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த திருவிழாவுக்கு பக்தர்கள் 14-ந் தேதி(சொர்க்கவாசல்) அன்று கீழ்காணும் விவரப்படி அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 3-ந் தேதி தொடங்கிய வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய திருநாளான 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏகாதசியன்று மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக முறைப்படியான சம்பிரதாயங்களை கடந்து திருமாமணி ஆஸ்தான மண்டபம் என்று சொல்லப்படுகிற ஆயிரங்கால் மண்டபத்துக்கு காலை 7 மணிக்கு வருகை தந்து முறைப்படியான பூஜைகள் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த திருவிழாவுக்கு பக்தர்கள் 14-ந் தேதி அன்று கீழ்காணும் விவரப்படி அனுமதிக்கப்படுகிறார்கள்.
மூலவர் தரிசனம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை, உற்சவர் தரிசனம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, பரமபதவாசல் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை. பிரதான வாயில் ரெங்கா ரெங்கா கோபுரம் நுழைவு அனுமதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை. இந்த திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பாதுகாப்பாக வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்திட கேட்டு கொள்ளப்படுகிறார்கள். காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று மாலை கொடியிறக்கப்பட்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி காலை, இரவில் பத்மாவதி தாயார் பல்வேறு வாகனங்களில் மாடவீதிகளில் உலா வந்தார். கொரோனா பரவல் காரணமாக பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான இன்று தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி நடைபெறும் நாளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து அம்மனுக்கு பட்டுப்புடவை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம்.
அதன்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஏழுமலையானுக்கு கஸ்தூரி மஞ்சள், சந்தனம், பன்னீர், குங்குமம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து திருமஞ்சனம் நடந்தது.
இதையடுத்து பத்மாவதி தாயார் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் ஏழுமலையான் கோவில் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று எடுத்துச் சென்றனர். சீர்வரிசை பொருட்கள் பத்மாவதி தாயார் கோவிலுக்கு காலை 10 மணிக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு திருமஞ்சனம் நடந்தது.
அதைத் தொடர்ந்து 11.52 மணி முதல் 12 மணிக்குள் கோவில் குளத்தில் அம்மனுக்கு பஞ்சமி தீர்த்தவாரி நடந்தது. வழக்கமாக தீர்த்தவாரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா பரவல் எதிரொலியால் பக்தர்கள் இன்றி தீர்த்தவாரி நடந்தது.
நிகழ்ச்சியில் ஜீயர்கள், அர்ச்சகர்கள், மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து இன்று மாலை கொடியிறக்கப்பட்டு பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அருகாமையில் சில புகழ் பெற்ற கோவில்கள் உள்ளன. அந்த கோவில்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
* நீலக்கல் கோவில், பத்தனம் திட்டா
* மலையாளப் புழா கோவில், பத்தனம் திட்டா
* ஆரன்முலா பார்த்தசாரதி கோவில்
* மகாதேவர் கோவில், செங்கன்னூர்
* ஸ்ரீவல்லபா கோவில், திருவல்லா
* கவியூர் ஆஞ்சநேயா கோவில், திருவல்லா
* செட்டிக்குளங்கரை தேவி கோவில், மாவேலிக்கரா
* மன்னார்சாலை கோவில், ஹரிப்பாடு
* சுப்பிரமணியர் கோவில், ஹரிப்பாடு
* சாக்குளத்துக்காவு கோவில், திருவல்லா
* கண்டியூர் மகாசிவர் கோவில், மாவேலிக்கரா
* சுனக்கற மகாதேவர் கோவில், மாவேலிக்கரா
* பதநிலம் பரம்பிரம்மா கோவில், நூரநாடு

கேரளத்திலுள்ள முக்கியமான ஐந்து ஐயப்பன் கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. இங்குள்ள ஐயப்பன் ’கிரஹஸ்தா ஆஸ்ரம’ வாழ்க்கையை மேற்கொள்வதாகக் கருதப்படுகின்றது.
செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள்.
கேரளத்திலுள்ள முக்கியமான ஐந்து ஐயப்பன் கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. இங்குள்ள ஐயப்பன் ’கிரஹஸ்தா ஆஸ்ரம’ வாழ்க்கையை மேற்கொள்வதாகக் கருதப்படுகின்றது. இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் ஐயப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பன் கல்யாண சாஸ்தா என்று அழைக்கிறார்கள். இதனால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.
விஷப் பாம்பு தீண்டியவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் குணமடைவர் என்று கருதப்படுகின்றது. இது இந்தக் கோவிலின் முக்கியத்துவத்திற்கான ஒரு காரணமாகும். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஐயப்பனின் இடது கையில் எப்போதும் சந்தனமும் தீர்த்தமும் (புனித நீர்) தாங்கியிருக்கக் காணலாம். பாம்பு கடித்தவர்களின் விஷத்தைப் போக்க இவ்விரண்டும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.