search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் நடந்தபோது எடுத்தபடம்.
    X
    புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் நடந்தபோது எடுத்தபடம்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவு

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று பஞ்சமி தீர்த்தம் நடந்தது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று வாகன மண்டபத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு இருந்த சிறிய அளவிலான புஷ்கரணியில் காலை 11.50 மணியளவில் பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கர ஸ்நானம் நடந்தது.

    முன்னதாக காலை பத்மாவதி தாயாருக்கு பல்லக்கு சேவை, ஆஸ்தானம் நடந்தது. அதைத்தொடர்ந்து தாயாருக்கு ஏழுமலையான் வழங்கிய சீர்வரிசை பொருட்கள், பட்டு வஸ்திரம் ஆகியவற்றுக்கு பூஜைகள் செய்யப்பட்டது.

    வாகன மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், சக்கரத்தாழ்வாருக்கு குங்குமப்பூ, ஏலக்காய், ஆப்பிள், திராட்சை, மயிலிறகு, ரோஜாபூ, துளசி மாலைகள், கிரீடங்கள் ஆகியவற்றை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் இரவு கோவிலில் பத்மாவதி தாயார் தங்கத் திருச்சி வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடிக்கம்பத்தின் அருகில் வைக்கப்பட்டார். தாயாரின் முன்னிலையில் கொடியிறக்கம் நடந்தது. இத்துடன் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ேக.எஸ்.ஜவகர்ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×