search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஐயப்பன்
    X
    ஐயப்பன்

    சபரிமலை ஐயப்பன்- சிறப்பு தகவல்கள்

    முதன் முறையாக சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தன்மார்கள் (கன்னி ஐயப்பன் மார்கள்) குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியை சுமந்துவர வேண்டும்.
    திருவாபரணங்கள்

    ஐயப்பனின் திருமுகம், ஐயப்பனின் உடல் பாகம் பொன்னால் செய்யப்பட்ட 2 வாள்கள், தங்கத்தால் செய்யப்பட்ட 2 யானைகள், 2 லட்சுமி உருவங்கள், தங்க ஒட்டியாணம், தங்கச்சங்கு, அழகிய முத்து மணி மாலைகள் இன்னும் பல கலைப்பூர்வமான ஆபரணங்கள் அதில் உள்ளன.

    நெய் அபிஷேகம்

    இந்த கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதன்மை சடங்கானது பக்தர்கள் அவர்களுடைய தலையில் சுமந்து வரும் பள்ளிக்கட்டு அல்லது இருமுடியில் (பருத்தித் துணியால் கைகளால் தைக்கப் பெற்ற இறைவனுக்கு படைப்பதற்காக பொருட்களை வைப்பதற்கு இரு அறைகள் கொண்ட பை) காணப்படும் புனிதமான நெய்யைக் கொண்டு சுவாமி ஐயப்பனின் மூல விக்ரஹத்தின் மீது புரியப்படும் நெய்யபிஷேகமே ஆகும். ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் புனித சேர்க்கையைக் குறிக்கும் தத்துவமாக இது கருதப்படுகிறது. முதன் முறையாக பயணம் மேற்கொள்ளும் பக்தன்மார்கள் (கன்னி ஐயப்பன் மார்கள்) குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியை சுமந்துவர வேண்டும். இதர புனிதப் பயணம் மேற்கொள்வோர் கருப்பு அல்லது நீல வண்ணத்திலான இருமுடிகளை பயன்படுத்துவார்கள்.

    கோவில்  பிரசாதங்கள்

    சபரிமலை கோவிலில் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இவை அரிசி, நெய், சர்க்கரை போன்ற பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. சபரி மலையில் இந்த பிரசாதத்தை செய்வதற்கான அரிசி செட்டிக்குளங்கரை தேவி கோவிலில் இருந்து பெறப்படு கிறது. திருவாங்கூர் தேவஸ்வம் போர்டின் கீழ் உள்ள கோவில்களில் இக்கோவில் 2-வது மிகப் பெரிய கோவிலாகும். இந்தக் கோவில் மாவேலிக்கரா என்ற இடத்தில் உள்ளது.

    18 படி தெய்வங்கள்

    ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.

    1. விநாயகர், 2. சிவன், 3. பார்வதி, 4. முருகன், 5. பிரம்மா, 6. விஷ்ணு, 7. ரங்கநாதர், 8. காளி, 9. எமன், 10.சூரியன், 11. சந்திரன், 12. செவ்வாய், 13. புதன், 14. குரு (வியாழன்), 15. சுக்கிரன், 16. சனி, 17. ராகு, 18. கேது.

    Next Story
    ×