search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "St Francis Xavier"

    • பக்தர்கள் சாம்பிராணி தூபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினர்
    • கொடி இறக்கம் நடைபெற்று அனைவருக்கும் உணவு உபசரிப்பு நடந்தது.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு ஊராட்சி மாம்புள்ளி கிராமத்தில் புனித பிரான்சீஸ் சவேரியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 28-ம் ஆண்டு தேர்பவனி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பேண்ட் வாத்தியம் இசை நிகழ்ச்சியுடன், வாணவேடிக்கைகள் முழங்க மலர் மற்றும் மின்அலங்காரத்துடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் புனித பிரான்சீஸ் சவேரியார் எழுந்தருளி கிராம மக்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் தேர்பவனி திருவிழா நடந்தது. முன்னதாக சவேரியார் ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தை வந்தடைந்தது.

    முன்னதாக தங்கள் வீடுகள் தோறும் பக்தர்கள் சாம்பிராணி தூபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினர்.மேலும் அதனைத் தொடர்ந்து நேற்று குத்தாலம் பங்குத் தந்தை ஜெர்லின் கார்ட்டர் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. பின்னர் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற்று இறைமக்கள் அனைவருக்கும் உணவு உபசரிப்பு நடந்தது.

    இந்த நிகழ்வில் மாம்புள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு இறை ஆசி பெற்றனர். விழா ஏற்பாடுகளை மாம்புள்ளி கிராம தலைவர்கள், கிராமமக்கள் மற்றும் விழா குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • இந்த விழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 23-ந்தேதி ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.

    வேங்கோடு புனித சவேரியார் ஆலய பெருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு வளனூர் பங்கு அருட்பணியாளர் காட்வின் செல்வஜஸ்டஸ் தலைமையில் பங்கு மக்கள் கலந்து கொள்ளும் கொடிபவனி நடக்கிறது.

    அதைதொடர்ந்து திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. சென்னை ஐகோர்ட்டு வக்கீல் அருட்பணியாளர் ராஜன் மறையுரையாற்றுகிறார். சிறப்பு விருந்தினராக பெதனி அருட்தந்தையர்கள் கிறிஸ்டோபர், ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 8.30 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 8.30 மணிக்கு அன்பின் விருந்து, மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் 9-ம் நாளான 22-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேலராமன்புதூர் பங்கு அருட்பணியாளர் மரிய சூசை வின்சென்ட் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். பூட்டேற்றி அருட்பணியாளர் ஷிஜின் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு வேங்கோடு வட்டார முதல்வர் பேரருட்பணியாளர் பெஞ்சமின் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. கிட்ஸ் சமூக சேவை அமைப்பு இயக்குனர் ஜாண் மைக்கேல் ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு ஆடம்பர தேர்பவனி, நள்ளிரவு 2 மணிக்கு கருமாத்தூர் புனித அருள் ஆனந்தர் கலைக்கல்லூரி துணை முதல்வர் அருட்பணியாளர் அன்பரசு திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.

    10-ம் திருவிழாவான 23-ந்தேதி காலை 9 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் பேரருட்பணி அகஸ்டின் தலைமை தாங்கி பாதுகாவலர் பெருவிழா கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் சேவியர் பெனடிக்ட் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து 11 மணிக்கு ஆடம்பர தேர்பவனி, அன்பின் விருந்து, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 8.30 மணிக்கு இசை இரவு ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.

    • சவேரியாருக்கென்று முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம்.
    • பேராலயத்தின் அழகும், அற்புத அருளின் பொழிவும் பக்தர்களை ஆனந்த பரவசம் அடைய செய்கிறது.

    கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களை ஒவ்வொரு நாளும் அற்புதங்களால் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. உலகில் புனித சவேரியாருக்கென்று முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையுடன், கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இந்த பேராலயத்தின் அழகும், அற்புத அருளின் பொழிவும் பக்தர்களை ஆனந்த பரவசம் அடைய செய்கிறது.

    கோடி அற்புதங்கள் விளையும் பூமி

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்ற நம்பிக்கையோடு மன்றாடும் பலர் அன்றாடம் பல நன்மைகளைப் பெற்று மனநிறைவுடன் செல்கின்றனர். பல்வேறு வரலாற்று சிறப்புகளுடன் விளங்கும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் சாதி, சமய வேறுபாடுகளின்றி எல்லா மக்களும் நாடி வரும் கோடி அற்புதங்கள் விளையும் புண்ணிய பூமியாக காட்சியளிக்கின்றது.

    ஒருவர் உலகமெல்லாம் தமதாக்கி கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன(லூக்கா 9:25) என்ற வாக்கியம் புனித சவேரியாரின் வாழ்வுக்கு ஆதாரமாகவும், அடித்தளமாகவும் இருந்தது.

    மேலும், ஆழ்ந்த ஆன்மிக அனுபவம் நற்செய்தி பணியாற்றும் ஆர்வமும், அவரை சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு நற்செய்தி பணியாற்ற தூண்டியது. உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி பறைசாற்றுங்கள்(மாற்கு 16:15) என்ற இறைவார்த்தையின் படி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி அறிவித்து அனைவரையும் இறையரசில் உட்படுத்த வேண்டும் என்ற ஆவல் இயேசு சபையை நிறுவிய புனித இஞ்ஞாசியாரின் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

    சவேரியாரின் இந்திய வருகை

    இஞ்ஞாசியார் தன்னுடன் சில குருக்களையும் அழைத்துக் கொண்டு ரோமுக்கு சென்று திருத்தந்தை 3-ம் சின்னப்பரை சந்தித்து ஆன்மிக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் என்ற விருப்பத்தை தெரிவித்தார்.

    போர்த்துக்கீசிய மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியாவின் சில பகுதிகளுக்கு மறைதூது அருட்பணியாளர்கள் தேவைப்பட்டனர். எனவே, போர்த்துக்கீசிய மன்னர் 3-ம் ஜாண் உதவியோடு சவேரியார் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவிலே இறைப்பணியாற்ற அனுப்பப்பட்டார்.

    கோட்டாரில் இறைப்பணி

    அதைதொடர்ந்து குமரிமாவட்டம் கோட்டார் வந்த சவேரியார் இந்த பகுதியில் சுற்றி வந்து மக்களை சந்தித்து மக்களுடைய அன்றாட வாழ்வோடு இணைந்தார். இவர் சாதி, சமய பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி பணியாற்றினார்.

    மேலும், நம்பிக்கையோடு முன் வந்த மக்களுக்கு திருமுழுக்கு வழங்கினார். கோட்டார் பேராலயத்திற்கு இன்னுமொரு சிறப்பு, இங்குதான் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் கல்லறை அமைந்துள்ளது. நமது புனித சவேரியார் பேராலயம் இந்திய தாய் திருநாட்டிற்கும், நமது கோட்டார் மறைமாவட்டத்திற்கும், நமது பேராலய பங்கு சமூகத்திற்கும் மிக முக்கியமானது. இங்குதான் நமது புனித சவேரியார் தங்கியிருந்து திருப்பலி நிறைவேற்றினார். மக்களோடு மக்களாக கலாசாரத்திலும், பண்பாட்டிலும் ஒன்றாகினார்.

    -பங்குதந்தை ஸ்டான்லி சகாய சீலன்

    • இந்த விழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 18-ந்தேதி புனிதரின் தேர்பவனி நடக்கிறது.

    கோட்டார் மறை மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலஞ்சி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய குடும்ப விழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் இன்று காலை 6 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து முன்னோர்களுக்கான திருப்பலியை மேல்மிடாலம் பங்குதந்தை ஹென்றி பிலிப்பு குயின் தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். ராமன்துறை பங்குதந்தை சகாய வில்சன் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடக்கிறது. கொடியேற்றத்துக்கு ஆலஞ்சி மறைவட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி தேவதாஸ் தலைமை தாங்குகிறார். ரீத்தாபுரம் பங்குதந்தை ஜேசுதாசன் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு அன்பிய ஒருங்கிணைப்பு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 12-ந்தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது.

    விழாவின் 18-ந்தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு, திருமண வெள்ளி விழா மற்றும் பொன்விழா சிறப்பு திருப்பலி, 11 மணிக்கு உடல்நலம் குன்றியோர், முதியோருக்கான சிறப்பு திருப்பலி, இரவு 8 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை, தொடர்ந்து நாதஸ்வரம், சிங்காரி மேளம், செண்டை மேளம் முழங்க புனிதரின் தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 19-ந்தேதி காலை 9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு புனிதரின் தேர்பவனி, மாலை 5 மணிக்கு திருவிழா நன்றி திருப்பலி, கொடியிறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், அருட்பணி பேரவையினர், பங்குதந்தை ஜோசப், அருட்சகோதரி ஆல்டோ லெபின்சன், புனித அமலவை அருட்சகோதரிகள், ஆலஞ்சி மறைவட்ட முதன்மை பணியாளர் தேவதாஸ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • ஆலய வளாகத்தில் சமபந்தி விருந்து நடந்தது.
    • புனிதர்களின் திருப்பண்டம் முத்தமிடும் நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் 10 நாள் திருவிழா கடந்த 3-ந் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. கோட்டார் மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் சகாயஆனந்த், பேராலய பங்குதந்தை ஸ்டான்லி சகாயசீலன், இணை பங்குதந்தை ஆன்றோ ஜெரால்பின் ஆகியோர் கொடியிறக்கி வைத்தனர்.

    பின்னர் மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் வழங்கினர். அதன்பிறகு புனிதர்களின் திருப்பண்டம் முத்தமிடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த புனிதர்களான சவேரியார், தேவசகாயம் ஆகியோரின் திருபண்டத்திற்கு முத்தமிட்டனா்.

    தொடர்ந்து ஆலய வளாகத்தில் சமபந்தி விருந்து நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை துணை தலைவர் ஜேசுராஜா, செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளாளர் ராபின் ஆகியோர் செய்திருந்தனர்.

    • 4 தேர்கள் மேள தாளங்கள் முழங்க பவனியாக வந்தன.
    • பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் மற்றும் உருண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்தினர்.

    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடந்தது. 8-ம் திருவிழாவான 1-ந் தேதி இரவு தேர் பவனி நடந்தது. அன்றைய தினம் 3 தேர்கள் பவனியாக வந்தன.

    9-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு காவல் தூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா ஆகிய 4 தேர்கள் மேள தாளங்கள் முழங்க பவனியாக வந்தன. பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர்கள் ரத வீதி, கம்பளம், ரெயில்வே ரோடு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தன. அப்போது ஏராளமான பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் மற்றும் உருண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்தினர்.

    இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று 10-ம் நாள் திருவிழா தேர் பவனி நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெரு விழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 11 மணிக்கு தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்்கள் கலந்து கொண்டு தேர் பவனியின் போது உப்பு, நல்ல மிளகு மற்றும் மெழுகுவர்த்தியை நேர்ச்சையாக செலுத்தினர். மாலையில் தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சவேரியார் பேராலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர். இதனால் கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் பேராலயம் வரை உள்ள சாலையில் பக்தர்கள் கூட்டமாக இருந்தது.

    சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவையொட்டி கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் பேராலயம் வரையிலும் மற்றும் சவேரியார் பேராலயத்தில் இருந்து செட்டிகுளம் வரையிலும் சாலையின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் மற்றும் மிட்டாய் விற்பனை அமோகமாக நடந்தது.

    திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது.
    • இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெற்று வருகிறது. மேலும் 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு தேர் பவனி நடந்தது.

    இதை தொடர்ந்து 9-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை திருப்பலியும், மாலையில் சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதனையடுத்து இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடந்தது. காவல் தூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா ஆகிய 4 தேர்கள் மேள தாளங்கள் முழங்க பவனியாக கொண்டு செல்லப்பட்டன.

    தேர் பவனி நடந்த போது பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் மற்றும் உருண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர்களுக்கு முன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    விழாவின் 10-ம் நாள் திருவிழா இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3-வது நாள் தேர் பவனி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. தேர் பவனியையொட்டி இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சவேரியாருக்கு புனிதர் பட்டம்

    புனித சவேரியார் பசிபிக் கடல் தீவுகள், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்று விட்டு இறுதியாக சீனாவுக்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்தநிலையில் 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி உயிர் நீத்தார். அவரது புனித உடல் பல மாதங்களுக்கு பிறகும் அழிவுறாமல் அப்படியே இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

    இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, 100-க்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து இறைஊழியம் செய்து பெரும் சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    • விழா வருகிற 3-ந்தேதி வரை நடக்கிறது.
    • பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி டி.சவேரியார்புரம் புனித சவேரியார் ஆலய 134-ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்துக்கு மறைமாவட்ட முதன்மை குரு பென்சன் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பங்குதந்தைகள், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா வருகிற 3-ந் தேதி வரை நடக்கிறது. இதேபோன்று ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கொடிகள் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    அந்த கொடிகளை திருச்செந்தூர் அமலிபுரம் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் அடிகளார், காயல்பட்டினம் சிங்கித்துறை பங்கு தந்தை ஷிபாகர் அடிகளார், ஆறுமுகநேரி பங்குத்தந்தை அலாய்சிஸ் அடிகளார், பெரியதாழை துணை பங்கு தந்தை கிங்ஸ்லின் அடிகளார் ஆகியோர் அர்ச்சித்தனர். இதை தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    • திருவிழா வருகிற 3-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.
    • 2-ந்தேதி தேர் பவனி நடைபெற உள்ளது.

    திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தஞ்சாவூர் மங்களபுரம் புனித லூர்து அன்னை ஆலய பங்கு தந்தை மரிய சூசை கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார்.

    திருவிழா, வருகிற 3-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6.15 மணிக்கு செபமாலை, சவேரியார் நவநாள் ஜெபம், திருப்பலி, மறையுரை ஆகியவை நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி வருகிற 2-ந்தேதி(வௌ்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை கூட்டு பாடல் திருப்பலியும், இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடைபெற உள்ளது. 3-ந்தேதி (சனிக்கிழமை) திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தையும் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளருமான ஜான்சன் எட்வர்ட், உதவி தந்தை அற்புத சந்தியாகு, அருட் சகோதரிகள் மற்றும் புனல் வாசல் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    • திருவிழா வருகிற 3-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • வரும் 2-ந்தேதி தேர் பவனி நடைபெற உள்ளது.

    திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தஞ்சாவூர் மங்களபுரம் புனித லூர்து அன்னை ஆலய பங்கு தந்தை மரிய சூசை கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். இன்று மாலை தொடங்கும் திருவிழா, வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் மாலை 6.15 மணிக்கு செபமாலை, சவேரியார் நவநாள் ஜெபம், திருப்பலி, மறையுரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    வரும் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை கூட்டு பாடல் திருவிழா திருப்பலியும், அன்று இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடைபெற உள்ளது. 3-ந்தேதி திருப்பலியை தொடர்ந்து, மாலை 4 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையும் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளருமான ஜான்சன் எட்வர்ட், உதவி பங்குத்தந்தை அற்புத சந்தியாகு, அருட் சகோதரிகள் மற்றும் புனல் வாசல் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    • இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • தேர் பவனி வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது.

    நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த தூய சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அலங்கரிக்கப்பட் கொடி புனித அர்ச்சிப்பு செய்யப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்டு ஆலயக்கொடி மரத்தில் ஏற்றப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    தொடர்ந்து முன்னாள் பிஷப் ஜூடுபால்ராஜ் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றி நற்செய்தி வழங்கினார்.

    திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, மறையுரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான புனிதரின் திருஉருவ தேர் பவனி வரும் 2-ந்தேதியும், திருவிழா திருப்பலி, புதுநன்மைத் திருவிழா 3-ந்தேதியும் நடைபெறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயத்தின் உடல் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
    • கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார்.

    குமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு கடந்த மாதம் 15-ந் தேதி வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதைத்தொடர்ந்து கோட்டார், குழித்துறை மறைமாவட்டம் சார்பில் தேசிய அளவிலான நன்றிவிழா கொண்டாட்டம் கடந்த 5-ந் தேதி ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடிமலையில் நடந்தது. விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், திருப்பலியும் நடந்தது.

    இதில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி கலந்து கொண்டார். தமிழக ஆயர் பேரவை தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடந்தது. விழாவில் 30-க்கும் மேற்பட்ட ஆயர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள், பல்சமய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பின்னர் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமையில் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயத்தின் உடல் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நன்றி விழா திருப்பலி நேற்று மாலையில் நடைபெற்றது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார்.

    நிகழ்ச்சியில் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலாரியுஸ், மறைமாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், செயலாளர் இம்மானுவேல், வட்டார முதல்வர் சகாய ஆனந்த், சவேரியார் பேராலய பங்குதந்தை ஸ்டான்லி சகாயசீலன், உதவிப் பங்குத்தந்தையர்கள் பிரான்கோ, ஆன்றோ ஜெராபின், பங்கு பேரவை துணைத் தலைவர் ஜேசுராஜா, செயலாளர் ராஜன், துணைச் செயலாளர் ராஜன் ஆராய்ச்சி, பொருளாளர் ராபின் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×