என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு இரு தங்கத்தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
9-ம் நாள் திருவிழாவான 18-ம் தேதி இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர் பவனியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10-ம் திருவிழாவான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தேர் திருப்பலியும், காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும், 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும் நடந்தது. 9 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடைபெற்றது
10.30 மணிக்கு மலையாள திருப்பலியும் பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலியும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்கும் மக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணியாளர் ஆண்டனி அல்காந்தர், துணை பங்கு தந்தையர்கள் ஜேக்கப், மெர்ஜின், கிங்ஸ்லின் மற்றும் பங்கு பேரவை துணைத் தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சேசுசுமன், துணைச் செயலாளர் பினோலின், பொருளாளர் தீபக் மற்றும் பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

மண்டல பூஜை நெருங்குவதையொட்டி சபரிமலைக்கு செல்ல தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் செல்லவும், நேரடி நெய் அபிஷேகத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தற்போது தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 40 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு மூலம் 5 ஆயிரம் பக்தர்களும் ஐயப்ப சாமியை தரிசனம் செய்தனர். அதே சமயத்தில் மண்டல பூஜை நெருங்குவதையொட்டி கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் செல்லலாம். ஆன்லைன் முன்பதிவு மூலம் 50 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலையொட்டி இதுவரை நெய் அபிஷேகம் நேரடியாக நடைபெறவில்லை. இந்தநிலையில் பழைய நடைமுறைபடி ஐயப்பசாமிக்கு நேரடியாக நெய் அபிஷேகம் செய்யலாம். இனிமேல் பாரம்பரிய எரிமேலி காட்டுப்பாதை வழியாகவும் பக்தர்கள் செல்லலாம். இன்று (திங்கட்கிழமை) முதல் புதிய உத்தரவு அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழாவையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி நீண்ட வரிசையில் நின்று சாமியை வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா குதிரைமொழி கிராமம் செம்மணல் தேரியில் உள்ள தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.
இக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் இல்லாமல் கடந்த 16 மற்றும் 17-ந்தேதிகளில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முதல் வழக்கம் போல் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து படையல் போட்டு வழிபாடும் நடத்தினர். இதனால் பக்தர்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து தங்களது நோ்த்திக்கடன்களை செலுத்தி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கள்ளர் வெட்டு நடந்த இடத்தில் எடுத்த புனித மணல், கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர்.

சிறப்புமிக்க திருவாதிரை நாளில் நடராஜரின் ஆருத்ரா தரிசனத்தைக் காண்பதோடு, அவரது ஆனந்த தாண்டவத்தையும் தரிசித்து துன்பங்களில் இருந்து மீள்வோம்.
சிவபெருமானை வழிபடுவதற்கு ‘மகாசிவராத்திரி’ எப்படி ஒரு சிறப்பான தினமோ, அதேபோல ஈசனின் திருவடிவங்களில் ஒன்றான நடராஜப் பெருமானை வழிபடுவதற்கு ‘ஆருத்ரா தரிசனம்’ சிறப்பு மிக்க ஒரு தினமாகும். ‘சிவம்’ என்பது அனைத்தையும் தனக்குள் அடக்கி வைத்துக் கொண்டு அசையாதிருப்பது. அதுவே நடராஜர் என்பவர், ஆனந்த நடனம் ஆடி உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் ஆற்றலாக இருப்பவர்.
அப்படிப்பட்ட நடராஜப் பெருமானை வழிபடுவதற்கு உகந்த தினம்தான், மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசனம். மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும், பவுர்ணமி தினமும் இணையும் நாளில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது. இந்த தினத்தில் நடராஜருக்கு ஆறுவிதமான அபிஷேகங்களைச் செய்து அவரை குளிர்விப்பார்கள்.
ருத்ரன் என்பவர் மிகவும் அக்னி வடிவமாக இருப்பவர். அவருக்கு குளிர் மிகுந்த மார்கழி மாதத்தில், அந்த மாதத்திலேயே அதிக குளிர்ச்சி நிறைந்த திருவாதிரை நாளில், ஆறுவிதமான அபிஷேகம் செய்து குளிரூட்டி வெப்பத்தை தணிக்கிறார்கள்.
இந்த அபிஷேகத்தைக் கண்குளிரக் காணும் வைபவம் என்பதாலேயே, இது ‘ஆருத்ரா தரிசனம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளை ‘மார்கழி திருவாதிரை’ என்றும் சொல்வார்கள். நடராஜர் உலக ஜீவராசிகளுக்கு அருள்பாலிக்கும் வகையில் திருவாலங்காட்டில் ரத்தின சபை, சிதம்பரத்தில் பொற்சபை, மதுரையில் வெள்ளிசபை, திருநெல்வேலியில் தாமிரசபை, குற்றாலத்தில் சித்திரசபை ஆகிய பஞ்ச சபைகள் இருக்கின்றன.
இருப்பினும் ஆருத்ரா தரிசனம் நிகழ்வதில் தனித்துவம் பெற்ற தலங்களாக இரண்டு தலங்கள்தான் விளங்குகின்றன. அவை, சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் மற்றும் ஆதி சிவன் கோவில் என்று அழைக்கப்படும் திருஉத்திரகோசமங்கை திருக்கோவில் ஆகும்.
நட்சத்திரங்களிலேயே இரண்டு நட்சத்திரங்கள்தான், ‘திரு’ என்ற அடைமொழியைப் பெற்றுள்ளன. ஒன்று திருமாலுக்கு உகந்த ‘திருவோணம்’ நட்சத்திரம். மற்றொன்று சிவபெருமானுக்கு உகந்த ‘திருவாதிரை’ நட்சத்திரம். அந்த சிறப்புமிக்க திருவாதிரை நாளில் நடராஜரின் ஆருத்ரா தரிசனத்தைக் காண்பதோடு, அவரது ஆனந்த தாண்டவத்தையும் தரிசித்து துன்பங்களில் இருந்து மீள்வோம்.

வழக்கமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமே கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பவுர்ணமியில் இன்றும், நாளையும் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனை மீறி பக்தர்கள் அதிகாலை முதல் இன்று கிரிவலம் வருகின்றனர். கிரிவலப்பாதையில் போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்த போதிலும் மாற்று வழியில் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகளவில் வருகை தரும் பக்தர்கள் கிரிவலம் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
வெளி மாநிலங்களில் இருந்து வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் செவ்வாடை பக்தர்கள் கிராமங்கள் வழியாக கிரிவலம் செல்கின்றனர். போலீசார் முயன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்க முடியவில்லை.
வழக்கமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமே கிரிவலம் செல்கின்றனர். சில பக்தர்கள் மாட வீதிகளை வலம் வந்து விட்டு சென்று விடுகின்றனர்.
பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு ரூ.50 தரிசன கட்டணத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பொது தரிசனத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் வருகை காரணமாக திருவண்ணாமலையில் வியாபாரம் களைகட்டியுள்ளது.

ஆருத்ரா அபிஷேக விழா தொடக்கத்தில் விபூதி அபிஷேகத்துடன் தொடங்கி 11 வகையான திரவ பொருள்கள், 21 வகையான பழங்களை கொண்டு ஆருத்ரா அபிஷேகம் விடிய விடிய நடைபெறும்.
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் உள்ள முதல் சபையான ரத்தின சபை திருவாலங்காடு ஸ்ரீ வடராண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடந்த 11-ந் தேதி மாணிக்கவாசகர் உற்சவம் நடந்தது.
விழாவின் 9-வது நாளான நாளை (ஞாயிறு) இரவு 9 மணிக்கு பழைய ஆருத்ரா மண்டபத்தில் உற்சவர் நடராஜப்பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும்.
இந்தாண்டின் ஆருத்ரா அபிஷேக விழா குறைந்த அளவு பக்தர்கள் கொண்டு எளிமையான முறையில் நடைபெறுகிறது.
ஆருத்ரா அபிஷேக விழா தொடக்கத்தில் விபூதி அபிஷேகத்துடன் தொடங்கி பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான திரவ பொருள்கள், மாதுளம் மாம்பழம், வாழைப்பழம் திராட்சை உள்ளிட்ட 21 வகையான பழங்களை கொண்டு ஆருத்ரா அபிஷேகம் விடிய விடிய நடைபெறும். பின்னர் சர்வ அலங்காரம் செய்ய பெற்று அதிகாலை 4. 45 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
அதை தொடர்ந்து நாளை மறுநாள் (20-ந் தேதி) அதிகாலை 5 மணிக்கு, கோபுர தரிசனம், பகல், 12 மணிக்கு, அனுக்கிரக தரிசனமும் 21-ந் தேதி காலை, 8.45 மணிக்கு, சாந்தி அபிஷேகமும் நடை பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் பரஞ்ஜோதி, தக்கார் லக்ஷ்மணன், கோவிலின் தலைமை குருக்கள் சபாரத்தினம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளத்தில் ஆத்ம லிங்கம் ஒளிர்வதால், தினசரி தலைக்கு நீராடுவதையும் கூட ஆத்ம லிங்க அபிஷேகமாக, உத்தமத் தெய்வீக நிலைகளில் போற்றப்படுகின்றது.
ஒவ்வொரு தமிழ் மாதப் பவுர்ணமியும், பெரும்பாலும் ஒரு நட்சத்திரத்தை ஒட்டி வரும். மார்கழி மாதத்தின் பவுர்ணமி திருவாதிரையை ஒட்டி வருவதால், ஆருத்ரா அபிஷேக நாளாக முதல் நாளும், ஆருத்ரா தரிசனமாக மறுநாளும் அமையும். ஆருத்ரம் என்பது அக்னி பூர்வமான ருத்ர சக்திகளை ஜீவன்கள் தரிசிக்கும் நிலையாகும்-. மேலும், ஆருத்ரத்தில்தான் வேத பீஜ கோஷ சக்திகள் ஜீவன்களை வந்தடையும் வண்ணம் நன்கு பரிமளிக்கின்றன.
திருவாதிரை தினத்தன்று வலது உள்ளங்கையை தலைச் சுழியின் மேல் வைத்து அதில் ஒருவிதமான ஆகர்ஷண ஓட்டமும், மிதமான உஷ்ணமும் தோன்றுவதை நன்கு உணரலாம். கபாலீஸ்வரர், குடுமீஸ்வரர் (குடுமியான்மலை), அபிமுகேஸ்வரர் (கும்பகோணம்), கூந்தலூரில் ஸ்ரீரோம மகரிஷி போன்ற கபால சக்தி நிறைந்த ஆலயங்களில் திருவாதிரை நட்சத்திர தினங்களில் வழிபடுதல் கபால நாளங்களை நன்கு ஆக்கப்படுத்தும்.
மேலும், எந்த ஆலயத்தில் சுவாமிக்கோ மூல லிங்கத்திற்கோ குவளை, கிரீடம், தலைப் பாகை சார்த்தப்படுகின்றதோ, இத்தகைய ஆலயங்களில் கபாலக் கனி என்று அழைக்கப்படும் தேங்காய்கள், பன்னிரெண்டால் ஆன மாலைகள் சார்த்தி வழிபடுதல் விசேஷமானது.
ஆருத்ரா அபிஷேக தினத்திற்கு அடுத்த நாள் வரும் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று திருஆதிரைக் களி என்பதாக, ஏழு அல்லது ஏழுக்குமேலான காய்கறிகள் கலந்த கூட்டுடன் இறைவனுக்குப் படைத்தளிக்க வேண்டிய முக்கியமான திருநாள். மோதகத்தின் ஒரு வகையான திருவாதிரைக் களி மிகவும் சுவையுடையது. மோதகக் குடும்பத்தைச் சார்ந்த இனிப்பு வகை ஆதலால், பிள்ளையாரின் ஆசீர்வாதமும் சேர்ந்து வருவதாகும்.
ஆருத்ரா தரிசனத்தின் போது கபாலத்தில் தலைச் சுழியில் அபூர்வமான ஆகர்ஷண சக்திகள் எழுகின்றன. இவற்றை விரயம் செய்து விடாமல் உடல் நாளங்களில் ஈர்த்துக் கொள்ளவே ஆலய வழிபாட்டிற்குப் பிறகு, இல்லத்திலும் பூஜையைத் தொடர்வதாகும். உள்ளத்தில் ஆத்ம லிங்கம் ஒளிர்வதால், தினசரி தலைக்கு நீராடுவதையும் கூட ஆத்ம லிங்க அபிஷேகமாக, உத்தமத் தெய்வீக நிலைகளில் போற்றப்படுகின்றது.

தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அந்தவகையில் நேற்று மட்டும் 92 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் அதிகாலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளினார். சொர்க்கவாசல் திறப்பின்போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் ரெங்கா ரெங்கா என்ற கோஷமிட்டபடி சாமி தரிசனம் செய்தனர்.
அன்றைய தினம் மட்டும் மாலை 4 மணி நிலவரப்படி, ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்து இருந்தனர். இதனைத்தொடர்ந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அந்தவகையில் நேற்று மட்டும் 92 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். தினந்தோறும் அதிகமான பக்தர்கள் வந்து செல்வதால் அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும். இந்த உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் கைலாயம் செல்வது நிச்சயம்.
பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் என்றால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் மங்கள நாயகி திருக்கோவில். இங்கு தான் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவானது.
திருஉத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்புலிங்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது. திரு உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது. திருஉத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இத்தலத்துக்கு உமாமகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும் என்று நம்பப்படுகிறது. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும். இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும். மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.
சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும். இந்த உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் கைலாயம் செல்வது நிச்சயம்.
மூலவருக்கு மங்கள நாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு. இறைவிக்கு மங்களேஸ்வரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன. திருவிளையாடல் புராணத்தில் வரும் வலைவீசி மீன் பிடித்த படலம் இந்த தலத்தில்தான் நடந்தது.
உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, அவர்களது தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்திருக்கிறது. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம், தெட்சிண கைலாயம், சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப்பள்ளி, பத்ரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது.

திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மரகத நடராஜர் சிலைக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் சந்தனம் களையும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
ராமநாதபுரம் அருகே பூலோகத்தில் தோன்றிய முதல் கோவிலாகவும், புண்ணியதலங்களில் ஒன்றாகவும் திருஉத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர், மங்களநாயகி கோவில் விளங்குகிறது. இங்குள்ள நடராஜர் சன்னதியில் ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது.
இந்த மரகத சிலை ஒலி, ஒளி அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும். வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும்.
இதன்படி கடந்த 10 -ந் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வாக தொடர்ந்து பல்வேறு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று அன்று இரவு 11 மணிக்கு மேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி மறுநாள் (20-ந்தேதி) அதிகாலை அருணோதய காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னதாக மீண்டும் நடராஜர் மீது சந்தனகாப்பு பூசப்படும்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டதலின்படி உரிய கட்டுப்பாடுகளுடன் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சார்ந்தவர்கள் திருஉத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழாவிற்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சாமியின் தலைமைப்பதியில் 19-ந்தேதி நிறைவு நாள் விழாவில் அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சாமியின் தலைமைப்பதி உள்ளது. இந்த பதியில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 17 நாட்கள் அய்யா வைகுண்டசாமி கூறிய அறிவுரைகளை திரு ஏடாக வாசிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு விழா கடந்த 3-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விழா நாட்களில் மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதானம் ஆகியவை நடக்கிறது.
விழாவில் நேற்று அய்யா வைகுண்டசாமிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பள்ளியறை நடை திறந்து திருவிளக்கு ஏற்றுதல், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமிக்கு மலர் அலங்கார பணிவிடை ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கியது. இதையொட்டி தலைமைப்பதி முழுவதும் வாழை மரங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருக்கல்யாண வாசிப்பு நிகழ்ச்சியில் பெண்கள் அய்யா வைகுண்டசாமிக்கு கல்யாண சீர் வரிசையாக இனிப்புகள், பலகாரங்கள், பூக்கள், பழங்கள் அடங்கிய சுருள் தட்டுகளை வழங்கி அருள் பெற்றனர்.
அதைதொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்ன தர்மம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவின் 19-ந்தேதி நிறைவு நாள் விழாவில் அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, தொடர்ந்து அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள்கள் உண்டு. ஐப்பசி மாதத்து பவுர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல, ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மாதம் மற்றும் அபிஷேகப் பொருள்கள், அதன் பலன்கள் விவரம்:
சித்திரை பவுர்ணமி : மரிக்கொழுந்து - புகழ்
வைகாசி : சந்தனம் - மனை, வீடு, நீலம், புதையல்
ஆனி : முக்கனி (மா, பலா, வாழை) - கேட்ட வரம் கிட்டும்
ஆடி : காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்
ஆவணி : வெல்ல சர்க்கரை - சாபம் தோஷம், பாவம் நீங்கும்
புரட்டாசி : கோதுமை பசு நெய் கலந்த வெல்ல அப்பம் - அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி : அன்னாபிஷேகம் - கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்
கார்த்திகை : பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி : பசு நெய் நறுமண வென்னீர் - கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை : கருப்பஞ்சாறு - நோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி : பசு நெய்யில் நனைத்த கம்பளி - குழந்தை பாக்கியம்
பங்குனி : பசுந்தயிர் - மனைவி, மக்கள், உறவினர் உதவி