search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கற்குவேல் அய்யனார் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தபோது எடுத்த படம்.
    X
    கற்குவேல் அய்யனார் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தபோது எடுத்த படம்.

    தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

    தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழாவையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி நீண்ட வரிசையில் நின்று சாமியை வழிபட்டனர்.
    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா குதிரைமொழி கிராமம் செம்மணல் தேரியில் உள்ள தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.

    இக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் இல்லாமல் கடந்த 16 மற்றும் 17-ந்தேதிகளில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று முதல் வழக்கம் போல் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து படையல் போட்டு வழிபாடும் நடத்தினர். இதனால் பக்தர்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து தங்களது நோ்த்திக்கடன்களை செலுத்தி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கள்ளர் வெட்டு நடந்த இடத்தில் எடுத்த புனித மணல், கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×