என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் நாளை (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது.
தென்காசி காசி விஸ்வநாத சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப்பெருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இரவில் சுவாமி-அம்பாள் வீதி எழுந்தருளல் நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 5-40 மணிக்கு சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது.
முதலில் சுவாமி தேரும் பின்னர் அம்பாள் தேரும் வடம்பிடித்து இழுக்கப்படுகின்றன. தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி மீண்டும் நிலையத்திற்கு வந்து சேரும். தேரோட்டத்திற்காக இரண்டு தேர்களும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மதுரை நகரில் அமைந்துள்ள பஞ்ச பூத தலங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்
மதுரை நகரில் அமைந்துள்ள பஞ்ச பூத தலங்கள் வருமாறு:-
மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',
சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',
இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',
தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்
அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை ஊதா பச்சை சிவப்பு மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள். அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.
மதுரையில் பிறந்தாலும் மதுரையில் வாழ்ந்தாலும் மதுரையில் இறந்தாலும் மதுரையில் வழிபட்டாலும் மதுரையை நினைத்தாலும் புண்ணியம் ....

செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
பெண்களுக்கு மூன்று நிலைகளில் மட்டுமே செவ்வாய் கடுமையான பாதிப்பை தருகிறது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
1. வக்ர செவ்வாய்
செவ்வாய் வக்ரம் பெற்ற பெண்கள் மன நிறைவான மணவாழ்வு அமையவில்லை என்றே கூறுகிறார்கள். இவர்களுக்கு செவ்வாயின் தசாபுத்தி அந்தர காலங்களில் முன் கோபம் மிகுதியாகும். திட்டமிடுதலில்-ஆலோசகராக இருப்பதில் சாதனை புரிவர். ஆனால் செயல்திறன் இருக்காது. உடன் பிறந்த சகோதரர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்காது. வீடு, வாகனம், சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருக்கும். ரத்தம் தொடர்பன நோய்கள் எற்படும். வக்ர செவ்வாய் சனியுடன் சம்பந்தம் பெறும் போது விபத்து / காயம் ஏற்படும்.
பரிகாரம்:- பழனி தண்டாயுதபாணி சுவாமியை வழிபட வாழ்வின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி மன நிறைவான மண வாழ்க்கை கிட்டும்.
2 . கிரகச் சேர்க்கை
செவ்வாய்+ சனி, செவ்வாய்+ ராகு, செவ்வாய்+ கேது ஆகிய கிரகச் சேர்க்கை திருமண வாழ்வை சிறக்கச் செய்யாது. செவ்வாய் + சனி சனியும் செவ்வாயும் பகை கிரகங்கள் இவர்கள் இருவரும் இணைந்து எந்த வீட்டில் எந்த ராசியில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் பிரச்சினைதான்.
ஜோதிட சாஸ்திரத்திலேயே இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணிதான் மிகவும் சிக்கலானது, சவாலானது ஆபத்தானது. வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மனதில் மட்டுமல்லாமல் உடலிலும் இந்த இருகிரக சேர்க்கை பாதிப்பை உண்டு பண்ணும். குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எந்த வீட்டில் செவ்வாயும் சனியும் சேர்ந்திருந்தாலும், சமசப்தமாய் பார்த்துக் கொண்டாலும் பூப்பெய்துதலில் இருந்து பிரச்சினைகள் தொடங்கும்.
மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்சினை, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, அல்சர், நீண்ட வறட்டு இருமல், ஹீமோக்ளோபின் குறைதல், சிறுநீரகக் கோளாறு, முகத்தில் கண்ணுக்குக் கீழ் கருவளையம் என பல பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படும். கணவன்-மனைவி விவாகரத்துக்கான வாய்ப்புகளையே அதிகம் காட்டும் சேர்க்கை இது. மண வாழ்க்கையில் பிரச்சினையை சந்தேகத்தாலும் பிடிவாதத்தாலும், ஈகோ பிரச்சினையாலும், பொருளா தாரக் குறைபாட்டாலும் உண்டாக்கும். கோர்ட்டில் எனக்கேற்ற துணை இவரல்ல என்று குற்றம்சாட்டி பிரிய வைப்பதெல்லாம் இந்த சேர்க்கைதான்.
செவ்வாய்+சனி கூட்டணியில் வேகம், விரைந்து முடிவெடுத்தல், தன் சுதந்திரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று நினைத்தல், முரட்டுத்தனம். இவையெல்லாம் செவ்வாய் தரும் குணங்கள். நான் சொன்னா சொன்னதுதான். அவரு வேணா இறங்கி வரட்டும். நான் ஏன் இறங்கிப் போகணும் என்று பேச வைப்பதும் செவ்வாய்தான். சனி என்பது, இதற்கு எதிர்மாறான தன்மைகளைக் கொண்டிருக்கும் கிரகம்.
செவ்வாய் வேகமாகப் பேசி விரைந்து முடிக்கும் கிரகமென்றால், சனி எதிரே இருப்பவரின் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்கு நிதானம் தரும் கிரகம். சுறுசுறுப்பானவனும் மந்தமானவனும் சேர்ந்தால் எப்படியிருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்கள் எரிமலை போல வேகமாக உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். சனி ஆதிக்கமுள்ளவர்கள் வானமே இடிந்து விழுந்தாலும் எதுவும் நடக்காதது போல் இருப்பார்கள்.
இந்த இரண்டு கிரகங்களுமே ஒரு ஜாதகத்தில் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்க முடியும். இந்த கிரகச் சேர்க்கை லக்னம், ஏழாம் வீட்டில் இருந்தால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து தோல்வியை சந்தித்து விவாகரத்துப் பெறுகிறார்கள். பிற வீட்டில் இருந்தால் பெற்றோர் நடத்தும் திருமணமாக இருந்தாலும் திருமண வாழ்க்கை கேள்விக்குறிதான். இந்த அமைப்பு திருமண வாழ்க்கைக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் கணவருக்கு தொழில் நெருக்கடி எப்பொழுதும் கொடுத்துக் கொண்டே இருக்கும்.பெரும்பாலும் எதிர்மறை கதிர்வீச்சையே வெளிப்படுத்தும் சேர்க்கையாகும்.
பரிகாரம்:- திருமணத்திற்கு பின் ஆண், பெண் இருவருக்கும் செவ்வாய், சனி தசை சந்திப்பு இருக்க கூடாது. நரசிம்மர் வழிபாடு இந்த கிரகங்களின் கூட்டணியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் பரிகாரமாகும்.
செவ்வாய் + ராகு ஆண்களுக்கு உடன் பிறந்தவர் களுடனும், பெண்களுக்கு கணவருடனும் மன வேத னையை ஏற்படுத்தும் கிரகச் சேர்க்கை. பல பெண்களுக்கு திருமணத்தை நடத்துவதில் சிரமத்தை தரும். திருமணம் நடந்த பிறகு கல்யாணம் செய்யாமலே வாழ்வை கழித்து இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படியான பகை கிரக சேர்க்கை. எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று கணவரை கவுவரப்படுத்தி சமுதாயத்தில் வலம் வர முயன்று மன நோயை வரவழைக்கும் பெண்களே அதிகம். பெண்களை கடுமையாக பாதித்து கணவரிடம் இருந்து பிரிக்கும். கணவனை பாம்பு என்று தாண்டவும் முடியாமல் பழுது என்று நினைத்து மிதிக்கவும் முடியாமல் வாழ வைக்கிறது.
பரிகாரம்:- செவ்வாய் தசை நடப்பவ ருக்கு ராகு தசை நடப்பவருடன் திருமணம் செய்யக் கூடாது. மாதவிடாய் நின்ற சுமங்கலிப் பெண்களிடம் ஆசி பெற வேண்டும்.
செவ்வாய்-கேது மேஷம், சிம்மம், தனுசில் செவ்வாய் கேது சாரம் பெற்று நின்றால் அல்லது செவ்வாய் , கேதுவுடன் இணைந்து எங்கு நின்றாலும் 27 வயதிற்கு மேல் தான் திருமணம் நடக்கிறது. திருமணம் ஆன பிறகு ஏன் திருமணம் நடந்தது என்று வருந்தும் வகையில் தான் வாழ்க்கை இருக்கும். கணவனை கடும் பகையாளியாக்கி நீதி மன்ற படி ஏறிய பெண்களே அதிகம். வெகு சில பெண்கள் குடும்பம், குழந்தைகள், மானம் , மரியாதைக்கு அஞ்சி அனுசரித்து வாழ்கிறார்கள். வெகு சில தம்பதிகள் விதிவிலக்காக கருத்து வேறுபாடு இன்றி தொழில் நிமித்தம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் வாழ்நாளின் பெரும் பகுதியில் பிரிந்தே வாழ்கிறார்கள்.
பரிகாரம்:- செவ்வாய் தசை நடப்பவருக்கு கேது தசை நடப்பவருடன் திருமணம் செய்யக் கூடாது. செவ்வாய் கிழமை விரதம் இருந்து வீரபத்திரரை வழிபட செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும்.
3. பாவகர்த்தரி தோஷம்
காரக கிரகத்திற்கு இருபுறமும் அசுப கிரகம் நின்று காரக கிரகத்தின் இயக்கத்தை மட்டுப்படுத்தும். உதாரணமாக செவ்வாய்க்கு ஒருபுறம் கேது மறுபுறம் சனி இருந்தால் செவ்வாயின் இயங்கும் தன்மை சனி மற்றும் கேதுவால் தடைபடுத்தப்படும். முதிர்கன்னியானப் பிறகு திருமணம் அல்லது திருமணமே நடக்காத பெண்கள் ஜாதகத்தில் இது போன்ற அமைப்பை காணலாம்.
உண்மையில் செவ்வாய் தோஷம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. பல திருமண புரோக்கர்கள் 10 ரூபாய்திருமணப் பொருத்தம் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு மக்களை படுத்தும் பாடு அளப்பரியது. தவறான செவவாய் தோஷ கணிப்பால் பலரின் வாழ்க்கை கேள்வியாகவே இருக்கிறது. ஒரு ஜாதகத்தை நவகிரகங்களுமே இயக்கும். செவ்வாய் தசை, புத்தி அந்தர காலங்களில் பாதிப்பு அதிகமாகவும் மற்ற காலங்களில் மிதமாகவும் இருக்கும். எனவே செவ்வாய் தோஷம் கண்டு அஞ்சத் தேவை இல்லை.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406

கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி கோவில் மாசிமக தேர்த்திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மற்றும் 18-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி கோவில் மாசிமக தேர்த்திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மற்றும் 18-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக தேர்த்திருவிழாவில் பங்கேற்க வெளி மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
எனவே உள்ளூர் மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி திருவிழாவில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை.
தல வரலாறு
சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது.
தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது.
இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.
ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதே போன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.
இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
பெயர்க் காரணம்
சீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள் சிலர்.
ஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதில் இருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள் சிலர்.
கோயில் அமைப்பு
கோவிலின் உள் பிரகாரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர், பால ஞானாம்பா, நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ரலிங்கம், சுயம்புநந்தி, வாயுலிங்கம், கண்ணப்பன், சகஸ்ரலிங்கம், சனிபகவான், துர்கா, 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உண்டு.
ஞானபிரசுன்னாம்பிகை சன்னதியை கடந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்றால் அங்கிருந்து கண்ணப்ப நாயனார் மலை சிகரத்தை காணலாம்.
தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.
பாதாள விநாயகர்
கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.
காலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.
தோஷங்கள் விலக பரிகார பூஜை
ஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.
பயண வசதி
ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து நேரடியாக இந்த ஊருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை முதலே கோவிந்தராஜ சாமி சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் முன்பாக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று டிக்கெட் பெற்ற பக்தர்கள் நாளை தரிசனத்திற்கு செல்லலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தொற்று பரவல் குறைய தொடங்கியதும் இலவச தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வழங்கப்பட்டன.
ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவாகி விடுகிறது. இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆன்லைன் தரிசன டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பக்தர்களின் ஏமாற்றத்தை தவிர்ப்பதற்காக நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 15 ஆயிரம் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது.
திருப்பதி அலிபிரி பஸ் நிலையம் அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சாமி சத்திரம், ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் உட்பட 3 இடங்களில் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று காலை நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் பணி தொடங்கியது.
அதிகாலை முதலே கோவிந்தராஜ சாமி சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் முன்பாக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்படாமல் இருக்க போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் பக்தர்களை ஒழுங்குபடுத்தினர்.
ஸ்ரீனிவாசம் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 2 கவுண்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் இருந்தது. இன்று டிக்கெட் பெற்ற பக்தர்கள் நாளை தரிசனத்திற்கு செல்லலாம்.
திருப்பதியில் நேற்று 33,356 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 6,259 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.73 கோடி உண்டியல் வசூலானது.

அம்மன் உருவத்தின் கழுத்துப்பகுதியில் இருந்து மண் எடுக்கப்பட்டு சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோவில் மூலஸ்தானத்தில் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்று நள்ளிரவில் நடந்தது. இதையொட்டி, நள்ளிரவு 12.30 மணிக்கு மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன், மயான அருளாளி அருண், தலைமை முறைதாரர் உட்பட பல அருளாளிகள் அம்மன் சூலம் மற்றும் பூஜை சாமான்களுடன் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு சென்றனர்.
அங்கு எட்டு அடி நீளத்துக்கு மயான மண்ணால் மாசாணியம்மனின் உருவம் சயனகோலத்தில் அமைக்கப்பட்டது. அருளாளி ஆற்றில் நீராடிவிட்டு தீர்த்தம் எடுத்து வந்தார். அதிகாலை 2.30 மணிக்கு பம்பை மேளதாங்கள் முழங்க அம்மனின் திரு உருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டு, அம்மன் தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
எலுமிச்சை மாலைகளால் அம்மனின் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின் பம்பைக்காரர்கள் பக்தி பாடல்களை பாடினர். அருளாளிக்கு அருள் வந்து, அம்மன் மீது வைக்கப்பட்டிருந்த எலும்பு துண்டை வாயில் கவ்விக்கொண்டு கையில் சூலாயுத்துடன் ஆவேசமாக ஆடினார். ஆடிக்கொண்டே அம்மன் உருவத்தையும் சிதைத்தார்.
அப்போது, அம்மனின் கழுத்துப்பகுதியில் இருந்து பிடி மண் எடுக்கப்பட்டது. மயான பூஜை அதிகாலை 2.45 மணிக்கு முடிவடைந்தது. பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பலர் அருள் வந்து ஆடினர். இன்று காலை ஆழியாற்றங்கரையில் கோவில் தலைமை குருக்கள் கும்பஸ்தாபனம் செய்தனர். அம்மன் உருவத்தின் கழுத்துப்பகுதியில் இருந்து மீண்டும் மண் எடுக்கப்பட்டு சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோவில் மூலஸ்தானத்தில் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிக்கலாம்....திருப்பதி ஏழுமலையானின் தினசரி சேவைகள்

நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு, தன் அருளை வாரி வழங்கும் அந்த வேங்கடமுடையானுக்கு தினமும் காலை முதல் இரவு வரை நடைபெறும் ‘நித்திய சேவைகள்’ பற்றி இங்கே பார்ப்போம்.
வாழ்வில் நல்லவிதமான திருப்பங்கள் ஏற்பட, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்ப வேண்டும் என்பார்கள். நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு, தன் அருளை வாரி வழங்கும் அந்த வேங்கடமுடையானுக்கு தினமும் காலை முதல் இரவு வரை நடைபெறும் ‘நித்திய சேவைகள்’ பற்றி இங்கே பார்ப்போம்.
சுப்ரபாத சேவை
தினமும் அதிகாலை 2.30 மணி முதல் 3 மணியளவில் துயிலெழுப்பும் சுப்ரபாத சேவை நடைபெறும். சுப்ரபாதத்தை பாடியவாறு அர்ச் சகர் பெருமாளை துயிலெழுப்பும் சமயத்தில், தங்கவாசல் முன்பு அன்னமய்யா பரம்பரையை சேர்ந்தவர்கள் ‘பூபாள ராகத்தில்’ அன்னமய்யாவின் திருப்பள்ளி எழுச்சி கீர்த்தனையை இசைப்பர். அர்ச்சகரால் ‘நவநீதஆரத்தி’ காட்டப்படும்போது அடியவர்கள் தரிசிக்க தங்கவாசல் திறக்கப்படும்.
கொலுவு (தர்பார்)
சொர்ண சிம்மாசனத்தில் கொலுவிருக்கும் ‘கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தி’க்கு அன்றைய திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் மற்றும் அன்றைய உற்சவங்கள் பற்றி சொல்லப்படும். கணக்காளர் மூலம் வருவாய், காணிக்கைகள் போன்ற தகவல்கள் சீனிவாசனுக்கு வணக்கத்துடன் விபரமாக கூறப்படும்.
சகஸ்ரநாம அர்ச்சனை
பிரம்ம முகூர்த்த சமயத்தில், உலக நன்மைக்காக ‘சகஸ்ர நாம அர்ச்சனை’ எம்பெருமாளின் திருப்பாதங்களில் துளசி சமர்ப்பித்து செய்யப்படும். அதோடு, அவரது மார்பில் வசிக்கும் மகாலட்சுமிக்கும் அர்ச்சனையுடன் நட்சத்திர ஆரத்தி காட்டப்படும்.
ஆர்ஜித வசந்தோற்சவம்
ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் வசந்தோற்சவ மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுவது ‘ஆர்ஜித வசந்தோற்சவம்’ ஆகும்.
தோமாலை சேவை
அலங்கார பிரியராக விளங்கும் பெருமாளை புஷ்ப அலங்காரத்தில் தரிசிப்பது ‘தோமாலை சேவை’ எனப்படும். ஜீயர் சுவாமிகள் பக்தியுடன் அளிக்கும் பூமாலைகளை பெற்று அர்ச்சகர் முதலில் ‘போக ஸ்ரீனிவாசமூர்த்தி’யை அலங்கரிப்பார். பின்னர், மூலவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்படும். ‘திருவடி மாலை’, ‘சிகாமணி மாலை’, ‘சாளக்கிராம மாலை’, ‘கண்டசரி’ என்ற பெரிய மாலை என்று பல்வேறு மாலைகளால் திருவேங்கடவனுக்கு அலங்காரம் செய்யப்படும். எம்பெருமாள் திருமார்பில் இருக்கும் ஸ்ரீதேவி, பூதேவிகளுக்கும் மலர்மாலை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தூபம், தீபம், நட்சத்திர ஆரத்தி ஆகியவற்றை தொடர்ந்து கற்பூர ஆரத்தி விமரிசையாக செய்யப்படும்.
நித்திய கல்யாணோற்சவம்
‘அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று வாழவும், பெண்கள் சுமங்கலிகளாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடனும், ‘நித்திய கல்யாண மூர்த்தி’யான மலையப்ப சுவாமிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், தினமும் நண்பகல் 12 முதல் 1 மணி வரை நித்திய கல்யாண உற்சவம் நடத்தப்படும்.
ஏகாந்த சேவை
சயன மண்டபத்தில் வெள்ளி சங்கிலியால், தங்க கட்டிலை இணைத்து, அதில் பட்டு மெத்தை, தலையணை அமைப்பார்கள். சுவாமிக்கு பாத நமஸ்காரம் செய்து போக ஸ்ரீநிவாச மூர்த்தியை அதில் பள்ளி கொள்ளுமாறு செய்வார்கள். அச்சமயத்தில் அன்னமய்யாவின் தாலாட்டு பாடல் பாடப்படும்.
ஆர்ஜித பிரம்மோற்சவம்
திருவேங்கடவன் தமது உபய நாச்சியார்களுடன் சேஷ, கருட மற்றும் அனுமன் வாகனங்களில் எழுந்தருளி கற்பூர தீபாராதனை ஏற்பது ‘ஆர்ஜித பிரம்மோற்சவம்’ ஆகும்.
சகஸ்ர தீப அலங்கார சேவை
திருமலை வேங்கடவன் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கொலு மண்டபத்தில் ‘சகஸ்ர’ (ஆயிரம்) தீபங்களுக்கு மத்தியில் இருக்கும் ஊஞ்சலில் கோடி சூர்ய பிரகாசம் உடையவராக தரிசனம் தருவது ‘சகஸ்ர தீப அலங்கார சேவை’ எனப்படும்.
டோலோத்ஸவம்
கல்யாண உற்சவம் நிறைவுற்ற பிறகு, கண்ணாடி மண்டபத்தில் உள்ள ‘டோல்’ எனப்படும் ஊஞ்சலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி கற்பூர தீபாராதனை ஏற்கும் நிகழ்வு ‘டோலோத்ஸவம்’ எனப்படும்.

பஞ்ச பூதத் தலங்களாக குறிப்பிடப்படுபவை, காற்று-காளகஸ்தி, மண்-காஞ்சி, ஆகாயம்-சிதம்பரம், நீர் -திருவானைக்காவல், நெருப்பு - திருவண்ணாமலை ஆகும்.
சிவபெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில் உள்ளார் என்பதை மக்களுக்கு உணர்த்த, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பஞ்ச லிங்கங்கள் உள்ளன. வன்னியடி திருச்சுற்றின் தென்மேற்கு பகுதியில் இந்த பஞ்சலிங்கங்களும் இருக்கின்றன.
பஞ்ச பூதத் தலங்களாக குறிப்பிடப்படுபவை, காற்று-காளகஸ்தி, மண்-காஞ்சி, ஆகாயம்-சிதம்பரம், நீர் -திருவானைக்காவல், நெருப்பு - திருவண்ணாமலை ஆகும்.
இந்த ஆலயங்களுக்குச் சென்று தரிசிக்க முடியாதவர்கள், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள பஞ்சலிங்கங்களை வழிபட்டால், மேற்கூறிய ஐந்து ஆலயங்களையும் தரிசித்த பலன்கள் வந்து சேரும்.

கோவையில் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் மார்ச் 2-ந்தேதி நடக்கிறது.
கோவையின் காவல் தெய்வமாக கோனியம்மன் பக்தர்களால் போற்றப்படுகிறார். இந்த கோவிலில் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழாவில் லட்ச கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழாவையொட்டி நேற்று கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக முகூர்த்தகால் கோவில் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ராஜவீதி தேர்நிலை திடலில் உள்ள தேர் முன்பாக சிறப்பு பூஜையுடன், கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி, தக்கார் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடப்பட்டது.
திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் மார்ச் 2-ந்தேதி நடக்கிறது. தேர்த்திருவிழா அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது.
இதனால் கோவிலுக்கு முககவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கோவில் வளாகத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் கோவில் நுழைவு வாயிலில் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல், முக்கண்கள், திருமுடியில் பிறை சந்திரன் கொண்டு அருளும் இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு.
கருணை மிகுந்த இந்த அம்பிகையை வழிபடுவோர், மூவுலகிலும் புத்தி மற்றும் சக்தியோடு வாழ்வர். சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல், முக்கண்கள், திருமுடியில் பிறை சந்திரன் கொண்டு அருளும் இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். இந்த அன்னையை வழிபட்டால், குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் வராது.
வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை திருதியை, தேய்பிறை திரயோதசி.
மந்திரம்:
ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே
நித்ய மதத்ரவாய தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாளை (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
8-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
மதியம் 1.10 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து மாலை அணிந்து, பச்சை நிற கடைசல் சப்பரத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
10-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணியளவில் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேர், 2-வது சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளும் பெரிய தேர், 3-வது தெய்வானை அம்பாள் எழுந்தருளும் தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக வெளிவீதி நான்கிலும் பவனி வருகிறது.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.