
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழாவையொட்டி நேற்று கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக முகூர்த்தகால் கோவில் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ராஜவீதி தேர்நிலை திடலில் உள்ள தேர் முன்பாக சிறப்பு பூஜையுடன், கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி, தக்கார் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடப்பட்டது.
திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் மார்ச் 2-ந்தேதி நடக்கிறது. தேர்த்திருவிழா அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது.
இதனால் கோவிலுக்கு முககவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கோவில் வளாகத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் கோவில் நுழைவு வாயிலில் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.