என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் மாசி மக தெப்ப உற்சவ விழா இன்று(புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் கடந்த 7-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடந்தது.
9-ம் நாளான நேற்று காலை வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் தெப்பக்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.
10-ம் திருநாளான இன்று(புதன்கிழமை) காலையில் தங்கத் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், அதன் பின்னர் பகல் 10.50 முதல் 11.46 மணிக்குள் பகல் தெப்பமும், இரவு 9 மணிக்கு இரவு தெப்பம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு தங்க தோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
தெப்ப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி டி.எஸ்.கே மதுராந்தகிநாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் செய்து வருகின்றனர்.
முன்னதாக வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் நேற்று கோவில் தெப்பக்குளத்தில் சுற்றி தீபம் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட இடத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். மேலும் சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக இடம் ஒதுக்குதல், போக்குவரத்து நெரிசல்களை சீரமைக்கும் பணி, உயர் கோபுரம் அமைத்து கூட்டத்தை கண்காணிக்கும் பணிகளை போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான காரமடை அரங்க நாதர் கோவில் உள்ளது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(17-ந் தேதி) நடக்கிறது.

இந்த கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் மாசி மக தேர்த்திருவிழா வெகுவிமரி சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகளும் நடந்தது.நேற்று பெட்டதம்மன் மலையிலிருந்து பெட்டதம்மன் அழைத்து வரும் நிகழ்வு நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதனையொட்டி கோவில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தது. அதனை தொடர்ந்து கோவில் முன் மண்டபத்தில் அரங் கநாதசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி யுடன் எழுந்தருளினார்.
அங்கு வேதவிற்பன்னர் கள் வேத மந்திரம் முழங்க அரங்கநாத பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி அரங்கநாதரை வழிபட்டனர். திருக்கல்யாயண நிகழ்ச்சியில் காரமடை, மேட்டுப் பாளையம், சிறுமுகை, கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரங்கநாதரை தரிசனம் செய்து சென்றனர்.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(17-ந் தேதி) நடக்கிறது. இதனையொட்டி காலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேதரராக அரங்கநாத பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். தேரோட்டம் மாலை 4 மணிக்கு நடக்கிறது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். 18-ந் தேதி பரிவேட்டை, 19-ந் தேதி தெப்போற்சவம், 20-ந் தேதி சந்தான சேவையும் நடைபெற உள்ளது.

முதல் திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த பலர் இரண்டாம் திருமணத்தில் இழந்த இன்பத்தை மீட்டு விடுகிறார்கள். வெகு சிலருக்கு எத்தனை திருமணம் நடந்தாலும் இல்வாழ்க்கை இரண்டாம் தரமானதாகவே உள்ளது.
ஒரு திருமணம் கூட நடக்காமல் திருமண வாழ்க்கைக்காக பலர் ஏங்கிக் கொண்டு இருக்கும் காலத்தில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடந்து விடுகிறது. முதல் திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த பலர் இரண்டாம் திருமணத்தில் இழந்த இன்பத்தை மீட்டு விடுகிறார்கள். வெகு சிலருக்கு எத்தனை திருமணம் நடந்தாலும் இல்வாழ்க்கை இரண்டாம் தரமானதாகவே உள்ளது. ஆக இரண்டாம் தாரம் என்பது வரமா? சாபமா? என்று பட்டிமன்றம் வைத்து தீர்ப்பு எழுதும் வகையில் பலரின் வாழ்க்கை வரமாகவும், சிலரின் வாழ்க்கை சாபமாகவும் மாறிவிட்டது.
சிறு சிறு கருத்து வேறுபாட்டிற்கு பிரிய நினைத்தால் எத்தனை திருமணம் செய்தாலும் மண வாழ்க்கை கேள்விக் குறியாகவே இருக்கும். பலர் இது போன்ற காரணத்தினால் நல்ல வாழ்க்கைத் துணையை இழந்து பிறகு வருந்துகிறார்கள். அதேபோல் வாழ்க்கைத் துணையின் விருப்பத்திற்கு ஏற்ப தன்னை சரி செய்து வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கமாகும். அதீத எதிர்பார்ப்பு மற்றும் சகிப்புத்தன்மை இல்லாத பல திருமணங்களே இன்று நீதிமன்ற வாசலிலும், இணைய முடியாமல் வீட்டிலும் மனக்காயங்களுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். மனமொத்து வாழ்வதுதான் வாழ்க்கை. ஆனால் மனமொத்துப் பிரிகிறார்கள் என்பது வேதனையான ஒன்றல்லவா?
ஒரு பிரச்சினை என்று வரும் போது ஒருவர் பக்கம் மட்டுமே நியாயம் இருக்கும். அந்த பிரச்சினையில் கணவன், மனைவி தவிர்த்து 3-ம் நபரின் தலையீடு பிரச்சினையை பெரிதுபடுத்தும். குறிப்பாக தம்பதியினரின் பெற்றோர்கள், நண்பர்கள். இதில் எத்தனையோ நண்பர், நண்பிகளே வில்லி, வில்லனாக மாறுகிறார்கள் என்பது நாம் அறிந்ததே. பிரிந்த பிறகு தவறை உணர்வதை விட வாழும் போதே விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை இனிமையாகும். ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் மரபு.
பரிகாரம்: இரு தாரமோ, ஒரு தாரமோ எந்த தோஷமாக இருந்தாலும் அந்தத் தோஷங்களைத் தாண்டி அனைவரும் விரும்புவது சந்தோஷம்தான். அந்த சந்தோஷம் மன அமைதியில் இருந்து கிடைக்கிறது. மன அமைதி என்பது, தெய்வ வழிபாட்டின் மூலமே நமக்குக் கிடைக்கும் என்பதால் குல இஷ்ட தெய்வத்தை தொடர்ந்து ஆத்மார்த்தமாக வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. ஒருவருக்கு திருமணம் என்ற பேச்சை எடுத்தவுடன் அவரின் ஜாதகத்தில் 7-ம் அதிபதி வலு குறைந்து 11-ம் அதிபதி பலம் பெற்றால் ஆணாக இருந்தால் 32 வயதிற்கு பிறகும் பெண்ணாக இருந்தால் 27 வயதிற்கு பிறகும் திருமணத்தை நடத்த வேண்டும்.
நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யாமல் கட்டப் பொருத்தம், தசாபுத்தி பார்த்து திருமணம் செய்ய வேண்டும். மிகக் குறிப்பாக ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் 11-ம் இடம் பார்த்து திருமணம் செய்வதே பரிகாரம். இதுவே முதலும் முடிவுமான முழுமையான பரிகாரம்.
ஒரு ஜாதகத்தில் ஏழாமிடத்தில் குற்றம், குறை இருந்தால் எங்கெங்கயோ அலைஞ்சாச்சு. போகாத கோவில் இல்லை; பாக்காத வரன் இல்லை. எப்படி யாவது திருமணம் நடந்தால் போதும். இனியும் நம்மால் அலைய முடியாது என்று கிடைத்த வரனை முடித்து விடுவோம் என்று தவறான வரவை தேர்வு செய்யக் கூடாது.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது.இதில் உற்சவர் கல்யாணசுந்தரர், வடிவுடையம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 10.30 மணிக்கு தொடங்கிய திருமண வைபவத்தில் வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் நடத்தப்பட்டது.
கல்யாணசுந்தரருக்கு பூணூல் அணிவிப்பு, காப்பு கட்டுதல் அரங்கேறின. பின்னர் மதியம் 12 மணியளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
முன்னதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேலுமணி அம்மாள், கோவில் நிர்வாகம் சார்பாக சீர்வரிசை தட்டுகளை எடுத்து வந்து கல்யாண உற்சவத்தில் பங்கேற்றார். விழாவில் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பரிமாறப்பட்டது. திருமண விருந்தும் வழங்கப்பட்டது.
பின்னர் மாலையில் பால், பழம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவாக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 63 நாயன்மார்கள் உற்சவமும், இரவு கல்யாணசுந்தருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நடைபெற்றது. விழா ஏற்பாடுகள் கோவில் உதவி கமிஷனர் சித்ரா தேவி தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.

மாசிமக விழாவை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தையொட்டி மாசிமக திருவிழாவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்றைய தினம் இரவு சாமி - அம்பாள் தனித்தனி இந்திர விமானத்தில் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து 11-ந் தேதி 63 நாயன்மார்களின் வீதி உலாவும், 12-ந் தேதி ஓலைச்சப்பரமும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீதி உலா வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம்பிடித்து இழுத்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) காலை 12 மணிக்கு மகாமக குளத்தில் நடைபெற உள்ளது. இதே போல் மாசி மக விழா தொடர்புடைய காசிவிஸ்வநாதர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில், கவுதமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் இன்று (புதன்கிழமை) மாலை மகாமக குளக்கரையிலும், வியாழசோமேஸ்வரர் கோவிலில் தேரோடும் வீதியிலும் தேரோட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து நாளை காலை மாசிமகம் தொடர்புடைய 12 சிவன் கோவில்களில் இருந்து சாமி புறப்பாடு நடைபெற்று மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் ஒரே நேரத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

மாசி மக தீர்த்தவாரி இன்று நடைபெறுவதையொட்டி உற்சவ மூர்த்திகள் புதுவை வந்தன. வைத்திக்குப்பம் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உற்சவ மூர்த்திகள் வைப்பதற்காக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தீர்த்தவாரி நிகழ்ச்சியில் தமிழகம், புதுவையில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது..
எனவே வைத்திக்குப்பம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமரா, ஹெலி கேமரா மூலம் பக்தர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர்.
இதற்கிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மாலை போலீஸ் சூப்பிரண்டுகள் சுவேதா, சுபம்கோஷ் தலைமையில் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார், மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.
தொடர்ந்து அங்குள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் செஞ்சி ரங்கநாதர், மயிலம் முருகன், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி, தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் நேற்று இரவு புதுச்சேரி கொண்டு வரப்பட்டன.
உற்சவ மூர்த்திகளுக்கு புதுவை சாரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உற்சவ மூர்த்திகள் புதுவையில் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து இன்று (புதன் கிழமை) காலை வைத்திக் குப்பத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.

தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டுவிழாவையொட்டி ஞான புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா 18 ஆயிரம் ஞானப்புகழ்ச்சி பாடல்களை எழுதியுள்ளார். இவரது ஆண்டு விழா தக்கலையில் ஒவ்வொரு ஆண்டும் தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகமது முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு விழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பீர்முகமது ஒலியுல்லா எழுதிய ஞானப்புகழ்ச்சி பாடுதல் நேற்று இரவு 9 மணி முதல் காலை வரை விடிய, விடிய நடந்தது.
இந்த நிகழ்ச்சியின்போது ஞானப்புகழ்ச்சியில் உள்ள பாடல்களை இசை வடிவில் கூட்டாக பாடினர்.
இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அஞ்சுவன்னம் பீர்முகமது அசோசியேஷன் தலைவர் அப்துல் ஜாபர், துணைத்தலைவர் முகமது சலீம், செயலாளர் ஹமீம் முஸ்தபா, பொருளாளர் ரபிக் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து செய்திருந்தனர்.

வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில், சுப்பிரமணியர்-வள்ளியம்மை திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் போட்டி போட்டு மொய் எழுதினார்கள்.
வேலூர் மாவட்டம் வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 4-ந் தேதி விநாயகர் உற்சவம் நடந்தது. தொடர்ந்து 5-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து காலையிலும், இரவிலும், கேடய உற்சவமும், பல்வேறு வாகன உற்சவங்களும் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முதல் நாள் தேர்த் திருவிழா கடந்த 11-ந்் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக வள்ளிமலையை சுற்றி வந்த தேர், நேற்று முன்தினம் நிலையை வந்தடைந்தது.
இதனையடுத்து இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணியசாமி- வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக காலையில் வேடர்பரி உற்சவம் நடைபெற்றது. இதனை அடுத்து கோவில் வளாகத்தில் உள்ள 16 கால் திருமண மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது.
அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் சுப்பிரமணியர்- வள்ளியம்மை அமர வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை வேத மந்திரங்கள் முழங்க, வள்ளிமலை கோவில் அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘வள்ளிமலை முருகனுக்கு அரோகரா' என்று பக்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து சாமிக்கு மொய் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு மொய் எழுதினார்கள். மொத்தம் ரூ.2,29,120 பக்தர்கள் மொய் எழுதியாக கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் மாதவன், மேலாளர் நித்யானந்தம் உள்ளிட்ட அறநிலையத்துறை அலுவலர்களும், உபயதாரர்களும், பக்தர்களும் கலந்துகொண்டனர். இரவு பிணக்கு தீர்க்கும் உற்சவம் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) 108 சங்காபிஷேக நடைபெறுகிறது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் மாசித்திருவிழாவும் ஒன்று.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருவிழாவான இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 6.35மணிக்கு விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 7.15 மணிக்கு தேர் நிலையத்தை அடைந்தது.
தொடர்ந்து 7.25 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து 8 ரதவீதிகளின் வழியாக சென்று நிலையை அடைந்தது.
அதனைத்தொடர்ந்து தெய்வானை அம்மாள் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
மாசித்திருவிழா தேரோட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கடந்த 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகள் கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக திருவிழாக்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தொற்று பரவல் வெகுவாக குறைந்ததை தொடர்ந்து திருவிழாவின் அனைத்து நாட்களும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் இன்றைய தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்ட திருவிழாவில் கோவில் இணை ஆணையர் குமரதுரை, திருச்செந்தூர் கோர்ட் நீதிபதி வஷீத் குமார், திருச்செந்தூர் சப்-கலெக்டர் கோகிலா, ஏ.எஸ்.பி.ஹர்சிங், தர்மபுர ஆதின திருநெல்வேலி கட்டளை திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமி, ஏரல் அருணாசல சுவாமி கோவில் தக்கார்அ.ரா.கா.அ.கருத்தப்பாண்டிய நாடார், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், திருச்செந்தூர் கோவில் தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், சிவநேச ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், சிவ ஆதித்தன், சுகாதீப் ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், எஸ்.எஸ்.ஆதித்தன், குமரேச ஆதித்தன், திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் வேலவன், இந்து மக்கள் கட்சி மாநில பொருளாளர் ரவிகிருஷ்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள்சுடலை, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
11-ம் நாள் திருவிழாவான நாளை (17-ந் தேதி) மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றனர்.
அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளி வீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேருகிறார்கள்.
அங்கு இரவு அபிஷேகம், அலங்காரம் ஆகி சுவாமி-அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.
நாளை மறுநாள் (18-ந் தேதி) மாலை சுவாமி அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா வருகிறார்கள். இரவு சுவாமியும் அம்பாளும் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேருகிறார்கள்.

சத்யநாராயண விரதம் நம் வேண்டுதல் நிறைவேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும் விதமாக அமைந்த விரதம். இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.
சத்யநாராயண விரதம் நம் வேண்டுதல் நிறைவேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும்விதமாக அமைந்த விரதமாகும். இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
பவுர்ணமி அன்று சத்ய நாராயண விரதம் கடை பிடிக்கப்படுகிறது. பொதுவாகவே விரதம் என்பது எதையாவது வேண்டிக்கொண்டு அது நடக்கவேண்டும் என்பதற்காக அனுசரிக்கப்படுவது.
ஆனால், இந்த சத்யநாராயண விரதம் அப்படியல்ல, நம் வேண்டுதல் நிறைவேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும் விதமாக அமைந்த விரதம். இந்த சத்யநாராயண பூஜையை எப்படி அனுஷ்டிப்பது? பொதுவாகவே இந்த விரத பூஜையை எந்த மாதத்திலும் வரும் பவுர்ணமி அன்றைக்கு அனுசரிக்கலாம். அன்றைக்கு பகல், இரவு பொழுதுகளைத் தவிர்த்து, பூர்ண சந்திரனின் உதய நேரத்தைப் பார்த்து அப்போது மேற்கொள்ளலாம். இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.
பவுர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். மஹாவிஷ்ணுவின் ஓர் அம்சம்தான் சத்யநாராயணர் என்பதால் அன்று மாலைப் பொழுதுவரை விஷ்ணு ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டிருக்கலாம்.
திரும்பத் திரும்ப விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லலாம். பூஜையறையிலேயே இந்த பூஜையை அனுசரித்தால் ரொம்பவும் விசேஷம் அல்லது பூஜை செய்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தை பெருக்கி, நீரால் துடைத்து சுத்தம் செய்து, மாவுக்கோலம் போட்டுக்கொள்ளுங்கள்.
இடவசதிக்கேற்ப சின்னதாக மண்டபம் போல அமைத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு மணை போட்டு அதிலே சத்யநாராயணர் விக்ரகத்தை வைத்தும் பூஜை செய்யலாம். அல்லது சத்யநாராயணர் படம் கிடைத்தாலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
மண்டபத்துக்குச் சின்னதாக ஒரு மாவிலைத் தோரணம் கட்டிக்கொள்ளுங்கள். மணை அல்லது மண்டபத்துக்குள் விக்ரகம் அல்லது படத்தை வைப்பதற்கு முன்னால் அதை நன்கு துடைத்து சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். இரண்டு வாழைக் கன்று வாங்கி இருபக்கமும் சாய்த்து வையுங்கள்.
இந்த மண்டபம் மேற்கு பார்த்தபடி இருக்கலாம். நீங்கள் ஒரு மணைமேல், கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ உட்கார்ந்து பூஜையை ஆரம்பிக்கலாம். உங்களுக்கு இடது பக்கத்தில் இரண்டு நுனி வாழை இலைகளை ஒன்றன்மேல் ஒன்றாகக் கொஞ்சம் இடைவெளி விட்டு சேர்த்துப் போட்டுக் கொள்ளுங்கள். அதன்மேல் அரிசியைப் பரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.
ஆறுமுனை உள்ள ஷட்கோணம் (நட்சத்திரம் போல) கோலத்தை அதன்மேல் விரலால் வரைந்து கொள்ளுங்கள். சுத்தமான நீர் நிரப்பிய ஒரு சொம்பை கோலத்தில் வையுங்கள். சொம்பில் கழுத்தைச் சுற்றி ஒரு பூச்சரத்தைக் கட்டி வைத்துக் கொள்ளுங்கள். சொம்பிற்கு சந்தனம் குங்குமம் இடுங்கள். கலசத்தின் வாயில் மாவிலைக் கொத்தை செருகி வையுங்கள். அதன் நடுவே மஞ்சள் பூசிய தேங்காயை வையுங்கள். பிறகு விநாயகரை மனதார வணங்கி விட்டு பூஜையை ஆரம்பியுங்கள். விஷ்ணு ஸ்தோத்திரங்களைச் சொல்லுங்கள்.
சத்யநாராயணர் அஷ்டோத்திரம் சொல்லிக் கொண்டே உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். பூஜை முடிந்ததும் பாயாசம், வடை என்று பிரசாதங்கள் நிவேதனம் செய்யுங்கள். அடுத்து, கற்பூரம் காட்டி இந்த பூஜையை நிறைவு செய்யலாம்.
பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வெளியே வந்து, வானில் பூரணமாக ஒளிரும் சந்திரனைப் பார்த்து தரிசனம் செய்துவிட்டு நிவேதனப் பொருட்களை உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம். சத்யநாராயண பூஜை விரதமிருப்பதாக வேண்டிக்கொண்டு எந்த கோரிக்கை நிறைவேறவேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த கோரிக்கை நிறைவேறியதும் மறந்துவிடாமல் கண்டிப்பாக சத்யநாராயண பூஜையை அனுசரித்துவிட வேண்டும்.

சுடுமண்ணால் மட்டும் செய்யப்பட்ட பொம்மைகளாக அல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கு பறைசாற்றும் வழிபாடாகவே `உருவார பொம்மைகள்' பார்க்கப்படுகிறது.
மண்ணைக் குழைத்து உருவங்கள் செய்து, அதை சூளையில் இட்டு சுட்டு, சுடுமண் சிற்பங்கள் உருவாக்கும் கலை, உலகம் முழுவதும் இருக்கிறது. தமிழகத்தில் சுடுமண் சிற்பங்கள், உருவங்களாக (உருவாரங்களாக) மாறி இறை வழிபாடு சார்ந்து உள்ளது. சங்க காலம் தொட்டே சுடுமண் சிற்பங்கள் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
‘கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி மனித வாழ்வில் மாற்றங்களையும், ஏற்றங்களையும் உண்டாக்க முடியும்’ என்பது மனிதர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அந்த சக்திக்கு கடவுள், இயற்கை, அறிவியல் என்று ஒவ்வொருவரும் தங்கள் பார்வைக்கு தக்கபடி பெயர் சூட்டியுள்ளனர். அந்த வகையில் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களிடையே இயற்கையை வணங்கும் வழக்கம் உள்ளது.
அதன் ஒரு பகுதியாகத்தான் விளைச்சலுக்கு கை கொடுக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் திருநாள், உழவர்களுக்கு தோள் கொடுக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அத்துடன் தெய்வங்களின் வாகனங்களாக பசு, காளை, நாய், மயில், சேவல் போன்றவற்றை வைத்து அவற்றையும் வழிபட்டு வருகிறோம். அதுபோன்ற வழிபாட்டு முறை மனிதர்கள் மற்றும் கால்நடைகளை நோய்களிலிருந்து பாதுகாக்கவும், பாதிப்பில் இருந்து மீட்டெடுக்கவும் உதவும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவற்றின் உருவங்களை மண்ணால் செய்து கோவில்களுக்கு காணிக்கையாக செலுத்தும் பழக்கம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் உள்ளது. இவற்றை ‘உருவாரங்கள்’ என்பார்கள்.
அந்த வகையில் உள்ளங்கைக்குள் அடங்கும் உருவங்கள் முதல், அண்ணாந்து பார்க்கச் செய்யும் பிரமாண்ட உருவங்கள் வரை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவதுண்டு. இந்த வகையான வழிபாட்டு முறைகள் கொங்கு மண்டலத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் தென் தமிழகப் பகுதிகளில் மண்ணால் செய்த குதிரைகளை அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை உள்ளது. காவல் தெய்வங்களின் வாகனமான குதிரைகளுக்கு செய்யும் மரியாதையாக கருதப்படும் இந்த முறையை ‘புரவியெடுப்பு’ என்கின்றனர்.
தமிழகம் முழுவதும் பல கிராமங்களில், கம்பீரமாக வரிசை கட்டி நிற்கும் மண் குதிரை பொம்மைகளை காண முடியும். ‘நான் நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு எங்கள் தாத்தா வைத்த குதிரை சிலை’ என்று சுடுமண் உருவங் களைப் பற்றிய உரையாடல்களை இன்றும் பல கிராம கோவில்களில் கேட்க முடியும். மேலும் சில கோவில்களில் தெய்வங்களின் உருவங்கள் சுடுமண் சிற்பங்களால் செய்யப்படுவதுண்டு.
உருவ வழிபாடு தோன்றிய காலந்தொட்டே சுடுமண் சிலைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபடும் முறையும் வந்திருக்கக்கூடும். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பெதப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஆல்கொண்டமால் கோவிலில், காணும் பொங்கல் அன்று நடத்தப்படும் திருவிழாவில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரண்டு வந்து உருவங்களை வைத்து உள்ளம் மகிழ வழிபாடு செய்கிறார்கள்.
ஆண், பெண், குழந்தை, ஆடு, மாடு, நாய், குதிரை, கோழி என பல வகைப்பட்ட உருவங்களை இந்தக் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வழிபடுகின்றனர். உருவார பொம்மைகளை நேர்த்திக்கடனாக செலுத்துவதை, நோய் தீர்க்கும் மருந்தாக இந்த பகுதி மக்கள் நம்புகின்றனர். நம்பிக்கையின் அடிப்படையிலேயே கலாசாரமும், பண்பாடும் தொன்று தொட்டு இன்றளவும் காக்கப்பட்டு வருகிறது. சுடுமண்ணால் மட்டும் செய்யப்பட்ட பொம்மைகளாக அல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கு பறைசாற்றும் வழிபாடாகவே `உருவார பொம்மைகள்' பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு துன்பத்தின் போதும், ஒரு அனுபவத்தையும், சோதனைகளை வெற்றி கொள்ளும் சூட்சுமத்தையும் மனிதன் அறிந்து கொள்கிறான். அதோடு இறை வழிபாடும் இணையும்போது அந்த துன்பம், இன்பத்தை அளிப்பதாக மாறுகிறது.
தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையிலான குருசேத்திரப் போர் முடிந்து விட்டது. பலம் பொருந்திய பலர் பலியாகி விட்ட போதிலும், தர்மம் வெற்றிபெற்றதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. யுத்தம் முடிந்து யுதிஷ்டிரர் மன்னனாக முடிசூட்டப்பட்டு விட்டார். இதையடுத்து பாண்டவர்களுக்கு பக்கபலமாக நின்று போரிட்ட பலரும் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். எல்லா காரியங்களையும் தன் கண் அசைவிலேயே நடத்தி முடித்து விட்ட கண்ணனும் கூட துவாரகைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
புறப்படும் சமயத்தில் அவர், தன்னுடைய அத்தை குந்தியை சந்தித்து ஆசிபெற்றார். அப்போது குந்திதேவி, “கண்ணா.. எங்களை விட்டுச் செல்கிறாயா?. உன்னைத் தினமும் பார்க்கும் பாக்கியம் எனக்கு இனி கிடைக்காதே” என்று வருந்தினாள்.
இந்த உலகத்தில் எதுவுமே நிலையானது கிடையாது. பிரிந்தவர்கள் சேர்வதும், சேர்ந்திருப்பவர்கள் பிரிவதும் கூட அப்படிப்பட்டதுதான். அதனால் உன்னுடைய வருத்தம் தேவையற்றது அத்தை. உனக்கு ஒரு வரம் தர தயாராக இருக்கிறேன். என்ன வரம் வேண்டுமானாலும் கேட்டு பெற்றுக்கொள்” என்றான் கண்ணன்.
அந்த நேரத்தில் பாண்டவர்கள், திரவுபதி ஆகியோரும் அங்கேதான் இருந்தார்கள். அவர்களுக்கு, குந்தி என்ன வரம் கேட்கப் போகிறார் என்பது பற்றிய ஆர்வம் இருந்தது, அனைவர் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது. தன் பிள்ளைகளின் வாழ்வும், தன்னுடைய இறுதிக் காலமும் நலமாக இருக்க வேண்டும் என்று கேட்பார் என்பதே அனைவரின் கணிப்பாக இருந்தது.
ஆனால் குந்தி கேட்ட வரம், அவர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ‘எனக்கு தினமும் ஒரு துன்பத்தை தர வேண்டும்’ என்று குந்தி கேட்டதை கண்டு, பாண்டவர்கள் அனைவரும் தன் தாய்க்கு புத்தி சுவாதீனம் சரியில்லாமல் போய்விட்டதா? என்று கூட கருதியிருப்பார்கள்.
ஆனால் கண்ணனுக்கு மட்டுமே தெரியும், குந்தி ஏன் அப்படியொரு வரத்தைக் கேட்டாள் என்று.. அது பாண்டவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக, “என்ன அத்தை சொல்கிறாய்..? எல்லாரும் இன்பமாக வாழ வரம் கேட்பார்கள். நீ என்ன தினம் ஒரு துன்பம் வேண்டும் என்று வரம் கேட்கிறாய்?” என்று ஆச்சரியப்பட்டவாறே கேட்டான் கண்ணன்.
“கண்ணா.. இதுநாள் வரையிலும் எனக்கு எப்போது துன்பம் நேர்ந்தாலும், நான் உன்னைத்தான் நினைத்துக் கொள்வேன். யுத்தம் காரணமாக இதுவரை நீ என்னுடன் இருந்தாய். உன்னைப் பார்த்துக் கொண்டிருந்ததிலேயே என் துன்பங்கள் எல்லாம் விலகிவிட்டன. இப்போது நீ என்னை விட்டு நீங்கிச் செல்வதாக சொல்கிறாய். ஆகையால் நான் உன்னை நினைக்காமல் இருந்துவிடக்கூடாதே என்ற எண்ணம் என்னை அச்சுறுத்துகிறது. தினமும் ஏதாவது துன்பம் வந்தால், அதன் வாயிலாக உன்னை நினைத்து ஆறுதல்பட்டுக் கொள்வேன். உன்னை நினைப்பதால், உன் அருட்பார்வை எனக்கு கிடைக்கும் அல்லவா? அதற்காகத்தான் எனக்கு துன்பத்தையே வரமாக கொடு என்று கேட்கிறேன்” என்று விளக்கம் அளித்தாள் குந்திதேவி.
பொதுவாகவே இன்பத்தில் இருக்கும் எவரும், இறைவனை சுலபமாக மறந்து விடுவதுதான் வாடிக்கை. துன்பம் என்ற ஒன்று இருப்பதால்தான், அவ்வப்போது இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். தன்னை அனைவரும் நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் துன்பத்தைத் தருகிறான் என்று நினைத்தால், அதுவும் மனிதர்களின் அறியாமைதான். ஏனெனில் அதன் வாயிலாக இறைவன் நமக்கு சொல்லித்தருவது, வாழ்க்கைக்கான.. ஆன்மாவின் முதிர்ச்சிக்கான பாடம்.