என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மகத்தில் வரும் மகம் நட்சத்திரத்தை ‘மாசி மகம்’ என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.
ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திமே, ‘மாசி மகம்’ என்று கொண்டாடப்படுகிறது. தட்சனின் மகளான அம்பிகை அவதரித்த தினம் இது என்பதால், இந்த சிறப்பு பெற்றதாக கூறப்படுகிறது. மாசி மாதத்தில் சந்திரன் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் நுழையும் நாளான, மாசி மகம் அன்று, ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
ஒரு முறை கங்கையும், யமுனையும், சிவபெருமானைப் போய் சந்தித்தனர். அவர்கள் ஈசனிடம், “இறைவா.. இந்த உலகத்தில் வாழும் பல கோடி மக்கள், எங்களைத் தேடி வந்து நீராடுவதால், அவர்களின் பாவங்கள் விலகுகின்றன. ஆனால் அவர்களின் பாவங்கள் கழுவப்பட்டதால், எங்களின் புனிதம் குறைந்து வருகிறது. அந்த பாவத்தை நாங்கள் எங்கே போய் தீர்த்துக் கொள்வது?” என்று முறையிட்டனர்.
அப்போது ஈசன், “நீங்கள் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் அன்று, கும்பகோணம் மகாமக குளத்தில் தங்குங்கள். அங்கே உங்களுடைய புனிதம் காக்கப்படும். அந்த புண்ணிய குளத்தில் நீராடுபவர்களுக்கு முன்பிறவி பாவங்கள் அகலும். குழந்தைப் பேறு வேண்டினால் அதுவும் கிடைக்கப்பெறும்” என்று அருளினார்.
ஒருமுறை குருவை கொன்ற பாவத்தின் பலனாக, வருண பகவான் தன்னுடைய கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடலுக்குள் அழுத்தப்பட்டு, துன்பம் அனுபவித்து வந்தான். வருணன் இல்லாததால், உலகத்தில் மழை, தண்ணீர் இல்லாமல், உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் ஆழ்ந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சந்தித்து, வருணனை விடுக்க வேண்டுமாய் முறையிட்டனர்.
இதையடுத்து சிவபெருமான், அந்த சமுத்திரத்தில் எழுந்தருளி வருணனின் கட்டுக்களை அறுத்தார். துன்பத்தில் இருந்து வருணன் மீண்டது, ஒரு மாசி மகம் தினம் ஆகும். அன்றைய தினம் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுபவர்களின் பாவத்தை நீக்கி அருள வேண்டும் என்று ஈசனிடம் வருணன் கோரிக்கை வைத்தான். அதன்படியே, மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுபவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்குவதாக ஐதீகம்.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘மகாமகம்’ என்ற பெயரில் பெருவிழா நடைபெறும். அந்த பெருவிழா 2028-ம் ஆண்டில்தான் வரும்.
‘மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்’ என்பது நம் முன்னோர் வாக்கு. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மகத்தில் வரும் மகம் நட்சத்திரத்தை ‘மாசி மகம்’ என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம். மகம் நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து இறைவனை வழிபட்டால் இனிமையான வாழ்க்கை அமையும்.
ஒரு பிரளய காலத்தில் உலக உயிர்கள் அழிவில் இருந்து தப்பிக்க, உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு கும்பத்தில் வைத்து அதை நீரில் மிதந்து வரச் செய்தனர். அப்போது இறைவன் அந்த கும்பத்தை அம்பு எய்து வீழ்த்தினார். கும்பத்தில் மூக்குப் பகுதியான முன்னால் இருக்கும் கூம்பு போன்ற கோணப் பகுதி உடைந்து விழுந்த இடம் ‘கும்பகோணம்’ திருத்தலமானது. அங்கு மாசி மகம் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். சிம்ம ராசியில் குருவும் சந்திரனும் இருக்கும் போது, கும்ப ராசியில் சூரியன் சஞ்சரித்து, குருவையும் சந்திரனையும் பார்ப்பார்.
அப்போது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ‘மாசி மகாமகம்’ நடைபெறும். இந்த நிகழ்ச்சி வருகிற 2028-ம் ஆண்டு நடைபெறும். மற்ற ஆண்டுகளில் வரும் மாசி மாத மகம் நட்சத்திரம் வரும்பொழுது நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் தித்திப்பான வாழ்க்கை அமையும். இது சிவனின் மைந்தனான முருகப்பெருமானுக்கு உகந்த விரதமாகும். அன்றைய தினம் குழந்தையில்லாத தம்பதியர்கள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் தக்க விதத்தில் வாரிசுகள் உருவாகும்.

தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் நாளை(வியாழக்கிழமை) 10-ம் திருநாளன்று தீர்த்தவாரியும், இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி -அம்பாள் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற மாசி மகப்பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. தென்காசி மேலப்புலியூர் வணிக வைசியர் சமுதாயத்தின் சார்பில் காலை 5.40 மணிக்கு சுவாமி-அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சுவாமி-அம்பாள் ஆகியோர் 2 தேர்களில் நகர்வலம் வந்தனர். தேர்கள் 4 ரத வீதிகளிலும் சுற்றி கோவில் வாசல் முன்பு நிலைக்கு வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் மற்றும் தக்கார் சங்கர், தென்காசி உதவி ஆணையர் கோமதி, செயல் அலுவலர் சுசிலா ராணி, தென்காசி ஆய்வர் சரவணகுமார் மற்றும் அனைத்து சமுதாய நிர்வாகிகள், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு கனக பல்லாக்கில் சுவாமி மற்றும் அம்பாள் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நாளை(வியாழக்கிழமை) 10-ம் திருநாளன்று தீர்த்தவாரியும், தென்காசி நாடார் சமுதாயத்தின் சார்பில் அபிஷேக தீபாராதனையும், மாலையில் புஷ்பாஞ்சலி, இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி -அம்பாள் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

பன்னிரண்டு மாதங்களில் வரும் பவுர்ணமியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சித்ரா பவுர்ணமி கருதப்படுகிறது. தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகள் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.
இந்து சமயத்திலும், அதன் பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பவுர்ணமி பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகள் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.
சித்ரா பவுர்ணமி - சித்ரகுப்தனின் பிறந்தநாள்.
வைகாசி பவுர்ணமி - முருகனின் பிறந்தநாள்.
ஆனிப் பவுர்ணமி - இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.
ஆடிப் பவுர்ணமி - திருமால் வழிபாடு
ஆவணிப் பவுர்ணமி - ஓணம், ரக்சாபந்தனம்
புரட்டாசி பவுர்ணமி - உமாமகேசுவர பூசை
ஐப்பசி பவுர்ணமி -சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
கார்த்திகைப் பவுர்ணமி - திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு
மார்கழிப் பவுர்ணமி - சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்
தைப் பவுர்ணமி - சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்
மாசிப் பவுர்ணமி - பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்
பங்குனிப் பவுர்ணமி - சிவபெருமான் உமையம்மை திருமண நாள்.

திருப்பதி சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருகிற 20-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை பிரம்மோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சுப்ரபாதத்தில் சுவாமி எழுந்தருளி தோமாலசேவை, கொலுவு நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. கோவில் வளாகம், மதில் சுவர், கூரை, பூஜைப் பொருட்கள் போன்றவற்றை நீரினால் சுத்தப்படுத்திய பின், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம் போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பின்னர் சர்வ தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் கோவில் இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மன், துணை அதிகாரி சாந்தி, உதவி அதிகாரி தனஞ்செயுடு, கண்காணிப்பாளர்கள் ரமணய்யா, செங்கல்ராயிலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி உற்சவ மூர்த்திக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் தெப்போற்சவவிழா நடந்தது. அதன் ஒரு பகுதியாக ஆறாம் நாளான நேற்று மாலை ஸ்ரீகோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோவில் வளாகத்தில் திருச்சி வாகனத்தில் காட்சி தந்தார்.
கொரோனா பரவலைத் தொடர்ந்து, புஷ்கரிணியில் இல்லாமல் கோவிலில் தனிமையில் நடந்தது. காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
இதில் பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

திருச்சி திருவானைக்கால் அகிலாண்டேஸ்வரி சம்மேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் கிழக்கு நோக்கியுள்ள குபேர லிங்கத்தைப் பவுர்ணமி தினங்களில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.
* திருவாரூக்குத் தெற்கே சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான திருக்காரவாசல் உள்ளது. இங்குக் கண்ணாயிரம் என்ற திருநாமத்தோடு இறைவன் எழுந்தருளியுள்ளார். இத்திருக்கோவிலில் உள்ள தீர்த்தக்குளத்திற்குப் பிரம்ம தீர்த்தம் என்று பெயர். சந்திர கிரகணம் மற்றும் பவுர்ணமி அன்று இக்குளத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் நீங்கி இறைவனின் அருளைப் பெறுவார்கள் என்று இத்தல வரலாறு கூறுகிறது.
* திருச்சி திருவானைக்காவில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சம்மேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் கிழக்கு நோக்கியுள்ள குபேர லிங்கத்தைப் பவுர்ணமி தினங்களில் அபிஷேகம் செய்து வெண்ணிறப் பட்டாடை சாத்தி வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து மல்லிகை, முல்லை, சம்பங்கி, சந்தன முல்லை போன்ற வாசனை பூக்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்த பின் பிரசாதத்தை ஏழை எளியவர்களுக்கு வினியோகம் செய்தால் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.
* அசுரர்களை அழிக்க வேண்டுமானால் இறைவன் தவக்கோலத்திலிருந்து மீள வேண்டும். இதற்காகப் பிரம்மா, விஷ்ணு தேவர்கள் அனைவரும் மன்மதனின் உதவியை நாடினர். இவர்களின் விருப்பப்படியே மன்மதன் தன் பானத்தை மகேஸ்வரன்மேல் தொடுத்தான். இச்செயலால் கோபம் கொண்ட ருத்ரன் தன் நெற்றிக்கண்ணால் அவனை எரித்தார். இறைவனின் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்கும் பந்தநலலூரக்கும் இடையே உள்ள திருவாளப்புத்தூருக்குத் தென் கிழக்கே உள்ள வரதம்பட்டல் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் மன்மத பரமேஸ்வர லிங்கத்திற்குப் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும்.
* திருநாரையூரில் திருத்தலத்தில் சங்கடஹர சதுர்த்தி அன்று இரவில் இங்குள்ள பொள்ளாப்பிள்ளையாருக்குப் பூஜை செய்யும் அதே சமயத்தில் பிரகாரத்தின் ஓரிடத்தில் குத்து விளக்கை ஏற்றி வானத்திலுள்ள சந்திரனுக்குப் பூஜை செய்து தீபாராதனை காட்டும்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
* வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் உள்ள வன்னவேடு என்ற வன்னிக்காடு என்ற தலம் உள்ளது. இங்கு வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் உள்ள அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் மீது நின்று தவக்கோலத்தில் காட்சியளிக்கிறாள். பவுர்ணமி அன்று மாதா புவனேஸ்வரிக்கு லகுசண்டி ஹோமம் செய்கிறார்கள். இந்த ஹோமத்தின்போது பூஜை செய்யப்படும் கடத்திலிருந்து (கலசத்திலிருந்து) நீரை எடுத்து அம்பிக்கைக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தை சப்த ரிஷிகளே வந்து செய்ததாக ஐதீகம். பவுர்ணமி நாள்களில் நடைபெறும் இந்த அபிஷேகப் பூஜையில் கலந்து கொண்டால் வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் தடங்களின்றிக் கட்டி முடிப்பார்கள்.
* திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாகப் புதுவை செல்லும் சாலையில் பெரும்பாக்கம் என்னும் இடத்திலிருந்து தெற்கிலும் விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியகப் புதுவை செல்லும் சாலையில் திருக்கனூருக்கு வடக்கிலும் உள்ளது திருவக்கரை. இங்கு எழுந்தருளியுள்ள சந்திரளெலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள வக்கிர காளியம்மனைப் பவுர்ணமி நாள்களில் தொடர்ந்தோ அல்லது மூன்று மாதப் பவுர்ணமி தினத்தில் தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கை கூடும். மனசாந்தி கிடைக்கும். பவுர்ணமி நாளில் நள்ளிரவு நேரத்தில் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் இருக்கும் காளியம்மனை வணங்கும்போது அம்மனின் சாந்த சொரூப தரிசனத்தைக் காணலாம். இதனால் தாயின் பூரண கடாட்சம் பெற்று பல சவுகரியத்தை அடையலாம்.
* ஆற்காடு என்னும் ஊருக்கு அருகில் காரை என்ற இடத்தில் ஒரு சமயம் கவுதம மகிரிஷி தன் மனசாந்திக்காக ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காகக் கங்கையை அங்கு வரும்படிச் செய்தார். இந்த நதியே நாளடைவில் கவுதமி என அழைக்கப்பட்டது. மகரிஷி கவுதமர் பூஜித்த சிவலிங்கத்திற்கு கவுதமேஸ்வரர் என்று வழங்கப்பட்டது. இங்கு எழுந்தருளி உள்ள அம்பாள் கிருபாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறாள்.
இங்குள்ள கோவிலில் ஒரே சமயத்தில் இறைவனையும் இறைவியையும் தரிசிக்கும் விதமாக உள்ளது. ஒரு சமயம் கவுதம மகரிஷி அமர்ந்த நிலையில் தவத்தில் ஆழ்ந்திருந்தார். இவருடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவன் ஒரு பவுர்ணமி நாளில் கவுதம முனிவருக்குக் காட்சி கொடுத்தார். இதனால் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மாலையில் மகேஸ்வரனுக்கு ஏழு வகையான அபிஷேகமும் செய்கிறார்கள். இங்குப் பவுர்ணமி நாளில் கவுதமேஸ்வரரைத் தரிசனம் செய்தால் உடல் பிணியும், மனப்பிணியும் நீங்கும்.
* நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள தக்கலை திருத்தலத்தில் உள்ள மகாதேவர் கோவிலின் தென்கிழக்கு மூலையில் அரசமடித்தடியில் உள்ள விநாயகர் ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயன காலத்தில் வெள்ளையாகவும் தை முதல் ஆனி வரையிலான உத்தராயணக் காலத்தில் கறுப்பாகவும் நிறம் மாறி காட்சியளிக்கிறார். இதற்குக் காரணம் இந்த விநாயகர் சிலை சந்திரகாந்தக் கல்லினால் வடிக்கப்பட்டது. இதைப் போலவே அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உட்புறத்தில் உள்ள மூலஸ்தான பிரகாரத்தில் சந்திரகாந்த கல் இருப்பதினால் எப்போதும் இந்த இடம் குளுகுளுவென்று ஏர்கண்டிஷன் செய்தது போல் இருக்கும். சந்திர காந்தக்கல் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதால் இந்தக் கல்லில் பிள்ளையார், தட்சிணா மூர்த்தி, பெருமாள், ராமர், அம்மன், சந்திரன் போன்ற சிலைகளை வடித்தால் அருட்கடாட்சம் மிகுந்திருக்கும்.
* ஈரோடு மாவட்டம் மேட்டூருக்கு அருகில் உள்ளது வேதகிரிமலை. பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் இங்குக் கிரிவலம் செய்கிறார்கள்.
* திருச்சி மாவட்டம் குளித்தலைக்கும் மணப்பாறைக்கும் இடையில் உள்ளது ஐயர் மலை. இம்மலையில் குடிகொண்டிருக்கும் இறைவன் ரத்தின கிரீஸ்வரர் அம்பாள் அரும்பார் குழலி. ஒவ்வொரு பவுர்ணமியிலும் இங்குக் கிரிவலம் நடைபெறுகிறது. இம்மலையைப் பவுர்ணமி நாளில் கிரிவலம் செய்பவர்களுக்கு துயரங்களும், பிணிகளும் நீங்கி சகல நன்மைகளும் ஏற்படும். குறிப்பாக ஏழரை சனியின் கொடுமையாலும், சனி தசை இருப்பவர்கள் சனியின் கொடுமை விலகி சவுகரியம் ஏற்படும்.
* சென்னைக்கும் செங்கல்பட்டிற்கும் இடையே உள்ள சிங்கபெருமாள் கோவில் தலத்தில் எழுந்தருளி வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டபடி சங்கு சக்கரத்துடன் வலது கரம் அபயக்கரத்துடன் இடது கையைத் தொடை மீது வைத்தப்படி காட்சி தரும் பாடலர்தரி நரசிம்மர். ஜாபாலி மகரிஷி தனக்கு மகாவிஷ்ணு நரசிம்மர் வடிவில் காட்சி தர வேண்டும் என்று தவமிருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த நரசிம்மர் பிரதோஷ வேளையில் ஜாபாலி மகரிஷிக்குக் காட்சி கொடுத்ததால் பிரதோஷ நேரத்தில் சிவாலயங்களைப் போன்று நரசிம்மருக்குத் திருமஞ்சனம் நடக்கிறது. பாடலம் என்ற சொல்லுக்கு சிவப்பு என்றும் அத்ரி என்பதற்கு மலை என்றும் பொருளாகும். மூலவர் எழுந்தருளியுள்ள சிறிய குன்றைப் பவுர்ணமி நாளில் கிரி வலம் வந்தால் கடன் வாங்க வேண்டிய நிலையே ஏற்படாது. செவ்வாய் தோஷம் விலகும், திருமணத் தடை விலகி திருமணம் கைகூடும். சுவாதி மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் ராகு திசையல் உள்ளவர்களும் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பவுர்ணமி நாளில் பாடலாத்ரி மலையைக் கிரிவலம் வந்தால் நன்மை ஏற்படும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.
* குடந்தையிலிருந்து திருவையாறு சாலையில் காவிரியாற்றிலிருந்து தண்ணீர் மதகின் வழியாகப் பாய்ந்தோடும் உள்ளிக்கடை என்ற ஊருக்கருகில் உள்ள வட குரங்காடு துறை. இவ்வூரின் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் ஸ்ரீதயாநிதீஸ்வரர். அம்மன் ஸ்ரீ ஜடாமகுட நாயகி, ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இங்குள்ள அம்மனுக்கு ஒன்பது மஞ்சளை மலையாகி தொடுத்துச் சார்த்தினால் எல்லாப் பாவங்களும், பிரச்சினைகளும், தோஷங்களும் விலகும். பின் இந்த மலையிலிருக்கும் மஞ்சளை எடுத்துத் தினமும் தேயத்துக் குளித்து வந்தால் குழந்தை இல்லாதவர் களுக்கும் குழந்தை பிறக்கும்.
* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள குன்றின் மீது ஞானமருளும் சொர்ணமலை கதிர்வேல் முருகன் என்ற திருப்பெயரால் அழைக்கப் படுகிறது. இவ்வாலயத்தின் கருவறையில் செம்பினால் ஆன வேல் மூலவராகக் காட்சியளிக்கிறது. இத்தலம் கண்டி கதிர்காமம் கோவிலிலிருந்து கொண்டு வரப்பட்ட பிடி மண்ணை வைத்து நிர்மாணிக்கப்பட்டது. பவுர்ணமி அன்று இம்மலையை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். சொர்ணமலை கோவிலின் அருகே உள்ள குருமலையில் பல அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளன. கிரிவலம் வரும்போது இம்மலையிலிருந்து மூலிகைக் காற்று பக்தர்களின் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக்குகிறது.

கிரிவலப்பாதையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கவில்லை.இதனால் மிகவும் உற்சாகமுடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரி வலத்திற்கு புகழ் பெற்றது. தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு 10.30 மணி முதல் இன்று இரவு 10.30 மணி வரை மாசிமாதபவுர்ணமி காலமாகும். இந்த பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.அவர்கள் வழக்கம்போல் 14 கி.மீ. தூரம் நடந்து சென்று கிரிவலம் வந்தனர்.
கிரிவலப்பாதையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கவில்லை.இதனால் மிகவும் உற்சாகமுடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
இன்று காலையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட அனைத்து மாவட்டங் களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் அனைத்து கடைகளிலும் விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் நேற்று இரவு நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டதால் மாட வீதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

குறிப்பிட்ட திதியை பரிபாலனம் செய்யும் தேவிகளை வழிபட்டால் வறுமை உள்ளிட்ட சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். இங்கே 5 நித்ய தேவிகளைப் பற்றிய விவரங்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.
லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீ சக்கர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப்படும். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங் களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக, லலிதா பரமேஸ்வரியை சுற்றி வீற்றிருந்து அருள்வதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை எனப்படும் கிருஷ்ண பட்சம் (அமாவாசையுடன் சேர்த்து 15 நாட்கள்), வளர்பிறை எனப்படும் சுக்ல பட்சம் (பவுர்ணமியுடன் சேர்த்து 15 நாட்கள்) என இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பட்ச பதினைந்து நாட்களில் பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பட்சத்திற்கும் ஒருநாள் அதிபதிகளாக வருவார்கள். ஒரு மாதத்தின் இரு நாட்களில் பிரபஞ்சத்தை நிர்வாகம் செய்கின்றனர். குறிப்பிட்ட திதியை பரிபாலனம் செய்யும் தேவிகளை வழிபட்டால் வறுமை உள்ளிட்ட சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.
இங்கே 5 நித்ய தேவிகளைப் பற்றிய விவரங்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.
மஹா வஜ்ரேஸ்வரி
இந்த தேவி ஜாலாமந்திரி பீடத்தின் அதி தேவதை. லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று, வஜ்ரமணியால் ஆனது என்றும், அதன் அருகில் வஜ்ரமயமான நதி ஒன்று உள்ளது என்றும், அதற்கெல்லாம் அதி தேவதை வஜ்ரேஸ்வரி என்றும், துர்வாச முனிவர் தன்னுடைய லலிதாஸ்தரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் இருக்கிறாள். தங்கப் படகில் தன் பக்தரைக் காக்க விரைந்து வருவாள். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை, செந்நிற பூக்களால் ஆன மாலையை அணிந்தவள். வைடூரியம் பதித்த கிரீடம், கைகளில் பாசம், அங்குசம், கரும்பு- வில், மாதுளம் கனி தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களை பார்க்கிறாள். இந்த அன்னையை வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.
வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை சஷ்டி, தேய்பிறை தசமி
மந்திரம்:-
ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே
வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
சிவதூதி
சிவபெருமானையே தூதாக அனுப்பியவள் இந்த தேவி. சும்பன் மற்றும் நிசும்பன் ஆகியோருடன் போரிட அம்பிகை முடிவு செய்தாள். போர் தொடங்குவதற்கு முன்பாக ஒரு முறை அந்த அசுரர்களிடம் சிவபெருமானை தூதாக அனுப்பியதாக தேவி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம், கோடை காலத்து சூரிய ஒளிபோல் மின்னும். நவரத்தினங்கள் இழைத்த மகுடமும், பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்வன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். எல்லாவிதமான மங்களங் களையும் அன்பர்களுக்கு அளிப்பவள். இந்த தேவியை வழிபட்டு வந்தால், நமக்கு எதிராக நடைபெறும் அநீதியும், அதர்மமும் அழியும். நியாயமான கோரிக்கைகள் எளிதாக நிறைவேறும். ஆபத்து நெருங்காது.
வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை சப்தமி, தேய்பிறை நவமி
மந்திரம்:-
ஓம் சிவதூத்யை வித்மஹே
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
த்வரிதா
இந்த தேவிக்கு ‘தோதலா தேவி’ என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். தன்னுடைய உடலில் எட்டு நாகங்களை சூடியிருப்பாள். கருநீல நிறமான இவள், முக்கண்களுடனும், நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுகத்துடன் அருள்கிறாள். சலங்கை, இடை மேகலை, ரத்ன ஆபரணங்களுடன், மயில் பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார ரூபமாக தரிசனம் தருகிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்கக் காத்திருக்கின்றன. இத்தேவியை வணங்கு பவர்களுக்கு, அஷ்ட சித்திகளும், ஞானமும் கைகூடும். பயம் விலகும். கலைகளில் தேர்ச்சி பெறலாம். அதோடு பூரண ஆயுளும் கிடைக்கும்.
வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி
மந்திரம்:-
ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
குலஸுந்தரி
குலஸுந்தரி என்பது குண்டலினி சக்தியை குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இந்த தேவி. பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரைப் போன்ற மலர்ந்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் இருக்க, கரங்களில் ஜெபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், எழுத்தாணி, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள். தேவர்களும், கந்தர்வர்களும், கின்னரர்களும் இவளைச் சுற்றி இருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும், அசுரர்களும் கூட இந்த அன்னையின் அருளை வேண்டி நிற்கின்றனர். இந்த தேவியை வழிபடுபவர்கள், சகல ஞானமும் பெறுவர். செல்வ வளமும், சொத்துக்களும் சேரும்.
வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை நவமி, தேய்பிறை சப்தமி
மந்திரம்:-
ஓம் குலஸுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.
சர்வாத்மிகா
காலத்தைக் குறிப்பிடும் வடிவான தேவி இவள். ‘சர்வாத்மிகா’ என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். உதய நேரத்தில் இருக்கும் சூரியனின் நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தைக் கொண்டவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புத்தகம், ஜெபமாலை, புஷ்பபாணம், கரும்பு - வில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபய -வரத முத்திரை தாங்கியிருப்பவள். கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சவுந்தர்ய ரூபவதியான இவள், அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழ்பவள். இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். தடைகள் விலகும். தோஷங்கள் அகலும். சகல சவுபாக்கியங்களும், ஐஸ்வரியங்களும் வந்தடையும்.
வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை தசமி, தேய்பிறை சஷ்டி
மந்திரம்:-
ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்

கோனியம்மன் கோவிலில் 23-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி வரை அம்மன் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா வருகிறார்.
கோவையின் காவல்தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 9 மணி அளவில் பூச்சாட்டு விழா நடந்தது. இதற்காக வெறைட்டிஹால் ரோடு தேவேந்திரன் வீதியில் இருந்து பூக்கம்பம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பின்னர், அந்த கம்பம் கோவிலில் இருந்து தொடங்கி வைசியாள் வீதி, கற்பககவுண்டர் வீதி, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலை வந்து அடைந்தது.
கோவிலுக்கு பூக்கம்பம் வந்ததும் மீண்டும் பூஜை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் கம்பம் நடப்பட்டது. அதற்கு ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். இதில் கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி, முன்னாள் அறங்காவலர் ராம்கி, ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சண்முகம் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து வருகிற 21-ந் தேதி கிராம சாந்தி, 22-ந் தேதி இரவு 7.30 மணிக்கு கொடியேற்றம், அக்னிசாட்டு நடைபெறுகிறது.
மேலும் 23-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி வரை அம்மன் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா வருகிறார்.
தொடர்ந்து அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 2-ந் தேதி மதியம் 2 மணியளவில் நடக்கிறது. மேலும் 3-ந் தேதி பரிவேட்டை, குதிரை வாகனம், 4-ந் தேதி தெப்பத்திருவிழா, 5-ந் தேதி தீர்த்தவாரி, யாளி வாகனம் கொடி இறக்கம், 7-ந் தேதி வசந்த விழாவுடன் தேர் திருவிழா நிறைவடைகிறது.

கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து பூச்சொரிதல் விழா, கொடியேற்றம், பூக்குழி இறங்குதல் நடைபெற்றவுடன் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு செய்யப்பட்டு கொடி இறக்கம் நடைபெற்றது.
அதன்பின்னர் நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவமும், நேற்று தெப்ப உற்சவமும் நடந்தது. இதையொட்டி கோவிலில் அம்மனின் கருவறைக்கு முன்பு தெப்பம் அமைக்கப்பட்டது. அந்த தெப்பத்தில் மல்லிகை, முல்லை, ரோஜா, தாமரை மலர்கள் மிதக்க கோட்டை மாரியம்மன் அனந்த சயன கோலத்தில் இருப்பதை போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்று பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். மேலும் கோட்டை மாரியம்மனின் தெப்பத்திருவிழாவுடன் இந்த ஆண்டு மாசித்திருவிழா நிறைவு பெற்றது.

கடவுளின் கரத்தில், நம்மிடம் இருக்கும் உழைப்பு, திறமையை ஒப்புக்கொடுப்போம். அவ்வாறு செய்யும்போது, தேவன் நம்முடைய உழைப்பை ஆசீர்வதித்து, நம் குறைகளை எல்லாம், தன் மகிமையால் நிறைவாக்குவார்.
இறை இயேசுவில் பிரியமானவர்களே! இன்று நம்மில் பலரும் கடன் பிரச்சினையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறோம். பலர் தங்கள் இன்னுயிரை இழப்பதற்கும் இந்த கடன் ஒரு காரணமாக இருக்கிறது. கடன் பிரச்சினை பற்றி விவிலியத்தில் உள்ள 2 அரசர்கள் நூலின், 4-ம் அதிகாரத்தில் ஒரு செய்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இறைவாக்கினர் குழுவினரைச் சார்ந்த ஒருவரின் மனைவி, எலிசாவிடம் வந்து கதறி அழுது, “உம் அடியவனாகிய என் கணவர் இறந்து விட்டார். அவர் ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர் என்பது உமக்குத் தெரியும். அவருடைய கடன்காரன் என் இரு பிள்ளைகளையும் தனக்கு அடிமைகளாக எடுத்துக்கொள்ள வந்திருக்கிறான்” என்றாள்.
எலிசா அவளை நோக்கி, “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் வீட்டில் என்ன வைத்திருக்கிறாய்? என்று சொல்” என்றார். அதற்கு அவள் “உம் அடியவளாகிய என்னிடம் கலயத்தில் சிறிது எண்ணெய் மட்டுமே இருக்கிறது. வேறு ஒன்றும் வீட்டில் இல்லை” என்றாள்.
எலிசா, “நீ சென்று உன் அண்டை வீட்டார் அனைவரிடமிருந்தும் பல வெற்றுப் பாத்திரங்களைக் கேட்டுக் வாங்கிக் கொள். பின் உன் புதல்வர்களுடன் வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொள். பாத்திரங்களில் அந்த எண்ணெயை ஊற்று. நிறைந்தவற்றை ஒரு பக்கத்தில் எடுத்து வை” என்றார்.
அந்தப் பெண் அவ்வாறே செய்தாள். பக்கத்து வீட்டினரிடம் இருந்து பாத்திரங்களைப் பெற்ற பிறகு, புதல்வர்களுடன் வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டார். பின்னர் வீட்டில் இருந்த எண்ணெயை, பாத்திரங்களில் ஊற்றினார். எல்லாப் பாத்திரங்களும் நிறைந்தபின், அவள் தம் மகன் ஒருவனை நோக்கி, “இன்னும் ஒரு பாத்திரம் கொண்டு வா” என்றாள். அதற்கு அவன், “வேறு பாத்திரம் இல்லை” என்றான். அத்தோடு எண்ணெய் வருவதும் நின்றுவிட்டது.
அவள் இதுபற்றி எலிசாவிடம் வந்து தெரிவித்தாள். அதற்கு அவர், “நீ போய் எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்துவிடு. எஞ்சியதைக் கொண்டு நீயும் உன் புதல்வர்களும் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
கடனால் இறந்தவரின் மனைவி, எலிசாவிடம் வந்து தன்னுடைய பிரச்சினையைக் கூறியபோது, ‘நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?, உன்னிடத்தில் என்ன இருக்கிறது?’ என்ற இரண்டு கேள்விகளை மட்டும் கேட்டார்.
அப்போது அந்தப் பெண், தன்னிடம் ஒன்றுமே இல்லை என்று கூறாமல், தன்னிடம் இருக்கும் சிறிதளவு எண்ணெயைப் பற்றிச் சொன்னாள். அதை எலிசாவின் வழியாக கேட்ட தேவன், அந்த சிறிதளவு எண்ணெயை பெருகச் செய்து, அந்தப் பெண்ணின் கடனைத் தீர்த்ததுடன், அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு தேவையானதையும் செய்துகொள்ளும்படி அற்புதம் நிகழ்த்தினார்.
நம்மிடமும் இன்று ஒன்றும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கடவுளின் கரத்தில், நம்மிடம் இருக்கும் உழைப்பு, திறமையை ஒப்புக்கொடுப்போம். அவ்வாறு செய்யும்போது, தேவன் நம்முடைய உழைப்பை ஆசீர்வதித்து, நம் குறைகளை எல்லாம், தன் மகிமையால் நிறைவாக்குவார்.
சி.கிறிஸ்டோ, சென்னை.

பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நாளை நடக்கிறது. பெண்கள் அவரவர் வீடுகளில் பொங்கல் படைத்து வழிபட அரசு அனுமதி அளித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு ஒரே இடத்தில் பொங்கல் வழிபாடு நடத்துவார்கள். இது சர்வதேச அளவில் புகழ் பெற்றதுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
அதன்படி ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அபிஷேகம், தீபாராதனை, உஷபூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை போன்றவை நடந்து வருகிறது.
பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கடந்த ஆண்டைப்போல், பெண்கள் அவரவர் வீடுகளில் பொங்கல் படைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கோவில் வளாகத்தை சுற்றியோ, பொது இடங்களில் கூட்டமாகவோ பொங்கல் படைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி நாளை காலையில் 10.50 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்குகிறது. தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன் நம்பூதிரிப்பாடு ஸ்ரீ கோவிலில் இருந்து விளக்கில் தீபம் எடுத்து வந்து மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரியிடம் கொடுப்பார். அதனை கோவில் முற்றத்தில் அமைக்கப்பட்டு உள்ள பண்டார அடுப்பில் பற்ற வைத்து பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைப்பார். அப்போது அவரவர் வீடுகளில் பெண்கள் பொங்கல் படைத்து வழிபாடு நடத்துவார்கள். அன்று மதியம் 1.20 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்படும். அப்போது கோவில் சார்பில் நியமிக்கப்பட்டு உள்ள பூசாரிகள் வீடுகளுக்கு சென்று பொங்கல் நிவேத்யம் சடங்குகளை நிறைவேற்றுவார்கள்.
தொடர்ந்து மாலையில், சிறுவர்களின் குத்தியோட்டம், சிறுமிகளின் தாலப்பொலி அம்மன் ஊர்வலம் ஆகியவை நடக்கிறது. இவை அனைத்தும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்று கோவில் அறக்கட்டளை தலைவர் பி.அனில்குமார் தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு காப்பு அவிழ்க்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.