என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
உலக நன்மை வேண்டி ஆயிரம் கண்ணுடையாள் கோவிலில் மகா சண்டியாகம் நடந்தது.மேலும், தம்பதியினர் பூஜை, சுமங்கலி பூஜை, கன்னி பூஜைகள் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் டி.புதுப்பட்டி சக்திபுரத்திலுள்ள ஆயிரம் கண்ணுடையாள் மகா சக்தி பீடத்தில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் மகா சண்டியாக கால பூஜை நடைபெற்றது.
மாசிமாத பவுர்ணமியை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், ஆகாய வரணம், வாஸ்து சாந்தி யாக பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்டவை நடந்தது. தொடர்ந்து கோ பூஜை, சண்டியாக பூஜைகள் நடைபெற்றது. இதில் 16 வகையான பழங்கள் மற்றும் 108 வகையான பூஜை பொருட்களை கொண்டு யாககுண்டத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க சண்டி ஹோமம் நடந்தது.
மேலும், தம்பதியினர் பூஜை, சுமங்கலி பூஜை, கன்னி பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆயிரம் கண்ணுடையாள் தீப, தூப ஆராதனைகள் நடந்தது. இதில், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை அருகே பொய்கை கரைப்பட்டியில் கள்ளழகர் கோவில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என அழைக்கப்படுவது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இது 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி மாதம் பவுர்ணமி நிறைநாளில் நடைபெறும் தெப்ப திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு மாசி மக தெப்பத்திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 15-ந் தேதி கஜேந்திர மோட்சம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று காலையில் நடைபெற்றது.
இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பாடாகி சென்றார். மேலும் மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு செல்லும் வழி நெடுகிலும் நின்று சேவை சாதித்து தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி தெப்பம் சென்று குளக்கரையை சுற்றி வந்தார்.
இதையடுத்து காலை 11.15 மணியளவில் தெப்பத்தில் அன்னப்பல்லக்கில் சுவாமி தேவியர்களுடன் எழுந்தருளினார். தொடர்ந்து தெப்பத்தில் சாமி இருமுறை வலம் வந்தார். இந்த விழாவை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். அதன் பின்னர் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.
மாலையில் அதே அன்ன பல்லக்கில் சாமி தெப்பத்தில் ஒருமுறை சுற்றி வந்து தரிசனம் தந்தார். இந்த விழாைவயொட்டி தெப்பம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னர் சுவாமி கள்ளழகர் கோவிலுக்கு சென்றார்.
11 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இதில் அமைச்சர் மூர்த்தி, பெரிபுள்ளான் எம்.எல்.ஏ., பொய்கைகரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி வீரணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன் திருப்பதி, சத்திரப்பட்டி போலீசார் செய்திருந்தனர்.

குண்டத்தின் முன்பு சித்திரை தேரில் அம்மன் மலர் அலங்காரத்துடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சி தந்தார். காலை 9 மணியளவில் அம்மன் அருளாளிகள் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் விழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை கடந்த 14-ந் தேதி நள்ளிரவில் நடந்தது. 15-ந் தேதி காலை ஆழியாற்றங்கரையில் கும்பஸ்தாபனம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை குண்டம் கட்டும் முறைதாரர்கள் குண்டம் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
10 அடி அகலமும், 40 அடி நீளமும் உள்ள குண்டம் தயார் செய்யப்பட்டது. மாலை ஆனைமலையில் உள்ள முக்கிய வீதிகளில் சித்திரை தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு குண்டத்தில் பூ வளர்க்கப்பட்டது.
இன்று காலை குண்டம் பக்தர்கள் இறங்க தயார் செய்யப்பட்டது. குண்டம் இறங்க வரும் பக்தர்கள் ஆழியாற்றில் இறங்கி நீராடி, ஈர உடையுடன் ஆற்றங்கரையில் நின்றிருந்த அருளாளிகளிடம் குண்டம் இறங்க அனுமதி கேட்டனர்.
அருளாளிகள் திருநீர் கொடுத்து அனுமதி வழங்கியவுடன் குண்டம் இறங்கும் இடத்திற்கு சென்று வரிசையில் காத்து நின்றனர்.

குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தவுடன் வானில் கருடன் மூன்று முறை வட்டமிட்டது. அதற்கு பிறகு அருளாளிகள் மலர் உருண்டையை குண்டத்தில் உருட்டிவிட்டனர். அதுவாடாமல் இருந்தது. அதற்கு பிறகு எலுமிச்சை கனியை உருட்டி விட்டனர். அதுவும் வாடாமல் இருந்தது.
அதற்கு பிறகு அருளாளிகள் சித்திரை தேரில் இருந்த அம்மனை பார்த்து வணங்கியபடியே குண்டம் இறங்கினர். குண்டம் விழாவை பார்வையிட வந்த பக்தர்கள் மாசாணித்தாயே என பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கியவுடன் பெண்கள் கைகளால் 3 முறை பூவை அள்ளி வீசி வணங்கினர். குண்டம் விழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்ததால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குண்டம் திருவிழாவை காண வந்த பக்தர்களின் வசதிக்காக பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.
இதுதவிர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஆனைமலையில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்....துன்பங்களை நீக்கி மங்கல வாழ்வு தரும் மாசி மக விரதம்

தீயவர்களை அழித்து, நல்லவர்களை காக்கும் பேராற்றல் பெற்றவள். இந்த தேவியை வழிபட்டால், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகம் கொண்டவள். ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் இருக்கும். இவள் தனது பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி, அபய, வரதம் முத்திரை தரித்தவள். சிவப்புப் பட்டாடை அணிந்திருப்பாள். முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்தினங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்திருப்பாள்.
இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளனர். தீயவர்களை அழித்து, நல்லவர்களை காக்கும் பேராற்றல் பெற்றவள். பரமனின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள், திருவருட் பார்வையால் நொடியில் மேன்மை அடையலாம். இந்த தேவியை வழிபட்டால், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தேர்வுகளில் முதன்மையாக வரலாம்.
வழிபட வேண்டிய திதிகள்:-
வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை பஞ்சமி.
மந்திரம்:-
ஓம் நீலபதாகாயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு குண்டத்தின் வெப்பம் தாக்காமல் இருக்க மாசாணியம்மன் கருவறையில் உள்ள அபிஷேக மூர்த்திக்கு வெண்ணெய் காப்பு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் சயன கோலத்தில் வீற்றிருந்து மாசாணியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டிற்காக திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 14-வது நாளான கடந்த 14-ந்தேதி ஆழியாற்றங்கரையில் மயான பூஜை நடந்தது. அங்கு இருந்து பிடிமண் எடுத்து வரப்பட்டு, நேற்று முன்தினம் சக்தி கும்பஸ்தாபனம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று குண்டம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்.
இதற்காக பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பிறகுகள் குண்டம் மைதானத்தில் சேகரிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து குண்டத்தில் விறகு போட்டு பூக்குண்டம் வளர்க்கப்பட்டது. குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு குண்டத்தின் வெப்பம் தாக்காமல் இருக்கவும், அம்மனின் அருள் குளிர்ச்சியாக கிடைக்கும் வகையில் மாசாணியம்மன் கருவறையில் உள்ள அபிஷேக மூர்த்திக்கு வெண்ணெய் காப்பு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
மேலும் வெண்ணெய் உருகாமல் இருந்தால் பக்தர்களுக்கு எந்தவித தீங்கும் நேராது என்பது ஐதீகம். குண்டம் பூவில் இறங்கிய பக்தர்களுக்கு அபிஷேக மூர்த்திக்கு சாத்தப்பட்ட வெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பக்தர்கள் நேரடியாக கோவிலுக்கு சென்று அங்கு அம்மனை வழிப்பட்டு பிரசாதத்தை பெற்றுக் கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் அதை தங்களது பாதங்களில் தடவி கொள்வார்கள். தொடர்ந்து மாலையில் அக்னி கலசம் மற்றும் கும்ப கலசம் ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மாசி மக பெருவிழாவையொட்டி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூதங்களை மையமாக கொண்ட இக்கோவிலில் 5 மூர்த்திகள், 5 தேர்கள், 5 கோபுரங்கள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 நந்திகள், 5 கொடிமரங்கள் என அனைத்தும் 5-ஆக அமையப்பெற்றுள்ளது தனிச்சிறப்பாகும். இக்கோவில் கும்பாபிஷேக விழா 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் மாசி மக பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 13-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபசித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக திருவிழா நடந்தது. இதைத்தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜையும், சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து ஏற்கனவே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 5 தேர்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமசிவாய கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
இதையடுத்து அதிகாலை 5.45 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு கோட்டை வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. பின்னர் 6.30 மணிக்கு சுப்பிரமணியர் எழுந்தருளிய தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது.
இதையடுத்து விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளிய தேரும், விருத்தாம்பிகை அம்மன் எழுந்தருளிய தேரும், சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய தேரும் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு கோட்டைகளையும் வலம் வந்து நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான மாசிமக தீர்த்தவாரி இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) தெப்பத் திருவிழாவும், நாளை மறுநாள்(சனிக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவமும், 20-ந் தேதி விடையாற்றி உற்சவம் ஆரம்ப நிகழ்ச்சியும், மார்ச் 1-ந் தேதி விடையாற்றி உற்சவம் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு நாளான நேற்று உற்சவர் கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கோவில் உள்ளேயே ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனர்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடந்து வந்த வருடாந்திர தெப்போற்சவம் நேற்று நிறைவடைந்தது. கோவில் உள்ளேயே தெப்போற்சவ கைங்கர்யம் நடந்தது.
முன்னதாக நேற்று காலை 10.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
அதையொட்டி மாலை உற்சவர் கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கோவில் உள்ளேயே ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனர். அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய பிரதிஷ்டை அசன விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சி, நற்செய்தி கூட்டங்கள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய 175-வது பிரதிஷ்டை மற்றும் அசன விழா கடந்த 8-ந்தேதி ஐ.எம்.எஸ். கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சி, நற்செய்தி கூட்டங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து 12-ந்தேதி மாலை 3 மணிக்கு திடப்படுத்தல் ஆராதனையும், மாலை 7.30 மணிக்கு பொதுமகமை சங்கத்தாரின் அமலிபால் வழங்கும் கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 13, 14-ந் தேதிகளில் மாலை 7.30 மணிக்கு பாகவதர் கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியாரின் பஜனை பிரசங்கம் நடைபெற்றது.
இதையடுத்து 15-ந் தேதி இரவு 7.30 மணிக்கு ஸ்தாபனங்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. நேற்று தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமையில் பிரதிஷ்டை பண்டிகையும், காலை 9 மணிக்கு எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கணம் ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனையும், காலை 11 மணிக்கு அசன வைபவ மங்கள கால் நடுதல், மாலை 4 மணிக்கு பரிசுத்த ஞானஸ்நான ஆராதனையும், மாலை 7 மணிக்கு ஆயத்தப் பண்டிகை ஆராதனையும், இரவு 8 மணிக்கு 175-வது ஆண்டு சிறப்பு மலர் வெளியிடுதல் நடைபெற்றது. கன்னியாகுமரி திருமண்டல பேராயர் செல்லையா ஆயத்த ஆராதனையையும், 175-வது சிறப்பு மலரையும் வெளியிட்டார்.
இன்று (வியாழக்கிழமை) காலை 3.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடக்கிறது. ஆராதனையை திருநெல்வேலி திருமண்டல முன்னாள் பேராயர் கிறிஸ்துதாஸ் அருளுரை வழங்குகிறார். காலை 6 மணிக்கு கணம் ஜான் தாமஸ் ஐயர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல், 6.15 மணிக்கு உலை ஏற்றும் வைபவம் நடக்கிறது. மாலை 3 மணிக்கு அசன வைபவம், இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கையும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை மெஞ்ஞானபுரம் பொது மகமை சங்கம் சார்பில் தலைவர் ஜெயபோஸ், உப தலைவர் ஜெரால்டு ஜான்சன், செயலாளர் நவமணி இராபர்ட், இணை செயலாளர் செல்வின், பொருளாளர் சொர்ணராஜ், தலைமை குருவானவர் கோல்டுவின், உதவி குருவானவர் ஐசக்துரை ஜோயல், திருப்பணிவிடையாளர் எட்வின் ஜெபராஜ், சபை ஊழியர் பிளசிங் ஜிம்ரோஸ், மற்றும் சபை மக்கள் செய்து வருகின்றனர்.

ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானம் நடந்தது. கோவிலின் நான்கு மாடவீதிகளில் பஞ்ச மூர்த்திகள் உலா வந்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் தென்கயிலாயமாக திகழ்கிறது. கோவிலில் மாசி மாத பவுர்ணமியையொட்டி ஒவ்வொரு ஆண்டும் திரிசூல ஸ்நானம் நடப்பது வழக்கம்.
அதன்படி மாசி மாச பவுர்ணமியான நேற்று திரிசூல ஸ்நானம் நடந்தது. முன்னதாக பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், ஞானப்பிரசுனாம்பிகை, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் திரிசூலத்தை அலங்கார மண்டபத்தில் இருந்து மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றுக்கு அருகில் கொண்டு சென்றனர்.
அங்கு திரிசூலம், கலசத்துக்கு கணபதி பூஜை, புண்ணியாவதனம், பல வண்ண மலர்களால் பூஜை நடந்தது. அங்கு திரண்டு இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களிடையே சொர்ணமுகி ஆற்றின் புராண தகவல்களை வேதப் பண்டிதர்கள் விளக்கி கூறினர்.
அதைத்தொடர்ந்து திரிசூலத்தை சொர்ணமுகி ஆற்றுக்கு கொண்டு சென்று புனிதநீரில் மூன்று முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர். பின்னர் திரிசூலத்துக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து, அகண்ட தீபாராதனை, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியர் மற்றும் கோவில் அதிகாரிகள் பங்கேற்று சாமி தரிசனம் ெசய்தனர்.
அதன் பிறகு சொர்ணமுகி ஆற்றில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து கோவிலின் நான்கு மாடவீதிகளில் நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், சப்பரங்களில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் தனித் தனியாக எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

மகா பூர்ணிமாவை ஒட்டி பிரயாக்ராஜில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக நிறுவப்பட்டன.
கொரோனா தொற்று அபாயத்துக்கு மத்தியில், மகா பூர்ணிமாவை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கங்கை நதியில் நேற்று புனித நீராடினர். கங்கை நதியிலும், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் சங்கமத்திலும் நேற்று காலை முதல் சுமார் 4.50 லட்சம் பேர் புனித நீராடினர். அவர்களில், ஏராளமான முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மகா பூர்ணிமாவை ஒட்டி பிரயாக்ராஜில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக நிறுவப்பட்டன.சங்கம பகுதியில், நிர்வாக வாகனங்கள், ஆம்புலன்சுகள் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இன்று இரவு 10 மணி வரை செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கடற்கரையில் நீலாயதாட்சி அம்மன் கோவில் அஸ்திர தேவருக்கு மஞ்சள், திரவியம், பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
நாகை புதிய கடற்கரையில் ஆண்டுதோறும் மாசிமகத்தையொட்டி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதில் நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன்-பெருமாள் கோவில்களில் இருந்து சாமி வாகனங்கள் புறப்பாடாகி நாகை புதிய கடற்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த 2 ஆண்டுகளாக சாமி புறப்பாடாகி கடற்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நேற்று நாகை புதிய கடற்கரையில் நடைபெற்றது.
இதில் நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து கல்யாணசுந்தரர், கோகிலாம்பாள், அஸ்திரதேவருடன் புறப்பாடாகி புதிய கடற்கரையில் எழுந்தருளினார். அதேபோல் நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில், பாப்பாக்கோவில் கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோவில், வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், நாகை சட்டையப்பர் கோவில், மெய்க்கண்ட மூர்த்தி கோவில், நடுவதீஸ்வரர் கோவில், நவநீத கிருஷ்ணன் கோவில், ஸ்ரீதாய் மூகாம்பிகை கோவில், அந்தணப்பேட்டை நித்தியகல்யாண பெருமாள் கோவில், அண்ணாமலை நாதசுவாமி கோவில், திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இருந்து சாமி புறப்பாடாகி நாகை புதிய கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடற்கரையில் நீலாயதாட்சி அம்மன் கோவில் அஸ்திர தேவருக்கு மஞ்சள், திரவியம், பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து அஸ்திர தேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடினர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் ராணி, செயல் அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நாகை நம்பியார்நகர், ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் சீர்வரிசை பொருட்களை வழங்கினர். அதேபோல் வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவிலில் இருந்து சாமி புறப்பாடாகி கல்லாறு கடற்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது.
வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி நேற்று பந்தற்காட்சி உற்சவம் நடந்தது. இதில் தியாகராஜ சாமியும், நடராஜ சாமியும் 16 கால் மண்டபத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதையடுத்து நடராஜர், சிவகாமி அம்மனுடன் வீதி உலா வந்தார்.

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை கடந்த 14-ந் தேதி நள்ளிரவு நடைபெற்றது. நேற்று முன்தினம் சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை ஆகியவை நடந்தன. நேற்று காலை 9.30 மணிக்கு குண்டம் கட்டும் நிகழ்ச்சியும், இரவு 6 மணிக்கு சித்திரதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகா முனிபூஜை நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாநிதி மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஆனைமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பொள்ளாச்சி பகுதியில் இருந்து ஆனைமலை வழியாக வேட்டைக்காரன்புதூர் செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஆனைமலை போலீஸ் நிலைய வீதி, பெரியபோது ரோடு வழியாக குப்பிச்சிபுதூர், ஒடையகுளம் சென்று, வேட்டைக்காரன்புதூரை அடைய வேண்டும்.
வேட்டைக்காரன்புதூரில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் வாகனங்கள் மாசாணியம்மன் கோவில் திருமணம் மண்டபம் பின் உள்ள சாலை வழியாக செல்ல வேண்டும். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் தனியார் வாகனங்கள் வி.ஆர்.டி. பெண்கள் பள்ளி மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இரு சக்கர வாகனங்கள் ஆனைமலை மத்திய பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்க வேண்டும்.
வாகனங்கள் நிறுத்துவதற்கு பொள்ளாச்சி ரோடு, நா.மூ.சுங்கம் மற்றும் வேட்டைக்காரன்புதூர் சாலைகளில் போதுமான இடவசதி செய்யப்பட்டு உள்ளதால் அவற்றை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களும், உள்ளூர் பொது மக்களும் பயன்படுத்தி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும் குண்டம் திருவிழாவையொட்டி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு சீனிவாசன் மேற்பார்வையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குண்டம் திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.