search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    நீலபதாகா
    X
    நீலபதாகா

    எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்க துணைபுரியும் நீலபதாகா காயத்ரி மந்திரம்

    தீயவர்களை அழித்து, நல்லவர்களை காக்கும் பேராற்றல் பெற்றவள். இந்த தேவியை வழிபட்டால், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
    நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகம் கொண்டவள். ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் இருக்கும். இவள் தனது பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி, அபய, வரதம் முத்திரை தரித்தவள். சிவப்புப் பட்டாடை அணிந்திருப்பாள். முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்தினங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்திருப்பாள்.

    இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளனர். தீயவர்களை அழித்து, நல்லவர்களை காக்கும் பேராற்றல் பெற்றவள். பரமனின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள், திருவருட் பார்வையால் நொடியில் மேன்மை அடையலாம். இந்த தேவியை வழிபட்டால், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தேர்வுகளில் முதன்மையாக வரலாம்.

    வழிபட வேண்டிய திதிகள்:-

    வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை பஞ்சமி.

    மந்திரம்:-

    ஓம் நீலபதாகாயை வித்மஹே
    மஹா நித்யாயை தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்
    Next Story
    ×