என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பழனி முருகன் கோவிலில் யாகபூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் உச்சிக்காலத்தில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் மூலவருக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.
பழனி முருகன் கோவிலில் உள்ள பாரவேல் மண்டபத்தில், மாசி மகத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை சங்குகளில் வைத்து உலக நலன், அமைதி மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி யாகம் நடத்தப்பட்டது.
பின்னர் யாகபூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் உச்சிக்காலத்தில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் மூலவருக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

மேலும் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாளை தேரில் வீற்றிருந்து பவனி, வருவதை காண பொதுமக்கள், பக்தர்கள் உயரமான இடங்களிள் முன்கூட்டியே இடம் பிடித்து நின்று தரிசித்தனர்.
காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து தினசரி இரவு உற்சவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதை தொடர்ந்து கருடசோவையும் நடைபெற்றது. 15-ந் தேதி ஸ்ரீ பெட்டத்தம்மன் மலையில் இருந்து பெட்டத்தம்மன் அழைப்பு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம்
16-ந்தேதி அதிகாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு யானை வாகன உற்சவமும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளினார். தேரில் வீற்றிருந்த அரங்கநாத பெருமானை தரிசிக்க பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி கும்பிட்டு சென்றனர். மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. கோவில் நிர்வாகம் சார்பாக ஊர்பிரமுகர்கள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதனையடுத்து மாலை 4.25 மணிக்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில் வேலவன், உதவி ஆணையர் விஜயலட்சுமி, கேட்டாட்சியர் ரவிசந்திரன், மேட்டுப்பாளையம் துணைபோலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், மேட்டுப்பாளையம் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.இதை தொடர்ந்து தேர்நிலைத் திடலில் இருந்து புறப்பட்டது.தேரின் முன்னும், பின்னும் ஏராளமான பக்தர்கள் ரங்கா, கோவிந்தா, என்று எழுப்பியகோஷங்களுடனும், தாசர்களின் சங்கொளியும் விண்ணை அதிரவைத்தது. தேர் நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்து இரவு தேர் நிலைத் திடலை அடைந்தது.
மேலும் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாளை தேரில் வீற்றிருந்து பவனி, வருவதை காண பொதுமக்கள், பக்தர்கள் உயரமான இடங்களிள் முன்கூட்டியே இடம் பிடித்து நின்று தரிசித்தனர். காரமடை அரங்கநாத பெருமாள் தேரோட்டத்தை ஒட்டி பல்வேறு அமைப்புகள் சார்ப்பாக பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.தேரோட்டத்தை ஒட்டி காரமடை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

திருவண்ணாமலை அருகே கவுதம நதியில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தர்ப்பணம் செய்து நீராடினர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்வுகள் மிகவும் சிறப்பு மிக்கது. அதன்படி தை மாதம் 5-ம் நாள் தென்பெண்ணையாற்றிலும், ரத சப்தமியன்று செய்யாற்றிலும், மாசி மகத்தன்று கவுதம நதியிலும் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
மாசிமகம் நட்சத்திர தினமான நேற்று திருவண்ணாமலை அருகே பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக நேற்று காலை 9 மணி அளவில் சந்திரசேகரர் திருவடிவில் அருணாசலேஸ்வரர் அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அவர் கோவிலில் இருந்து பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதியில் தீர்த்தவாரிக்கு சென்றார். சாமி செல்லும் வழி முழுவதும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணியில் பெரும் பங்காற்றியவர் வல்லாள மகாராஜா. இவர் குழந்தை பேறு இல்லாமல் தவித்த போது சிவபெருமானே குழந்தையாக தரிசனம் அளித்ததாக ஆன்மிக புராணங்கள் தெரிவிக்கிறது. எனவே சுகநதி ஆற்றங்கரையோரம் நடந்த போரில் உயிரிழந்த வல்லாள மகாராஜாவுக்கு ஆண்டு தோறும் மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கமாகும்.
அதன்படி நேற்று தீர்த்தவாரி மற்றும் திதி அளித்தல் நிகழ்ச்சி கவுதம நதிக்கரையில் நடைபெற்றது. கவுதம நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் ஏராளமான போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் கோவில் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீர்த்தவாரிக்கு முன்பு அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் சாமியின் சூல ரூபமான அஸ்திரதேவருக்கு கவுதம நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தவாரி முடிந்த பிறகு ஏராளமான பக்தர்கள் கவுதம நதியில் நீராடினர். மேலும் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களும் கவுதம நதிக்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வன்னிய குல ஷத்திரிய வல்லாள மகாராஜா மடாலய சங்கத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான த.வேணுகோபால், துணைத்தலைவர் அ.அ.ராஜமாணிக்கம், செயலாளர் இரா.காளிதாஸ், துணை செயலாளர் நா.லட்சுமணன், பொருளாளர் மா.பன்னீர்செல்வம், சட்ட ஆலோசகர் நா.இளங்கோவன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

சந்திரளெலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள வக்கிர காளியம்மனைப் பவுர்ணமி நாள்களில் தொடர்ந்தோ அல்லது மூன்று மாதப் பவுர்ணமி தினத்தில் தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கை கூடும்.
திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாகப் புதுவை செல்லும் சாலையில் பெரும்பாக்கம் என்னும் இடத்திலிருந்து தெற்கிலும் விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியாகப் புதுவை செல்லும் சாலையில் திருக்கனூருக்கு வடக்கிலும் உள்ளது திருவக்கரை.
இங்கு எழுந்தருளியுள்ள சந்திரளெலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள வக்கிர காளியம்மனைப் பவுர்ணமி நாள்களில் தொடர்ந்தோ அல்லது மூன்று மாதப் பவுர்ணமி தினத்தில் தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கை கூடும். மனசாந்தி கிடைக்கும்.
பவுர்ணமி நாளில் நள்ளிரவு நேரத்தில் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் இருக்கும் காளியம்மனை வணங்கும்போது அம்மனின் சாந்த சொரூப தரிசனத்தைக் காணலாம். இதனால் தாயின் பூரண கடாட்சம் பெற்று பல சவுகரியத்தை அடையலாம்.

இன்று ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தந்திரி தீ மூட்டி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். அதன்பின்பு வீடுகளில் பெண்கள் பொங்கலிட்டனர்.
திருவனந்தபுரத்தில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு மாசிமாதம் பொங்கல் விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று நடந்தது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொது இடத்தில் பொங்கலிட கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. எனவே பெண்கள் அனைவரும் வீடுகளிலேயே பொங்கலிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று காலை 10.50 மணிக்கு கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தந்திரி தீ மூட்டி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். அதன்பின்பு வீடுகளில் பெண்கள் பொங்கலிட்டனர். இன்று பிற்பகல் நைவேத்தியம் நடைபெறுகிறது. அப்போது கோவில் பூசாரிகள் வீடுகளுக்கு சென்று சடங்குகளை செய்கிறார்கள்.

கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.
திருமாலின் வாகனங்களில் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுபவர், கருட பகவான். இவரே திருமாலின் முதன்மையான வாகனமாக இருக்கிறார். அனைத்து ஆலயங்களிலும் பெருமாளுக்கு எதிரே கருடனின் சிலை இருப்பதைக் காணலாம். அந்த கருட பகவானைப் பற்றிய சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
* கருட பகவான், திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே ‘கருட சேவை’ எனப்படும். அப்போது பெருமாள், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடைப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.
* ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.
* கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.
* கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.
* கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மரிக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.
* பெருமாளை தங்கள் தமிழால் புகழ்ந்து பாடிய 12 ஆழ்வார்களும், நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் 36 இடங்களில் கருட பகவானைப் பற்றி சிறப்பித்துப் பாடியிருக்கிறார்கள்.
* சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ளது அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும், தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.
* எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு தரிசனம் தரும் கருடனை தரிசிக்கலாம். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்கிறார்கள்.
* கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு, சக்கரம் தாங்கி காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு, சக்கரம் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.
* நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகதத்திற்கு ‘கருடோத்காரம்’ அல்லது ‘கருடமணி’ என்று பெயர். கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே மரகதமாக மாறியதாக புராணக்கதை ஒன்று உள்ளது. இதை அணிவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் துன்பம் ஏற்படாது.
* திருவனந்தபுரத்திலுள்ள அனந்தபத்மநாப சுவாமி கோவிலுள்ள கருட பகவான் 7 அடி உயரத்தில் நின்ற நிலையில் நாகங்களை சூடி காட்சி தருகிறார்.
* ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்கமன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதற்கு கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததே காரணம்.

திருவாரூரில் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்ச் 15-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
சைவ சமய மரபில் பெரியகோவில் என்று அழைக்கப்படுவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். இக்கோவிலில் ஆழித்தேர் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக இத்தேர் விளங்குகிறது. மக்கள் கடலில் உருண்டு வரும் பெரிய தேர் என்பதால் மக்கள் இத்தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர்.
இந்த தேர் 36 அடி உயரத்தில் 5 அடுக்கு கட்டு மானங்களை கொண்ட தேர் பீடத்தில், 60 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு ஆக கூடுதல் 96 அடி உயரத்தில் சுமார் 450 டன் எடையில் தேர் கம்பீரமாக அசைந்து வருவதை பார்க்க நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர்.
இந்த தேர் சிம்மாசனம், பத்மாசனம் என 5 வகை ஆசனங்களை கொண்டு 5 அடுக்குகளாக 36 அடி உயரத்தில் அழகிய தேராக கட்டப்பட்டுள்ளது.
இதன்மேல் 60 அடி உயரத்தில் மூங்கில் மற்றும் பனமர துண்டுகளை கொண்டு கோபுர வேலைப்பாடுகளும், அதனை தொடர்ந்து வண்ண துணிகளை கொண்டு அலங்கரம் செய்யப்பட்டு 96 அடி உயரத்தில் 450 டன் எடையுடன் கூடிய தேர் அசைந்து வருவது பார்ப்பவர் கண்களுக்கு பரவசம் தரும். குறிப்பாக வீதி முனைகளில் தேர் திரும்பும் அழகு காணக் கிடைக்காதது.
ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின்போது இறுதி நிகழ்ச்சியாக இத்தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு 15.3.22-ல் தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் கோவில் நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகின்றன.
தேரோட்டத்தினை முன்னிட்டு தேர் கட்டுமானப் பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. உயர்ரக மரங்களால் 36 அடி உயரத்தில் நிலையாக அமைக்கப்பட்டுள்ள 5 அடுக்குகளை கொண்ட பீடத்தின் மீது மூங்கில் மற்றும் பனமர துண்டுகளை கொண்டு தேர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக வேதாரண்யம் உள்ளிட்ட காடுகளில் இருந்து மூங்கில் மரங்கள் கொண்டு வரப்பட்டு கட்டுமானம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கட்டுமானம் முடிந்தவுடன் அழகிய வண்ணங்களால் ஆன திரைசீலைகள் கொண்டு தேர் அலங்கரிக்கப்படும்.
அலங்கார வேலைகள் முடிந்தவுடன் தேரோட்டத்திற்கு 3 நாட்கள் முன்னதாக கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு அஜபா நடனத்துடன் தேரில் எழுந்தருள்வார்.
தியாகராஜர் தேருக்கு வந்தவுடன் பக்தர்கள் திரளாக வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு செல்வர்.

சிறப்புவாய்ந்த அகில உலகங்களையும் படைத்து அளித்து காக்கும் வீழி வரதராஜப் பெருமாளிடம் தம்மை ஒப்புக்கொடுப்பாரெல்லாம் உன்னத வாழ்வு பெறுவர் என்பது உறுதி.
காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில், ஸ்ரீவீழி வரதராஜப் பெருமாள் கோவில், பார்ப்பவர்களை பக்தி பரவசப்படுத்தும் அழகிய ஐந்து நிலை மாடங்களோடு, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இந்த கோவில் கர்ப்பகிரகத்தில் அன்பு மலையாய், அருள் கடலாய், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் தரிசனம் தருகின்றார் வீழி வரதராஜப் பெருமாள். விழுதி மரம் செழித்த காட்டினில் முன்னாளில் பெருமாள் கோவில் கொண்டிருந்தார். (விழுதி என்பதுதான் வீழியானது). காலவெள்ளத்தில் அக்கோவில் கரைந்திடவே, பெருமாள் அடியவர் ஒருவர் கனவில் தோன்றி, தம்மை இவ்விடத்தில் எழுந்தருள சொன்னார். அதன்படி உருவானதுதான் வீழி வரதராஜப் பெருமாள் கோவில். பெருமாள் சன்னதியின் பக்கத்தில் செங்கமலத்தாயார் சன்னதி அமைந்துள்ளது. பெருமாளுக்கு வடக்கு பார்த்த சன்னதி சர்வ வல்லப ஆஞ்சநேயர் சன்னதி கொண்டுள்ளார்.
முன்னொரு காலத்தில் அறநெறியோடு ஆட்சி புரிந்து வந்த ஒரு மன்னனுக்கு மகப்பேறு கிட்டவில்லை. இதனால் மிகவும் துன்புற்ற மன்னன், ஒரு மாமுனிவர் அறிவுறுத்தலோடு, ஸ்ரீவீழி வரதராஜப் பெருமாளை, பிள்ளை வரம் வேண்டி கண்ணீர் மல்க வேண்டினார். மன்னனின் பக்தியை கண்டு, அவருக்கு பிள்ளை வரத்தோடு எல்லா வரங்களையும் அருளினார் பெருமாள். இன்றும் பிள்ளை வரம் வேண்டுவோர், பெருமாளை உள்ளன்போடு தரிசித்து, பிள்ளை வரம் மற்றும் அனைத்து ஆசி்களையும் பெற்று செல்கின்றனர்.
இப்பெருமாள் கோவிலில் எல்லா மாதங்களும் விழா மாதங்களே. இவற்றுள் மாசிமகம் பெரு விழாவாக மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இப் பெருமாள் கோவிலில் மகா மண்டபம் 1908-ம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டது. அதன்பிறகு மடப்பள்ளி (1927), பஜனைமடம் (1942), திருகல்யாணமண்டபம்(1958), ராஜகோபுரம்(1961) உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் யாவும், பா.கி.சவுரிராஜலு செட்டியார் தலைமையிலும், அவரோடு பல்வேறு செட்டியார் பெருமக்கள் இணைந்து செயலாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு 1972-ம் ஆண்டில் திருமுழுக்கு திருப்பணி. 1991-ம் ஆண்டில் குடமுழுக்கு. சிறப்பம்சமாக 1973-ல், புதுச்சேரி மாநில அளவில் கோவில் பராமரிப்புக்காக முதல் பரிசும், 1974-ல் மாவட்ட அளவில் 2-ம் பரிசும், 1975-ல் மீண்டும் முதல் பரிசும் பெற்றுள்ளது.
இத்தகைய சிறப்புவாய்ந்த அகில உலகங்களையும் படைத்து அளித்து காக்கும் வீழி வரதராஜப் பெருமாளிடம் தம்மை ஒப்புக்கொடுப்பாரெல்லாம் உன்னத வாழ்வு பெறுவர் என்பது உறுதி. இம்மை இன்பமும், மறுமைப் பேரின்பமும் பெற ஸ்ரீவீழி வரதராஜப் பெருமாளை சரணடைவோம்.

திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 11 மாதங்களுக்கு பிறகு ரதவீதிகளில் சாமி புறப்பாடு நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலகத்தை உலுக்கிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் சுவாமி புறப்பாடு சில நிபந்தனைக்கு உட்பட்டு நடந்து வந்தது. சில தளர்வின் காரணமாக சில திருவிழாக்கள் கோவிலுக்குள்ளே நடைபெற்றது. இதனால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி புறப்பாடு வீதி உலா ரத்து செய்யப்பட்டது. எனவே கடந்த 11 மாதங்களாக ரதவீதிகளில் சுவாமி புறப்பாடு இல்லாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு கோவில்களில் வழக்கம் போல திருவிழாக்கள் நடந்து வருகிறது. அதன்படி திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலுமாக கோவிலுக்குள்ளே உள்திருவிழாவாக தெப்ப உற்சவ திருவிழா நடைபெற்றது. ஆனால் வரலாற்றிலேயே முதல்முறையாக இந்த ஆண்டில் தெப்ப உற்சவம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 11 மாதத்திற்கு பிறகு மாசி பவுர்ணமி நாளான நேற்று தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்களும், பக்தர்கள் பரவசம் அடைந்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

12-ம் திருவிழா நாளை மாலை சுவாமி அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகள் வழியாக வலம் வருதல் இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் தனித்தனி மலர் கேட்ட சப்பரத்தில வீதி உலா நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசித்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமியும் அம்பாளும் 8 ரதவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். 10-ம் நாளான நேற்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
11-ம் திருவிழாவான இன்று இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி அம்பாள் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் சமுதாய மண்டபத்திற்கு வருகிறார். அங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைக்கு பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி வெளி வீதி வழியாக தெப்பக்குளம் அருகில் உள்ள நெல்லை நகரத்தார் மண்டபம் வந்து அங்கு இரவு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று சுவாமி அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
12-ம் திருவிழா நாளை மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகள் வழியாக வலம் வருதல் இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் தனித்தனி மலர் கேட்ட சப்பரத்தில வீதி உலா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை (பொறுப்பு) மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலில் மாசி மக தெப்பம் நடைபெற்றது. விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் அருகே திருக் கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலில் மாசி மக தெப்ப உற்சவத்திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலையில் சாமி திருவீதி புறப்பாடும், இரவு சிம்மம், அனுமன், கருடசேவை, சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.
8-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு தங்ககுதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. 9-ம் திருநாள் அன்று காலையில் வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், தெப்பம் முட்டுத்தள்ளுதலும், இரவு பெருமாள் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது.
10-ம் திருநாளான நேற்று காலை பெருமாள் தங்கத் தோளுக் கினியானில் திருவீதி புறப்பாடும், காலை 11 மணிக்கு மேல் பகல் தெப்பம் சுற்றுதலும், இரவு 9 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியாருடன் மின்ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடை பெற்றது. விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் வன்னிவேடு என்ற என்ற தலம் உள்ளது. இவ்வாலயத்தில் உள்ள அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் மீது நின்று தவக்கோலத்தில் காட்சியளிக்கிறாள்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் வன்னிவேடு என்ற என்ற தலம் உள்ளது. இங்கு வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.
இவ்வாலயத்தில் உள்ள அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் மீது நின்று தவக்கோலத்தில் காட்சியளிக்கிறாள். பவுர்ணமி அன்று மாதா புவனேஸ்வரிக்கு லகுசண்டி ஹோமம் செய்கிறார்கள். இந்த ஹோமத்தின்போது பூஜை செய்யப்படும் கடத்திலிருந்து (கலசத்திலிருந்து) நீரை எடுத்து அம்பிக்கைக்கு அபிஷேகம் செய்வார்கள்.
இந்த அபிஷேகத்தை சப்த ரிஷிகளே வந்து செய்ததாக ஐதீகம். பவுர்ணமி நாள்களில் நடைபெறும் இந்த அபிஷேகப் பூஜையில் கலந்து கொண்டால் வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் தடங்களின்றிக் கட்டி முடிப்பார்கள்.