என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூமிதேவியுடன் எழுந்தருளிய சவுமிய நாராயண பெருமாள்.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் மாசி தெப்ப உற்சவம்
By
மாலை மலர்17 Feb 2022 6:37 AM GMT (Updated: 17 Feb 2022 6:37 AM GMT)

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலில் மாசி மக தெப்பம் நடைபெற்றது. விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் அருகே திருக் கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலில் மாசி மக தெப்ப உற்சவத்திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலையில் சாமி திருவீதி புறப்பாடும், இரவு சிம்மம், அனுமன், கருடசேவை, சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.
8-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு தங்ககுதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. 9-ம் திருநாள் அன்று காலையில் வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், தெப்பம் முட்டுத்தள்ளுதலும், இரவு பெருமாள் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது.
10-ம் திருநாளான நேற்று காலை பெருமாள் தங்கத் தோளுக் கினியானில் திருவீதி புறப்பாடும், காலை 11 மணிக்கு மேல் பகல் தெப்பம் சுற்றுதலும், இரவு 9 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியாருடன் மின்ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடை பெற்றது. விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.

Next Story
×