
நேற்று இரவு 10.30 மணி முதல் இன்று இரவு 10.30 மணி வரை மாசிமாதபவுர்ணமி காலமாகும். இந்த பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.அவர்கள் வழக்கம்போல் 14 கி.மீ. தூரம் நடந்து சென்று கிரிவலம் வந்தனர்.
கிரிவலப்பாதையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கவில்லை.இதனால் மிகவும் உற்சாகமுடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
இன்று காலையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட அனைத்து மாவட்டங் களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் அனைத்து கடைகளிலும் விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் நேற்று இரவு நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டதால் மாட வீதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.